Saturday 17 April 2010

இருக்குமிடம் தேடி... - 2.

திருவனந்தபுரத்திலிருந்து, கன்னியாகுமரிக்கு..நாமபோற நேரத்தில் நேரடியா பஸ் இல்லைன்னா, நெல்லை, மதுரை, சென்னை, இப்படி நாகர்கோவில் வழியா போகும் பஸ்ஸில் ஏறி, வடசேரி பஸ் ஸ்டாண்டில் இறங்கிக்கலாம். அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஏகப்பட்ட பஸ்வசதி இருக்கு. நாங்களும் அப்படியே, வடசேரி பஸ்நிலையத்திலில் இறங்கி, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு போகும் பஸ்ஸில் ஏறிக்கிட்டோம்.

வடசேரி பஸ் நிலையம், ஒரு காலத்துல குளமா இருந்து, தூர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதுக்கு பின்னால்தான் புகழ்பெற்ற கனகமூலம் சந்தை இருக்கு. வாரத்தின் எல்லா நாட்களிலும் கூடுவது இதன் சிறப்பம்சம். நாகர்கோவிலில் ரெண்டு பஸ் நிலையங்கள் இருக்கின்றன. ஒண்ணு இது. இன்னொண்ணு குளத்து பஸ்டாண்டுன்னு சொல்லப்படற மீனாட்சிபுரம் பஸ்டாண்டு. லோக்கல் பஸ்ஸெல்லாம் இங்கிருந்துதான் புறப்படும். வடசேரி பஸ்டாண்டு தொலைதூர பஸ்களுக்கானது. இங்கிருந்து புறப்படும் லோக்கல் பஸ்களும், மீனாட்சிபுரம் வந்து அப்புறம்தான் அவை போகவேண்டிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும்.

நாகர்கோவிலின் புகழ்பெற்ற கம்பளம் மார்க்கெட். ரயில் நிலையத்துக்கு செல்லும் வழியும் இதுதான்.


சுசீந்திரத்துக்கு கொஞ்சம் முன்னாலேர்ந்து பழையாறு எங்க கூட வர ஆரம்பிச்சது. கோடைங்கிறதால தண்ணி இல்லேன்னாலும்,பழைய கம்பீரம் போய் பாழடைஞ்சு கிடக்கு. நிறைய இடங்களில் தரை தட்டிப்போய்... செடியெல்லாம் வளர்ந்து, இன்னும் கொஞ்ச நாட்களில், ஆறே மறைஞ்சுபோயிடுமோ என்னவோ!!! முந்தியெல்லாம் கோடைன்னாலும் ஆத்துல ஓரளவு தண்ணி இருக்கும். இப்போ தலைகீழா நின்னா கழுத்தளவு தண்ணி இருக்கும் போலிருக்கு.

பழையாறு,.. சுசீந்திரம் பாலத்திலிருந்து.


கேரளாவைப்போல் நாஞ்சில் நாட்டிலும் அழகான நீர்நிலைகள் நிறைய உண்டு.
நல்ல மழை முடிஞ்சதும் பாத்தா, கடல் மாதிரி தண்ணி நிரம்பிக்கிடக்கும். இப்போ என்னதான் கோடைன்னாலும், நிறைய இடங்களில் கோரை வளர்ந்து, தரையெல்லாம் மேடுதட்டி.. பார்க்கவே பரிதாபமா இருக்கு. என்னதான் மழை பெஞ்சாலும்,ஆழமில்லாத குளத்தில், எவ்வளவு தண்ணீர் நிறையமுடியும்?.ஆறு, குளங்களையெல்லாம், சுத்தப்படுத்தி,.. தூர்வாரி ஆழப்படுத்தி வெச்சாத்தானே, ஓரளவு தண்ணீர் பஞ்சமில்லாம இருக்கமுடியும்.

தாமரைக்குளத்தில் இப்போதான் சீசன் ஆரம்பிக்கப்போகிறது.

கன்னியாகுமரியில் நுழைஞ்சதும் 'ஹோட்டல் சங்கமம்' பேரைப்பாத்ததுமே பஸ்ஸை ஸ்டாப்பச்சொல்லி, ரங்க்ஸ் பஸ்ஸிலிருந்து கடகடன்னு இறங்கிட்டார். வேறவழியில்லாம நாங்களும் இறங்கினோம்.ரூமிலிருந்து கடற்கரைக்கோ,.. கோவிலுக்கோ போகணும்ன்னா ஆட்டோவைத்தான் நம்பணும். கொஞ்சம் தூரம்தான். கடல்பக்கத்துல ரூம் எடுத்தா, காலாற நடக்கலாம்ன்னு நினைச்சதில் மண்.


ரூம் என்னவோ வசதியாத்தான் இருக்கு. ஏ.சி யும் சைலண்டாத்தான் இருக்கு. அப்ப.. அந்த 'கடகட' எங்கிருந்து வருது. பின்பக்கம் பால்கனிக்கு போய்ப்பார்த்தா.. ரோட்டுல வேலை நடக்குது. தார்காய்ச்சும் வாசனை,ஆட்களோட சத்தம், ஜல்லியில் ரோடு ரோலர் ஓடும்போது 'கடகட'. மத்த மிஷின்களின் உய்ய்ங். கடல் வேற தெரியலை. சும்மா, சுத்திலும் கட்டிடங்களை பாக்கிறதுக்கா கன்னியாகுமரி வந்தோம்?!!!. பின்பக்கம் ரோட்டுக்கு அப்பால் தெரியுது 'ஹோட்டல் ஸீவ்யூ, ஹோட்டல் மாதினி' etc. துளசி டீச்சரோட பதிவுல ஏற்கனவே படிச்சிருந்ததால ரங்க்ஸிடம் சொல்லி, சம்மதிக்க வைத்து, நினைப்பில் விழுந்த மண்ணை, தட்டி விட்டுக்கிட்டேன்.

இப்போ சீசன் என்கிறதால் அங்கே இடம் இல்லை. பக்கத்து ஹோட்டல் எங்க சிஸ்டர்தான்...அங்கே இடம் இருக்குன்னாங்க. அதுவும் ஸீவ்யூதான். கடலைப்பாத்தமாதிரி ரூம் கிடைச்சது. விவேகானந்தரையும், திருவள்ளுவரையும் பாத்துக்கிட்டே ரங்க்ஸ் பால்கனியில் உக்காந்து ரசிக்க ஆரம்பிச்சுட்டார். இந்த அழகான காட்சியையும், கடல் காத்தையும் மிஸ் பண்ணப்பாத்தீங்களேன்னு பசங்க அவரோட காலை வார ஆரம்பிச்சிட்டாங்க. குளிச்சு ஃப்ரெஷ்ஷாகி, ஆனந்தரையும், வள்ளுவரையும் பாக்கப்போறதா அப்பாயிண்ட்மென்ட்.

ஆனந்தரும், வள்ளுவரும்.

சன்னிதித்தெருவில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் சவுத் & நார்த் இண்டியன் சாப்பாடு நல்லா இருக்கும். அங்கியே டிபன் முடிச்சிட்டு விவேகானந்தர் பாறைக்கு போக கிளம்பினோம். வழியெங்கும் கைவினைப்பொருட்களுக்கான கடைகள். விவேகானந்தர் பாறைக்கான படகு போக்குவரத்தை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடத்துது, 20 ரூபாய் டிக்கெட். படகுக்கு போக காத்திருக்கும் நேரத்தில்,வெய்யிலில் கிடந்து வாடாம இருக்க ஒரு சின்ன கட்டிடம் கட்டிவிட்டிருக்காங்க.டைம்பாஸுக்கு அங்கங்க எழுதப்பட்டிருக்கிற ஆட்டோகிராப்களை படிச்சிட்டிருக்கலாம்.

காலை நேரம்ங்கிறதால கூட்டம் இல்லை. எங்களுக்காக காத்திருந்த பொதிகைக்கு வந்தோம். குகனும் இருக்கார். முன்னொரு காலத்துல தாமிரபரணியும் இருந்துச்சி. வயசாயிட்டதால அதை ரிட்டயர் பண்ணிட்டாங்க. அதென்னவோ.... கன்னியாகுமரி வந்துட்டாலே ஏகப்பட்ட, இருவது, முப்பது வயசான கொசுவத்தியெல்லாம் சுத்த ஆரம்பிச்சுடுது.

பொதிகையில் லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு உக்காந்தோம். நம்மூர் ஆட்கள் நிறைய பேர் அதை பொக்கே மாதிரி கையில் வெச்சிக்கிட்டு உக்காந்திருக்காங்க.



40 comments:

எல் கே said...

அம்மணி ரொம்ப பொடி எழுத்தா இருக்கு

எல் கே said...

//டைம்பாஸுக்கு அங்கங்க எழுதப்பட்டிருக்கிற ஆட்டோகிராப்களை படிச்சிட்டிருக்கலாம்.//

நம்ம ஊர்ல நிறைய எடத்துல இருக்கும் இந்த மாதிரி

எல் கே said...

//கன்னியாகுமரி வந்துட்டாலே ஏகப்பட்ட, இருவது, முப்பது வயசான கொசுவத்தியெல்லாம் சுத்த ஆரம்பிச்சுடுது.///

ஆரமிங்க எங்களுக்கு பதிவு கிடைக்கும் இல்ல

நசரேயன் said...

//பொதிகையில் லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு உக்காந்தோம். நம்மூர் ஆட்கள் நிறைய பேர் அதை பொக்கே மாதிரி கையில் வெச்சிக்கிட்டு உக்காந்திருக்காங்க.//

அவங்களுக்கு எல்லாம் நீச்சல் தெரியுமாம்

அமைதி அப்பா said...

//பொதிகையில் லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு உக்காந்தோம். நம்மூர் ஆட்கள் நிறைய பேர் அதை பொக்கே மாதிரி கையில் வெச்சிக்கிட்டு உக்காந்திருக்காங்க.//

அவங்க அப்படி உட்காரலன்னா நீங்க இங்க எழுத, வேற விஷயத்த தேட வேண்டியிருந்திருக்கும்,

தொடருங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) பொக்கே மாதிரியா ?

நானானி said...

சூரியோதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடிய ஒரே இடம் கன்யாகுமரி. இது அந்த குமரித்தாய் கொடுத்த வரமோ?

எங்களையும் கூட அழைத்துச் சென்ற மாதிரி ஓர் உணர்வு!!!

Chitra said...

எங்க ஊரு பக்கம், ஒரு சுற்றுலா போன மாதிரி இருந்தது. நன்றிகள் பல.

வெங்கட் நாகராஜ் said...

கன்யாகுமரிக்கு ஒரு சுற்றுலா போன மாதிரி இருந்தது. இப்பவும் சோழில பெயர் எழுதி கொடுக்கிற ஆட்கள் இருக்காங்களா இல்ல அவங்க கடையெல்லாம் எடுத்துட்டாங்களா?

வெங்கட் நாகராஜ்

ராம்ஜி_யாஹூ said...

nice post please write more about meenkshipuram, tower junction, dathi school

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

எழுத்தை திருத்திக்கிட்டேன். வெளி இடத்திலிருந்து பப்ளிஷ் கொடுத்ததால் வித்தியாசம் தெரியவில்லை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

அதென்னவோ இலவசமா சுவர் கிடைச்சாலே பதிவு போட ஆரம்பிச்சிடுறாங்க நம்மாட்கள் :-)))))

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

எல்லாம் ஒரு மிதப்புத்தான் இல்லையா.. தேக்கடி ஞாபகம் வருதே...

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

ஒரு தேக்கடியே போதும்ப்பா.. நமக்கு வேற விஷயம் வேண்டாம்.அவங்க உக்காந்திருக்கிறதை பாத்தா நமக்குத்தான் திக்..திக்..

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

ஆமாம்..மாலையா போட்டுக்கோங்கன்னு கொடுத்தா, கையிலயே எடுத்துக்கிட்டுப்போறாங்க.

நன்றிப்பா.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை.

பொக்கே:))!?!

ப.கந்தசாமி said...

கொழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போக அருமையான இடம்.

மதார் said...

அப்படியே திற்பரப்பு , நாகராஜா கோவில் , தொட்டிபாலம் , வட்டக்கோட்டை எல்லாம் சுத்திருக்கலாமே .

மதார் said...

நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்க ம் ம் . ஆனா அந்த ஆறு ஏங்க மினி கூவம் மாதிரி ஆய்டுச்சு ? 4 வருஷம் முன்னாடி கூட நல்லா இருந்ததே .

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

கரெக்டா சொன்னீங்க. இன்னும் சித்ராபௌர்ணமியன்னிக்கு, சூரிய அஸ்தமனத்தையும், நிலவு உதயத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியும்.கண்கொள்ளாக்காட்சியா இருக்குமில்லையா!!.

வந்ததுக்கு நன்றிம்மா,

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இப்பவும் சோழிக்கடைகள் இருக்கு. எண்ணிக்கைதான் முன்னாடிமாதிரி இல்லை.

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராம்ஜியாஹூ,

முதல்வரவா...

நாகர்கோவில் இன்னும் அப்படியேதான் இருக்கு.கொஞ்சம்கூட மாறலை. மீனாட்சிபுரத்தில் இன்னும் நாலஞ்சு நகைக்கடைகள் புதுசா வந்திருக்கிறதை பார்த்தேன் :-))))))

வரவுக்கு நன்றி.

malar said...

திருவனந்த புரம் டு நாகர்கோயில் ரோடு ரொம்ப மோசம்...

நாகர்கோயிலில் இருந்து கன்யாக்குமரி வரை அழகாக படதுடன் எழுதி இருப்பது அருமை...

அமைதி அப்பா said...

//அமைதிச்சாரல் said...

வாங்க அமைதி அப்பா,

ஒரு தேக்கடியே போதும்ப்பா.. நமக்கு வேற விஷயம் வேண்டாம்.அவங்க உக்காந்திருக்கிறதை பாத்தா நமக்குத்தான் திக்..திக்..

நன்றிங்க. //


நகைச்சுவைக்கு வேறு விஷயம் தேட வேண்டியிருக்கும் என்ற பொருளில் எழுதினேன்..

என்னுடையக் கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல் சொல்வது என்னுடைய இயல்பு, அதை மாற்றிக்கொள்ள (பல இடங்களில் மாட்டிக்கொண்டதால்) முயன்று வருகிறேன்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

அதேதான்.. பாதுகாப்பு வேணும்ன்னு தோணலியோ என்னவோ :-)))))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கந்தசாமி ஐயா,

ஆமாம்.. நல்லா எஞ்சாய் பண்ணுவாங்க.பெரியவங்களும்கூட குழந்தைகளாகிடுவாங்க.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதார்,

மினி கூவம்.... கரெக்டா சொன்னீங்க.அது கெட்டுப்போய் ரொம்ப வருஷம் ஆச்சுப்பா. நாகர்கோவிலில் இருக்கும் சாயப்பட்டறைகளின் கழிவு நீரெல்லாம் அதுலதான் வந்து சேருது. (இது ஏழு வருஷம் முந்தின கணக்கு, இப்போவும் அப்படித்தான்னு நினைக்கிறேன்)தூர் வாரும் பணி நடக்கறதேயில்லைன்னு தோணுது. எப்படி இருந்த ஆறு இப்படி ஆகிப்போச்சு :-(((

சாந்தி மாரியப்பன் said...

மதார்,

திற்பரப்பு, நாகராஜாகோவில் ,தொட்டிப்பாலமெல்லாம் போகும் நேரமெல்லாம் பார்க்கிறதுதான். இப்போ போகலை, அதுக்கு பதிலா வட்டக்கோட்டை போனோமே...

வரவுக்கு நன்றி.

எல் கே said...

//மதார் said...

நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்க ம் ம் . ஆனா அந்த ஆறு ஏங்க மினி கூவம் மாதிரி ஆய்டுச்சு ? 4 வருஷம் முன்னாடி கூட நல்லா இருந்ததே .//

இப்படி ஊர்ல இருக்கற எல்லா ஆறையும் வீனடிசிட்டு அப்புறம் குடிக்க தண்ணி இல்லன்னு சண்டைபோடறோம்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

ரிலாக்ஸ்... கூடுதலா,சிம்பிளா ஒரு ஸ்மைலி போட்டுக்கங்க புரிஞ்சுப்போம் :-)))

என்னுடைய கருத்தை சொல்றதுக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நாந்தான் நன்றி சொல்லணும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மலர்,

திருவனந்தபுரம் ரோட்டில் நிறைய இடங்களில் வேலை நடக்குதுப்பா. இப்போ ஒத்தையடிப்பாதை மாதிரி இருக்கிற ரோட்டை விரிவு படுத்துறாங்களாம். ரோடுதான் மோசம்.. ஆனா இயற்கைக்காட்சிகள் ஆஹா!!!! அதுக்காகவே எனக்கு அந்த ரூட் பிடிக்கும்.

நன்றிங்க முதல்வரவுக்கும் கருத்துக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா எல்.கே,

கரெக்டா பிடிச்சீங்க பாயிண்டை... இப்படி நினைச்சிக்கிட்டேதான் படமெடுத்தேன். இடுகையிலும் லேசா கோடி காட்டியிருக்கேன். தாங்க்ஸ்பா.

மாதேவி said...

சுசீந்திரம்,கன்னியாகுமரி ஸீவ்யூ, இந்த இடங்கள் ஒருதடவை வந்திருக்கிறேன்.

மீண்டும் ஞாபகமூட்டியது உங்கள் இனிய பதிவு.

நதிகளின் அவலம் :(

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

ஞாபகம் வருதே..ன்னு பாடினீங்களா :-)))

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், கன்யாகும்ரி எப்பவும் பிடிக்கும். அங்கதானே ஒரு இடத்தில கடல் சாந்தமா இருக்கும், இன்னோரு இடத்தில ஆக்ரோஷமா இருக்கும் இல்ல? கடல்ல குளிச்சீங்களா. எழுதற பாங்கு ரொம்ப நல்லா இருக்குப்பா. இன்னும் எத்தனை தடவை ஞாபகப் படுத்தணுமோ இந்த மக்களுக்கு. அந்த ஜாக்கேட்டைத்தான் போட்டுக்கிட்டு பத்ரமா போயிட்டு வரலாமில்ல.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்.... ஒரு அழகான பயண கட்டுரை படிச்ச மாதிரி இருக்கு.... நல்லா கோர்வையா எழுதறீங்க. வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

பயணக்கட்டுரை அருமை , அப்படியே ஓசியில ஊரசுத்தி காண்பித்தீடீங்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

கடல்ல குளிக்கலை. கால் நனைச்சதோட சரி.கடலோட குணம் நானும் கேள்விப்பட்டிருக்கேன். அதோட நிறமும் வித்தியாசப்படும்ன்னு சொல்லுவாங்க. எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியலை.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலா,

இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன், தொடர்ந்து வாங்க ;-)))

நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails