திருக்குறளை எழுதியது யார்ன்னு கேட்டா 'அய்யன் திருவள்ளுவர்'ன்னு சின்னப்புள்ளை கூட சொல்லிடும். வெறுமனே 'திருவள்ளுவர்'ன்னு சொல்லக்கூடாதாமே. பெரிய இடத்து உத்தரவு... இங்கே கன்னியாகுமரியில் அவரோட சிலை இப்பத்தான் ஜனவரி 1, 2000-த்தில் நிறைவுபெற்று நாட்டுடைமையாக்கப்பட்டிருக்கு.
1979-ல் அன்றைய பாரதப்பிரதமராக இருந்த திரு. மொரார்ஜி தேசாய் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டது. அதுக்கப்புறம் பத்துவருஷம் கழிச்சு, 1989-ல் கலைஞர் அவர்கள் சிலைக்கான பணிகளை தொடங்கிவெச்சு, அடிக்கல் நாட்டினார். 1997-ல் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள் தலைமையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, இந்த திட்டம் முழுமையடைஞ்சது. அப்போதைய முதல்வரா இருந்த கலைஞரால், 31-12-99 மற்றும் 1-1-2000 ரெண்டு நாட்கள் சிலை திறப்புவிழா கொண்டாடப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கு.
விஸ்வரூபமோ!!!
இதில் பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களை குறிப்பதாகவும், சிலையின் உயரமான 95 அடி என்பது பொருள், மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களை குறிப்பதாகவும் எழுப்பப்பட்டுள்ளது. கூட்டுத்தொகையான 133 என்பது மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கைங்கிறது இப்போ தானாகவே புரிஞ்சிருக்குமே. சிலையின் மொத்த எடை 7000 டன்களாம்.இதுக்கான கிரானைட்கற்கள், சிறுதாமூர், பட்டுமலைக்குப்பம், அம்பாசமுத்திரம் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கு. இயற்கைச்சீற்றங்களால் பாதிக்கப்படாதபடி இதை உருவாக்கியிருக்கார் ஸ்தபதி ஐயா அவர்கள்.
சிலையில் சுவாரஸ்யமான விஷயங்களும் உண்டு. பதம் தூக்கி நடனமாடும் தில்லை நடராஜரைப்போலவே, இவரும் லேசா இடுப்பை ஒசிச்சு நிற்பார். இந்த ஒசிவை கொண்டுவருவதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு செஞ்சிருக்காங்க. முதல்ல, மரத்துலான ஒரு மாதிரிச்சிலையை செஞ்சு ஆராய்ச்சி நடத்தி, வாஸ்து சாஸ்திரப்படி, kayamadhyasutra ன்னு சொல்லப்படற சக்தியலையை கண்டுபிடிச்சிருக்காங்க. இயற்பியல்படி புவி ஈர்ப்புவிசைக்கோடுன்னும் சொல்லலாம். அப்புறம் அந்த ஆராய்ச்சி அறிவை உபயோகிச்சு கல்லால் கட்டியிருக்காங்க. சிலைமுழுசும் அதாவது உச்சிமுதல் பாதம்வரை வெற்றிடமா இருக்காம். ஆச்சரியமா இருக்குதில்லையா!!! விக்கியண்ணன் நிறைய தகவல்கள் கொடுத்தார்.
குடியரசுத்தலைவரா இருந்த டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் 22-9-2006 அன்னிக்கு இங்கே வருகை தந்தபோது, சிலையை பார்வையிட்டுவிட்டு, பத்து திருக்குறள்கள் இங்கே எழுதி வைக்கப்படவேண்டும்ன்னு பரிந்துரை செஞ்சுருக்கார். பன்னிரண்டு திருக்குறள்களை தானே தேர்வு செஞ்சு, அதுக்கு விளக்கமும் மொழிபெயர்ப்பும் செஞ்சுகொடுத்திருக்கார். அவை இங்கே கிரானைட் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளன. சிலைக்குப்போகும் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் தரைத்தளத்திலும், திருக்குறள்கள் கல்வெட்டுகளா இருக்கு. வருங்கால சந்ததிக்கு திருக்குறளையும் எழுதுனவரையும் அறிமுகப்படுத்திவைக்க நல்ல வாய்ப்பு. நூற்று நாற்பது படிகள் ஏறி, திருவள்ளுவரை தரிசிக்கப்போனோம். இடையிடையே சின்னச்சின்ன பலகணிகள் இருக்கறதால, அமைப்பின் உள்ளேயும் கடல்காத்து வீசுது.
ஹய்யோ!!!! மேல போய் பார்க்கும்போது அந்த பீடத்தோட உசரம்கூட நாம இல்லை. சுத்திலும் கடலும், இந்தப்பக்கம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரியின் காட்சியும், திமுதிமுன்னு கடல்காத்தும்... ஆஹா!! இந்த ஜென்மத்துக்கு இது போதும். வள்ளுவரோட ஆடை அலங்காரம் நல்ல நேர்த்தியா செதுக்கப்பட்டிருக்கு. அவரோட கால்பக்கத்துல உண்டியலோட வாய் மாதிரி ரெண்டு அமைப்பிருக்கு. உண்டியல்தானோன்னு ஒரு நிமிஷம் சந்தேகம் தோண வாய்ப்பிருக்கு. உண்மையில் அது காற்றுக்காக செய்யப்பட்ட ஏற்பாடு.
நிஜமா இது உண்டியல் இல்லைங்க...
..
படகுத்துறையும், ஊரின் ஒரு பகுதியும்..
வள்ளுவர் பாறையிலிருந்து... ஆனந்த இல்லம்.
குழந்தை,குட்டிகளோட வர்ற மக்களோட தேவைக்காக, இங்கே ஒரு coffee house இருக்கு. வெறும் காப்பி,டீ மட்டுமல்லாம எல்லா வகையான சிற்றுண்டிகளும் கிடைக்குது. பசியாத்திக்கிட்டு எவ்வளவு நேரம்ன்னாலும் இங்கியே சுத்திக்கிட்டிருக்கலாம். உண்மையை சொன்னா, இவ்வளவு அழகான இடத்தைவிட்டு கரைக்குப்போக மனசில்லை. ஆனா... இங்கே 'தாலி' இல்லையாமே... கரைக்குப்போனா 'அன்னபூர்ணா' தருவான்னுட்டு கிளம்பி, கரைக்கு வந்து அன்னபூர்ணாவுக்கு போனோம். இன்னும் ஊர்சுத்த வேண்டியிருக்கே!!.. தெம்பு வேணாமா...
30 comments:
ppadi veetku pora timela post publish panrathu thappu.. veeetla poi nithanama commentaren
நாங்கள் சென்றிருந்த சமயம் சிலைக்கு பராமரிப்பு வேலைகள் நடந்தபடியால் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. அருகே சென்று பார்க்காத குறையை நிவர்த்தி செய்து விட்டது பதிவு. மிகத் தெளிவான விவரணைகள். நன்றி அமைதிச்சாரல்.
சாப்பிட்டதும் தெம்பு பிறந்ததா:)?
மிகத் தெளிவான விவரணைகள் .. ama good post..
அய்யன் திருவள்ளுவர் நினைவு மண்டபத்தை குறித்த தங்களின் குறிப்புகள், ஆஹா.... ஓஹோ....... பேஷ், பேஷ். அப்படியே, அந்த அன்னபூர்ணா ஹோட்டல் சாப்பாடு மாதிரி இருந்தது. :-) (அந்த சாப்பாடு நல்லா இருந்துருக்கும் என்ற நம்பிக்கையில் சொல்லிட்டேன்.)
//வள்ளுவருக்கு இன்ஸ்பிரேஷன் யாரு //
நான் தான் சொன்னா நம்பவா போறீங்க
நானும் உங்க கூடவே சுத்தினா மாதிரி இருக்கு. அருமையான பகிர்வு.
படங்கள் , வர்ணிப்பு எப்பவும் போல் உங்கள் கைவண்ணத்தில் அதியற்புதம்.
ஆனால் தலைப்புக்கு விடை சொல்லலியே நீங்க
// இயற்கைச்சீற்றங்களால் பாதிக்கப்படாதபடி இதை உருவாக்கியிருக்கார் ஸ்தபதி ஐயா அவர்கள்.//
சுனாமியையே காலால் எட்டி உதச்சிட்டு அய்யன் திருவள்ளுவர் நிக்கிரார்னா, ஸ்தபதி ஐயாவோட திறமையை பாத்துக்குங்க!
நிச்சயமா, நாம் அவரை பாராட்டத்தான் வேண்டும்.
நல்ல பல தகவல்கள். நன்றி.
அழகா narrate பண்ணி இருக்கீங்க. நேர்ல பாத்த எபக்ட் வந்துருச்சு. புதுசா விசியங்களையும் சொல்லி இருக்கீங்க. சூப்பர்
நல்லதொரு வர்ணனை. நிறைய விஷயங்கள் செரிந்த ஒரு பதிவு.
வெங்கட் நாகராஜ்
மிக அற்புதமான இடுகை. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை குறித்த நேர்த்தியான, விளக்கமான இடுகைக்கு நன்றி.
ஸ்ரீ....
.'' உண்மையை சொன்னா, இவ்வளவு அழகான இடத்தைவிட்டு கரைக்குப்போக மனசில்லை. ஆனா... இங்கே 'தாலி' இல்லையாமே..'''
தாலி இல்லையாமே என்றதும் என்னவோ என்று நினைததேன்..பின்பு அன்னபூர்னாங்கவும் புரிந்தது....
வள்ளுவர் சிலைக்கு இவ்வள்வு காசு செலவுசெய்ததை வள்ளுவர் பெயரில் ஆஸ்பத்தி ஒன்றை நிருவினால் பொதுமக்கள் பயன் பெருவார்களே!!!!!!!!
வாங்க எல்.கே,
படிச்சு கருத்து சொன்னதுக்கு நன்றி. தலைப்புக்கான பதிலை இடுகையிலேயே சொல்லியிருக்கேனே. நடராஜரோட போஸ்தான் வள்ளுவருடைய சிலைக்கும் இன்ஸ்பிரேஷன்.
வருகைக்கு நன்றி.
வாங்க ராமலஷ்மி,
நானும் இப்போதுதான் முதல்முறையா கிட்டேபோய் பார்த்தேன். இதுக்கு முன்னால ரெண்டுதடவை கன்யாகுமரி போனேன். கரையிலேயே நின்னு பாத்துட்டு வரவேண்டியதாப்போச்சு.
தெம்பும், கூடவே தூக்கமும் வந்திச்சு :-))
நன்றிங்க.
வாங்க முத்துலெட்சுமி,
பாஸ்மார்க்குக்கு நன்றிங்க :-)
வாங்க சித்ரா,
' நம்பினோர் கைவிடப்படார்' நல்லாவே இருந்துச்சுங்க.
வரவுக்கு நன்றி.
வாங்க நசரேயன்,
துண்டு போட்டு தாண்டினப்புறம் நம்பாம இருப்போமா :-))))))))
வரவுக்கு நன்றிப்பா.
வாங்க தென்றல்,
நன்றிப்பா.
வாங்க அமைதி அப்பா,
ஸ்தபதி ஐயாவுடைய கைவண்ணத்தில் உருவானவற்றில், சென்னையிலிருக்கும் வள்ளுவர்கோட்டமும், பூம்புகாரிலிருக்கும் மாதவி சிலையும் குறிப்பிட்டு சொல்லலாம். இவருக்கு கொடுக்கப்பட்ட அவார்டுகளில் 'பத்மபூஷன்' முக்கியமானது.
வரவுக்கு நன்றிங்க.
வாங்க அப்பாவி,
விக்கியண்ணனும் கொஞ்சம் உதவி செஞ்சார். வள்ளுவரை நேரில் பாக்கும்போது ரொம்ப பிரமிப்பாத்தான் இருக்கு.
நன்றிங்க.
வாங்க நாகராஜ்,
நன்றிப்பா.
வாங்க ஸ்ரீ,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க மலர்,
வள்ளுவர் பெயரில் புதுசாத்தான் கட்டணுமா என்ன?.. ஏற்கனவே இருக்கிற ஆஸ்பத்திரிகளில் ஒண்ணுக்கு பேர்வெச்சிட்டா போச்சு.
நம்முடைய கலைகளையும்,நம் முன்னோர்களின் பெருமையையும் நிலைச்சு நிற்கச்செய்வது நம்ம கடமை இல்லியா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படங்கள், எழுத்து - சிறப்பாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
நானும் முதல்தடவை பாத்தப்போ வியந்துபோனேன்.
ஆனா, தெரியாத நிறைய விஷயங்களை உங்க பதிவில் தெரிஞ்சுகிட்டேன்.
நன்றி அமைதிச்சாரல்!
வாங்க ஜிஜி,
முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சுந்தரா,
கிட்டே போய் பார்க்கும்போது பிரமிப்பாத்தான் இருக்கு.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.
சாரல், நான் வள்ளுவர் சிலை பாத்ததில்லை. உங்களால பாத்த திருப்தியோட, தகவல்களும் தெரிஞ்சுகிட்டேன்ப்பா.
வாங்க ஹுஸைனம்மா,
ஏங்க,.. நாகர்கோவிலுக்கும் கன்னியாகுமரிக்கும் தூரம் அதிகமில்லையே. அடுத்ததடவை ஊருக்கு போகும்போது பாத்துட்டு வந்து சொல்லுங்க.
வரவுக்கு நன்றி.
Post a Comment