Sunday 16 May 2010

மைக்ரோசாப்டில் வேலை வேணுமா!!!!!

நாட்டுல வேலையில்லா திண்டாட்டம் தலையை விரிச்சுப்போட்டுக்கிட்டு ஆடுது. அதுக்கு ஒரு ஜடைபின்னி, பூ வெச்சு விடத்தான் ஆளில்லைன்னா, ஒரு பாப்கட், ஸ்டெப் கட், அட... அதுவுமில்லைன்னா ஒரு லேயர் கட்ன்னு செஞ்சு விடவும் ஆளில்லாம போச்சு. மனசுக்குள்ள பொலம்பிக்கிட்டே நடந்துக்கிட்டிருந்தார் நம்ம ஹீரோ. அப்பத்தான் அவரு கண்ல அந்த பந்தல் பட்டுது.

அக்ஷய த்ரிதியைன்னா... மோர்ப்பந்தல், அன்னதானப்பந்தல் எல்லாம் அந்தக்காலத்துல வெப்பாங்களாமே. இப்பத்தான் எல்லாரும் நகைக்கடை வாசல்ல க்யூவுல நிற்கிற சம்பிரதாயத்தை ஆரம்பிச்சிருக்காங்க. ஒருவேளை உலகம் ரிவர்ஸில் சுத்தி,.. நாம அந்தக்காலத்துக்கு போயிட்டோமோன்னு ஒரு நிமிஷம் குழம்பினாலும், அடிக்கிற வெய்யிலுக்கு மோராவது சாப்பிட்டு வரலாம்ன்னு பந்தலுக்குள் நுழைஞ்சார் . வரிசையா திருவிழாக்கடைகள் மாதிரி ஸ்டால்கள். ஒவ்வொண்ணிலும், ஒரு கம்ப்யூட்டர். கம்ப்யூட்டருக்கு முன்னால, நுனிநாக்கு இங்க்லீஷில் மட்டும் பேசும் பெண்கள். ஒவ்வொரு கவுண்டரின் மேற்பகுதியிலும் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது. அதுல என்னவோ எழுதியிருக்குதேன்னு கிட்டக்க போய்ப்பார்த்தா,... கம்பெனிகளோட பேர். ஓடிப்போய் வெளிய இருந்த விளம்பரத்த பாத்தார். 'Walk In Interview' அப்டீன்னு பொத்தாம்பொதுவா எழுதியிருந்தது. அப்ளிகேஷன் போடாம, காத்திருக்காம, நேரடியா இண்டர்வ்யூ நடத்தி ஆட்களை தேர்ந்தெடுக்கும் ஒரு முறை இது. ஆஹா!!!! அட்சய த்ரிதியை அன்னிக்கு அட்சய பாத்திரம் கிடைச்சிருக்கேன்னு ஒரு ஜாலியாட்டம் ஆடிட்டு, உள்ள போனார்.

நம்ம ஹீரோ ஒரு லட்சியவாதி. செய்யுற வேலையே தெய்வம், நேரத்தோட ஆப்பீசுக்கு போய் நேரத்தோட வீட்டுக்கு வரணும் , நாம பாக்குற வேலையில சின்சியரா இருந்து நல்ல பெயர் எடுக்கணும்ன்னு நினைக்கிற ஒரு சின்சியர் சின்ராசு. ஆனா பாருங்க,.. அவருக்கு இன்னும் வேலை கிடைக்காததால அவரோட சின்சியாரிட்டி, ப்ரிஜ்ஜில் வெச்ச பழமாட்டம்... அப்படியே ஃப்ரெஷ்ஷா , ஹாரிபாட்டர் படத்துல வர்ற வில்லன் வால்டிமார்ட்டோட உசிர் மாதிரி, வெளியுலகத்துக்கு தெரியாம அப்பிடியே இருக்கு.

வரிசையா பேனர்களை பாத்துக்கிட்டே, போனப்ப பில்கேட்ஸின் 'மைக்ரோசாப்ட்' கம்பெனியும் தனி ஹால்ல ஸ்டால் போட்டிருந்ததை பார்த்தார். இதுதான் நமக்கு சரியான இடம்ன்னு, முடிவு பண்ணி, ஹாலுக்குள்ள போனார். அவரோட அதிர்ஷ்டம் , 'மைக்ரோசாப்ட் ஆசியா'வுக்கான சேர்மனை தேர்ந்தெடுக்கிறதுக்கான இண்டர்வ்யூவை நடத்த பில்கேட்ஸே வந்திருந்தார். சுமார் ரெண்டாயிரம் பேர் வேலைக்காக வந்திருந்தாங்க அப்ளிகேஷன்லாம் தரவேண்டாம்.தனித்தனியா இண்டர்வ்யூ செஞ்சா வேலைக்காகாது,.. நான் மொத்தமாவே இண்டர்வ்யூ செஞ்சுக்கிறேன்னு பில்கேட்ஸ் சொல்ல எல்லோரும் நாற்காலிகளில் உக்காந்தாங்க. இண்டர்வ்யூ ஆரம்பிச்சது....

பில்கேட்ஸ்: "வந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி. சேர்மனுக்கான இண்டர்வ்யூ இது... நான் எதிர்பார்க்கிற தகுதிகளை சொல்லுவேன். அது இல்லாதவங்க தயவு செஞ்சு இண்டர்வ்யூல இருந்து விலகிடுங்க. மொதல்ல...

'ஜாவா' தெரியாதவங்க இண்டர்வ்யூல இருந்து விலகிக்கலாம்"

உடனே ஐநூறு பேர் இடத்தை காலி செஞ்சாங்க. 'எனக்கு ஜாவா தெரியாதுதான்.ஆனாலும் இங்கே இருக்கிறதால நான் இழக்கப்போறது எதுவுமில்லை. என்னதான் நடக்குது பார்க்கலாமே'ன்னு நினைச்சிக்கிட்டு நம்ம ஹீரோ அங்கியே இருந்தார்.

பில்கேட்ஸ் : "உங்கள்ல யாருக்காவது நூறு ஆட்களையோ, அதுக்கு மேலயோ, சமாளிச்ச அனுபவம் இருக்கா?. அப்படி இல்லாதவங்க விலகிடுங்க."

ஒடனே இன்னும் ஐநூறு பேர் வெளியேறிட்டாங்க. நம்மாளு மனசுக்குள்ள , 'எத்தினி தியேட்டர்ல, கூட்டத்த சமாளிச்சு டிக்கெட் எடுத்திருப்பேன். எனக்கில்லாத அனுபவமா'ன்னு நினைச்சிக்கிட்டு கெத்தா உக்காந்திருந்தார்.

பில்கேட்ஸ் : "இந்த பதவிக்கு எம்பியே (MBA) படிச்சவங்க இருந்தா, நல்லாருக்கும்னு நினைக்கிறேன். ஃபெயிலாயிருந்தா கூட பரவாயில்ல".

அவர் சொல்லி வாய்மூடலை. இன்னும் ஐநூறு பேர் எந்திரிச்சி போயிட்டாங்க. நம்ம ஹீரோவுக்கு லேசா தைரியம் வந்துச்சு. 'நாமதான் பன்னெண்டாம் வகுப்பு எம்பி, எம்பியே பாசாயிருக்கோமே, பாஸ் பெரிசா ஃபெயில் பெருசா?' ... ஏங்க... நீங்கதான் கொஞ்சம் சொல்லுங்களேன்....

பில்கேட்ஸ் (கடைசியாக) : "ஆசியாவுக்கான சேர்மன் பதவிக்கு ஆளெடுக்கிறோம். அதனால ஆசிய மொழி தெரிஞ்சவங்க மட்டும் இருந்தாபோதும்".

கட்டக்கடைசியா நானூத்தி தொண்ணுத்தியேழு பேர் வெளியேறினாங்க. பில்கேட்ஸ் இண்டர்வ்யூவை முடிச்ச திருப்தியோட மீதி, நம்ம ஹீரோஉட்பட இருந்த மூணு பேர் கிட்ட வந்தார். "ஃப்ரெண்ட்ஸ் எனக்கு ஃப்ளைட் புடிக்க டைம் ஆயிடிச்சு. உங்கள ஆப்பிசுக்கு வரச்சொல்ல நேரமில்ல.அதனால உங்களுக்கு இங்கியே அப்பாயின்ட்மெண்ட் லெட்டர் குடுத்துடறேன்."

ஆர்டரை கொடுத்துட்டு,"எதுக்கும் நீங்க மூணுபேரும்,உங்களுக்குள்ள ஆசிய மொழிகள்ல பேசிக்காமிங்களேன்.எனக்கும் திருப்தியா இருக்குமில்ல"

நம்ம ஹீரோ திரும்பி, பக்கத்தில் இருந்தவரிடம்,"அண்ணாச்சி, நீங்க எந்தூர்லருந்து வாரியோ?"

அவர் பதில் சொன்னார்," நமக்கு இங்கிணதான், ஆராமுளி பக்கத்துல நாரோயில்லேர்ந்து வாரென் மக்ளே".

மூணாவது ஆள் கிட்ட வந்து,"இன்னாபா... நம்மள கண்டுகிட மாட்டேங்றியே?.. இப்ப இன்னாங்கிற... அக்காங்".


இது என்னோட ஐம்பதாவது பதிவு. இந்த தொலைவை நிச்சயமாக உங்க ஆதரவு இல்லாம என்னால் கடக்க முடிந்திருக்காது. கூடவே வந்து ஆதரவளித்தும் , பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களுக்கு, நன்றி என்ற சின்ன வார்த்தை போதாது. என்றாலும் நன்றி.. நன்றி.. நன்றி..





35 comments:

எல் கே said...

புது டெம்ப்ளட் நல்லா இருக்கு. அரை சதத்திற்கு வாழ்த்துக்கள். விரைவில் சதம் அடியுங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நம்மாளு ரொம்ப விவரந்தான் போலிருக்கே..

Starjan (ஸ்டார்ஜன்) said...

50வது இடுகைக்கு என்னுடைய வாழ்த்துகள் அக்கா.. மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

மின்மினி RS said...

50வது பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.

Unknown said...

மூன்று பேரில் மதுரைக்காரரைச் சேர்க்காததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்யறேன்..

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்குங்க பதிவு:)!

ஐம்பதுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

தொடருங்கள். தொடர்கிறோம்.

அன்புடன் அருணா said...

50க்குப் பூங்கொத்து!

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...

Ahamed irshad said...

மனமார்ந்த வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

ஐம்பது பதிவுகள் இட்டதிற்கு வாழ்த்துக்கள். மேலும் நல்ல பதிவுகள் தர உங்களுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்.

புதிய டெம்ப்ளேட் நன்றாக உள்ளது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

ஆமாங்க, இல்லைன்னா பொழைக்க முடியுமா :-)))

வாழ்த்துக்களுக்கும் வரவுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மின்மினி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலன்,

மதுரைக்காரரை மொதல்ல இண்டர்வ்யூவுக்கு வரச்சொல்லுங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

கூடவே வர்றதுனாலதான் பயமில்லாம இருக்கேன் :-)

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Sri said...

Best wishes 4 half century.... ButI'm in the first stage.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா மேடம்,

பூங்கொத்துக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது இர்ஷாத்,

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

எங்கே ஆளையே காணோம்?...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஏதோ எழுதறேன். நல்லாருக்கா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும் :-))))

வாழ்த்துக்களுக்கு நன்றி. டெம்ப்ளேட்டை ரசிச்சதுக்கும். அந்த குழந்தைகளை பார்த்ததும் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க sri,

வலையுலகத்துக்கு வாழ்த்தி வரவேற்கிறோம். இங்கே எல்லோருமே முதல்படியிலிருந்துதான் நடக்க ஆரம்பிச்சிருக்கோம். நீங்களும் கூடவே வாங்க :-)

முதல்வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

நசரேயன் said...

கடைக்கு புதுசா வெள்ளை அடிச்சி இருக்கீங்க போல இருக்கே

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

பள்ளிக்கூட லீவுல பசங்களுக்கும் பொழுது போகணுமில்லையா!!. பாத்தீங்களா என்ன அழகா பெயிண்டிங் செஞ்சு குடுத்திருக்காங்கன்னு :-)). நல்லாருக்கா?

நன்றிப்பா.

சந்தனமுல்லை said...

50 க்கு வாழ்த்துகள்! 50உம் அருமையான இடுகைகள்...உங்கள் பயண கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..மிக அழகாக நிகழ்வுகளையும் தகவல்களையும் ஒருங்கிணைக்கும் நடை! தொடர்ந்து எழுதுங்கள்,அமைதிச்சாரல்! :-)

புது முகமும் நல்லாருக்கு!

Easwaran said...

ஏ! இந்த நாரல்கார பய புள்ள "மைக்ரோ சாப்ட்" - ல போய் கூட்டம் சேத்து போடுவானே.

சுந்தரா said...

வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்,

விரைவில் முழு சதமடிக்கவும் கூட.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நம்ம ஆளுக எப்பவும் விவரம் தானுங்க... 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

உங்க பின்னூட்டம் பார்த்து உற்சாகமா இருக்கு. நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஈஸ்வரன்,

நம்ம பயக்க பாசக்காரனுக. எங்க போனாலும் நாலுபேர முன்னேத்திப்டுவாங்க. இருந்துட்டுபோட்டுமே :-))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

அதேதாங்க.. அதனாலதான் மைக்ரோசாப்டில் வேலை கிடைச்சிடுச்சு.

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

மைக்ரோஸாஃப்ட்டின் கதையை உங்க பாணியில சொன்னது ஒரிஜினலைவிட ரொம்ப ரசிக்க வைச்சுது. :-)))

“நாரோயில்” - இப்டித்தான் சொல்லுவாவ!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

நன்றிங்க ரசிச்சதுக்கு.

settaikkaran said...

அரை செஞ்சுரிக்கு முழு வாழ்த்துக்கள்! :-)

ஆராமொளி பக்கத்துலியா? அப்பம் ஆராமொளிக்குத் தெக்காலேயும் ஊரு இருக்கா? :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சேட்டை,

தெக்கால மட்டுமில்ல, கிழக்கால,மேக்கால,வடக்காலன்னு எல்லாப்பக்கமும் ஊருக இருக்குல்லா :-D

வாழ்த்துக்களுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails