Monday, 22 July 2013

விருந்தோ விருந்து..

பார்க்க நன்றாக இருப்பதெல்லாம் சாப்பிடவும் நன்றாக இருக்குமென்று சொல்வார்கள். நன்றாக இருக்கிறதோ இல்லையோ,.. இருப்பது மாதிரியான தோற்றத்தைக் கண்டிப்பாக உண்டு பண்ணலாம். சுமாராக, கொஞ்சம் இனிப்புக்குறைவாக இருக்கும் பாயசத்தைக்கூட நாலைந்து வறுத்த முந்திரிப்பருப்புகள், திராட்சைப்பழங்களைக் கொண்டு அலங்கரித்து வைத்தால் பாயசம் வேண்டாமென்று சொல்பவர்கள் கூட அரைக்கிண்ணமாவது சாப்பிட்டு விடுவார்கள். காய்கறிகள் வேண்டாமென்று சொல்லும் குழந்தைகளை, இட்லியில் இருக்கும் பட்டாணிக்கண்களும், கேரட் மூக்கும், தக்காளி உதடுகளும் கவர்ந்திழுத்து விடும். சாப்பாட்டை அழகாக அலங்கரித்து வைக்கும் முறையில் இப்படி எதையாவது செய்து வயிற்றுக்குள்ளே தள்ளி விடுவது அம்மாக்களுக்கு மட்டுமல்ல உணவகங்கள் நடத்துபவர்களுக்கும் கை வந்த கலை.

ஆரம்பம் ஆப்பிளுடன்..
பொதுவாக சில உணவங்கங்களுக்குள்ளே நாலா பக்கமும், ஸ்னாக்ஸ், இட்லி வடை, பூரி போன்ற சாப்பாட்டு வகைகள், ஜூஸ் வகைகள் போன்ற உணவு வகைகளின் படங்களை அசத்தலான ஒளியமைப்புடன் மாட்டியிருப்பார்கள். அதுவும் ஐஸ்க்ரீம், ஃபலூடா, வட இந்திய இனிப்பு வகைகளுக்குக் கூடுதல் கவனமெடுத்து செய்திருப்பார்கள். இவற்றைப் பார்க்கும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் இது கண்டிப்பாகக் கவர்ந்திழுக்கும். இந்த வகை ஒளிப்படக்கலையை ஃபுட் ஃபோட்டோகிராபி என்று அழைப்பார்கள். ஒரு சில நுட்பங்களைப் பின்பற்றினாலே போதும்,.. "அட!!.. அந்த அயிட்டமா இது!" என்று பார்ப்பவர்கள் நாவில் எச்சில் ஊறச்செய்யும் அழகழகான படங்களை எடுத்துத்தள்ளலாம். ஒரு சில நுட்பங்களை இங்கேயும் தந்திருக்கிறார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல், முயற்சித்தும் பயனடையுங்கள். என்னுடைய ஒரு சில முயற்சிகள் இங்கே உங்கள் பார்வைக்காக..

இவைகள் இல்லாத பால்யமா..

கேக்காமலேயே கிடைக்கும் கேக்..


த்த்த்த்த்த்த்தேன் மிட்டாய்..

கூட்டணியில் செஷ்வானும் மக்ரோனியும்..

கடாயில் இருப்பதால் இது கடாய் மஷ்ரூம்..

நான்கட்டாய்..(பிஸ்கட் வகை)


ப்ப்ப்ப்ப்ப்ப்பா.. பாஸ்தா.

மகள் செய்த Rabdi..

ஜலீலாக்காவிடம் பரிசு பெற்றுத்தந்த 'சூரா'..

ஆஹா.. வட போகலை. இங்கேயிருக்கு :-)

பார்த்த கண்கள் இதையும் ரசிக்குமே..

கண்களால் சாப்பிட்டாலும் ஜீரணமாக உதவும் பெருஞ்சீரகம் :-)

31 comments:

rajalakshmi paramasivam said...

அந்த மொறுமொறு வடை என்னை எடுத்துக்கோ என்று சொல்வது போலிருக்கிறது.

very yummy post

இராஜராஜேஸ்வரி said...

பார்த்த கண்கள் இதையும் ரசிக்குமே..

கண்களுக்கு விருந்தான ரசனையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

ராமலக்ஷ்மி said...

ஆஹா வடை போகல:)!

பிரமாதமான விருந்து! படங்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

நான்கட்டாய் - இட்லி என்று நினைத்தேன்... ஹிஹி...

படங்கள் மூலம் பசியை கிளப்பியதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

Ananya Mahadevan said...

very appetizing!

புதுகைத் தென்றல் said...

படங்கள் அழகுன்னு சொல்லவா பாத்ததும் டெம்ப்டிங்னு சொன்னா சரியா இருக்குமா?!!! :))

அதுலயும் அந்த நான்கடாய்..... பாம்பேலேர்ந்து ஒரு பார்சல் ப்ளீஸ்

புதுகைத் தென்றல் said...

