Wednesday, 3 November 2010

தினம் தினம் தீபாவளி...

"தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. இன்னும் பதினஞ்சு நாள்தான் இருக்கு.. இன்னும் அஞ்சே நாள்தான்.. அய்ய்ய்!!! நாளைக்கு தீவாளி". இப்படி நாட்களை எண்ணி, எண்ணி காத்திருக்கும் அந்த சின்ன வயசு தீபாவளி தந்த ஆனந்தமே அலாதி. கடைக்கு படையெடுத்துப்போயி, துணியெடுத்து, தைக்கக்கொடுத்து.. தச்சு வர்றவரைக்குகூட பொறுமையில்லாம, அந்த வழியா போகும்போதும், வரும்போதும்,..டெய்லர் கிட்ட 'என் துணி தச்சு முடிச்சாச்சா'ன்னு நச்சரிச்சு, துணி கைக்கு வந்ததும் ஒடனே அதை போட்டுப்பார்த்தாத்தான் திருப்தி. அப்புறமும், தீபாவளிவரை தெனமும் அதை கையில் எடுத்து தொட்டுப்பார்த்து, அந்த புதுத்துணி வாசனையை மோப்பம் பிடிச்சாத்தான் ஒறக்கம் வரும். ரெடிமேட் துணிகள் மார்க்கெட்டுக்கு வந்ததும், இதெல்லாம் நம்மைவிட்டு எங்கியோ தூரப்போயிட்டமாதிரியான உணர்வு. அதுவுமில்லாம, இப்பல்லாம் நினைச்சப்ப புதுத்துணி எடுத்துக்கிற வழக்கம் வந்ததும், தீபாவளியோட ஒரு அடையாளத்தை, கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றமாதிரி இருக்கு.


சின்ன வயசுல பட்டாசு வெடிக்கிறதுன்னா.. அவ்ளோ சந்தோஷமா இருக்கும். அவரவருக்கு வேணும்கறதை சொல்லச்சொல்ல, மொத்தமா லிஸ்ட்போட்டு வாங்கிட்டு வந்து பங்கிட்டதும்,.. தீபாவளிவரை அதை உடன்பிறப்புகள் கிட்டயிருந்து பத்திரமா பாதுகாப்பதே ஒரு கலை :-)). (எவ்ளோதான் ஒளிச்சு வெச்சாலும், ரெண்டுமூணு பாக்கெட்டாவது திருட்டுப்போயிடும்). சிலர் பட்டாசு நமத்துப்போகாம இருக்கிறதுக்காக வெயில்ல, மொளகா காயவைக்கிறமாதிரி காய வைப்பாங்க. ஆனா, இப்பத்திய குழந்தைகளிடம் பட்டாசு மோகமும் குறைஞ்சுட்டு வரமாதிரி இருக்கு.


பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஒலிமாசு, குறிப்பிட்ட அளவை விட கூடுதலா இருப்பதாலும் , அது ஏற்படுத்தும் புகை சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் என்பதாலும், இப்பல்லாம் பசங்களே வேண்டாம்ன்னு சொல்லிடறாங்க. என் பொண்ணும் எனக்கு இந்தவருஷம் பட்டாசு வேணாம்ன்னு சொல்லிட்டா. பையரும் இப்பல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டுறதில்லை. எனவே, அளவா பர்ச்சேஸை நிறுத்திக்கிட்டார் :-))


நம்மூர்ல, பிரம்ம முஹூர்த்தத்துல எண்ணெய் தேய்ச்சுக்குளிச்சு, பட்டாசு வெடிச்சு, டிபன் சாப்டும்போதே விடிஞ்சுடும்... கிட்டத்தட்ட தீபாவளி முடிஞ்சுட்டமாதிரிதான். அப்றம் , சினிமாவோ, அல்லது இடியட்பாக்ஸ்ன்னு சொல்லப்படற டிவிபொட்டியோதான் கதி.. மிச்ச நாளுக்கு. இப்படியெல்லாம் இருந்துட்டு,.. மும்பை, ஒருகாலத்துல பாம்பேயா இருந்தப்ப நான் இங்கே கொண்டாடுன மொத தீபாவளி ரொம்பவே வித்தியாசமா பட்டுது. அதுவும்,.. அது எனக்கு தலைதீபாவளி :-))). வீட்டுக்கு வீடு தொங்கவிட்டிருந்த மின் அலங்காரவிளக்குகளும், சாயந்திரமானா , வீட்டுக்கு வெளியே வரிசையா ஏத்தி வைச்சிருந்த தீபங்களும் ரொம்பவே அழகாபட்டுது. கிறிஸ்துமஸ்ஸையும், திருக்கார்த்திகையையும், கலந்து கட்டி கொண்டாடுனது மாதிரி ஒரு ஃபீலிங் :-)). அப்புறம், நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா ஜோதியில் கலந்து பாதி மும்பைக்கர் ஆகிட்டோம்.


வடக்கே, தீபாவளி என்பது அஞ்சு நாள் பண்டிகை.  ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசியில் இருந்துதான், 'கந்தில்'(kandil)ன்னு சொல்லப்படற மின்னலங்கார விளக்குகளை வீடுகளில் ஏத்துவாங்க. அதுவும் குடும்பத்தலைவர்தான் ஏத்தணும்ன்னு ஐதீகமாம்(தலைவி ஏத்துனாலும் எரியத்தான் செய்யுது. அப்றம் எதுக்கு இந்த ஐதீகம்ன்னு தெரியலை). இன்னிக்கு கண்டிப்பா வாசல்ல ரங்கோலி போட்டு, ரெண்டு அகல் விளக்குகளையும் ஏத்தி வைக்கணும். 


தீபாவளியின் முதல் நாளை 'தந்தேரஸ்'ன்னு கொண்டாடுவாங்க. தன்வந்திரி திரயோதசின்னும் சொல்லலாம். பண்டிகைன்னா கதைன்னு ஒண்ணு இல்லாம இருக்குமா??. (இல்லாட்டா கட்டிவிட்டுற மாட்டோம்) ஒரு சமயம் 'ஹிமா'ன்னு ஒரு ராஜா இருந்தார். அவரோட பையன் ஜாதகத்தை எதேச்சையா பார்த்த ஒருவர்,.. 'அவனோட கல்யாணத்துக்கப்புறம் கரெக்டா நாலாவது நாள் பாம்பு கடிச்சு இறந்துபோவான்'னு அவனோட ஜாதகம் சொல்லுதுன்னுட்டார். 


ராஜாவுக்கு திக்குன்னு ஆகிப்போச்சுன்னாலும் விதிவிட்ட வழின்னு தைரியமா இருந்தார். கல்யாணவயசு வந்ததும், அவனுக்கு கல்யாணமும் செஞ்சுவெச்சார். இந்தவிவரத்தையெல்லாம் மருமகளுக்கும் சொல்லிவெச்சார். புத்திசாலியான அந்தப்பொண்ணு, கரெக்டா நாலாம் நாள் ராத்திரி.. அறைவாசல்ல, தங்க நகைகள், நாணயங்கள், இன்னும் விலைமதிக்க முடியாத பொருட்களையெல்லாம் ஒரு சுவர்போல கொட்டி வெச்சு வழியை மறைச்சு வெச்சுட்டாங்க. அதுவுமில்லாம, நிறைய அகல்விளக்குகளையும் ஏத்திவெச்சு, அந்தப்பகுதியையே ஜெகஜ்ஜோதியா மாத்திட்டாங்க. பாம்பு வந்தாலும் விளக்கு வெளிச்சமிருந்தா கண்டுபிடிச்சிடலாம் பாருங்க.. அதுவுமில்லாம, இறைவனைப்பத்திய பக்திப்பாடல்களையும் ராத்திரிமுழுக்க பாடி, புருஷனை தூங்கவிடாம பாத்துக்கிட்டாங்க.(அவங்க குரல் இனிமையைப்பத்தி ஆருக்கும் சந்தேகம் வரக்கூடாது ஆம்மா :-))


எமனும், தன் கடமையை ஆத்தணும்ன்னு, வேகவேகமா டீயை ஆத்திக்குடிச்சுட்டு வந்து சேர்ந்தார். ஜொலிக்கிற வெளிச்சத்துல அவருக்கு கண்ணெல்லாம் கூசுது. டார்கெட்டை கண்டுபிடிக்க முடியலை. டக்குன்னு பாம்பா மாறி, தங்கக்குவியல் மேலே ஊர்ந்து அறைக்குள்ளே போக முயற்சி செஞ்சார். அறைக்குள்ளே இருந்து வந்த அந்த தேன் குரல் அவரை கட்டிப்போட்டது. இறைவனின் அருமைபெருமைகளை, இனிய பாடல்களாக மெய்மறந்து கேட்டுக்கிட்டே இருந்ததில், பொழுது விடிஞ்சதுகூட தெரியலை. 'ஆஹா!!!.. வட போச்சே'ன்னு வருத்தத்தோட எமன் கிளம்பிப்போயிட்டார்.ஏன்னா.. கடமையில அவங்கல்லாம் ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு. அன்றைய கடமையை அன்னிக்கே முடிச்சாகணும்,..இன்றுபோய் நாளை வா அப்படீங்கறதெல்லாம் அவங்களுக்கு கிடையாது.  இப்படியாக அந்தப்பெண், தன் வீட்டுக்காரரோட உசிரை காப்பாத்தினாங்க.  அன்னியிலிருந்து, தந்தேரஸ் அன்னிக்கு ராத்திரி முழுக்க விளக்கு ஏத்திவெச்சா, எமபயம் இல்லைன்னு ஒரு நம்பிக்கை. அந்த விளக்கையும் 'எமதீபம்'ன்னே சொல்லுவாங்க. (விளக்குத்திரியை காலையிலேயே எண்ணையில் ஊறப்போட்டு அந்த திரியை விளக்கேத்த உபயோகப்படுத்தினா ரொம்ப நேரம் எரியும்ன்னு டிப் சொல்லிக்கிறேன்)


இந்த தந்தேரஸ் அன்னிக்குத்தான் பாற்கடலிலிருந்து தன்வந்திரி பிறந்தார்ன்னும் ஒரு கதை இருக்கு. 'தன்வந்திரி' என்பவர் மேலோகவாசிகளுக்கான டாக்டர். இவரை பூஜித்தால் நோய்,நொடிகளிலிருந்து காப்பாத்துவார் என்பது ஒரு நம்பிக்கை. அதையும் இன்னிக்குத்தான் செய்வாங்க.  அதுவுமில்லாம, இன்னிக்கு ஏதாவது பொருளோ, நகையோ வாங்கினா ஐஸ்வரியம் பெருகும்ன்னு ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை குறிவெச்சு, ஒவ்வொரு கடைக்காரர்களும், எக்கச்சக்க ஆஃபர்களை அள்ளிவுடுவாங்க. டிஸ்கவுண்ட், ஒரு சவரன் நாணயம் பரிசு, பரிசுப்பொருட்கள் இலவசம், ஒண்ணு வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீ...... இப்படி எக்கச்சக்கம் இருக்கு,.. ஒவ்வொருத்தரும், அவரவர் பர்ஸுக்கேத்தமாதிரி, எவர்சில்வர் ஸ்பூன்ல இருந்து, ப்ளாட்டினம் நகைகள் வரைக்கும் வாங்கிப்பாங்க. சுருக்கமா சொன்னா,.. இது இந்த ஊர் அட்சய திருதியை.


தந்தேரஸ்க்கு அப்புறம் என்ன?!!.. நாளைக்கு சொல்றேன். அதுவரை சன்ஸ்கார்பாரதி முறையில் போடப்பட்ட இந்த ரங்கோலியை ரசியுங்கள். ரங்கோலி நான் போடலை :-))








60 comments:

எல் கே said...

அதெல்லாம் ஒரு காரணம்னு சொன்னாக் கூட ,இந்தத் தலைமுறைக்கு இடியட் பாக்ஸ் தான் முக்கியமா படுது . அதான் பட்டாசு மோகம் குறைய காரணம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபவளி நல் வாழ்த்துக்கள்

kavisiva said...

சின்ன வயசில் தீபாவளின்னா குதூகலம் கொண்டாட்டம். இப்போ எல்லாமே இருக்கு. ஆனா அந்த குதூகலம் இல்லை. ஒருவேளை கேட்பதற்கு முன்னே எல்லாம் கிடைத்து விடுகிறது என்பதாலா இல்லை சொந்த பந்தங்கள் அருகில் இல்லாததாலா தெரியவில்லை :(

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

சூப்பர்! ஏறக்கொறைய இந்த 'மாதிரி' ஒரு பதிவு எழுதி வச்சுருக்கேன் தீபாவளி ரிலீஸுக்கு:-)

ஹேப்பி தந்தேரஸ்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிறு வயது வாழ்க்கை எப்போதும் நம்முடன் வருவதில்லை... நாம் நாம வாழ்ந்த காலம் அது...


உங்களுக்கும் இனிய தீபவளி நல் வாழ்த்துக்கள்

மாதேவி said...

"சின்ன வயசில் தீபாவளின்னா குதூகலம்"

சிறுவயதில் குச்சிவாணம், சக்கரவாணம். பட்டாசுக்கு அனுமதியில்லே வீட்டில். பிள்ளைகளுக்கும் அதுபோல்தான்.

இப்பொழுது திக்குத்திக்காய்.....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

My Food Crib said...

புதுத்துணியைத் தொட்டுத்தொட்டு ரசிச்சதும், பட்டாசுகளைப் பாதுக்காத்துத் திரிஞ்சதும்..அதெல்லாம் இனிமையான வசந்தகாலம்ங்க...

துபாய்லயும் தீபாவளி, மும்பை மாதிரிதான், மின்விளக்குத் தோரணங்களோட.

நிறைய விஷயங்களோட அருமையான பதிவு சாரல்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Anonymous said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)

Chitra said...

விரிவாக தீபாவளி கொண்டாட்டம் பத்தி விளக்கி சொல்லி இருக்கீங்க.... படங்களும் அருமை. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

இளமை கால நினைவுகள் அதையொத்த நினைவலைகளைக் கிளப்பி விட்ட்ன:))!

தெரியாத பல தகவல்களை சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.

அருண் பிரசாத் said...

நீங்கதான் அவங்களுக்கு சொல்லி பட்டாசி வெடிக்வைக்கனும்....

அறிவியல் வளர வளர நம்ம பல பண்டிகைகளை இழக்கிறோம்

Ahamed irshad said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சசிகுமார் said...

//தீபாவளிவரை அதை உடன்பிறப்புகள் கிட்டயிருந்து பத்திரமா பாதுகாப்பதே ஒரு கலை :-))//

நடுவுல ஏதோ ஒரு எழுத்து விட்ட மாதிரி இருக்கே "வ". பகிர்வு நல்ல இருக்கு நண்பரே.

அமைதி அப்பா said...

இப்பல்லாம் நினைச்சப்ப புதுத்துணி எடுத்துக்கிற வழக்கம் வந்ததும், தீபாவளியோட ஒரு அடையாளத்தை, கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றமாதிரி இருக்கு//

இதுதான் உண்மை.

இளமை நினைவுகளை கிளறிய உங்களுக்கு என்னுடைய நன்றி.

நல்ல பதிவு. நிறை வீட்டுப்பாடம்(ஹோம் வொர்க்)செய்வீங்கன்னு நினைக்கிறேன்:-))!

அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட ஒரு நிமிசம் துளசி பதிவுக்கு வந்தமாதிரி இருந்தது உங்க தீபாவளி கதை படிச்சதும்.. :) சூப்பர்ங்க..சாரல்.

Anonymous said...

