Tuesday 2 July 2013

தினகரன் நாளிதழும் ஞானும் பின்னே அல்வாவும்..

பாம்பே அல்வா என்று பெயரிடப்பட்டிருப்பதால் இது பாம்பேயாக இருந்து மும்பையாக மாறியிருக்கும் ஊரைத்தான் தாயகமாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பதை வாசிக்கத்தெரிந்த சிறுகுழந்தை கூட சொல்லிவிடும். அதேபோல், சைனாக்ராஸ் எனப்படும் அகர்அகரை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டிருப்பதால் இந்த அல்வாவை சைனாவிலோ, பாம்பே அல்வா என்ற நாமகரணம் கொண்டிருப்பதால் மும்பையிலோ  செய்ய வேண்டுமென்ற அவசியமுமில்லை. எந்த ஊரில் செய்தாலும் அல்வா.. அல்வாதான்.

கோபால் பல்பொடி மாதிரியே இதுவும் ஆசியாவின் ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், மலேஷியா, சைனா, போன்ற நாடுகளில் புகழ்வாய்ந்தது. அகர் அகர் உடல்சூட்டைத்தணிக்கும் குணம் கொண்டது. ஆகவே இதில் அல்வா,  புடிங் என்று வகைவகையாகச் செய்து அசத்தலாம். இளசான தேங்காயின் நறுக்.. நறுக்கையும் வழுவழுப்பையும் கொண்டிருக்கும் இந்த அல்வாவை வெயில் காலங்களில் மட்டுமல்லாது எல்லாக்காலங்களிலும் கொடுத்து மகிழலாம். என் வீட்டினருக்கு அல்வா கொடுப்பதென்று முடிவெடுத்து விட்டால் அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன். உடனே ஓடிவிடுவேன்.. பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு :-) நினைத்த போதெல்லாம் அல்வா செய்து கொடுத்து மகிழத்தான் கிட்ஸ் கம்பெனிக்காரர்கள் உடனடி மிக்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களே. அதில் ஒன்றிரண்டு பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு வருவது வழக்கந்தான் :-)

முதன்முறை இந்த அல்வா செய்யப்போய் அது எனக்கு அல்வா கொடுத்த கதையும் உண்டு. கடைசித்தம்பியின் திருமணத்தின்போது அவனுக்கு என் கையால் அல்வா செய்து கொடுக்க வேண்டுமென்ற ஆசையில் மும்பையிலிருந்தே பாக்கெட் வாங்கிப்போயிருந்தேன். எவ்வளவு நேரம் காய்ச்ச வேண்டுமென்று தெரியாமல் நானே குத்து மதிப்பாக ஒரு கணக்கைப்போட்டுக்கொண்டு காய்ச்சிய பாலில் அல்வாமிக்ஸை மிக்ஸிவிட்டு அது  கரையும் வரையில் கிளறி, பாயசம் மாதிரியே இருக்கிறதே என்று மனதில் கடைசி வரையில் தோன்றிக்கொண்டே இருந்த எண்ணத்தைத் தூக்கிக்கடாசி விட்டு, அல்வாக்கலவையை தட்டில் கொட்டிவிட்டேன்.  அதுவானால் இறுகாமல் விழித்துக்கொண்டே இருந்தது. சரி, விடியும் வரைக்கும் விட்டு வைத்தால் இறுகிவிடும், டிபனுடன் பரிமாறலாமென்று எண்ணி, ஒரு தட்டைப்போட்டு மூடி வைத்து விட்டேன். விடிந்து பார்த்தால் தட்டிலிருந்ததில் பாதியைக்காணோம்.மீதி இன்னும் பாஸுந்தி மாதிரியே இருக்கிறது.

ஆஹா!!.. ருசியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது, வீட்டிலிருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் மீதம் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விழுந்தது மண். இரவோடு இரவாக உலா வந்த பூனையார் டேஸ்ட் பார்த்துவிட்டு மீதியை எங்களுக்கு விட்டு வைத்திருந்தார் :-) ஆகவே கிண்டிய அல்வாவை கடைசியில் குப்பையில் கடாச வேண்டியதாகப்போயிற்று. அதன்பின் அகர் அகர் அல்வா முயற்சியில் இறங்கவேயில்லை. சமீபத்தில் மகள் அழகாக பக்குவமாகச் செய்து பரிமாறினாள்... ஜூப்பர். கொஞ்சம் கெட்டியான பாயாசம் அளவுக்கு வரும்வரை சுமார் பத்து நிமிடங்களுக்காவது கிளறிக்கொண்டே இருக்க வேண்டுமாம், இதுதான் ரகசியம். அவ்வளவுதான்.. விட்ட பைத்தியம் மறுபடி பிடித்துக்கொண்டது எனக்கு. அரை லிட்டர் பால் மீந்தாலும் போதும். டின்னரில் தட்டில் அல்வா இருக்கும். உடலுக்கும் நல்லதாயிற்றே..

பாக்கெட்டைப் பிரித்து..

கொதித்த பாலில் அல்வா மிக்ஸைக்கொட்டிக்கிளறி..
தட்டில் ஊற்றி..
துண்டு போட்டால்..
அல்வா ரெடி..
துருவித்தூவிய பாதாம் மாயமாய் மறைந்த விந்தையென்ன என்று திகைக்க வேண்டாம். அது போன மாதம்.. இது இந்த வாரம் :-)

என்னதான் அதிலேயே ஸ்கிம்டு பால்பவுடர் இருந்தாலும் 80கிராம் பாக்கெட்டுக்கு அரை லிட்டர் பாலைக் காய்ச்சிச் சேர்த்துச் செய்தால் அருமையாக வருகிறது. பாதாம், ஏலக்காய், குங்குமப்பூ, பிஸ்தா என்று எல்லாமும் இருப்பதால் பார்ட்டிகளுக்கு ஏற்ற டெஸர்ட்டாகவும் இருக்கிறது. உலர்பழங்கள், பால் சாப்பிடப்பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படிச் செய்து கொடுத்து சத்தை உள்ளே தள்ளிவிடலாம். 

இப்பொழுது ஏன் அல்வா கொடுக்கிறேன் என்று இந்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.. கேட்காவிட்டால்?... ஹி..ஹி.. நானே சொல்லி விடுவேனாக்கும் :-)))

என்னுடைய புகைப்படப்பதிவுகளைப்பற்றிய பேட்டி குங்குமம் தோழி இதழின் "கண்கள்" பகுதியில் வந்தது தெரிந்ததே.
அந்தப்பேட்டி இப்பொழுது மே மாதம் எட்டாம் தேதி வெளியான தினகரன் நாளிதழிலும் மறுபதிப்பு ஆகியிருக்கிறது. கண்டெடுத்துச்சொன்ன புகைப்படப்பிரியன் அதிபர் சகோதரர் "மெர்வின் அன்டோ" அவர்களுக்கும், புகைப்படப்பிரியன் பக்கத்தில் அறிவித்த சகோதரர் "சுந்தரராஜன்"அவர்களுக்கும் வாழ்த்திய அனைவர்க்கும் எனது கோடானு கோடி நன்றிகளை தெரிவிக்க வேண்டாமா!! ஆகவேதான் அல்வா கொடுத்து நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

தினகரன் நாளிதழின் மகளிர் பகுதியில் எனது நேர்காணலை வாசிக்கச் சொடுக்குங்கள் சாட்டையை.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1792

29 comments:

துளசி கோபால் said...

அல்வா செம டேஸ்ட்டு!!!!

பார்ட்டிக்கு அல்வா என்பது ரொம்பச் சரி.

வாங்க கூடிக் கொண்டாடுவோம்!!!!

இனிய பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தினகரன் நாளிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

அல்வாவிற்கும் நன்றி...

பால கணேஷ் said...

பாம்பே அல்வாவை மும்பையில் செய்யணும்னா மைசூர் பாகில மைசூர் இருக்கான்னு கேக்கற ஜோக் நிஜமாயிடுமே! ஹி... ஹி...! அல்வா செய்யப் போய் நீங்க அல்வா வாங்கின கதையும் சரி... இப்ப அழகாச் செஞ்சு அசத்தினதை தெளிவான படங்களோட பகிர்ந்ததும் சரி... ரசனைக்கு விருந்து! தோழி தந்த பரிசை தினகரனும் பகிர்ந்து மகிழ்வை இரட்டிப்பாக்கியிருக்கிறான்! என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

பளபளவெனப் பார்க்கவே பிரமாதம்:)! ருசிக்குக் கேட்கணுமா? படங்களும் அருமை. தினகரன் நேர்காணல் வெளியீட்டுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், சாந்தி!

கோமதி அரசு said...

தினகரன் நாளிதழின் மகளிர் பகுதியில் எனது நேர்காணலை வாசிக்கச் சொடுக்குங்கள் சாட்டையை.//

முன்பு நிறைய படங்களுடன் பார்த்தேன் , இன்று ஒரு படத்துடன் வாசித்தேன்.

அல்வா மிக அருமை, எடுத்துக் கொண்டு உங்கள் சந்தோஷ்ம் மேலும், மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
வாழ்கவளமுடன்
.

CS. Mohan Kumar said...

Aahaa ! We want real Halwa.. not photo halwa !

Congrats !

sathishsangkavi.blogspot.com said...

அல்வா மிக பிடித்தமான ஒன்று...

படங்களைப்பார்க்க பார்க்க பசியைத் தூண்டுகிறது...

ராஜி said...

அல்வா பார்க்கவே நல்லா இருக்கு. பார்சல் அனுப்பவும்.

ஹுஸைனம்மா said...

தினகரன் விசேஷத்துக்கு வாழ்த்துகள்.

ஆனாலும், கடல்பாசியைச் செஞ்சு வச்சு, அதை அல்வான்னு சொல்லி “நிஜ அல்வா” கொடுத்துட்டீங்களே!! :-))))

அகர்-அகர் அங்கே ரெடிமேட் மிக்ஸாகவே கிடைக்கிறதா? இங்கே அகர்-அகரே அப்படியே கிடைக்கும், வெட்டி பாலில்/தண்ணீரில் வேகவிடுவோம். ஜலீலாக்கா இதைவைத்து நிறைய ரெஸிப்பி எழுதிருக்காங்க.

//சமீபத்தில் மகள் அழகாக பக்குவமாகச் செய்து பரிமாறினாள்//
அப்புறமென்ன... கொத்துச்சாவியோடு கரண்டியையும், அவங்ககிட்ட கொடுத்துட்டு, “என் கடன் எழுத்துப்பணியே”ன்னு கம்ப்யூட்டர் முன்னே செட்டிலாகிடலாம்ல??!! :-))))))))))

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் சாரல்.அல்வாவுக்கும் தினகரனுக்கும் பல்முனை உற்சாகத்திற்கும் மனமார்ந்த ஆசிகள்.அகர் அகர் இங்கே கிடைக்குமா:}

ADHI VENKAT said...

அல்வா பார்க்கும் போதே ஜோரா இருக்குங்க... செய்து பார்க்கிறேன். எந்த பிராண்ட் ? என்னனு கொஞ்சம் தகவல் கொடுங்க ப்ளீஸ்...:)( சோதனை எலி வரும் போது செய்து பார்க்க வேண்டும்)

தினகரன் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

ஓ இது தான் மும்பை அல்வாவா??

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

எல்லோருக்கும் அல்வா கொடுத்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. ;)))))

ஸ்ரீராம். said...

அல்வா என்றால் எங்களுக்கு எல்லாம் சிவப்பு நிறமாகத்தான் மனதில் தோன்றும்! நீங்கள் போட்டிருக்கும் படம் நாக்கைச் சோதிக்கிறது! தினகரனி(லும்)ல் வந்ததற்கு வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.....

அல்வா துண்டுகளில் இரண்டைக் காணோமே என தேட வேண்டாம்! நான் தான் நைசா எடுத்து சாப்பிட்டுவிட்டேன்!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா...
கலக்குங்க...

அல்வா பார்க்க அழகா இருக்கு...

மதுமிதா said...

பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டும் பாதாம் அளித்த பாவையே நன்றி அல்வாவே அமைதிச்சாரலே :)

மனோ சாமிநாதன் said...

ஊரிலிருந்த வந்த குங்குமம் தோழியை மதியம் பிரித்ததும் உங்கள் வலைத்தளம், புகைப்படங்களைப்பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!!

ஸாதிகா said...

அல்வா என்றதும் சாரல் ரொம்ப கஷ்டப்பட்டு கிண்டி கிளறி இருப்பார் என்று ஓடி வந்து பார்த்தால் ஹி..ஹி அகர் அகர்..

மாதேவி said...

இனிய வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

பார்ட்டியில் கலந்துகொண்டு சிறப்பிச்சதுக்கு நன்றி :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

வாழ்த்துகளுக்கும் அல்வாவை ருசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

மைசூரில்தான் முதல்முதலில் அந்த ஸ்வீட்டைச் செய்ததால் அந்தப்பெயராம். அதேபோல்தான் இந்த அல்வாவுக்கும் பெயர் வந்துருக்குமோ என்னவோ :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

அல்வா செய்முறைதான் சிம்பிள்,.. ருசி ரொம்பவே ரிச்ச்சாயிருக்கு.

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாழ்த்துகளுக்கும் ரசித்தமைக்கும் நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் குமார்,

இப்போதைக்கு இதை வெச்சு அட்ஜஸ்ட் செஞ்சுக்கோங்க :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

அல்வாவை ருசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

அந்தத்தட்டுல இருக்கறதெல்லாமே உங்களுக்குத்தான். பார்சல் அனுப்பியாச்சு :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஜலீலாக்காவின் ரெசிப்பிகளை நானும் வாசிச்சிருக்கேன். அதில் இளநீர்த்துண்டுகளைப் போட்டுச் செஞ்சுருந்த அயிட்டம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

இங்கே கிட்ஸ், மற்றும் frolic கம்பெனித்தயாரிப்புகள் ரெடிமேடாக் கிடைக்குது.

மகள் சமையலை இப்போதைக்கு டைம்பாசாத்தான் செய்யறாங்க. அதுவும் அவங்களுக்குப் பிடிச்ச அயிட்டங்கள் மட்டும். ரெண்டு நாள் முன்னாடி ரப்டி செஞ்சு பரிமாறினாங்க. ருசி ரிச்சாயிருந்தது..

ரசிச்சதுக்கு நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails