Wednesday 14 April 2010

புதுவருஷம் பூத்தாச்சு..வாழ்க வளமுடன்...


அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்....

விரோதியை வழியனுப்பிவிட்டு விக்ரதி ஆண்டு பிறந்திருக்கிறது. எங்க வீட்டில் எப்பவும் தமிழ்ப்புத்தாண்டை விஷுக்கனி பார்த்துதான் கொண்டாட ஆரம்பிப்போம். முதல் நாளே, பூஜை அறையில், அல்லது சாமிபடத்துக்கு அருகில் முகம் பார்க்கும் கண்ணாடியை வெச்சி, அது முன்னால, பணம், காசு, நகைகள்,சரக்கொன்றைப்பூ, பழங்கள் எல்லாம் வெச்சிடுவோம். இருள் பிரியாத விடியற்காலையில் எழுந்து கண்ணை மூடிக்கிட்டேவந்து ,முதலில் தீபதரிசனம், அப்புறம் சாமி தரிசனம். அப்புறம் அப்படியே கண்ணாடியில முகத்தை பாத்துக்கிடுவோம்.அதன்பின் கண்ணாடிமுன் இருக்கும் பொருட்களை பார்ப்போம். இது எதுக்குன்னா,... வருஷம் முழுக்க இதுமாதிரி 'நல்ல' பொருட்களின் தரிசனம் எப்பவும் கிடைக்கும்ன்னு ஐதீகம். (காலைல யார் மூஞ்சில முழிச்சனோன்னு மத்தவங்களை திட்டவேண்டாம் பாருங்க :-))))))

இந்த வருஷம், அலங்கார ஏற்பாடு என்னுடைய மேற்பார்வையில் ரங்க்ஸ் செய்தது. அசத்தலா இருக்குதில்ல.....



விஷுக்கனி பார்த்துட்டு, குளிச்சு முடிச்சு அப்புறம் பூஜை நடக்கும். அவலுடன், வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் எல்லாம் போட்டு பிசைந்து உருண்டைகளாக பிடிச்சு வெச்சு நைவேத்தியம் நடக்கும். அப்புறம், சின்னவங்களுக்கு பெரியவங்க ஆசிர்வாதம் செஞ்சு கைநீட்டம் கொடுப்பாங்க. கை நீட்டம்ன்னா காசு, பணம்தான். அன்னிக்கு நிறைய வசூல் நடக்கும். அப்புறமா கோவிலுக்கு போய்ட்டு வந்து செஞ்சு வெச்ச டிபனை வெட்ட வேண்டியதுதான்.

உங்களுக்கும் கை நீட்டம் இதோ இருக்கு.

இன்னிக்கி டிவி பொட்டி முன்னாடி முடங்கிடாம ஃப்ரெண்ட்ஸை,பெரியவங்களை போய்ப்பாருங்க, குடும்பத்தோட வெளியே,வாசல்ன்னு போயிட்டு வாங்க. குழந்தைகளோட சிரிச்சிப்பேசி சந்தோஷமா இருங்க . பண்டிகைங்கிறதே சந்தோஷமா இருக்கத்தானே.

பண்டிகையையும் கோடையையும் சேர்த்துக்கொண்டாட சின்ன பிக்னிக் போயிட்டு வரலாம். ரெடியா இருங்க.(இப்பத்தான் எழுத நேரம் வந்திருக்கு)

நேத்து இரவு 11.59 இருக்கும். படபடன்னு பட்டாசு வெடிக்கற சத்தம். தவுசண்ட்வாலாவோ என்னவோ!!!. அதைத்தொடர்ந்து வாண வேடிக்கைகள். ஆங்கிலப்புத்தாண்டோன்னு ஒரு நிமிஷம் நினைப்பு ஜனவரிக்கு ஓடுது.பேண்ட்வாத்தியம் முழங்குனதை பார்த்ததும்தான் புரிஞ்சது.... ஒரு கல்யாண ஊர்வலம் போகுதுப்பா.. நல்லா கிளப்புறாங்க!!!!


மறுபடியும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

30 comments:

எல் கே said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எல் கே said...

//இந்த வருஷம், அலங்கார ஏற்பாடு என்னுடைய மேற்பார்வையில் ரங்க்ஸ் செய்தது. அசத்தலா இருக்குதில்ல.....//

எப்பவும் இதுதானா நடக்குது ? இப்ப என்ன தனியா?

sathishsangkavi.blogspot.com said...

வணக்கம்....

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

மாறியது தமிழ் புத்தாண்டு நாள் மட்டும் தான் ஆனால் தமிழனின் பாரம்பரிய சித்திரைத் திருவிழா என்றும் தொடரும்...

துபாய் ராஜா said...

எனக்கு தெரிந்த வரை கேரளாவைப் போன்றே கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சித்திரை விசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

சித்திரை விசுக்கனி அலங்காரம் அருமை. தங்கக்காசெல்லாம் பத்திரமா எடுத்து வைங்க. ஊருக்கு வரும் போது எண்ணி வாங்கிக்கிறோம். :))

அம்பிகா said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
அலங்காரம் அழகு.

ஹுஸைனம்மா said...

விஷுக்கனி பாக்கிறது கேரளாக்காரங்க செய்வாங்கன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன்; நீங்களும் செய்வீங்களா?

அப்புறம் (கோச்சுக்கக்கூடாது) அந்த நிறபறா பாக்கெட் ஏன் வச்சிருக்கீங்க, நிறபறாக்குப் பதிலாவா, அவலுக்குப் பதிலாவா? ;-))

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரலுக்கு விஷுக்கனிக் கொண்டாட்ட வாழ்த்துகள்.
ரொம்ப அழகாச் செய்து வைத்திருக்கிறார் உங்க வீட்டுக்காரர்/.அருமையா இருக்குப்பா.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//உங்களுக்கும் கை நீட்டம் இதோ இருக்கு//

விஷுகனிக்கு எப்போலிருந்து அல்வா குடுக்க ஆரம்பிச்சாங்க. (இப்படி எல்லாம் சின்ன கொழந்தைகள அழ வெக்க கூடாது நாளும் கிழமையுமா...)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதுகை

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்க சொல்றது புரியலை.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

அறிக்கைகள் நாளுக்கு நாள் மாறுபடலாம். நான் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்ன்னே வாழ்த்திக்கறனே :-)))

வரவுக்கு நன்றி.

எல் கே said...

//விஷுக்கனி பாக்கிறது கேரளாக்காரங்க செய்வாங்கன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன்; நீங்களும் செய்வீங்களா?//

கோவை பகுதில உண்டு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய்ராஜா,

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவின் தங்கை என்றே சொல்லலாம். நிறைய பழக்கவழக்கங்களில் ஒற்றுமை உண்டு.

உங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு, விஷு வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

துபாய் ராஜா,

தங்கக்காசுகள், பிஸ்கட்டுகள் எல்லாமே இப்பவே வேணும்ன்னாலும் எடுத்துக்கோங்க. உங்கூர் கடையில நகைகளா மாத்தி கொண்டுவந்துடுங்க போதும் :D :D

நன்றி,அலங்காரம் அருமைன்னு சொன்னதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

உங்களுக்கும் சித்திரைத்திருநாள்,தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நல்லா சூபர்வைஸ் செஞ்சிருக்கேனா? :-))))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

கன்னியாகுமரி மாவட்டத்தில் விஷூக்கனி பாக்கிற வழக்கம் உண்டு.கொஞ்சவருஷம் அங்கே இருந்த பழக்கத்தாலும், புகுந்தவீடு அங்கேதான் என்பதாலும் என்வீட்டிலும் உண்டு. குமரி+ நெல்லையின் கலவை நான் :-))))

அப்புறம் அந்த நிரபரா பாக்கெட்.. அவலுக்கு பதிலா இல்லை,..அவலே அதுலதான் :-))). சம்பிரதாயம்.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உங்களுக்கும் விஷுக்கால,தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தங்க்ஸ் சொல்லைக்கேட்டால் என்னிக்குமே ரங்க்ஸ் நல்லபெயர் எடுக்கலாம் :-)))))))

நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

அது அல்வா இல்லை.. நல்லாப்பாருங்க.கனிகளை சேத்துப்போட்டு செஞ்ச பஞ்சாமிர்தம். எங்கே!! அழாம கண்ணாடில உங்களை பாத்து,பயப்படாம சிரிங்க பாக்கலாம்:D :D

ஆமா.. என்னை எப்போலேர்ந்து புதுகைக்கு ஷிப்ட் செஞ்சீங்க?..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

எல்.கே
பாலக்காடு பக்கத்தில் இருப்பதால் கோவைப்பகுதியில் உண்டு . சரிதானே..

மாதேவி said...

இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சித்திரைத் திருநாள்/தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று இருக்க இந்தப் புத்தாண்டு வழிவகுக்கட்டும்.

வெங்கட் நாகராஜ்

Jaleela Kamal said...

தமிழ் புத்தாண்டுக்கு என்ன செய்வீர்கள் எனப்தை அறிந்து கொண்டேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகக்ள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உங்களுக்கும் எல்லாவளங்களும் கிடைக்கட்டும், இந்த புத்தாண்டில். நல்வாழ்த்துக்கள்.

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலா,

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் சாரல்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நன்றிப்பா.

நானானி said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!அமைதிச்சாரல்!

உங்க புண்ணியத்தில் விஷுக்கனியும் இன்ன பிற பொருட்களும் முக்கியமாக தங்கக்காசுகள்!!எல்லாம் கண்ணாறக் கண்டேன். வரும் நாட்கள் செழிப்பாக இருக்க வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

நானானி said...

நீங்க மகாராஷ்ட்ராவிலா இருக்கீங்க?
போனவாரம் புது மும்பைக்கு வந்திருந்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

உங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1989-ல் இருந்து நான் மும்பைவாசிதான்.

LinkWithin

Related Posts with Thumbnails