Thursday, 27 December 2012

முத்தான மூன்று..

நேற்றுத்தான் ஆரம்பித்தது போலிருக்கிறது. அதற்குள் மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ப்ளாக் எழுத ஆரம்பித்து. புத்தாண்டையும் ஏசுபிரான் பிறந்தநாளையும் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமல்ல. என் ப்ளாகுக்கும் இது கொண்டாட்டக் காலம்தான் :-) ஆகவே கேக் எடுங்கள்.. கொண்டாடுங்கள் :-))
பேஸ்புக்கில் நண்பர் மெர்வின் அன்டோ நடத்தி வரும் புகைப்படப் பிரியன் குழுவில் வாராவாரம் நடக்கும் போட்டிகளில் "ரயில் மற்றும் ரயில் பயணங்கள்" என்ற தலைப்பில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தப்படம் முத்துகள் பத்தில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாதமிருமுறை வெளிவரும் இன் அண்ட் அவுட் சென்னை இதழில் நான் எழுதிய அட்சிங்கு.. என்ற சிறுகதை வெளியாகியிருக்கிறது. இதழாளர்களுக்கு என் நன்றி உரித்தாகுக..
கேக்கைச் சுவைத்துக்கொண்டே ரயிலில் அமர்ந்து சிறுகதையை வாசியுங்கள் :-))

இத்தனை வருடங்களாக என் எழுத்தை வாசித்துப் பின்னூட்டி உற்சாகமும் ஆதரவும் கொடுத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

40 comments:

இராஜராஜேஸ்வரி said...

ப்ளாகுக்கும் இது கொண்டாட்டக் காலம்தான் :-) ஆகவே கேக் எடுங்கள்.. கொண்டாடுங்கள் :

இனிய வாழ்த்துகள் ..
பிளாக்கின் பிறந்த நாளுக்கு ..

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் இரண்டு வருடங்கள் தனா. வெகு நாள் பழ்கிய நினைவு. வாழ்த்துகள் அனைத்துக்கும்.

வல்லிசிம்ஹன் said...

மன்னிக்கணும்பா. மூன்று வருடங்கள்+பிறந்தநாள் வாழ்த்துகள்.:)

Madhu Mathi said...

முதலில் வாழ்த்துகள்.. ரயில் புகைப்படம் கவர்ந்தது.

புலவர் சா இராமாநுசம் said...

மூன்றாண்டுகள், பல்லாண்டுகளாகத் தொடர வாழ்த்துக்கள்!

Lakshmi said...

சாந்தி வாழ்த்துகள், மேலும் மேலும் வளற் வாழ்த்துகள்

ஸாதிகா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன் அண்ட் அவுட்டில் சிறுகதை வெளிவந்தமைக்கும் வாழ்த்துக்கள்.கதையை பெரிது பண்ணி வாசிக்க இயல்வில்லை:(

NADINARAYANAN MANI said...

அருமை ..வாழ்த்துக்கள்

RVS said...

முக்கனியான மூன்று வருடங்களுக்கு வாழ்த்துகள் மேடம்.

அட்சிங்குவின் டெக்ஸ்ட் வர்ஷன் ப்ளாகில் போடுங்களேன். படித்து இன்புறுகிறோம். :-)

மோகன் குமார் said...

Congrats. By the way, I also started blogging from 2009 only

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துகள் சாந்தி! பொருத்தமான பகிர்வு. எழுத்துத் துறையிலும், புகைப்படத் துறையிலும் இன்னும் பல உயரங்கள் தொடவும் நல்வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் அய்யா.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் அய்யா.

பால கணேஷ் said...

ஆஹா... நீங்கள் தந்திருக்கும் சாக்லேட் கேக் வெகு சுவை. ரயில் புகைப்படம் கண்களில் ஒட்டிக் கொண்டது. மூன்றாம் ஆண்டுத் துவக்கத்துக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் இன்னும் பலப்பல ஆண்டு எங்களுடன் நீங்கள் தொடர வேண்டும் என்ற கோரிக்கையும்! உங்களின் சிறுகதையைத் தனிப் பதிவாக வெளியிடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோளும் சாந்தி மேடம்!

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் சாந்தி.தொடர்ந்து அசத்துங்க..

புதுகைத் தென்றல் said...

எனக்குப்பிடித்த ரயில்பயணம். சுவைக்க கேக், படிக்க கதை. நல்லா கொடுத்தீங்க ட்ரீட். நன்றீஸ்.

வாழ்த்துக்களும்

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

ப்ளாக் ஆரம்பிச்சு குறுகிய காலம்தான் ஆச்சுன்னாலும் உங்களோடெல்லாம் ஏதோ ரொம்ப நாள் பழகிய மாதிரிதான் எனக்கும் தோணுது :-))

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க மதுமதி,

வாழ்த்துகளுக்கும் ரசித்தமைக்கும் ரொம்ப நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க புலவர் ஐயா,

உங்க வாக்குப் பலிக்கணும்ன்னு இறைவனை வேண்டிக்கறேன் :-)

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

பிறந்தநாள் பரிசா சிங்கப்பூர்லேர்ந்து ஒரு சிங்கத்தைக் கொண்டாந்துருக்கலாம் இல்லே,.. :-))))))))

ரொம்ப நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகாக்கா,

வாழ்த்துகளுக்கு நன்றிகள்..

ரைட் க்ளிக்கி புது ஜன்னலில் திறந்தால் பெரூசு படுத்தி வாசிக்க முடியும் :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க மணி,

வாழ்த்துகளுக்கும் முதல் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

டெக்ஸ்ட் வெர்ஷன் ஏற்கனவே ப்ளாகில் இருக்கு. சுட்டியைப் பிடிச்சுட்டுப் போனீங்கன்னா கிடைச்சுரும். இல்லைன்னா, ஸாதிகாக்காவுக்கு சொல்லியிருக்கேன் பாருங்க,.. அந்த வழியைக் கடைப்பிடிச்சுப் பாருங்க. புது ஜன்னல் வழியே வாசிக்கலாம் சிறுகதையை :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்பான வாழ்த்துகள்.

ஹேமா said...

என் அன்பு வாழ்த்தும் சாரல் !

ஸ்ரீராம். said...

புல்வெளியின் படம் மிக அழகு.

ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைத்து, 'ஆமாம், ஆமாம்' போட வைக்கின்றன!

அட்சிங்கு நெகிழ்வான கதையைப் படித்து நெகிழ்ந்தேன்.

கோமதி அரசு said...

மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ப்ளாக் எழுத ஆரம்பித்து. புத்தாண்டையும் ஏசுபிரான் பிறந்தநாளையும் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமல்ல. என் ப்ளாகுக்கும் இது கொண்டாட்டக் காலம்தான் :-) ஆகவே கேக் எடுங்கள்.. கொண்டாடுங்கள் :-))//உங்களை வாழ்த்தி கேக்கை சுவைத்து கொண்டாடி விட்டேன்.

கேக்கைச் சுவைத்துக்கொண்டே ரயிலில் அமர்ந்து சிறுகதையை வாசியுங்கள் :-))//

வாசித்தேன். கண்கள் கலங்கி பெருமூச்சு வந்த்து.


மாதமிருமுறை வெளிவரும் இன் அண்ட் அவுட் சென்னை இதழில் நான் எழுதிய அட்சிங்கு.. என்ற சிறுகதை //
உங்களுக்கு பாரட்டுக்கள்.

ரயில் படத்திற்கும் வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் சிகரம் தொடுங்கள்.

மனோ சாமிநாதன் said...

புகைப்படம் பரிசு பெற்றதற்கும் சிறு கதை வெளியானதற்கும் வலைப்பூ தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதற்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! கேக்கின் அழகு உண்மையிலேயே அசத்துகிறது!

அமைதிச்சாரல் said...

வாங்க மோகன் குமார்,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க கரந்தை ஜெயகுமார்,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க பாலகணேஷ்,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி சகோதரரே :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

ரயில் பயணத்தை நல்லா எஞ்சாய் செஞ்சீங்களா :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேம்ஸ்,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

வாசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க மனோம்மா,

சாக்லெட் கேக் பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கும் வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)

LinkWithin

Related Posts with Thumbnails