படங்கள் அழகுன்னு சொல்லவா பாத்ததும் டெம்ப்டிங்னு சொன்னா சரியா இருக்குமா?!!! :))

அதுலயும் அந்த நான்கடாய்..... பாம்பேலேர்ந்து ஒரு பார்சல் ப்ளீஸ்

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா.....மணம் இங்கே வர வருதே பார்த்ததும் சாப்பிட ஆசையாக இருக்கிறது !

ஸாதிகா said...

படங்களும்,கமெண்டும் அட்டகாசம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

THE WAY OF PRESENTATION IS MUCH MORE IMPORTANT THAN ITS PREPARATION.

VERY NICE. THANKS FOR SHARING.

ALL THE BEST !

பார்த்த கண்ணு மூடாதே .... ! ;)

சே. குமார் said...

தேன் மிட்டாய் வாயில் எச்சில் ஊற வைக்கிறது... எல்லாப் படங்களும் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

எல்லாத்தையும் எடுத்துச் சாப்பிடுன்னு வாயும் மனசும் சொல்லுது.... ஆனால் நிரம்பி இருக்க வயிறு ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு சாப்பிடுன்னு கட்டளை இடுது!

என்ன பண்ணலாம்! :)

S.Menaga said...

ஆஹா தேன்மிட்டாயை பார்த்ததும் வாய் ஊறுது...

தியானா said...

வாவ்!!! பாஸ்தா இழுக்குதே..அருமை..

கோமதி அரசு said...

இவைகள் இல்லாத பால்யமா..//

அமைதிச்சாரல், இவைகளை பார்த்தவுடன் பாலபருவம் நினைவுக்கு வந்து விட்டது.
மகன் இளம் பிராயத்தில் தேன் மிட்டாய் விரும்பி சாப்பிடுவான்.
படங்கள் எல்லாம் அழகு.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்களைப் பார்த்ததும் பசி வந்துவிட்டது.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜலக்ஷ்மிம்மா,

அத்தனையும் எடுத்துக்கோங்க :-))

ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

விருந்துக்கு வந்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

விருந்துக்கு வந்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தனபாலன்,

நிறையப்பேர் அப்படித்தான் நினைச்சாங்க. க்ளோசப்பில் அப்படித்தானே தெரியுது :-))

விருந்துக்கு வந்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அனன்ஸ்,

அத்தனை அயிட்டங்களிலும் அனன்ஸுக்கு ர்ரெண்டு ப்ளேட் பார்சேல்ல்ல்ல்ல்ல் :-)

விருந்துக்கு வந்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

ஆர்வமா வந்து ரெண்டு தடவ கேட்டதுக்காக நாலு ப்ளேட் நான்கட்டாய் பார்சேல்ல்ல்ல்ல்..

விருந்துக்கு வந்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மனோ,

பஹ்ரைன் வரை வந்த வாசனையைத் தொடர்ந்து விருந்துக்கு வந்தமைக்கு நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகா,

விருந்துக்கு வந்தமைக்கு நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க குமார்,

தேன்முட்டாய் அருமையை மொதல்ல தெரிஞ்சுக்கிட்டவர் நீங்கதான் :-))

விருந்துக்கு வந்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

உங்களுக்கு ஸ்னாக்ஸ் பிடிக்கலைன்னாத்தானே ஆச்சரியம். ஆனா, விருந்தில் உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச பஜ்ஜி வைக்கலையே..

விருந்தை ரசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

இப்ப நிறைஞ்சுருக்குன்னாலும் மறுபடியும் பசிக்காமலா போகும். அப்ப வந்து சாப்பிடுங்க.

விருந்தில் கலந்துக்கிட்டமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மேனகா,

ஆஹா!!.. இன்னொரு தேன்மிட்டாய் ரசிகை :-))

விருந்துக்கு வந்து கலந்துக்கிட்டமைக்கு உங்களுக்கு தேன்மிட்டாய் நினைவுப்பரிசாக வழங்கப்படுகிறது :-)

அமைதிச்சாரல் said...

வாங்க தியானா,

இழுத்துட்டு வந்த பாஸ்தாவைத்தொடர்ந்து வந்து விருந்தில் கலந்துக்கிட்டமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

அதானே,.. தேன்மிட்டாய் இல்லாத பால்யமா :-))

விருந்தில் கலந்துக்கிட்டமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெயக்குமார்,

எல்லோருக்கும் வேணுங்கற அளவுக்கு அயிட்டங்கள் இருக்கு. நிதானமா வயிறு நிறையச் சாப்பிட்டுத்தான் போகணும்.

கலந்துக்கிட்டமைக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails