செழித்துக்குலுங்கி நிற்கும் தாவரங்களையோ, ஓங்கியுயர்ந்து நிற்கும் கட்டிடங்களையோ மட்டுமே கண்டு பெருமூச்செறிகிறோம், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் உழைப்பைப் பொருட்படுத்தாமல்.
‘இந்தச்செயலைச் செய்து முடிக்க உன்னால் இயலாது’ என்று அனைவராலும் சுட்டப்படும் ஒன்றை வெற்றிகரமாக முடிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை.
பிரிக்கப்படாத பரிசுப்பொட்டலம் போன்றதே வாழ்வும். அதனுள் நமக்காக என்னவெல்லாம் காத்திருக்கிறது என்பது தெரியாமல் இருக்கும்வரை சுவாரஸ்யங்களுக்குக் குறைவிருக்காது.
வாழ்வின் அர்த்தத்தை அது கற்றுக்கொடுக்குமுன்பே, அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மாற்றங்கள் இல்லாதவரை வளர்ச்சியும் ஏற்படுவதில்லை, வளர்ச்சி இல்லாமல் முன்னேற்றமுமில்லை.
எல்லா மனிதர்களும் சரியாகவே சிந்தித்துச் செயல்படுகிறார்கள், அவரவர் பார்வையில்.
நமது பலம் என்னவென்றே அறியாமலிருப்பதுதான் நமது பலவீனமாகவும் இருக்கிறது.
நம் மீதோ நாமோ, அன்பு வைத்திருப்பவர்களுக்காகச் சுமப்பவை சுமைகளாய்த்தெரிவதில்லை.
விளக்கியதால் மட்டுமே எல்லாம் விளங்கி விடுவதுமில்லை. விளக்காமல் இருப்பதால் விளங்காமல் இருந்து விடுவதுமில்லை. கற்றுக்கொண்டு விடுகிறோம் எப்படியாவது.
24 comments:
முடியாது என்பதை முடித்தால் மகிழ்ச்சி தான்...
பலவீனத்தை அறிந்து கொண்டால் பலம் புரிந்து விடும்... யாரும் பலவீனத்தை அறிய முற்படுவதில்லை என்பதும் உண்மை...
காலம் அல்லது அனுபவம் கற்றுக் கொடுத்து விடும்... நன்றி...
சாரல்கள் அத்தனையும் முத்துக்கள்.
அனைத்தும் நன்று.
/வாழ்வின் அர்த்தத்தை அது கற்றுக்கொடுக்குமுன்பே, அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்./
மிகப் பிடித்தது.
//விளக்கியதால் மட்டுமே எல்லாம் விளங்கி விடுவதுமில்லை. விளக்காமல் இருப்பதால் விளங்காமல் இருந்து விடுவதுமில்லை. கற்றுக்கொண்டு விடுகிறோம் எப்படியாவது.//
உண்மைதாங்க..
வாழ்வின் அர்த்தத்தை அது கற்றுக்கொடுக்குமுன்பே, அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.//
அருமையாகச் சொன்னீர்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமையான படைப்பு.
//நம் மீதோ நாமோ, அன்பு வைத்திருப்பவர்களுக்காகச் சுமப்பவை சுமைகளாய்த்தெரிவதில்லை.//
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
அனைத்துமே அருமை.....
பகிர்வுக்கு நன்றி.
பிரிக்கப்படாத பரிசுப்பொட்டலம் போன்றதே வாழ்வும். அதனுள் நமக்காக என்னவெல்லாம் காத்திருக்கிறது என்பது தெரியாமல் இருக்கும்வரை சுவாரஸ்யங்களுக்குக் குறைவிருக்காது.
>>
நிஜம்தான் சகோ! அடுத்த நொடியில் பல ஆச்சர்யங்களை அள்ளிக் கொட்ட தயாராக இருக்கு....
//மகிழ்ச்சியாக இருப்பதை நிரந்தரமான வாழ்க்கை முறையாகவோ, அல்லது விடுமுறைக்கொண்டாட்டம்போல் எப்போதாவது வந்து போவதாகவோ அமைத்துக்கொள்வதென்பது அவரவர் கைகளில்தான் உள்ளது.// அரும்யான் வரிகள் . தனம் மகிழ்சியா இல்லாமல் தனை சார்ந்தவர்களியும் மகிழா விடாமல் இருப்பவர் எத்தனை பேர்!
பிரிக்கப்படாத பரிசுப்பொட்டலம் போன்றதே வாழ்வும். அதனுள் நமக்காக என்னவெல்லாம் காத்திருக்கிறது என்பது தெரியாமல் இருக்கும்வரை சுவாரஸ்யங்களுக்குக் குறைவிருக்காது//
முன்பே தெரியாமல் இருப்பது நல்லது தான். பரிசு பொட்டலம் உதாரணம் அருமை.
எல்லாமே நன்றாக இருக்கிறது.
நமது பலம் என்னவென்றே அறியாமலிருப்பதில்தான் நமது பலவீனமாகவும் இருக்கிறது.//
உண்மை.
அத்தனை சாரல் துளிகளுமே அருமை! தேன் துளிகள் எனலாம். அதில் மூன்றும், நான்கு்ம் என் மனசுக்கு மிக நெருக்கமாக அமைந்ததால் மிகப் பிடித்தது. சூப்பரு!
வாங்க தனபாலன்,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ஸாதிகா,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க சங்கவி,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ரமணி,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க வை.கோ ஐயா,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க வெங்கட்,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ராஜி,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ராஜலக்ஷ்மிம்மா,
அவங்க கிட்ட கேட்டுப்பார்த்தால், நான் செய்வது தவறேயில்லைன்னு சொல்லுவாங்க. சொல்லப்போனா தன் தவறை ஒத்துக்க விரும்பாத ஆட்கள் அவர்கள்.
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க கோமதிம்மா,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ஜோசப்,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க கணேஷ்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
Post a Comment