Thursday, 4 August 2011

அவ்வ்வ்வ்..... அவன் ஏன் ஓடிப்போனான்???!!!...

வரவர இவனுங்க சாப்டுறதுக்கு கொடுக்கற இம்சை இருக்கே… சாப்பாட்டை வெச்சா சாப்பிடாம… சிந்தறதும் செதர்றதும், வாரியிறைக்கிறதும்ன்னு ஒரே அட்டகாசம். ஒருத்தனை ஒருத்தன் தொரத்தரதும், விரட்டிப்பிடிக்கிறதுமா சாப்பிடற பொழுதுகள்லதான் விளையாட்டும். இவனுங்களை நாம ஏதாச்சும் சொன்னா,.. அவ்ளோதான். ’குய்யோ..முறையோ..’ன்னு ஒரே கூப்பாடு. வடிவேலு சொன்னாப்ல, ‘ஒரே சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கு’ன்னு தோணினாலும் அதானே உண்மையும் கூட J

‘இந்த அவனுங்க அவனுங்கன்னு அடிக்கடி சொல்றீங்களே!!… அவனுங்கல்லாம் யாருங்க!!..’ன்னு நீங்க கேக்குறது புரியுதுங்க.(டாக்டர் இஸ்டைலில் படிக்கவும். டாக்டர் யாருன்னு வலையுலத்துக்கு சொல்லத்தேவையில்லைன்னு நினைக்கிறேன்). சொல்றேன்…

எங்க வீட்டுக்கு மூணுபேர் எப்பவும் மத்தியானம் சாப்பிட வருவானுங்க.. மூணுபேர்ன்னா சொன்னேன்??.. மூணு வெரைட்டின்னு சொன்னா ரொம்ப பொருத்தமாருக்கும். ‘சாப்பாடு தா.. தா..’ங்கற பெரிய வாக்கியத்தை அவனுங்க பாஷையில சிம்பிளா ஒத்தைச்சொல்லுல, ’கா.. கா..’ன்னு சொல்லுவாங்க. இதத்தான், சுருங்கச்சொல்லி விளங்கவைக்கிறதுன்னு பெரியவங்க சொல்லுவாங்களோன்னு நானா விளங்கிக்கிட்டேன் :-)

அவனுங்க கேக்குறாங்களேன்னு நாம சட்னு சாப்பாட்டை கொண்டுபோயி வெச்சிடமுடியாது. ஒருத்தனுக்கு வெறுஞ்சாப்பாடு வேணும். ஒருத்தனுக்கு குழம்பு ஊத்திவேணும், இன்னொருத்தன் ரொம்ப விசேஷம்…. தண்ணியில போட்டு கழுவிட்டுத்தான் சாப்பிடுவான்.. சுத்த்த்தம்!!!!!!! (குழம்பு உட்பட கழுவிட்டுத்தான் சாப்டுவான்) ஆங்!.. மூணு வெரைட்டி வந்துடுச்சுல்லே J


அதுவும் நேரத்தோட வரமாட்டானுங்க.. மத்தியானம் மூணுலேர்ந்து மூணரைக்குள்ளதான் வருவானுங்க.. பங்க்சுவாலிட்டியாம்!!!.. சொல்றானுங்க J இதுனாலயே ஆரம்பத்துல இதுங்க வந்துடுச்சுன்னா, ‘அம்மா.. மூணரைக்காக்காங்க வந்துடுச்சூ’ன்னு பசங்க கொரல் குடுப்பாங்க. நானும் போயி சாப்பாட்டை வெச்சுட்டு வந்துடுவேன். ஒருத்தன் ஒழுங்கா சாப்டுட்டு போயிடுவான்.
ஒருத்தன் அதுக்கப்புறமும் சாப்பிடாம கத்திக்கிட்டிருக்கறதை அப்புறமாத்தான் கவனிச்சேன்.. ‘ஏன்?.. நல்லாத்தானே போயிட்டிருந்தது.. என்ன இப்ப..”ன்னு கேட்டதும்,.. அதுல ஒருத்தன் மட்டும், டபக்ன்னு எந்திரிச்சி, அதுங்க குடிக்கிறதுக்காக தண்ணி ஊத்திவெச்சிருந்த தட்டுல சாதத்தைப்போட்டுட்டு அப்றமா சாப்டறதை.. ‘சரி.. காரம் ஒத்துக்கலை போலிருக்குன்னு, மறுநாள் கொஞ்சமா குழம்பு ஊத்திவெச்சா அப்றமும் இதே கதைதான். ‘போடா..’ன்னுட்டு வெறுஞ்சோத்தை வெச்சேனா, இன்னொருத்தன் கபால்ன்னு பாய்ஞ்சுவந்து சோத்தை முழுங்க ஆரம்பிச்சுட்டான்.. ஆஹா!!.. இதுங்க என்னிய வெச்சு காமெடி பண்ணுதுங்களே…

அதுலேர்ந்து வெறுஞ்சோத்தைப்போட்டு, அதோட ஒருஓரத்துல குழம்பு ஊத்திவெச்சுட்டு... வேணுங்கறமாதிரி தின்னுக்கோன்னுட்டு வந்துடுவேன். அதுலேர்ந்து இவனுங்களுக்கு சோத்துக்காக்கா, தண்ணிக்காக்கா, கொழம்புக்காக்கான்னு அடையாள நாமகரணம் சூட்டப்பட்டது மறைக்கப்படாத வரலாற்று உண்மை :-) . இவனுங்க போனதும், மிச்சமீதியை எங்கூரு அதிகாரபூர்வமற்ற மாநிலப்பறவையான புறா, அப்றம் குருவியெல்லாம் வந்து காலிபண்ணும். தண்ணி குடிக்கிறதுல புறாம்மாவும்,அய்யாவும்தான் சமர்த்து.. தட்டுல இருக்கறதை மூச்சுக்கூட விடாம ‘சர்ர்ர்ர்ர்’ன்னு ஓரேயடியில குடிச்சுட்டுத்தான் நிமிருவாங்க.

இன்னிக்கி காலைல வழக்கம்போல, அஞ்சரைமணிக்கு கையில காப்பியோட பால்கனியில நின்னு, எதிர்ல தெரியிற மலைலேர்ந்து கொட்டிக்கிட்டிருக்கற அருவியை வேடிக்கை பார்த்துக்கிட்டே காப்பியை குடிச்சுமுடிச்சுட்டு,(நல்ல மழைபெஞ்சதுல திற்பரப்பு ரேஞ்சுக்கு அருவி கொட்டுது) வழக்கம்போல மை ஃபேவரிட், ‘ கணேஷாய தீமஹி..’யை கேக்கலாம்ன்னு சிஸ்டத்தை இயக்கிட்டு, காலைல டிபனுக்கு சாமையரிசி உப்புமா செய்யலாமா.. இல்லைன்னா, சேமியா உப்புமா செய்யலாமான்னு உலகமகா முடிவெடுக்கமுடியாம ஆழ்ந்த சிந்தனையில ஆழ்ந்திருந்ததை.., அரைஉறக்கம்ன்னு உலகவழக்குல சொல்றதையெல்லாம் நான் ஏத்துக்கமாட்டேம்ப்பா J (ஹை.. ஒர்ர்ர்ர்ரே வாக்கியமா எழுதிட்டேனே!!!.. வெரிகுட்)

அப்ப, பால்கனிலேர்ந்து ஒரே கூப்பாடு கேக்குது .. ‘இன்னும் சாப்பாடாகலை. பொறவு வா..’ன்னா கேக்க மாட்டேங்கான். நேத்திக்கு மிஞ்சிய சாதத்தை, ஆப்பத்துக்கு இன்னிக்கு அரைக்கிறப்ப சேர்த்து அரைக்க ஆகுமேன்னு ராத்திரியே தண்ணி ஊத்திவெச்சுட்டேன்.. பழையதைப்போயி போடமுடியுமா.. இவனுங்க சூடாவே சாப்டு பழகினவங்க... இப்ப என்ன செய்ய?.. 


பசிக்கு பாவமில்லைன்னுட்டு அந்த பழையதை கொஞ்சூண்டு பிழிஞ்சு வந்து போட்டேன்..”கா..கா..கா..’ ஒரே கத்தல். பழையது சாப்பிடமாட்டார் போலிருக்குன்னுட்டு ஒரு ஸ்லைஸ் ப்ரெட்டை பிச்சுப்போட்டேன்.. காலைல நீராகாரமோ, தயிர்விட்ட பழையதோ சாப்பிட்டா அல்சருக்கு நல்லதுன்னு தெரியாது போலிருக்கு. கண்டதையும் சாப்டறதால அல்சர் வராமயா இருக்கும்?.. ‘கா..கா..கா…’ இன்னும் சுருதி கூட்டி கத்துது. இது வழக்கமில்லியே… ஒருவேளை இவன் புதுசோ!!…

“காலைல அஞ்சரை மணிக்கு வந்து நின்னா,. இதான் கிடைக்கும். வேணும்ன்னா மத்தியானம் வா.. 'பிரியாணி' போடறேன்…’ன்னு சொன்னேன். அவ்ளோதான் ஓடியே போயிட்டான்…. என்னாச்சுன்னு தெரியலை. அப்றம் அந்த சாப்பாட்டையெல்லாம், வழக்கமான வாடிக்கையாளர்களான புறாவும்,குருவியும் வந்து காலிசெஞ்சாங்க.. ஆமா??... அந்தக்காக்கா ஏன் ஓடிப்போச்சு ??!!!!!!!......




47 comments:

Chitra said...

இதுக்கும் ஆராய்ச்சி பண்ணுவீங்க என்று தெரிஞ்சே ஓடி போய்டுச்சு . ஹா, ஹா,ஹா,ஹா,ஹா....

M.R said...

அது அருவி பாக்க வந்தப்ப நீங்க சோறு வச்சி சாப்பிட சொன்னப்ப கொஞச நேரம் அருவிய பாக்க விட மாட்டேங்கிறாங்களே அப்பிடின்னு போயிடிச்சு

ராமலக்ஷ்மி said...

போறான் விடுங்க:))! எங்களுக்கு சுவாரஸ்யமான ஒரு பதிவு கிடைச்சுதே. அதற்கு அவனுக்குதான் நன்றி:)!

ஆமினா said...

ஆகா... கா கா வச்சு ஒரு கதையா? :))

நீங்க சாதத்துல உப்பு போடல போல... அதான் ரோஷம் வந்து ஓடிபோச்சு :))

settaikkaran said...

அடடா, ஆடிப்பெருக்கை வச்சு, காக்காய்க்கெல்லாம் பேரு வச்சு ஒரு மொக்கை எழுதலாமுன்னு இருந்தேன். இப்படி சூப்பரா எழுதிட்டீங்களே! மை ஐடியா கான்சல்! :-))

இந்திரா said...

ஒருவேளை அதுகளும் உங்க பதிவுகள எல்லாம் படிச்சிருக்குங்களோ????????

'பரிவை' சே.குமார் said...

ஹா...ஹா...ஹா...ஹாஹா...

துளசி கோபால் said...

:-)))))))))))))))))))))))))))))))))

Harini Resh said...

//சோத்துக்காக்கா, தண்ணிக்காக்கா, கொழம்புக்காக்கான்னு அடையாள நாமகரணம் சூட்டப்பட்டது மறைக்கப்படாத வரலாற்று உண்மை :-) // ha ha Super

ம் எங்க வீட்ல எங்க அம்மாடா விருந்தாளிங்க காக்கா , குயில் அணில் :)
அவங்களும் காலையில சரியாய் 7.30 மணிக்கு வந்துருவாங்க எங்க அம்மாட சாப்பாட சாப்பிட :)

பகலைக்கு பிரியாணி தருவீங்க எண்டதால ஓடிபோயிருக்கும்

Harini Resh said...

ம் எங்க வீட்ல எங்க ammaadaa விருந்தாளிங்க
காக்கா , குயில் அணில் :)
அவங்களும் காலையில சரியாய் ௭.௩௦ மணிக்கு வந்துருவாங்க எங்க அம்மாட சாப்பாட சாப்பிட :)
நீங்க பகலைக்கு பிரியாணி தருவீங்க எண்டதால ஓடிபோயிருக்கும்
ha ha ha

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

அப்படியும் இருக்கலாமோ.. அடுத்த தடவை வரட்டும்.. அதுகிட்டயே கேட்டுடறேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க MR,

அருவியில குளிச்சுட்டு வந்தா பசிக்குமேன்னுதான் சாப்பாடு கொடுத்தேன். அவனுக்கு பசிக்கலை போலிருக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஆஹா.. அவங்கிட்ட சொல்லிடறேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

ஏற்கனவே சாப்பிட்ட உப்புக்கே இவ்ளோ ரோஷம்ன்னா!!!... இனிமே அவனுக்கு உப்பில்லாத கஞ்சிதான்.

எனக்கென்னவோ 'பிரியாணி'போடறேன்னு சொன்னதை அவனை வெச்சுத்தான் பிரியாணி போடப்போறேன்னு புரிஞ்சுக்கிட்டானோன்னு தோணுது :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சேட்டைக்காரன்,

நோ கான்சல் யுவர் இடுகை.. என்ன இருந்தாலும் உங்க பாணியில வாசிக்கிறதைப்போல வருமா?..

ஸ்டார்ட் மூஜிக் :-))))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இந்திரா,

என்னோட இடுகைகளோட லிங்க் கொடுத்ததே நீங்கதானாமே :-)))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

சிரிச்சதுக்கு நன்றீஸ் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

நியூசியில பனி நிலவரம் சரியாயிடுச்சா??..

பிஸியா இருக்கற சமயத்துலயும் எட்டிப்பார்த்து சிரிச்சதுக்கு, ரொம்ப நன்றீஸ் :-)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேரு வச்சீங்களே ஆனா சரியா சோறு வச்சீங்களா..
அதோட உன்னை பிரியாணி போடறேன்னு மிரட்டி இருக்கீங்க.. .

இப்பல்லாம் காக்கா பிரியாணி தான் ஃபேமஸ் அதான் ஓடி இருக்கு..

ஹுஸைனம்மா said...

எக்கா.... முடீல...

காக்கா ஏன் ஓடிப்போச்சுனு தெரியல.. ஆனா, ஒரு பதிவு போடுற அளவுக்கு உங்களுக்கு காக்காஸ் ஏன் பிடிச்சுதுன்னு ஒரு கெஸ்.. உங்க சமையலை எந்த கமெண்டும் அடிக்காம பேசாம சாப்பிட்டுட்டுப் போறாங்களே, அதனாலத்தான். சரியா? (அடிக்காதீங்க..) ;-)))))

ஸ்ரீராம். said...

வந்தவங்களை விட வராதவங்களைப் பத்திதான் அதிகம் கவலைப் படுவோம். அதுபோல இருப்பதை விட்டு விட்டு பறந்து போனதைப் பற்றி கவலைப் படுகிறீர்கள்...! இன்றைய பதிவுக்கு இது போதும்னு ஓடிடுச்சோ என்னமோ...!!

ஸாதிகா said...

காககம் கிட்டெ இருந்து இவ்வள்வு விடயங்களா?பகிர்வு சுவாரஸ்யம்.

சக்தி கல்வி மையம் said...

ஹா.ஹா.

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுடோமில்ல..

Unknown said...

அந்த காக்கா பிரியாணி விட அதுக்குப் பிடிச்ச வடையைத் தேடித் போயிருக்கும்.

தொடர்பதிவு என்ன ஆச்சுங்க?
http://vaarthaichithirangal.blogspot.com/2011/07/blog-post_28.html

vidivelli said...

supper ,,,,
hahahaaha

வெங்கட் நாகராஜ் said...

ஒரு வேள அந்தக் காக்காவுக்கு பிரியாணியை விட வடாபாவ் தான் புடிக்குமோ என்னமோ! எதுக்கும் அவனுக்கும் ஒரு பேரு வைச்சு அடுத்த தடவ வரும்போது விசாரிச்சுடுங்க... :)

குறையொன்றுமில்லை. said...

நீங்க டெய்லி சோறே போட்டா போரடிக்காதா? வெரைட்டியாஒரு பிசா,
பர்கர்,னூடுல்ஸுன்னு கொடுத்திருக்கலாமில்லே.அதான் ஓடிட்டுது போல

அன்புடன் அருணா said...

:-)))))))))))))))))))))))))))))))))

மாய உலகம் said...

சாப்பாட்ட பாத்து பயந்து பறந்துடுச்சு..ஹா ஹா ஹா

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

மடியில உக்காரவெச்சு ஊட்டிவிடாத குறையா சோறுவெச்சு கவனிச்சேனே.. இப்டி ஓடிப்போயிடுச்சே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இல்லையா பின்னே!!!.. எத்தனைவருஷ பந்தம்.. :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

அப்படியும் இருக்கலாமோ.. சத்தமில்லாம சாப்ட்டுட்டு போயிருந்தா கவனிச்சிருக்க மாட்டேனோ என்னவோ :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

எல்லாப்பிராணிகள்கிட்ட இருந்தும் கத்துக்க எவ்வளவோ இருக்குங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேடந்தாங்கல்-கருன்,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜிஜி,

எங்கூரு காக்கா இந்திதான் பேசும்.. பாட்டி வடைசுட்ட கதையை அதுக்கு யாருங்க தமிழ்ல சொல்லியிருக்கப்போறாங்க!!.(சத்தியமா நான் சொல்லலை :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விடிவெள்ளி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

இந்த யோசனை எனக்கு தோணலையே!!.. அடுத்த தடவை வருவானான்னே யோசனையாயிருக்கே. வந்தா விசாரிச்சுடறேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

அது ஹெல்த் கான்ஷியஸ் உள்ள காக்காவாக்கும். நீங்க் சொன்ன அயிட்டங்களை தொட்டே பார்க்காது :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணாமேடம்,

சந்தோஷமா சிரிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

அது சரி.. காலைல அஞ்சரை மணிக்கு வடைபாயசமா கிடைக்கும்.. பழையதுதான் கிடைக்கும்..

அது ரொம்ப பந்தாபார்ட்டி போலிருக்கு :-))

Unknown said...

வடை சாப்பிடும் காக்காயும் உண்டு
கறி சாப்பிடும் காக்காயும் உண்டு
நீங்க நாளைக்கு வடகறி
வைச்சு பாருங்க!

புலவர் சா இராமாநுசம்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புலவர் ஐயா,

ஹி..ஹி.. கொடுத்துப்பார்க்கிறேன் :-))

பாச மலர் / Paasa Malar said...

சுவாரசியப் பகிர்வு....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

ரொம்ப நன்றிங்க.

கோமதி அரசு said...

அதானே! எப்படி ஓடலாம்? ஏன் ஓடி போச்சு காக்கா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

ஹி..ஹி.. அதான் தெரியலைம்மா :-)))

பிரியாணிக்கோ, சாப்பாட்டுக்கோ .. எதுக்கோ பயந்துடுச்சு போலிருக்கு :-))

Karthikeyan Rajendran said...

அப்படியே இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

LinkWithin

Related Posts with Thumbnails