அலைகடலிடம் அமைதியையும், குளத்தில் ஆழிப்பேரலைகளையும் எதிர்பார்ப்பது போன்றதே சிலரிடம் வைக்கப்படும் எதிர்பார்ப்புகளும்..
உர்ர்ர்ர்ர்ர்சாகமாக விடியும் பொழுதை, சில இனிய நிகழ்வுகள் உற்சாகமாக மலர வைத்து விடுகின்றன.
ரசித்துச்சிரிக்கத் தெரிந்தவனுக்கு அழகாய்த்தெரியும் உலகம், தெரியாதவனுக்கு கரடுமுரடாய்க் காட்சியளிக்கிறது.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.
எறியப்பட்ட கல் குளத்தில் எழுப்பும் அலைகள் கரையிலிருப்பவரையும் தொட்டுச்செல்வது போல், ஒருவர் மேல் காட்டப்படும் கருணையானது பலருக்கும் பரவுகிறது.
அன்பு--- எல்லாச்சுமைகளையும் வலிகளையும் நீக்கவும், கொடுக்கவும் வல்ல ஒரே உணர்வு.
சிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான விலையென்பது, அதற்காகச் செலவிட்ட நம் வாழ்நாளின் பகுதியாகக்கூட இருக்கலாம்.
உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புபவர்களின் கண்களுக்கு முட்டுக்கட்டைகள் தட்டுப்படுவதில்லை.
சிக்கல்களில்லாமல் எளிமையாக, நிம்மதியாக வாழ்வதென்பதே இன்றைய சூழலில் மனிதனுக்கு சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது.
முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக.

30 comments:
ஹைய்யோ!!!! யாருப்பா அந்தக் குழந்தை!!!!
கண்ணை அகற்ற முடியலை!
சொன்னதெல்லாம் அருமை என்றாலும்கூட.......
//எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.//
அருமை அக்கா.
எல்லாமே நன்று...
குழந்தையாவே இருந்திருக்கலாம்!!
சிக்கல் தான் - நம் மனதைப் பொறுத்து...!
அனைத்தும் அருமை. ஐந்தும் பத்தும் மிகப் பிடித்தது. பாப்பா அழகு.
// முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக. //
உண்மைதான்...
பகிர்வு அருமை.படமும் சூப்பர்.
அத்தனையும் அழகான வரிகளுடன் கூடிய சிறந்த ஆக்கம்.
மிகவும் பிடித்தவை:
//எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.//
//முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக.//
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அனைத்தும் அருமை. ஐந்து ரொம்ப பிடித்தது.
அனைத்தும் அருமை......
அக்குழந்தையின் படமும் குழந்தையும் கண்ணை விட்டு விலக மறுக்கின்றது.....
அருமை
\\சிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான விலையென்பது, அதற்காகச் செலவிட்ட நம் வாழ்நாளின் பகுதியாகக்கூட இருக்கலாம்\\
பகிர்ந்த அனைத்திலும் மனத்துக்கு மிக நெருக்கமாய் உணரவைத்தது இது. அனுபவம் என்பதும் இதுதானே... பகிர்வுகளுக்கும் அழகான புகைப்படத்துக்கும் நன்றி அமைதிச்சாரல்.
மிக அருமை சாந்தி
பாப்பா படம், வரிகள் என அனைத்துமே அருமை.
முதல் வரி அருமையிலும் அருமை.
நான்கும் பத்தும் அருமை.
வாங்க துள்சிக்கா,
வொண்டர் பார்க்கிற்கு நகர்வலம் போயிருந்தப்ப அந்தக் குழந்தை கிடைச்சது. காமிராவில் சிறையெடுத்துட்டு வந்தேன் :-))
ரசிச்சதுக்கு நன்றி.
வாங்க குமார்,
ரசிச்சதுக்கு நன்றி.
வாங்க ராஜி,
குழந்தையா இருக்கறப்ப எப்போ பெரியவங்களாவோம்ன்னு எதிர்பார்க்கறதும், பெரியவங்களானதும் குழந்தையாகவே இருந்துருக்கக்கூடாதான்னு ஏங்கறதும் சுவையான முரண்பாடுகளா இருக்குதில்லே :-))
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க தனபாலன்,
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
அத்தனையையும் ரசித்தமைக்கு நன்றி..
வாங்க சங்கவி,
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க ஆசியா,
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க வை.கோ ஐயா,
அத்தனையையும் ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க மாதேவி,
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க வெங்கட்,
குழந்தைகளை விரும்பிப் படமெடுக்கும் உங்களுக்கு இந்தக்குழந்தையும் பிடிச்சுப்போனதில் ஆச்சரியமில்லை :-))
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க ஜெயக்குமார்,
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க கீதமஞ்சரி,
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க ஜலீலாக்கா,
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க ஆதி,
பாப்பாவையும் ரசித்தமைக்கு நன்றி.
வாங்க ஸ்ரீராம்,
ரசித்தவற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு நன்றி.
Post a Comment