கண்ணைக்கவரும்படி உணவை அலங்கரித்து வைக்கும் ஃபுட்டோக்ராபியைப்பற்றி ஏற்கனவே இரண்டு பாகங்களில் பகிர்ந்திருந்தேன். சுட்டியைப் பற்றிச்சென்றால் அவற்றைக் கண்டு களிக்கலாம்.
ஒளிப்படத்துக்காக உணவை அலங்கரிக்கும்போது, உணவின் நிறத்திலிருந்து வேறுபட்ட வண்ணங்களிலான பின்புலம் அமைந்திருப்பது நன்று. விரும்பினால் மேசை விரிப்பு, தட்டு, தம்ளர், ஸ்பூன் போன்றவற்றையும் களப்பொருட்களாக சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒளியைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளல் உணவின் தன்மையை மேலும் மேம்படுத்திக்காட்டும். பொதுவாக காலை நேர இயற்கை ஒளியில் ஜன்னலின் அருகே டிஸ்ப்ளே செய்து எடுக்கும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கிறது. விரிப்புகள் எதுவும் சரியில்லையெனில் வீட்டிலிருக்கும் மரத்தாலான மேசை மற்றும் நாற்காலிகளின் மீது உணவுப்பொருட்களைப் பரப்பியும் படம் பிடிக்கலாம். அவ்வாறு படம் பிடிக்கும்போது மரப்பொருளின் மேற்பரப்பில் தண்ணீரை நன்கு தெளித்து லேசாகத்துடைத்து விட்டு ஈரம் காயுமுன் படம் பிடித்தால், பின்புலம் அருமையாக அமையும்.
சக்கையப்பமும் மசால் வடையும் பின்னே பூந்தட்டும்.
1 comment:
ஆம் பார்க்கவே பரவசமூட்டும்
அற்புதப் படங்கள்
ருசிக்கு முந்தியது வாசம் என்றால்
அதற்கும் முந்தியது காட்சிப்படுத்துதல்தானே
அதுதானே உணவின்பால் நமக்கு
முதல் ஈர்ப்பை ஊட்டும்
Post a Comment