இந்த கதை புதுசு. எழுதினதுக்கு ரொம்ப நன்றி. நிறையப் பேர் தீபாவளி பற்றி எழுதியதைப் படித்த போது டிவி எப்படி எங்க ஜெனரேஷனை கட்டிப் போட்டிருக்கு என்று கோவமாக வருக்கிறது. (நான் டிவி பார்த்தே வருஷ கணக்காகிவிட்டது என்பது வேறு விஷயம்). அது தான் ஒன்லைன்ல எல்லாமே வருகிறதே. ஹா ஹா.

சின்ன வயசிலேயே பட்டாசு செய்ய சின்ன பசங்களை பயன்படுத்தறாங்கனு கேள்விப்பட்டதில் இருந்தே பட்டாசு கொழுத்தறதில்லை. அதை விட, சூழல் மாசடைவதைப் பற்றி கொஞ்சம் (கொஞ்சம் அல்ல ரொம்பவே) அக்கறை இருப்பதால் கொழுத்தவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஒரு வேளை நான் தான் ரொம்ப லூசுத்தனமாக நடக்கிறேனோ என்று நினைப்பதும் உண்டு. உங்க பொண்ணும் நம்ப குறூப் என்பதை நினைச்ச்சா சந்தோசமாக இருக்கு. நம்ம ஜெனரேஷன் ரொம்பத் தான் தெளிவாக இருக்காங்க. எங்களுக்கு எல்லோரும் ஒரு ஓ போடுங்க.

தீபாவளி நான் கொண்டாடுவதில்லை என்றாலும் எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜெயந்தி said...

சின்ன வயது தீபாவளியை ஞாபகப்படுத்திட்டீங்க. அதெல்லாம் ஒரு காலம்ல.

Jaleela Kamal said...

diwali paRRi theiyatha visiyam theriwthu kondeen,
rangoli arumai

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

அப்பாடா எத்தனை கொசுவத்தி ஏத்திப் புட்டீங்கப்பா. ஏக்கமா போச்சு:(
எல்லோரும் இந்த விஷயத்தில ஒத்துப்பாங்க.முன்னால தீவிளிக்கு,பொங்கலுக்கு மட்டும் புதுசு.
இப்பவோ நினைச்ச போதெல்லாம் புதுசு எப்படியோ வந்துசேர்ந்துடுது. தன்தேரஸ் கதை புதுசு. முத்து சொன்ன மாதிரி துளசி பதிவு படிக்கிற அழகு கிடைச்சுது சாரல். மனம் நிறைந்த வாழ்த்துகள். பிள்ளைகளைச் சந்தோஷமா மத்தாப்பாவது கொளுத்திப் போடச் சொல்லுங்க. இனிய நினைவுப் பெட்டகம் அவங்களுக்கும் வேண்டாமா.

ஆனந்தி.. said...

அது ஒரு நிலாக்காலம் னு முன்னாடி நாம கொண்டாடின நாட்களை அசை போட வேண்டியது தான் ..இப்போ ஏதோ கடனுக்கு நாள் கழியுது டிவியோடு..தீபாவளி வாழ்த்துக்கள்..!!

Prathap Kumar S. said...

//அதுவும் குடும்பத்தலைவர்தான் ஏத்தணும்ன்னு ஐதீகமாம்(தலைவி ஏத்துனாலும் எரியத்தான் செய்யுது. அப்றம் எதுக்கு இந்த ஐதீகம்ன்னு தெரியலை//

வீட்டுக்கு வெளக்கேத்த ஒரு மகாலட்சுமி வேணும்னு சொல்றீங்கறே... ஏன் அதை மகாலட்சுமணன் ஏத்துனா எரியாதா? அதுமாதிரித்தான்....:)))


தீபவாளியை பாதுகாப்புடன் கொண்டாடி மகிழுங்கள்...தீபாவளி வாழ்த்துக்கள்.

Paleo God said...

Happy Diwali :)

ரங்கோலி அழகா இருக்குங்க!

பழைய நினைவுகள் பாம்பு மாத்திரை மாதிரி பொசு பொசுன்னு உள்ளுக்குள்ள பொங்குது :))

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

Anonymous said...

Happy Diwali..

நசரேயன் said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

தெய்வசுகந்தி said...

நல்ல தகவல். எல்லாரையும் கொசுவத்தி சுத்த வச்சுட்டீங்க.
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

சூப்பர்... உங்கள் முதல் இரண்டு பத்திகளில் கைதேர்ந்த எழுத்தாளரின் நடை தெரிகிறது... டெம்ப்ளேட் அருமையாக இருக்கிறது...

pudugaithendral said...

தன்தேரஸ் கதையெல்லாம் சொல்லியிருக்கீங்க. மும்பையில இருந்தப்போ பழமையும்,புதுமையும் கலந்தே எல்லாவிதமான பண்டிகைகள் அவங்க கொண்டாடும் ஸ்டைல் பிடிச்சிருந்தது. எந்த விரதம், பூஜையையும் விடாம செய்யும் பாரம்பரியமும் பிடிச்சிருக்கு.

தன்தேரஸுக்கு தங்கம்,வெள்ளி எல்லாம் வானத்துக்கும் மேலே ஏறிட்டதால கடாய் ஒண்ணு வாங்கிட்டேன். தன் தேரஸ் அன்னைக்கு காலேல லட்சுமி பூஜை செஞ்சா நல்லது. தீபாவளி அன்னைக்கு சாயந்திரம் குபேரலட்சுமி பூஜை செஞ்சா நல்லது.

ஆந்திராவில் சாயந்திரம்தான் தீபாவளி.
ஹேப்பி தீபாவளி

ப்ரியமுடன் வசந்த் said...

HAPPY DIWALI!

தீபத்திருநாள் வாழ்த்துகள் சகோ!

அம்பிகா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வழிகாட்ட வேண்டிய பெரியவங்களே, நல்லநாளும் அதுவுமா டிவிக்கு முன்னாடி குடியிருக்கும்போது, இளைய தலைமுறையைச்சொல்லி என்ன பயன்...

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

அது ஒரு கவலை இல்லாத காலம்.. அதனாலதானோன்னு நான் நினைக்கிறேன் :-))))
ஊரை விட்டு வந்துட்டாலே அக்கம்பக்கத்தவர்தான் நம்ம சொந்தக்காரங்க.. இப்படி நினைக்கப்பழகிட்டா அப்றம் குதூகலத்துக்கு குறைவேது :-)

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

என்ன இருந்தாலும் நீங்க எழுதுனமாதிரி வருமா :-)).

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய,

சரியாச்சொன்னீங்கப்பா..

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

உங்கள் மன நிலையை புரிஞ்சிக்கமுடியுது.. காலம் எல்லாவற்றையும் சரியாக்கும்..

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

பெங்களூரில் தீபாவளிக்கொண்டாட்டங்கள் ரொம்பக்குறைச்சல் இல்லையா...

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருண்பிரசாத்,

//அறிவியல் வளர வளர நம்ம பல பண்டிகைகளை இழக்கிறோம்//

பட்டாசு வெடிப்பதை கொஞ்சமா குறைச்சிக்கிட்டாங்க.. அதேசமயம் பண்டிகையின் மற்ற கொண்டாட்டங்களான விளக்கேத்துறது, ரங்கோலி போடுறதையெல்லாம் ரொம்பவே முனைப்பா செஞ்சாங்க.. அதனால சந்தோஷத்துக்கும் குறைவில்லை :-))))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

எழுத்து விட்டுப்போகலை சகோ.. அது நிஜமாவே ஒரு கலைதான். அதுல கைதேர்ந்தவங்களாலதான் அடுத்தவங்க பட்டாசையும் சேத்து வெடிக்கமுடியும் :-))))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

உண்மைதான்.. அப்பல்லாம் தீபாவளின்னா முதல்ல நினைவுக்கு வர்றது புதுத்துணிதான்.. அதனாலயே அதுக்கு மவுசும் கூடுதல் :-)))

சிலவிஷயங்கள் அக்கம்பக்கம் கூர்ந்து கவனிச்சாலே தெரிஞ்சு போகும். தெரியாதவற்றை கூகிளாத்தா கிட்ட கேட்டுப்பேன் :-)))

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

நமக்கெல்லாம் குரு அவங்கதானே.. அதனால இருக்குமோ என்னவோ :-)))

என்ன இருந்தாலும் அவங்க நடையில் படிச்சதுமாதிரி ஆகுமா :-)

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அனாமிகா,

// பட்டாசு செய்ய சின்ன பசங்களை பயன்படுத்தறாங்கனு கேள்விப்பட்டதில் இருந்தே பட்டாசு கொளுத்தறதில்லை. அதை விட, சூழல் மாசடைவதைப் பற்றி கொஞ்சம் (கொஞ்சம் அல்ல ரொம்பவே) அக்கறை இருப்பதால் கொளுத்தவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருப்பேன்//

என் பொண்ணு சொல்லும் காரணமும் இதுவேதான்.. ரொம்ப வற்புறுத்தியபிறகு கொஞ்சம் மத்தாப்பை மட்டும் கொளுத்தினாங்க. இப்பல்லாம் அவங்க கவனம், ரங்கோலியிலும், விளக்குகளை அலங்காரம் செய்வதிலும் திரும்பிவிட்டது.

இவ்வளவு அருமையான தெளிவான கருத்துக்களை கொண்டிருக்கும் இளையதலைமுறையை (என் பெண் உட்பட)எதுக்காக லூசுன்னு நினைக்கணும் :-)))))))))))

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

நினைச்சுப்பார்க்கையில பெருமூச்சுதான் வருது :-)))))))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலா,

எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆனா அது நான் போடலை :-)))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

பொண்ணுக்கும் சேர்த்து பையரும், ரங்க்ஸுமா பட்டாசு கொளுத்தி லூட்டியடிச்சாங்க :-))))). பெண் ரங்கோலியிலும், அகல் விளக்குகளுக்கு வர்ணமடிச்சு அழகுபடுத்துவதிலும் பிஸி.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

இந்த இடியட்பொட்டியைப்பத்தி நிறைய எழுதலாம். ஒண்ணு ட்ராப்டில் இருக்கு. வெளியிட வேளை வரணும் :-)

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

நான் சொன்னதைத்தான் வேற வார்த்தைகளில் நீங்க சொல்லியிருக்கீங்க.

விளக்கேத்தறதுக்கு ஒரு தீப்பெட்டியோ இல்லைன்னா மின்சாரமோதான் வேணும். அதுக்கெதுக்கு இந்த சம்பிரதாயமெல்லாம்ன்னுதான் நான் கேட்டேன்.

மத்தபடி வீட்டுக்கு வெளக்கேத்தறதுக்கான வெளக்கத்தை நாட்ஸ் ஊட்டுக்காரம்மா ஏற்கனவே படத்துல வெளக்கியிருக்காங்க :-))
தேடிப்பார்த்தும் லிங் கிடைக்கலை..

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்ஜி,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ப்ரேம்குமார்,

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களும், நன்றிகளும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெய்வசுகந்தி,

பலகாரம் சுடுற எண்ணெய்ப்புகையும், பட்டாசின் கருமருந்துப்புகையும்,.. ஊடே கொசுவத்திப்புகையுமா கன ஜோரா இருக்கு தீவாளி :-)))))))

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிலாஸபி ப்ரபாகரன்,

பார்த்ததுமே.அந்தக்குழந்தைகள் 'பச்சக்'ன்னு மனசில் ஒட்டிக்கிட்டாங்க. அதான் பிடிச்சுப்போட்டுட்டேன்.

மனசில் தோணினதை எழுதுறேன், உங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தா சந்தோஷம்.. அவ்வளவுதான்.. நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

சின்னச்சின்ன பண்டிகைகளைக்கூட மும்பைக்கர்கள் ரொம்பவே சந்தோஷமா, டென்ஷனில்லாம கொண்டாடுறாங்கப்பா..
பிந்தாஸ் பார்ட்டீஸ் :-)))))

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails