Friday 16 April 2010

எதிர்பாராதது..ரொம்ப லேட்டாக ஆரம்பம்- 1.



இப்படி ஒரு சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்குமுன்னு நினைச்சுக்கூட பார்க்கலை. கிடைச்சா நல்லாத்தான் இருக்கும், இல்லைன்னாலும் பரவாயில்லைன்னுதான் இருந்தோம். பழம் நழுவி,பாலில் விழுந்து.. அது நழுவி, வாயில் விழுந்ததுபோல் ஆயிட்டுது.

'வருவீயா... வரமாட்டியா!!!.. வரலேன்னா உம்பேச்சு,..கா'..ன்னு பிறந்து ஆறே நாள் ஆன தம்பியின் பையன் கூப்பிடும்போது,.. ஊருக்கு போகாம இருக்கமுடியுமா? எப்படி!!! இப்பத்தான் ரெண்டுமாசம் முன்னாடிதானே போயிட்டு வந்தோம். 'போகலாம்.. போகலாம்'ன்னு ரங்க்ஸும், பசங்களும் அவரவர் ஒத்தைக்காலில் நிக்கிறாங்க.பசங்களுக்கு குட்டிப்பெண் 'சார்மிஷா'வை இன்னொருக்கா பாக்கலாம், வெளையாடலாம்ன்னு நப்பாசை.ஆனா, டிக்கெட் கிடைக்கணுமே!..

பெண்ணுக்கும்,ரங்க்ஸுக்கும் ராஜ்தானியில் போகணும்ன்னு ஆசை. ஏற்கனவே நான் போயிட்டு வந்து, ஆஹா!!..ஓஹோ..ன்னு எக்கச்சக்கமா வயித்தெரிச்சலை
கிளப்பி விட்டிருந்தேன். ஆனா,..இப்போ திடீர்ன்னு எப்படி ஏற்பாடு செய்யமுடியும். தத்காலுக்குமே வாய்ப்பில்லாத விடுமுறைக்காலம். வலையோடு விளையாடி, ..தேடி, கடைசியில் ரெண்டு டிக்கெட் கிடைச்சது. இன்னும் ரெண்டு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கு. எதுக்கும் இருக்கட்டும்ன்னு நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பார்த்தா.. ஆஹா!! இருக்கு. திரும்பிவரவும் அதிலேயே டிக்கெட் புக் ஆயிருச்சு. அதெப்படி!!.. ராஜ்தானிலதான்னு.., சாமியாடுறதுக்கு பசங்க கொடியேத்தியாச்சு.. ஜஸ்ட் பத்துப்பதினஞ்சு நாளுக்குள்ள கன்ஃபர்ம்ன்ட் டிக்கெட் கிடைச்சதே அபூர்வம். இதுல ராஜ்தானி, நாலுடிக்கெட்டும் கன்ஃபர்ம்ன்ட் ஆனா, ஊருக்கு போலாம். இல்லைன்னா ப்ரோக்ராம் கேன்சல்ன்னு, பசங்களுக்கு ஸ்ட்ரிக்டா சொல்லப்பட்டு விட்டது.

ஒருவாரமா, அப்டேட்ஸ் பாத்துக்கிட்டே இருந்து, கடைசியில் கிளம்புறதுக்கு முந்தின நாள் ராத்திரி எட்டு மணிவாக்கில் நாலுபேரோட டிக்கெட்டும் கன்ஃபர்ம் ஆகிட்டுது. மறு நாள் விடியற்காலை அஞ்சு மணிக்கு ரயில். தீப்பிடிச்ச வீட்டிலுள்ளவங்க மாதிரி பரபரப்போட, பேக் பண்ண ஆரம்பிச்சோம். எல்லாம் ரெடியா இருக்கணும். ஜஸ்ட் பேக் பண்றதுதான் பாக்கி என்ற விழிப்போட, ஒரு வாரமா இருந்ததால, பத்துப்பதினஞ்சு நிமிஷத்துல பேக்கிங், எல்லாம் முடிஞ்சுட்டுது.

ரயிலில் ஏறியதும், அவரவர் இருக்கையை தேடி அமர்ந்தோம். ரங்க்ஸுக்கும், பெண்ணுக்கும், இருக்கைகள் எங்ககிட்டேயிருந்து ரொம்பதூரத்தில் அலாட் ஆகியிருந்தது. அவங்க அந்தக்கோடி.. நாங்க இந்தக்கோடி.. மத்தியானத்துக்கப்புறம் எங்க பக்கத்துல இருக்கைகள் காலியானதுனால, பிரிஞ்ச குடும்பம் மறுபடியும், குடும்பப்பாட்டெல்லாம் பாடாமலேயே ஒண்ணு சேந்துட்டோம்.(பாடியிருந்தா ரயில விட்டே இறக்கிவிட்டிருப்பாங்க என்பது சொல்லப்படாத ரகசியமாக்கும்).

ரயில் ஜிகுஜிகுன்னு வேகமா போயிட்டிருக்கு. மஹாராஷ்ட்ரா பகுதியிலிருந்து கொங்கண் பகுதிக்கு நுழைஞ்சாச்சு. இந்த கொங்கண் ரயில்வே ஆரம்பிச்சதிலிருந்து பயண நேரம் நிறைய மிச்சப்படுது. மங்களூரையும், மும்பையையும் இணைக்கிறதுக்காகத்தான் முதலில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மனோகர் ஜோஷி, மதுதண்டவதே,ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்ற பெரியவர்களின் சிந்தனையில் உதித்ததுதான் இந்த திட்டம்.

1966-ல் மும்பையின் திவா, மற்றும் ராய்கட் மாவட்டத்தின் அப்டாவுக்கு இடையே பாதை போடப்பட்டு,பின் ரோஹா வரை தொடரப்பட்டது.அக்டோபர் 1984-ல் Mangalore-ல் இருந்து Madgaon வரையிலான 325 கி.மீ ல இருப்புப்பாதை போடுறதுக்கான களஆய்வு செய்யப்பட்டு, மார்ச் 1985-ல் Madgaon-ல் இருந்து ரோஹா வரையிலான மேற்கு கடற்கரை வழியும் சேர்த்துகொள்ளப்பட்டது. இப்படி Mangalore-Roha வரையிலான இந்த ப்ரொஜக்ட், இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு, "கொங்கண் ரயில்வே' என்று காரணப்பெயரிடப்பட்டு, 1988-ல் ரயில்வே அமைச்சரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கொங்கண் ரயில்பாதை.

ஜுலை 19, 1990-ல் இந்த ப்ரொஜக்டுக்காகவே தனியா, Konkan Railway Corporation Limited (KRCL) ஆரம்பிக்கப்பட்டு, திரு.E. ஸ்ரீதரன் அதனுடைய முதலாவது chairman + Managing director ஆக நியமிக்கப்பட்டார்.அஞ்சு வருஷ ப்ரொஜக்டான இதுக்கு ரோஹாவில் வெச்சு செப்.15, 1990-ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த ப்ரொஜக்டுக்கு எதிர்ப்புகளும் இல்லாமலில்லை. கோவா மாநிலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் konkan railway re alignment committee(KRRAC) என்ற அமைப்பை உருவாக்கி, போராடினார்கள். இந்த ப்ரொஜக்ட் மேற்கு கடற்கரையை ஒட்டி வர்றதால, சதுப்பு நிலக்காடுகள், Mandovi,Zuari நதிகளின் கழிமுகங்கள், அப்புறம்.. விளை நிலங்களுக்கு பாதிப்பு வரும்ன்னு சொல்லி, அதுக்கு தீர்வா மாற்றுப்பாதை ஒண்ணை பரிந்துரைச்சிருக்காங்க. ஆனா, அந்த மாற்றுப்பாதையால் இன்னும் 25 கி.மீ. கூடுதல் ஆகும், மேலும் முக்கியமான நகரங்களை இணைக்கமுடியாதுன்னு விளக்கம் கொடுத்து, KRCL அந்த ஆலோசனையை நிராகரிச்சிட்டாங்க. இது தொடர்பா போடப்பட்ட வழக்கிலும் ஹைகோர்ட் KRRAC-யின் மனுவை தள்ளுபடி செஞ்சிட்டாங்க.

நிறைய சிரமங்களை கடந்துதான் இந்த ப்ரொஜக்ட் முடிஞ்சிருக்கு. மஹாராஷ்ட்ராவின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள், இருப்புப்பாதைக்காக குடைஞ்ச டன்னல்கள் நொறுங்கி விழுதல், பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துறதுல சிக்கல், காட்டுமிருகங்களால் ஆபத்து, வெள்ளம்ன்னு எல்லாத்தையும் கடந்துதான் வரவேண்டியிருந்தது.

zuari நதி மீது கட்டப்பட்ட பாலம்.

ஆசியாவின் உயரமான பாலம்.
(படங்கள் உதவி கூகிளாண்டவர்.)

கடைசியா மும்பையிலிருந்து மங்களூர் வரையிலான இந்தப்பாதையில், பயணிகள் போக்குவரத்து மே மாசம் 1998-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 738 கி.மீ. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ஓடும் ரயில்களுக்கேத்தவாறு அமைக்கப்பட்டிருக்கு. இப்ப, இதில் ஓடும் மிகவேக ரயில் 'திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்'. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ஓடுது. இது ஏப்ரல் 1,1998 -லேர்ந்து இந்த பாதை வழியா திருப்பிவிடப்பட்டிருக்கு. இந்தப்பாதையால் கணிசமான அளவு நேரம் மிச்சப்படுறதால மும்பையிலிருந்து, கேரளா போற அநேக ரயில்கள் இந்தப்பாதை வழியாத்தான் போகுது. வெறும் 24 மணி நேரத்தில் திருவனந்தபுரத்துக்கு போயிடலாம்.

சாயந்திர டீக்கு அப்புறம் சதியாலோசனை ஆரம்பிச்சது. கைவசம் நாலே நாள். அதுல ஒரு நாள்(21-3-10) குட்டிப்பையனோட பேர்சூட்டுவிழாவுக்கானது. மீதி மூணே நாள் இருக்கு. லீவ் எஞ்சாய் செய்ய எங்கே போகலாம். திருவனந்தபுரம் ஊரை சுத்தலாமா, அல்லது கன்னியாகுமரி போகலாமா??.. கன்னியாகுமரிக்கே போலாம்ன்னு ரயிலை விட்டு இறங்கி, ச்சாய் குடிக்கும்போது முடிவெடுத்து, ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் பஸ் ஸ்டாண்டுக்கு போனோம். நாகர்கோவில் பஸ் ஒண்ணு ரெடியா நின்னுட்டு இருந்தது.

26 comments:

Chitra said...

நிறைய சிரமங்களை கடந்துதான் இந்த ப்ரொஜக்ட் முடிஞ்சிருக்கு. மஹாராஷ்ட்ராவின் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள், இருப்புப்பாதைக்காக குடைஞ்ச டன்னல்கள் நொறுங்கி விழுதல், பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துறதுல சிக்கல், காட்டுமிருகங்களால் ஆபத்து, வெள்ளம்ன்னு எல்லாத்தையும் கடந்துதான் வரவேண்டியிருந்தது.

..... interesting facts. Thank you for this blog post. Very nice.

ராமலக்ஷ்மி said...

/'வருவீயா... வரமாட்டியா!!!.. வரலேன்னா உம்பேச்சு,..கா'..ன்னு பிறந்து ஆறே நாள் ஆன தம்பியின் பையன் கூப்பிடும்போது,.. ஊருக்கு போகாம இருக்கமுடியுமா? //

அதானே:)!

//நாகர்கோவில் பஸ் ஒண்ணு ரெடியா நின்னுட்டு இருந்தது.//

ஏறினீர்களா?

தொடருங்கள்!

துபாய் ராஜா said...

ஹாப்பி ஊர் டேஸ்.... :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு.. படிக்க படிக்க ஆர்வம் குறையாமல் இருந்தது.. பயணத்தின்போது சில சமயங்களில் சில இடறுகளை சந்திக்க வேன்டியுள்ளது. உங்க தம்பி பையனை பார்த்தீங்களா.. நான் வாழ்த்து சொன்னதாக சொல்லவும்..

எல் கே said...

//நிறைய சிரமங்களை கடந்துதான் இந்த ப்ரொஜக்ட் முடிஞ்சிருக்கு.//
இது மட்டும் இல்லை, நிறைய ப்ரோஜெக்ட்ஸ் இந்த மாதிரி தாமதம் ஆகுது

//சாயந்திர டீக்கு அப்புறம் சதியாலோசனை ஆரம்பிச்சது. கைவசம் நாலே நாள்//
சதி ஆலோசனை தோல்வியா

துபாய் ராஜா said...

ஓ...போன மாதம் போயிட்டு வந்த பயணமா... கொங்கன் பாதை போட்டோக்களும் போட்டிருக்கலாமே..

Paleo God said...

மட்கான்லேர்ந்து மும்பை போயிருக்கேன். நிறைய சவாலான பாதைதான் அது.

தொடருங்கள்.:))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி மேடம்,

ஊருக்கு போக சான்ஸ் கிடைக்கும்போது விடமுடியுமா ;-)))

ரெண்டே நாளில் தொடர்கிறேன்.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

ஒரு நாள் முழுக்க அவனுடன்தான் இருந்தேன். வாழ்த்தை சொல்லிவிடுகிறேன்.

