Tuesday 11 May 2010

பெயர் வைக்கும் படலம்....-8

ரொம்ப நாளாவே மனசுக்குள்ள ஒரு தடுமாற்றம். ரங்க்ஸோட ரிட்டையர்மெண்டுக்கு அப்புறம் தமிழ் நாட்டுல செட்டில் ஆகலாமா,.. இல்லை இங்கியே இருந்துடலாமான்னு ஒரு ஊஞ்சலாட்டம். ஊருக்கு போயிட்டா, பசங்க அவங்கவங்க குடும்பத்தோட வந்து போறமாதிரி ஒரு நல்ல இடத்துல செட்டில் ஆகணும். அவங்களுக்கும் பிடிச்ச இடமா இருக்கணும். வந்த ரெண்டாம் நாளே போர் அடிக்குதுன்னு கிளம்பிடாம இருக்கணும். எல்லாத்துக்கும் மேல நமக்கும் ரிட்டையருக்கப்புறமான வாழ்க்கை, சந்தோஷமா, வேண்டிய மருத்துவ வசதிகளோட இருக்கணும்.

ஊர்ல வீடு கட்டினா, திண்ணை, முற்றம்,ஊஞ்சல் வெச்சு கிராமத்து ஸ்டைல்ல, ஆனா... அதே சமயம் நவீன வசதிகளோட கட்டணும். தோட்டம் கண்டிப்பா இருக்கணும். சுசீந்திரம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அழகான, குளுமையான, அமைதியான இடம். சாயங்காலமானா தாணுமாலயர் கோயிலுக்கு போயிட்டு, குளத்தங்கரையில் நேரம் போக்கலாம். ஆனா மருத்துவ உதவி வேணும்ன்னா பக்கத்துல பெரிய ஆஸ்பத்திரி கிடையாது. திருநெல்வேலியும் ஓ.கேதான். நெல்லையப்பர் இருக்கார். பார்க்கலாம்ன்னு இருந்தோம்.

ரெண்டு வருஷம் முன்னே சித்திப்பையன் கல்யாணத்துக்கு போயிருந்த சமயம்.. பாளையங்கோட்டைக்கு வர நேரிட்டது. வழியில் sifa constructions கட்டியிருந்த தொகுப்பு வீடுகளை பார்த்ததும் அட.. இந்த இடம் நல்லாருக்கும் போலிருக்கேன்னு ரங்க்ஸ் காதில் போட்டு வெச்சிருந்தேன். போனில் விசாரித்தபோது அவங்களுக்கு ஒரு வெப்சைட் இருக்குன்னும் அதுல மேல்விவரங்கள் இருக்குன்னும் சொன்னாங்க.லிங்க் இதோ...


அந்தா தெரியுதே,.. அதுதான் கம்யூனிட்டி ஹால்.

திருநெல்வேலியிலிருந்து, அங்கே போய்ச்சேர எப்படியும் அரைமணி நேரமாவது ஆகிறது. மொத்தம் மூணு டைப் வீடுகள். மனையின் அளவு ஒரே மாதிரிதான் இருக்காம். வீடுகளின் அளவுகள் மட்டும் வித்தியாசப்படுகிறதாம். கம்யூனிட்டி ஹால் ஒண்ணு கட்டிக்கிட்டிருக்காங்க. சுத்திலும் கடை, கண்ணி எதுவுமில்லையேன்னு கேட்டேன். இங்கியே சூப்பர் மார்க்கெட் ஒண்ணு கட்டுறாங்களாம். ஆனா,.. தண்ணி வசதி அவ்வளவு திருப்திகரமா இல்லை.

ஒரு வீட்டின் முகப்பு.

வீடுகளுக்குள்ளே போய்ப்பார்த்தோம். பரவாயில்லை... இன்னும் கொஞ்சம் ப்ளான் பண்ணியிருந்தா, வீடுகளுக்குள்ள இன்னும் இடவசதியை கொண்டு வந்திருக்கலாம். வெளியிலிருந்து பாத்தா அட்டகாசமா இருக்கு. தோட்டம் போட வீட்டைச்சுத்தி இடமிருக்கு. ஒதுக்குப்புறமா இருக்கிறதால கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. வெப்சைட்டுல burglar alarm இருக்கிறதா போட்டிருந்தது. கேட்டா, அப்படி ஒண்ணுமில்லைங்கிறாங்க. அப்றம், யோசிச்சு போன் செய்றோம்ன்னுட்டு வந்துட்டோம்.

மறுநாள், சொந்தபந்தம் எல்லோரும் தயாராகி, விழா நாயகனை, அதாங்க... குட்டிப்பையனை பார்க்க தூத்துக்குடி கிளம்பினோம். ஏற்கனவே சொல்லி வெச்சிட்டதால, பூஜைகளெல்லாம் நடக்க ஆரம்பிச்சிருந்தது. நாங்க போனப்ப நல்ல உறக்கத்தில் இருந்தார். மொதமொத கையில் எடுத்துக்கிட்டப்ப... ஹையோ!!!.. என்னன்னு சொல்ல!.. பிஞ்சுப்பூவை அதுக்கு வலிக்குமோன்னு பயந்துக்கிட்டே, மடியில் வெச்சிக்கிட்டேன். கிர்ர்ர்ர்ன்னு யாரோ மொறைச்சுப்பார்க்கறது மாதிரி ஒரு ஃபீலிங். இன்னொரு தம்பியோட எட்டு மாதமேயான, ரெண்டாவது பொண்ணுதான் அந்த மொறைப்பு சுந்தரி... சார்மிங் சார்மிஷா :-). அவளுக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சுல்ல அதான் முறைப்பு :-)அவளையும் கிட்டக்க வெச்சுக்கிட்டதும் ஒரு சிரி..

பெயர் வைக்கிற நேரம் வந்ததும், பையனோட அம்மா மடியில வெச்சுக்க அப்பா, 'அக்ஷத்'ன்னு மூணு தடவை கூப்பிட்டு பெயர் வெச்சார் (Akshath).பெயர்க்காரணம் ஒண்ணும் புதுசில்லை. A-யில் ஆரம்பிக்கணும், அவ்வளவுதான். குழந்தை பிறந்தபின், பெயர் வைக்க எங்கிட்ட ஆலோசனை கேட்டார். சிம்பிளா, ஈஸியா, அழகா இருக்கணும் அவ்வளவுதான் கண்டிஷன். " @, இல்லைன்னா, .com ன்னு வை"ன்னு ஆலோசனை கொடுத்தேன். மறுபேச்சு பேசாம போனை வெச்சிட்டார். கடுப்பாயிட்டாரோ என்னவோ :-)))). அப்பா, அம்மா, ரெண்டுபேரும் software lineல இருக்காங்க. பொருத்தமான பேர்தானே சொல்லியிருக்கேன் :-))).

அதை தொடர்ந்து தங்க மோதிரத்துல தேனைத்தொட்டு, பையன் வாயில வெச்சு, எல்லோரும் ஆசிர்வாதம் செஞ்சாங்க. ரொம்ப தேன் வயித்துக்குள்ள போனா, குழந்தைக்கு நல்லதில்லைங்கிறதால அளவோட நிறுத்திக்கிட்டோம். சாயந்திரம் வரை கிட்டயே இருந்து, ஆசைதீர கொஞ்சிட்டு திரும்பினோம்.

மறு நாள் ஃபுல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, அதுக்கு மறுநாள் கிளம்பினோம். வழி நெடுக ஊர் சுத்திய அனுபவங்களை அசைபோட்டுக்கிட்டே வந்தோம். லோனாவ்லா வந்ததும், மறக்காம சிக்கி வாங்கிக்கிட்டேன். அசந்த நேரம் மிட்டாய் பையை உங்களுக்காக அப்படியே சுட்டுக்கிட்டு வந்திருக்கேன்.

சிக்கி... சிக்கிருச்சேய்!!!!
லோனாவ்லா தாண்டியதும், எங்களுக்கிணையா ஒரு ரயில் வந்துக்கிட்டிருந்தது. எதேச்சையா பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டேன். ரெண்டு பெட்டிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியில், பெண்களும், ஆண்களும், குழந்தைகளுமா ஏழெட்டுப்பேர் பயணம் செய்றாங்க. அப்படியே உறைஞ்சு போயிட்டேன். மும்பை ரயில்களில் மேல்கூரைகள்ள கூட பயணம் செய்வாங்க. புளிமூட்டை மாதிரி அடைச்சிக்கிட்டு பெட்டிகளில் தொங்கிக்கிட்டும் பயணம் செய்வாங்க பார்த்திருக்கேன் ,புளிமூட்டையில இன்னொரு புளியா நானும் பயணம் செஞ்சிருக்கேன் . ஆனாலும் இது ஃபோர் மச். இயலாமை பாதி, சாகச உணர்வு மீதின்னு இருக்காங்களேன்னு வீடு வந்து சேர்றவரை அதப்பத்தியே பேசிக்கிட்டு வந்து சேர்ந்தோம்.

ஊருக்கு, இனி அடுத்த பயணம் எப்போன்னு தெரியாது. அதுவரை இந்த இனிய நினைவுகளை நினைச்சுப்பாத்துக்கிட்டிருக்க வேண்டியதுதான். கூடவே வந்த உங்க எல்லோருக்கும் தாங்க்ஸ்பா..

22 comments:

Paleo God said...

//" @, இல்லைன்னா, .com ன்னு வை"ன்னு ஆலோசனை கொடுத்தேன். மறுபேச்சு பேசாம போனை வெச்சிட்டார். கடுப்பாயிட்டாரோ என்னவோ :-)))). அப்பா, அம்மா, ரெண்டுபேரும் software lineல இருக்காங்க. பொருத்தமான பேர்தானே சொல்லியிருக்கேன் :-)))//

ஹா ஹா கூடிய சீக்கிரம் வெச்சாலும் வைப்பாங்க!! :))

துளசி கோபால் said...

இந்த இடத்தை நானும் போனவருசம் போய்ப் பார்த்தேன்.

விவரம் இந்தச் சுட்டியில்.

http://thulasidhalam.blogspot.com/2009/05/2009-20.html

கடைசியில் சென்னை வந்து,'வாழ்ந்து பார்த்த பிறகு' ப்ரிஸ்பேன் லே போய் இருக்கலாமுன்னு ஒரு எண்ணம்.

பதிவு சூப்பர்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

இந்த பசங்களுக்கு பேரு வெக்கிறது இருக்கே அடடா... அதுங்களை வளர்க்கிறதைவிட கஷ்டம் :-))

வந்ததுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசி டீச்சர்,

ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம பக்கம் வந்திருக்கீங்க. டீச்சர்கிட்ட பாராட்டு கிடைச்சதில் அயாம் ஹேப்பி :-)))

நீங்க சுட்டி கொடுத்த இடுகையை ஏற்கனவே படிச்சு பின்னூட்டமும் போட்டிருக்கேன். ஆனா ஐம்கூல் என்ற பெயரில் இருக்கும்.

வீடுகள் வெளியில பாக்கையில நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் ஏனோ ஒண்ணு குறையிற மாதிரி இருக்கு.

சென்னை ஏங்க அலுத்துப்போச்சு!!!!

வருகைக்கு நன்றி. அடிக்கடி வரணும்.

Nathanjagk said...

பாதியில் படிக்க ஆரம்பித்தாலும், எழுத்தில் துள்ள​​லை உணரமுடிகிறது.
சுசீந்திரத்தில் வீடிருந்தால்
இனி​மையாக இருக்கும். ஆனால் ​​பெரிய ஆஸ்பத்திரி கி​டையாது
என்ற இடம் ஓய்வின் எதிர்பார்ப்​பையும் ​தே​வை​யையும் கவி​தை ​போல ​சொல்கிறது.

எல் கே said...

// @, இல்லைன்னா, .com ன்னு வை"ன்னு ஆலோசனை கொடுத்தேன்.//
என்ன யோசனை உங்களுக்கு ...

ஏற்கனவே இந்த வீட்டை பத்தி உங்க பதிவுல படிச்ச நினைவு ...

நீங்க ஏன் கோவை பக்கம் வீடு தேட கூடாது? கோவையின் புற நகர் பகுதியான வடவள்ளி அருமைய இருக்கு, கூப்பிடற தூரத்தில முருகன் இருக்கார் (மருத மலை )

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெகநாதன்,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

தலைநகரம் எப்படியிருக்கு. வெய்யில்லேர்ந்து எப்படி தப்பிச்சீங்க!!:-))

கோவையும் ஆலோசனைப்பட்டியலில் இருக்கு. பாலக்காட்டு காத்து வர்ற இடமாச்சே. பார்ப்போம்

வந்ததுக்கு நன்றி.

Ahamed irshad said...

அருமையான இடுகை.. சிறப்பான பகிர்வு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது இர்ஷாத்,

நன்றிப்பா.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு சாரல்:)!

நசரேயன் said...

//ரங்க்ஸோட ரிட்டையர்மெண்டுக்கு அப்புறம் தமிழ் நாட்டுல செட்டில் ஆகலாமா,.. இல்லை இங்கியே இருந்துடலாமான்னு ஒரு ஊஞ்சலாட்டம். ஊருக்கு போயிட்டா//

என் ஓட்டு தமிழ் நாட்டுக்கு

Easwaran said...

//சுசீந்திரம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அழகான, குளுமையான, அமைதியான இடம். சாயங்காலமானா தாணுமாலயர் கோயிலுக்கு போயிட்டு, குளத்தங்கரையில் நேரம் போக்கலாம். ஆனா மருத்துவ உதவி வேணும்ன்னா பக்கத்துல பெரிய ஆஸ்பத்திரி கிடையாது.//

பக்கத்துல பெரிய ஆஸ்பத்திரி கிடையாது - என்றால் அங்கே தாணுமாலயர் அருளால் அனைவரும் நலம் என்று அர்த்தம்.

அயோத்தியில் "திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்" - என்கிறார் கம்பர்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

@ இல்லன்னா.com சூப்பர் காமெடி... எப்படி இப்படி எல்லாம்... ட்ரெயின் போட்டு யோசிபீங்களா?....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

தராசுல அந்த தட்டுதான் கனம் கூடியதா இருக்கு. பார்ப்போம்..

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஈஸ்வரன்,

ஆஹா... கம்பரே வந்திருக்காரா!!!

தாணுமாலயர் அருள் நிறைந்தவர்தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

ஆமாம், அதுவும் சாதாரண கரிஎஞ்சின் ரயில் இல்லை,... எலக்ட்ரிக் ட்ரெயினாக்கும் :-))))

வருகைக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

////" @, இல்லைன்னா, .com ன்னு வை"ன்னு ஆலோசனை கொடுத்தேன்.//

காலேஜ்ல கம்ப்யூட்டர் சார் ஒருத்தர், அவர் பையனுக்கு “ப்ரொலாக்” (Prolog - software name) வச்சார். (பின்னாளில் அதை பிரகலாதன்னு மாத்திட்டார்னும் கேள்வி!!)

ரிடையர்மெண்ட் பத்தி இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல!! (இல்ல, நீங்க ரொம்ப சீனியர்தான? ;-)) )

படத்துல வீடும் அழகு; தெருவும் நல்லா அகலமா, அழகா இருக்கு.

இந்தப் பிளாக்கின் புது வீடும் அழகு!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அச்சச்சோ... நான் ப்ளாகுலகுக்குல இப்பத்தான் அடியெடுத்து வெச்சிருக்கேன். என்னைப்போய் சீனியர்ங்கிறீங்களே :-))))

புது வீட்டை ரசிச்சதுக்கு நன்றிங்க.

சந்தனமுல்லை said...

பெயர் வைக்கும் போர்ஷன் ரசிச்சேன்! குட்டிக்கு என்னோட வாழ்த்துகளூம் அன்பும்!

அப்புறம், புது வீடு நல்லா இருக்கு...பாக்க! :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.அவங்களுக்கு அனுப்பிட்டேன்.

புது வீடு ரசிச்சதுக்கு நன்றிப்பா.

LinkWithin

Related Posts with Thumbnails