Tuesday 4 January 2011

புதுப்படம்...

 நகரின் நடுவில் அமைந்திருந்த அந்த பெயர்போன ஹோட்டலின் பன்னிரண்டாவது மாடியில், பன்னிரண்டாவது அறை. சோபாக்கள் எதுவுமில்லாமல் தரைத்தளத்துக்கு அமைக்கப்பட்ட திவான்கள். அதன்மேல் இரண்டுமூன்று உருட்டுத்தலையணைகள். அறைக்குள் சுமார் ஏழெட்டுப்பேர் அவரவர் சௌகரியத்துக்கேற்ப சாய்ந்துகொண்டும், உட்கார்ந்துகொண்டும், மடியில் தலையணைகளை வைத்துக்கொண்டும் இருந்தார்கள். நடுநாயகமாக ஒருத்தர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஒரு புதுப்படத்துக்கான கதைக்கலந்துரையாடல் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தது . கதை காற்றுவாக்கில் கசிந்துவிடாமலிருக்க, அறையின் ஜன்னல்கள் இறுக மூடப்பட்டிருந்தன.

டயரக்டர்: நாலு நாளா ரூம்போட்டு யோசிச்சும் நம்ம படத்துக்கு ஒரு கதை சிக்க மாட்டேங்குதே. வாங்கிட்டு வந்த டிவிடியெல்லாம் வீணாப்போச்சே..  ஸ்விட்சர்லாந்துல போய் யோசிச்சாத்தான் கதை சிக்கும்போலிருக்கு.

உதவி டயரக்டர் 1: சார்.. நான் ரொம்ப நாளா ஒரு கதையை யோசிச்சு வெச்சிருக்கேன். நீங்க சரீன்னா சொல்லுவேன்..

டயரக்டர்: சொல்லு.. சொல்லு.

உ.டயரக்டர் 1:ஓப்பன் செஞ்சா.. ஒரு காலேஜ். ஆண்டுவிழாவுக்கு ஹீரோ வந்திருக்கார். அப்ப, படிக்கிறகாலத்துல வாங்குன பல்பெல்லாம் ஞாபகம்வருது. யாருமே ஆட்டோக்ராப் கேக்காத சோகத்துல வீட்டுக்கு வந்தா அவரோட பையன் ஒரு மெகாபல்பு கொடுக்கிறான்.

இணை இயக்குனர்: டயரக்டர் சார்.. இதை R.கோபி எழுதியதிலிருந்து காப்பியடிச்சு சொல்றார்.. நான் ஒரு கதை வெச்சிருக்கேன். நான் சொல்றேன் சார்....

மீதியை படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-))))




5 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மீதியை படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-))))//

ennaaa oru villathanam? (ha ha ha)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Mitchatha anga vandhu solren (naanum...) ha ha ha

Philosophy Prabhakaran said...

// மீதியை படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-)))) //

ஒ... கதை அப்படி போகுதா... நல்ல டெக்னிக் தான்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

டேக் டைவர்ஷன் போர்டுங்க அது.. நல்லாருக்கா :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரபாகரன்,

நன்றிங்க :-)))

LinkWithin

Related Posts with Thumbnails