நன்றிங்க, வரவுக்கும் கருத்துக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ஆமாம், தாமதமாகும் ஒவ்வொரு நாளும் நம்ம வரிப்பணம்தான், கோடிக்கணக்கில் வீணாகுது.

சதியை முறியடிச்சுட்டேன். கன்னியாகுமரி போறதா கடைசியில் எழுதியிருக்கேனே :-))))

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய்ராஜா,

ஊர் டேஸ் ஹாப்பியா இருந்தது. இப்பத்திய வாழ்த்தை அடுத்ததடவைக்கு பத்திரப்படுத்தி வெச்சிக்கறேன்.

கொங்கண் பாதையை சுட்டுப்போட்டிருக்கேன்.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

ஆமாம்,பயங்கரமான அழகுப்பிரதேசம் அது.

வரவுக்கு நன்றி.

சந்தனமுல்லை said...

அருமையான தகவல்களை சுவாரசியமா தொகுத்து கொடுத்திருக்கீங்க...அமைதிச்சாரல்! வெகு சுவாரசியம்! குடும்பத்தின் புது வரவுக்கு வாழ்த்துகள்! இனிய பயணங்களுக்கும், நினைவுகளுக்கும்...:-)

அமைதி அப்பா said...

நல்லதொரு தகவல், தொடருங்கள் சீக்கிரம்.

ஹுஸைனம்மா said...

அதுக்குள்ள அடுத்த ஊர்சுத்தலா?? அதுவும் மறுபடியும் ராஜ்தானியிலேயே?? அவ்வ்வ்வ்... ரொம்பப் பொறாமைப் படவைக்கிறீங்க!!

நல்ல தகவல்கள், படங்கள். அந்த ஒசரமான பாலத்துல போகும்போது பயமா இல்லியா? பாக்கவே திக்திக்னு இருக்கு.

மாதேவி said...

சுவாரசியமான ஆரம்பம் மிகுதிக்கு ஆவலுடன் வெயிட்டிங்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

நன்றிப்பா வாழ்த்துக்களுக்கும் வந்ததுக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

அடுத்த பதிவு ரெடியாகிக்கிட்டிருக்கு.

தொடர்ந்து வாருங்கள், நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஊர்சுத்துறது எங்க வீட்டுல எல்லோருக்கும் பிடித்தமானது :-))

முந்தியெல்லாம் வருஷத்துக்கொருக்கா போவோம். பசங்க மேல்வகுப்புகளுக்கு போனபிற்பாடு ரெண்டு வருஷத்துக்கொருமுறை ஆகிப்போச்சு. அதான் இப்ப போனஸ்பயணம் கிடைச்சவுடன் விட மனசில்லை.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

சீக்கிரமே சந்திப்போம்.

நன்றிப்பா.

துபாய் ராஜா said...

பதிவிற்கேற்ற படங்கள் அருமை.

எல் கே said...

ungalai pru todar pathiviruku alaithullen

http://lksthoughts.blogspot.com/2010/04/blog-post_28.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

அழைச்சதுக்கு தாங்க்ஸ்பா.. ஊர்சுத்தல் முடிஞ்சதும் கண்டிப்பா தொடர்வேன்.

நன்றி.

Prathap Kumar S. said...

உங்க ரயில் பயணம் என்னோட ரயில் பயணத்தையும் நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது.
மும்பையிலும், புனேயிலுமாக 4-5 வருடங்கள் இருந்தேன். எப்பவும் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்லதான் வருவேன். ஒருதடவை அவசரப்பட்டு
ஜெயந்தி ஜனதாவுல வந்து வாழ்க்கை வெறுத்துடுச்சு... ம்ஹும்...எல்லாம் ஒரு அனுபவம்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சில்,

ஆஹா.. வடக்கே வந்திருக்கீங்களா!!!

நாங்க இங்கே வந்த சமயம் ஜெயந்தி மட்டும்தான். முதல் தடவை கேரளாவின் அழகை ரசிப்பதிலும், பயணத்தை ரசிப்பதிலுமாக அலுப்பு தெரியலை. அடுத்த தடவை வாழ்க்கையே வெறுத்துடுச்சு.அதுவும் நெய்யாற்றிங்கரை வந்ததும், ரயில் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்லுமே :-((. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆரம்பிச்சப்புறம்தான் நிம்மதியாச்சு.

நீங்க சொன்னமாதிரி எல்லாம் ஒரு அனுபவம்தான். நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails