உனக்கான என்னை
நீயும்
எனக்கான உன்னை
நானும்
கண்டு கொண்டதில்
ஆரம்பித்தோம்
நமக்கான நாம்.
**********************
ஊடலுக்குப்பின்
காதல்
இது பழமொழி
ஊடலுக்குப்பின்
ஊடல்
இது
காதலர் மொழி
**********************
இன்னும்
எத்தனைமுறை வேண்டுமானாலும்
விழுவேன்
தாங்கிக்கொள்ள
உன் கரம் இருந்தால்.
**********************
தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.
**********************
உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.
**********************
காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.
28 comments:
::))
super.
கவிஞர் அமைதிசாரல் வாழ்க
//எனக்கான என்னை
நானும்//
எனக்கான உன்னை என வரனும்
:))
கவிதையில் சொல்லப்பட்ட அத்தனையும் நிஜம்
//காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.//
அதானே!!
arumai . naalla irukku. anaiththum kaviththuvam patukirathu. vaalththukkal.
வாங்க ஷங்கர்,
நன்றி. வரவுக்கும் கருத்துக்கும்.
வாங்க L.K.
தொண்டர்களை கூட்டலை, விழா நடத்தலை, அட்லீஸ்ட் பணமுடிப்பும் கொடுக்கலை.இதெல்லாம் இல்லாம என்ன பட்டமளிப்பு . முதல்ல இதெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க :-)))))
அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் டீச்சரம்மா... :-))))
திருத்திட்டேன். நன்றி.
சிரிப்பாணிக்கு நன்றி கண்மணி மேடம்.:-)
வாங்க தமிழ் உதயம்,
முதல் வரவுன்னு நினைக்கிறேன்.
தமிழே பாராட்டிடுச்சா!!!... ரொம்ப நன்றி.
வாங்க ஹுஸைனம்மா,
நன்றிங்க.
வாங்க மதுரை சரவணன்,
முதல்வரவுக்கு நன்றி.
பாராட்டுகளுக்கு நன்றி.
//தொண்டர்களை கூட்டலை, விழா நடத்தலை, அட்லீஸ்ட் பணமுடிப்பும் கொடுக்கலை.இதெல்லாம் இல்லாம என்ன பட்டமளிப்பு . முதல்ல இதெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க :-))))) //
அதுக்கு எல்லாம் நீங்க காசு தந்தா , ஏற்பாடு பண்ணிடலாம் (பாதி பேரு அப்படித்தானே பண்றாங்க) உங்க வசதி எப்படி :D:D:D:D:D:D:D
தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.
//
க்ளாஸ்...!
// (பாதி பேரு அப்படித்தானே பண்றாங்க)//
நான் மீதி பேரில் ஒருத்தியாக்கும் :-)))))
வாங்க வசந்த்,
நன்றிப்பா.
ஒத்துக்கிறோம் நீங்களும் ரவுடிதான்.. :))
கவிதை நல்லாயிருக்குங்க.
கவிதை நல்லாயிருக்குங்க.
காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.
அழகான வரிகள் சாரல்..
வாங்க துபாய் ராஜா,
ஜீப்புல இடம் கிடைச்சிடுச்சா... ஆஹா!!!
வாங்க அம்பிகா,
இரட்டிப்பு நன்றிப்பா...
வாங்க கண்ணகி,
பாராட்டுகளுக்கு நன்றிங்க.
அட...நீங்களும் கவிதாயினியா...கண்டுக்கொண்டதில் மகிழ்ச்சி1 :-)
வாங்க முல்லை,
இது சும்மா.. அப்பப்ப எடுக்கும் அவதாரம் :-))
//சந்தனமுல்லை said...
அட...நீங்களும் கவிதாயினியா...கண்டுக்கொண்டதில் மகிழ்ச்சி1 :-)
//
அல்லோ அவங்க எல்லாம் ரவுடியாகி ரெம்ப நாளாச்சி
Post a Comment