Friday 12 November 2010

சுதியும் லயமும்..

ரெண்டும் ஒருமிச்சு இருந்தா, அந்த சங்கீதம் இனிக்கும்... ஒண்ணுக்கொண்ணு தெற்கும் வடக்குமா முறைச்சுக்கிட்டு நிக்குதா.. நம்ம காதுக்கு இனிஷியல் போட்டுக்க வேண்டியதுதான். அதுவும் அரசாங்க கெஜட்ல போயி K.காது அப்படீன்னு பேரை மாத்திட்டு வந்துடும் :-))). ஆனா, எங்க வீட்டைப்பொறுத்தவரை ரெண்டும் முட்டிக்கிட்டாலும் சரி,.. ஒத்துமையா இருந்தாலும் சரி.. பல்புகள் வாங்குறதென்னவோ நாங்கதான்.

ஒத்துமையா இருந்தா, ரெண்டும் சேர்ந்துக்கிட்டு எங்களை சுத்தல்ல விட்டுடும். முட்டிக்கிட்டு இருந்தா,.. இவங்களுக்கிடையே பஞ்சாயத்து பண்ணியே நெளிஞ்சுபோன சொம்புகள் ஏராளம்.. ஏராளம். ஆமா,, ஆமா,..ன்னு தலையை பலமா ஆட்டி ஆமோதிக்கும் பெற்றோரா நீங்கள்.. அப்படீனா இடுகை எதைப்பத்தின்னு கரெக்டா யூகிச்சிருப்பீங்க. நான் பெற்ற செல்வங்களின் திருவிளையாடல்களை பதிவு செஞ்சு வெச்சு, என்னோட அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச்சொல்லும் தலையாய கடமை என்னை அழைக்கிறது..

சுதி: "டேய்.. டிவியை ஆஃப் பண்ணு"

லயம்: "அம்மா.. இவ என்னை டேய் போட்டு கூப்பிடறா"

சுதி:"டேய்.. டிவியை ஆஃப் பண்ணு"அப்படீன்னு.. அம்மா சொல்லுவாங்கன்னு சொல்லவந்தேன்.. அதுக்குள்ள கம்ப்ளைண்ட் பண்ணக்கூடாதுப்பா.."

**********************
லயம்: எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!அவ்வ்வ்வ்வ்.... என் பேரை மொதல்ல மாத்துங்க...

நான்: ஏன்ப்பா... உன் பேரு நல்லாத்தானே இருக்குது. ஒரு பெரிய அறிவியல் அறிஞரோட பேரைத்தான் உனக்கு வெச்சிருக்கேன்.. தெரியுமா!!

லயம்: அது சரி.. ஆனா, சில சினிமாக்கள்ல என் பேரை கிச்சடி ஆக்குறாங்க தெரியுமா!!! என் பேரை வெச்ச ஹூரோக்களை உருப்படியாவே காமிக்க மாட்டேங்குறாங்க :-)))

"பாஸ்... என்ற பாஸ்கரன்" படத்தைப்பார்த்துட்டுதான் சார் இப்படி வெக்ஸ் ஆகிட்டார். ஏன்னா, லயத்தோட பேரு... "பாஸ்கர்" :-))))))))

சுதி தூவிய மொளகாப்பொடி: அட்லீஸ்ட் ஹீரோவுக்காவது உன் பெயரை வெச்சாங்களே.. அதை நினைச்சு சந்தோஷப்படு. ஹா..ஹா..ஹா...

**************************


பண்டிகைகள் வந்தா கலாய்த்தலும் ஆரம்பிச்சுடும். ரக்ஷாபந்தன் சமயம் ஆரத்தி எடுத்த தங்கைக்கு பணம் கொடுக்கணும்ன்னு சொன்னதும், எவ்வளவு கொடுக்கட்டும்ன்னு கேட்டார். 'பதினொரு ரூபாய் கொடு போதும்'ன்னு தங்கை பெரிய மனசு செஞ்சு சொல்லிட்டாங்க.. அடுத்தது அண்ணன் செஞ்சதுதான் ஹைலைட். '1&1=11..இந்தா என்னோட அன்பளிப்பு' ன்னு சொல்லி நீட்டுனது ரெண்டு ஒரு ரூபாய் நாணயங்களை...

************************** 


'சின்னவயசுல எவ்ளோ ஒத்துமையா இருந்தீங்க.. இப்போ ஏன் இப்படி எலியும் பூனையுமா இருக்கீங்க??'ன்னு ஒரு நாள் கேட்டேன்..  மேடம் அப்டியே சீலிங்ஃபேனை பார்த்தாங்க.. கொசுவத்தி சுத்தறாங்களாமாம்..

"ஒரு நாள், என்னாச்சு தெரியுமா?.. வாஷிங்மெஷினோட ட்ரெயினேஜ் பைப் இருக்குதில்லியா!!! அதுல ஒத்தைக்கண்ணை வெச்சு அண்ணா ரொம்ப நேரமா உள்ளே பாத்துக்கிட்டிருந்தார். என்ன பார்க்குறேன்னு கேட்டப்ப,.. இதுல இருந்து 'சூப்பர் ஹ்யூமன் சாமுராய்' வரப்போறார்.. அதான் காத்துக்கிட்டிருக்கேன்னு சொன்னார். அதை உண்மைன்னு நம்பி, நானும் பார்க்கணும்ன்னு சண்டை போட்டு..   ரெண்டு மணி நேரமா, ஒக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன். தெரியுமா??...  அதான், இப்பல்லாம் அவரு என்ன சொன்னாலும் நான் நம்புறதில்லை "

"ஆமா.. இது எப்போ நடந்தது?"

"நா அப்போ யூ.கேஜில இருந்தேன்னு நினைக்கேன்"

சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்டேன், "சரி!! சாமுராய் வந்தாரா இல்லியா"

"ம்ம்... வந்தாரு. அந்தச்சமயம் அண்ணா பார்த்துக்கிட்டிருந்த கார்ட்டூன்ல...."

டிவியை கைப்பற்ற இப்படியும் வித்தியாசமா யோசிக்கலாமோ :-))))))))))

*************************

இந்தியில் சகோதரனை,"பையா"(Baiya)ன்னு கூப்பிடுவாங்க.. [யாருக்காவது தமன்னா ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்ஸ் இல்லை :-))]. தமிழில் சின்னப்பையன்களை 'பையா'ன்னு கூப்பிடுவாங்க(paiya). லயம் கவனிக்காதபோது, paiya ன்னு கூப்பிடறதும், அவரோ இல்லை நானோ கவனிச்சு 'எப்படி கூப்பிட்டே'ன்னு கையும் களவுமா பிடிச்சா 'baiya'-ன்னு சொன்னேன்'ன்னு சமாளிச்சு கலாய்ப்பதும் சுதியின் பொழுதுபோக்கு.

சின்ன வயசில் அண்ணனை, 'நீங்க.. வாங்க.. போங்க'ன்னு ரொம்ப மரியாதையாத்தான் கூப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. கொஞ்சம் வளந்தப்புறம் அப்படி கூப்பிட்டா வேத்தாள் மாதிரி தோணுது, இனிமே ஒருமையிலேயே கூப்பிட்டுக்கிறேனேன்னு அண்ணாகிட்ட அனுமதி வாங்கினப்புறம்தான் அட்டகாசம்.

*************************
'நாஸ்ட்ரடாமஸ்'.. இவரைப்பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா??. இரட்டைக்கோபுரங்களை விமானம் வைத்து தகர்த்தது , மற்றும் இவர் முன் கூட்டியே கணிச்சு சொல்லிவெச்ச நிறைய விஷயங்கள் பலிச்சிருக்காம்,... அவரோட மரணம் உட்பட. இதைப்பத்தி ஒரு நாள் நானும் சுதியும் பேசிக்கிட்டிருந்தப்ப, லயம் அங்கே வந்தார்.

லயம்:  நிஜமாவே,.. அவர் கணிச்ச எல்லாமே பலிச்சிருக்கா??

சுதி: ஆமாம்.

லயம்: வருங்காலத்தில் நடக்கப்போவது எல்ல்ல்லாத்தையுமே அவர் கணிச்சிருக்காரா??

சுதி: நிறைய விஷயங்களை கணிச்சிருக்காரு.. கொஞ்சம் இப்போதான் தெரியவந்திருக்கு. மத்தபடி போகப்போகத்தான் தெரியும்.

லயம்: எனக்கும் ஒரு விபரம் வேணுமே..

சுதி:சொல்லு.

லயம்: 'Dhoom-3' எப்போ ரிலீஸ் ஆவும்ன்னு கணிச்சிருக்காரான்னு, கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்..









அதுக்கப்புறம் சுதி நடத்திய ஒரு இனிமையான தாளக்கச்சேரி நடந்ததுன்னு சொல்லணுமா என்ன :-))). கச்சேரி நடந்த இடம் லயத்தின் முதுகு.....

*************************








38 comments:

எல் கே said...

ஹஹஅஹா.. எங்க வீட்டிலும் இந்த சுதி லயம் கச்சேரி உண்டு...பசுமை நிறைந்த கனவுகளே .....

sathishsangkavi.blogspot.com said...

நிறைய புதிய விசயங்கள் அறிந்து கொண்டேன்..

வெங்கட் நாகராஜ் said...

சுதியும் லயமும் சேர்ந்து நடத்திய இந்த இன்னிய கச்சேரி நன்றாக இருந்தது சகோ :))) குட்டீஸ் அடிக்கிற லூட்டியே ஒரு சுகம்தான், நம்மதான் டென்ஷன் ஜாஸ்தியாகி ரசிப்பதில்லை.

சந்தனமுல்லை said...

:))))

செம சிரிப்புதான்....எனக்கு என் தம்பி ஞாபகம் வந்துடுச்சு...இப்போல்லாம் சண்டை இல்லே..வளர்ந்தாச்சு இல்லே..

தொடர்ந்து சுதி-லயம் கச்சேரியிலே எங்களையும் சேர்த்துக்கோங்க.:-)

ராமலக்ஷ்மி said...

சுதியும் லயமும் கேட்க சுகம்:)!

1&1... அண்ணா பிழைச்சுக்குவார்.

பைப்புக்குள்ள சாமுராய்... அடப் பாவமே:))!

அன்புடன் அருணா said...

சூப்பர்!

அம்பிகா said...

சுதியும், லயமும் சேர்ந்து அழகான அரட்டை கச்சேரி. இனிமை.

வல்லிசிம்ஹன் said...

சுதியும் லயமும் சண்டை போட்டுக்கிட்டேஎ நல்லா ஒத்துமையா இருக்க ஆசிகள்:)
இதுவும் நல்ல கொசுவத்திதான். எங்க வீட்ல
சின்னத்தம்பிக்கும் எனக்கும் தான் கலாட்டா வரும்.
சரியான போக்கிரிப் பையனா இருந்தான்:)
வயசானப்புறம் அவந்தான் நிறைய உதவிக்கு வருவான். அதனால் இந்தச் சின்னச் சின்ன கலவரங்களை நல்லா ரசியுங்க. :)

Vidhya Chandrasekaran said...

தகிட ததமி தகிட ததமி தந்தானா:))

Prathap Kumar S. said...

:)) ஒரே டமாஸ்...
ஒரு சுதியும் லயமும் இப்படின்னா ஒரு வீட்டுல 3 லயங்கள்.. எப்படி இருந்திருக்கும்..
எங்கவீடுதான்

நசரேயன் said...

கச்சேரி களைகட்டுது

ப்ரியமுடன் வசந்த் said...

//அதுவும் அரசாங்க கெஜட்ல போயி K.காது அப்படீன்னு பேரை மாத்திட்டு வந்துடும் :-))). //

ha ha haa...

சுதிக்கு பெண்பால் லயத்துக்கு ஆண்பாலா ரைட்டு..

பாஸ்கர் பெரிய ஆளா வருவார் போலயே...

ஹேமா said...

கச்சேரி அமர்க்களம்தான் சாரல் !

Mukil said...

அது சரி.. ஆனா, சில சினிமாக்கள்ல என் பேரை கிச்சடி ஆக்குறாங்க தெரியுமா!!! //

அப்போ, ஆஸ்கர் ன்னு மாத்திடலாமா..?? :-))

-முகிலரசி

Anisha Yunus said...

டிசம்பர் மாசம் மட்டும் இல்லாம எல்லா நாட்களிலும் நல்ல கச்சேரி போலவே... கேட்கவே இனிக்கும் சந்தோஷம் இந்த சண்டை சச்சர்வுகள்...என்சாய்...!!

ஜெயந்தி said...

கச்சேரி களகட்டி இருந்துச்சு. எங்க வீட்டுலயும் உரையாடல் கச்சேரி தாளக் கச்சேரியெல்லாம் உண்டு.

ஹுஸைனம்மா said...

ஆஹா, கொடுத்து வச்சவங்க நீங்க. ஒரு பொண்ணு, ஒரு பையன்கிறதால ‘வாய்ப்பாட்டோட’ கச்சேரி முடிஞ்சுடுதுபோல. ரெண்டும் பையனா இருக்க வீட்டுல கேளுங்க... நித்தமும் நாலுவேளையாவது வாத்தியக்கச்சேரி ’அடி’ தூள் கிளப்பும்!! ;-)))))

Asiya Omar said...

சூப்பர் பகிர்வு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ஆயுசுக்கும் மறக்காத இனிய கச்சேரிகளல்லவா :-))))))

[ma]நன்றி..[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

[ma]வரவுக்கு நன்றி[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மைதான்.. இதில் ரங்க்ஸ் பாடுதான் பாவம்.. வேலை,வேலைன்னு ஓடிக்கிட்டு இருந்தப்ப கூடுதலும் இதுங்க லூட்டியை கவனிச்சதில்லை. இப்ப,மிஸ் பண்ணிட்டோமோன்னு தோணுது. இப்பல்லாம் அதுங்க கச்சேரியில் அவரும் கலந்துக்கிறதுண்டு :-)))))

[ma]வரவுக்கு நன்றி[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

இந்த செல்லச்சண்டைகளையெல்லாம் அதுங்களும் பிற்காலத்துல கொசுவத்தி சுத்தும்ன்னு நினைக்கிறேன்..

[ma]நன்றி.. நன்றி[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

அண்ணன் ரொம்பவே சிக்கனக்காரர் :-))))))))))

என் பொண்ணும் இதையேத்தான் சொல்லிச்சொல்லி மாய்ஞ்சு போறா.."ச்சே!!.. எவ்ளோ அப்பாவியா இருந்திருக்கேன்"ன்னு அங்கலாய்ப்பு வேற :-)))))

[ma]வரவுக்கு நன்றி[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா மேடம்,

[ma]நன்றிங்க[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

[ma]நன்றிங்க[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ரெண்டு பேருக்குமிடையில் ஒத்துமையும் நிறையவே உண்டு. பாசம் அருவியா கொட்டி நாங்கல்லாம் வழுக்கிவிழற அளவுக்கு இருக்கும்.. சமயத்தில்தான் இந்த உச்சிப்புடியெல்லாம் :-)))))))

[ma]நன்றிம்மா[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

தில்லானா.. தில்லானா, இது தித்திக்கின்ற தேனா :-))))

[ma]நன்றிங்க[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சிலு,

எப்படியிருந்திருக்கும்ன்னு கேக்க மாட்டேனே.. ஏன்னா!!! ஒரு ஈடு பர்கருக்கு ஒரு பர்கர் பதம்(எவ்ளோ நாள்தான் சோத்தையே திங்கிறது :-))

[ma]நன்றி[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

ரசிச்சதுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

உங்க ஆசி பலிக்கட்டும் :-)))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

சந்தோஷக்கச்சேரி அடிக்கடி களைகட்டும் :-))))

வரவுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலரசி,

அந்தப்பேரு ஃப்ரெண்ட்செல்லாம் ஏற்கனவே போரடிக்கிறவரை கூப்பிட்டாச்சு,.. வாணாம் :-))))))

[ma]முதல் வருகைக்கு நன்றி[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்னு,

எஞ்சாயேதான் :-)))))))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

ஆஹா... எழுதுங்களேன் அதைப்பத்தி :-)))))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

கிளிகள் பறந்துபோன பின்னாடி நினைச்சுப்பார்த்துக்கலாம் இதெல்லாம் :-))))

[ma]வரவுக்கு நன்றி[/ma]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

[ma]வரவுக்கு நன்றி[/ma]

kavisiva said...

ஹாஹா எல்லா வீட்டுலயும் சுதியும் லயமும் இப்படித்தானோ! இனிய நினைவுகளை மலரச் செய்து விட்டது உங்கள் பதிவு.

ஆனால் இப்படி இருக்கும் சுதி லயத்தினிடையே இருக்கும் பாசமும் ஒற்றுமையும் மிக அதிகம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

ரொம்பவே கரெக்டுங்க..,இதெல்லாம் கூட செல்லச்சண்டைகள்தானே :-))))

புரிதலுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails