Friday, 5 July 2013

பூந்தோட்டம்.. (05-07-2013 அன்று பூத்தவை)

பச்சிலைப்பூ: எல்லா ஊர்களையும்போலவே மும்பையிலும் இவ்வளவு நாளாக சமையல் வாயு வேண்டுமென்றால் பதிவு செய்து காத்திருந்தோ அல்லது நேரடியாகப் போயோ வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால், இனிமேல் ரீஃபில் சிலிண்டருக்கான பதிவு முறை மொபைல் போனிலோ அல்லது லேண்ட் லைன் மூலமாகவோ மட்டுமே செய்யப்படுமாம். இந்த முறை கோவா, ரத்னகிரி, சிந்துதுர்க் ஏரியாக்களில் ஆரம்பித்து மும்பை வரை  வந்திருக்கிறது. இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமது வினியோகஸ்தர்களிடம் ரேஷன் கார்டு, மற்றும் கியாஸ் கார்டு சகிதம் சென்று, அதைக் கண்ணில் காட்டி விட்டு, இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ அவர்களது மொபைல் நம்பர், அல்லது லேண்ட் லைன் நம்பரைக் கொடுக்க வேண்டும். அவர்கள் நாம் அங்கேதான் இணைப்பு வாங்கியிருக்கிறோம் என்பதை உறுதிசெய்து, நம் விவரங்களை ஆன்லைனில் அவர்கள் தளத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டு IVRS(Interactive Voice Response System)நம்பரான 9420456789ஐ கியாஸ்கார்டில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதன் பின் நமக்கு ரீஃபில் சிலிண்டர் தேவைப்படும்போது IVRS நம்பரை மட்டும் டயல் செய்தால் போதும். தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டு விடும். 

மொபைல் நம்பர் மூலமாக சிலிண்டர் பதிவு செய்யும்போது reference நம்பர் எஸ்.எம்.எஸ் மூலமாக வந்து விடும். அதேபோல் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதும் அதை உறுதி செய்தும் ஒரு தகவல் கொடுத்து விடுவார்கள். இதையெல்லாம் கடை வாசலில் ஒரு பணியாள், அனைவருக்கும் விளக்கிக்கொண்டிருந்தார். இந்த ரெஜிஸ்ட்ரேஷனை, ஆபீசர் மூலமாக அல்லாமல் நாமே மொபைல் மூலமாகவும் செய்யலாம் என்றும், அதை எப்படிச்செய்வது என்று விளக்கி ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸுக்கு வழி காட்டிக்கொண்டுமிருந்தார். கடைக்குள் கூட்ட நெரிசலைத்தடுக்க இப்படியொரு ஐடியாவாம். எட்டியெட்டிப் பார்த்தும் தலைகள்தான் தெரிந்தனவேயல்லாமல் நோட்டீஸ் கண்ணில் படவில்லை. ஆகவே 'என் வழி நேர் வழி' என்று கடைக்குள் நேரடியாகப் போய்ப் பதிவு செய்தேன். www.ebharatgas.com என்ற அவர்களது தளத்திலும்போய்ப் பதிவு செய்து ivrs நம்பரைப் பெற்றுக்கொள்ளலாம். 

வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ஒரு சகோதரர் உதிர்த்த முத்து.. "இதுவரைக்கும் இதெல்லாம் தங்க்ஸ்கள் பாடுன்னு இருந்துட்டோம். இப்ப நம்ம மொபைல் நம்பரைக் கொடுக்கப்போறதால், இனிமேல் 'சிலிண்டர் புக் செய்தாச்சா?'ன்னு ஆப்பீசுக்கு வீட்டிலிருந்து அடிக்கடி போன் செய்து வறுத்தெடுக்கப்போறாங்க" மொபைல் நம்பரை மட்டும் கொடுப்பவர்கள் வீட்டில் லேண்ட்லைன் இல்லையென்பது அர்த்தமெனக்கொள்க. அதுதான் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு மொபைல்களாவது இருக்கின்றனவே. அப்புறம் லேண்ட்லைன் எதற்கு :-)

வெட்சிப் பூ: ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் குழுமத்தில் சென்ற வாரம் ஒரே வேடிக்கைதான். தலைப்பே அப்படியாயிற்றே. அசரடிக்கும் படங்கள் காட்டிய வேடிக்கையில் சென்ற வாரம் முழுதும் கலகலப்பாகப் போயிற்று. முத்துக்கள் பத்தில் எனது காமிராச்சிப்பி உதிர்த்ததும் இடம்பெற்றது.யார் தந்த அரியாசனமிது :-))

செங்கோடுவேரிப்பூ: கணவரிடம் கோபித்துக்கொண்டு மனைவி, "நான் எங்க அம்மா வீட்டுக்குப்போறேன்" என்று கிளம்பினால்,  கணவர் அதைத் தடுக்கக் கூடாதாம். மாறாக, "பரவாயில்லைம்மா, நீ உங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு வா,.. நானும் என் மாமியார் வீட்டுக்குப் போயிட்டு வரேன், நம்ம குழந்தைகள் அவங்க நானா, நானி(அம்மம்மா, அம்மாவின் அப்பா) வீட்டுக்குப் போயிட்டு வரட்டும்." என்று சந்தோஷமாகச் சொல்ல வேண்டுமாம். சமாதானப்படுத்த இதுவும் ஒரு வழி என்கிறார் உபதேசித்தவர். பதிலுக்குக் கோபப்படவோ சண்டையிடவோ செய்தால் சண்டை இன்னும் வலுக்கும், குடும்ப அமைதி குலையும். (சானல்களைத் திருப்பிக்கொண்டிருந்தபோது சமீபத்தில் ஒரு பக்தி சானலில் எதேச்சையாகக் கேட்டது)

தேமாம்பூ: குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான்.. அது மனிதக்குழந்தையாக இல்லாவிட்டாலும் கூட :-)))


இது துள்சிக்காவுக்காக :-)

47 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரீஃபில் சிலிண்டருக்கான பதிவு முறை இங்கு வந்து பல நாட்கள் ஆகி விட்டது...

செங்கோடுவேரிப்பூ அருமை...

Ramani S said...

எங்கள் ஊரில் மொபைல் புக்கிங்
வந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிவிட்டது
அது வசதியாகத்தான் உள்ளது
காணொளி அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 2

அமைதிச்சாரல் said...

வாங்க தனபாலன்,

ஆஹா,.. எல்லா ஊருக்கும் கொடுத்துட்டு கடைசியாத்தான் இந்த வசதியை இங்கே எங்களுக்குக் கொண்டாந்துருக்காங்களா.. அவ்வ்வ்..

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

எஸ்.எம்.எஸ். மூலமாகப் பதிவு செய்யும் வசதி வந்து இரண்டு வருடமாகிறது. ஆனாலும், நேரடியாகவோ, போனிலோகூட பதிவு செய்யலாம். அதாவது எந்த போனிலிருந்தும் பதிவு செய்யலாம் என்று இருந்தது. கடந்த ஏப்ரலில் இருந்து இங்கே அந்த இரண்டும் நீக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட போன் நம்பர் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படும், வேறு எந்த வழிகளிலும் செய்யப்படாது என்று அறிவித்து நடைமுறைக்கும் வ்ந்து விட்டது.

எல்லாவற்றுக்கும் நன்றி :-)

பால கணேஷ் said...

சென்னையில் ஓராண்டு காலமாக மொபைல் மைலம் தான் பதிந்து பெறுகிறேன். பூக்கள் பற்றிய உங்கள் எழுத்தும் படங்களும் வெகு அழகு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான பதிவு.

குட்டியானையைப்பார்க்கக் குதூகலமாக உள்ளது

பகிர்வுக்கு நன்றிகள்.

கோவை நேரம் said...

புது புது பூப்பெயர்கள்...

துளசி கோபால் said...

தேமாம்பூ குழந்தை அதி சூப்பர்.

செல்லம் என் செல்லம்.

டாங்கீஸ்ப்பா

அமுதா கிருஷ்ணா said...

தானியங்கி சிலிண்டர் புக்கிங் இங்கு இரண்டு வருடங்களாக நடைமுறையில் உள்ளது.வீட்டம்மா வைத்திருக்கும் மொபைல் நம்பர் கொடுப்பது தான் நல்லது.

நாயின் அரியாசணம் சூப்பர்.

ராஜி said...

மல்ர்கள் அனைத்தும் அழகும் வாசனையோடும் இருந்துச்சு.., குட்டியானை சூப்பர்

சங்கவி said...

பூந்தோட்டம் அழகா பூத்துள்ளது.. வாழ்த்துக்கள்..

ஸ்ரீராம். said...

புதிய பெயர்களில் பூக்கள்!
தமிழகத்தில் ஏற்கெனவே இந்த முறையில்தான் கேஸ் பதிவு செய்யப் படுகிறது! 'புகார் செய்ய எண் மூன்றை அழுத்துங்கள்' என்று வருடக் கணக்கில் வருகிறது. ஆனால் அந்த வசதி இன்னும் தரப்படவில்லை! 3 அழுத்தியவுடன் இணைப்பு அறுந்து விடும்!
எனக்குக் காணொளி இப்போது சண்டி செய்கிறது! அப்புறம் பார்க்க வேண்டும்!

ஸாதிகா said...

இனிமேல் ரீஃபில் சிலிண்டருக்கான பதிவு முறை மொபைல் போனிலோ அல்லது லேண்ட் லைன் மூலமாகவோ மட்டுமே//

இது சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருடம் ஒன்றுக்கும் மேல் ஆச்சு.இதுவரை எல்லாம் நல்ல படியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.கடந்த இரண்டு மாதகாலமாக மொபைல் மூலம் பதிவு செய்தால் ரெஜிஸ்ட்ரேஷசன் நம்பர் வந்துவிடும்.இப்போது என் நம்பரில் இருந்து அதைபெறமுடியாமல் இரண்டுமாதமாக கியாஸ் புக் பண்ண முடியாமல் அல்லாடி,நேரெ ஏஜன்ஸிக்குப்போ சப்தம் போட்டு கியாஸ் புக் செய்து விட்டு வந்தேன்.:(

மாதேவி said...

பூக்கள் எல்லாம் அழகாக மலர்ந்திருக்கின்றன.

செங்கோடுவேரிப்பூ அருமை.

குட்டியானை அசத்தல்.

கோவை2தில்லி said...

பூக்களின் பெயரும், பூக்களும் என அனைத்துமே அருமை.

இங்கு நான் பாரத் கேஸில் ரெஜிஸ்டர் பண்ணிக் கொண்டு ஆன்லைனில் புக் செய்து விடுகிறேன். ஆனால் டெலிவரி செய்வது தான்....16, 37, 20 நாட்கள் கழித்து...:)

இண்டேனில் இந்த வசதி இன்னும் இல்லை...

குட்டி யானை வீடியோ அருமை. ரோஷ்ணியுடன் கண்டு களித்தேன்...:)

கரந்தை ஜெயக்குமார் said...

குட்டி யானை அருமை

கோமதி அரசு said...

செங்கோடுவேரிப்பூ: மிக அருமை.
கணொளிகள் அருமை, துளசிஅக்காவுக்காக என்ற கணொளி அருமை.
வெட்சிப்பூவும் அருமை.வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான பெயருள்ள பூக்கள் தலைப்பில் வித்தியாசமான செய்திகள்!
முத்துக்கள் பத்தில் உங்கள் புகைப்படமும் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
அரியாசம் அழகு!

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு ஸ்வீட் செல்லம்டா அந்த யானைக்குட்டி.
பூப்பெயரிலியே செய்திகளா.!!கற்பனைக்கு ஏது அளவு.
நன்றி சாரல்.

சே. குமார் said...

அருமையான பகிர்வு.

சிலிண்டர் பதிவு முறை நம்ம ஊரிலும் வந்துவிட்டது.

ராமலக்ஷ்மி said...

பூ வாசம்.

நல்ல வேடிக்கை. வாழ்த்துகள்.

ஸிலிண்டர் பதிவு முறை இங்கும் உள்ளது.

காணொளிகள் க்யூட்:)!

வெங்கட் நாகராஜ் said...

இங்கே குழாய் மூலம் கேஸ் - அதனால் புக்கிங் தொல்லைகள் இல்லை! :)

யானையின் காணொளி! அருமை... ரசித்தேன்.

ஹுஸைனம்மா said...

”மாமியார் வீட்டுக்குப் போறேன்” - இது நல்லாருக்கே!!அங்கயும் நிம்மதியா இருக்க முடியாதா அப்ப? :-))

பூக்கள் பேரெல்லாம் புதுசா இருக்கு, படங்கள் போட்டிருக்கலாமே?

கேஸ் சிலிண்டர் பத்தி வாசிக்கும்போதெல்லாம் பயம்மா இருக்கு, என்னவோ இங்க அந்தப் பிரச்னைலாம் இல்ல. ஆனாலும், ஊருக்கு வரும்போது எப்படிச் சமாளிக்கப் போறனோன்னு...

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

இங்கியும் மொபைல் மூலமாகப் பதியும் வசதி வந்து ரெண்டு வருஷமாகுது. ஆனால் குறிப்பிட்ட எண் மூலம் மட்டுந்தான் இனிமே பதிய முடியுங்கற வசதி இப்போ ரெண்டு மாசம் முன்னாடிதான் வந்துருக்கு.

படங்களை ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க துள்சிக்கா,

உங்களுக்காகவே இன்னொரு செல்லக்குட்டியைக் கொண்டாந்துருக்கேன். ஓடியாடி விளையாடிக்கிட்டிருக்கு :-))

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அமுதா,

இணைப்பு யார் பெயரில் இருக்கோ, அவங்க நம்பர்தான் கொடுக்கப்படணுமாம். ஸ்ட்ரிக்டா இருக்காங்க :-))

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

குட்டியானைகளையும், பூக்களையும் ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சங்கவி,

தோட்டத்தை ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

காணொளியைக் கட்டாயம் பாருங்க. உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகா,

குழாய் மூலம் சமையல்வாயு இணைப்பு வந்தா இந்தப் பிரச்சினைகள் எதுவுமே இருக்காதில்லே..

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

யானைக்குட்டிகள் ரோஷ்ணிக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெயக்குமார்,

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

ரசித்தமைக்கு நன்றிம்மா..

அமைதிச்சாரல் said...

வாங்க மனோம்மா,

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

செம அட்டகாசமாயிருக்கு அந்த ஆனைக்குட்டி. வீட்ல ஒண்ணை வளர்க்கலாமான்னு ஆசையாயிருக்கு..

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க குமார்,

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

குழாய் கேஸ் இதோ வருது அதோ வருதுன்னு வந்துட்டே இருக்கு. இங்கியும் தொல்லைகளைத் தவிர்ப்பதற்காக எதிர்பார்த்துட்டேயிருக்கோம் :-))

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

நீங்க வரச்சே குழாய் மூலம் சப்ளை வந்துரும். ஆகவே நோ டென்ஷன் :-))

ரசித்தமைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

அப்பாடி.....புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் வீடியோவையும் சேர்த்தே பார்த்து விட்டேன்!

Jaleela Kamal said...

குட்டி யானை விளையாடுவது சூப்பர்
சிலிண்டர் தகவல் பயம் தான் , இங்கு போன் செய்தால் 10 நிமிடத்தில் வந்துடும்.
அரியாசனம் ரொம்ப அருமை
வாழ்த்துக்கள் சாந்தி

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

போனஸை ரசித்தமைக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஜலீலாக்கா,

யானைக்குட்டி எல்லோருக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு :-))

ரசித்தமைக்கு நன்றி.

S.Menaga said...

பூந்தோட்டம் இப்போழுதான் பார்த்தேன்,ரசித்தேன்..வாழ்த்துக்கள்க்கா!!

LinkWithin

Related Posts with Thumbnails