Sunday 30 January 2011

நான் கையெழுத்திட்டுவிட்டேன்..



உயிர் தரித்திருப்பதென்பது
மீனுக்கு மட்டுமல்ல
மீனவனுக்கும் போராட்டமாகிவிட்டது
தினந்தோறும்!!!..
கடலுக்குள் அழுவதால்
எங்கள் மீனவனின் கண்ணீரும்
வெளியில் தெரிவதில்லை போலும்..
காராக்கிரகத்தையும் குண்டுகளையும்தவிர
மரணமும் பரிசாய்க்கிடைப்பதுண்டு அவனுக்கு.

வாக்குச்சீட்டில் 
குத்திய பாவத்துக்கு
முதுகில் குத்தப்படுவதென்பது,
சாபக்கேடான வாடிக்கையாகிவிட்டதென்றாலும்;
மறுபடியும் நாடித்தான் செல்கிறோம்
விட்டில்பூச்சிகளாய்,
விடிவெள்ளியென பொய்மினுங்கை பூசிக்கொண்ட
தீப்பந்தங்களை நோக்கி.

இறையாண்மையென்று பொய்க்கூக்குரலிட்டு
தன்சொத்தைப்பாதுகாக்கும்
மயில்வேடமிட்ட வான்கோழிகளுக்கு,
உயிரையே சொத்தாய்க்கொண்ட
எளியவனை 
இலவசமெதுவும் பெற்றுக்கொள்ளாமல்
மனிதனாய் நீடிக்கும் யாரேனும் அறிமுகப்படுத்தி வையுங்கள்..
நம்முடைய இரைக்காகவும்தான்
அவன் செத்துமடிகிறான்.

எல்லை கடந்தும் தாக்கும்
எல்லையில்லா பயங்கரவாதத்தை
தடுக்கவொட்டா எல்லைச்சாமிகளாய்..
வாக்குறுதிகளை
வரமெனவீசிவழங்கும் கூட்டம் வருமுன்
நமக்கு நாமே
உறுதிக்காப்பிட்டுக்கொள்வோம் 
மனிதம்மட்டுமே காப்போமென்று..

டிஸ்கி:  தமிழக மீனவர்களின் மீது நடைபெறும் கட்டவிழ்த்த வன்முறையை கண்டித்து, அனைவரும் கூட்டு முயற்சியில், அனுப்பவிருக்கும் இந்த மனுக்கடிதத்தில் நான் 1870 ஆவது நபராக கையெழுத்திட்டு விட்டேன். அப்ப நீங்க?????



விண்ணப்பம் இங்கே இருக்கு.



13 comments:

R. Gopi said...

Well done!

I too signed yesterday

ஹேமா said...

சாரல்...வார்த்தைகளின் வேகம் அதிர்கிறது.இத்தனை வேகத்தோடு ஒற்றுமையும் தேவை நம் இனத்திற்கு.அதுவே வெற்றி !

Philosophy Prabhakaran said...

i too signed as 726th member....

தெய்வசுகந்தி said...

நானும் கையெழுத்து போட்டு விட்டேன்!

எல் கே said...

gud. namma thalaivarukke nam kural ketkavillai. poi kootani pesitu return vara porar. ithula மத்தவங்களை என்ன சொல்ல ??

ராமலக்ஷ்மி said...

/உயிர் தரித்திருப்பதென்பது
மீனுக்கு மட்டுமல்ல
மீனவனுக்கும் போராட்டமாகிவிட்டது
தினந்தோறும்!!!..
கடலுக்குள் அழுவதால்
எங்கள் மீனவனின் கண்ணீரும்
வெளியில் தெரிவதில்லை போலும்../

ஆம்:(! அழுத்தமான வரிகள் அத்தனையும்.

Anonymous said...

தயவு செய்து கவிதை எழுதி நேரத்தை வீணாக்குவதை விட.... கவிதைப்பேப்பர்களை அரசியல்வாதிகளின் காதில் சொருகுங்கள்...

Asiya Omar said...

உணர்வுள்ள கவிதை.நானும் சைன் செய்துட்டேன்,சாரல்..

வெங்கட் நாகராஜ் said...

நானும் கையெழுத்து போட்டு விட்டேன்! No.828

raji said...

signed as 4170th

Menaga Sathia said...

நானும் கையெழுத்து போட்டுவிட்டேன் அக்கா...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபிராமமூர்த்தி,

ஹேமா,

பிரபாகரன்,

தெய்வசுகந்தி,

எல்.கே,

ராமலஷ்மி,

"குறட்டை" புலி,

ஆசியா,

வெங்கட்,

ராஜி,

மேனகா..

வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி.

கோமதி அரசு said...

நல்ல கவிதை.

நானும் மனுக் கடிதத்தில் கையெழுத்திட்டு விட்டேன்.

LinkWithin

Related Posts with Thumbnails