Saturday, 29 December 2012

நட்சத்திரங்களின் வழிநடத்தல்..

காரியங்களைச் சாதித்துக் கொள்ளும்போது மட்டுமல்ல எல்லாப் பொழுதுகளிலும் செலுத்தப்படுவதே அன்பு.

வலியைவிட வலிக்குமே என்ற உணர்வுதான் அதிகமான வலியைத்தருகிறது.

இராக்கால ஒற்றையடிப்பாதையாயினும் நட்சத்திரங்களின் கீற்றொளியே போதுமானதாகி விடுகிறது தன்னம்பிக்கை உடையவனுக்கு.

நாம் தேர்ந்தெடுப்பவையும் நம்மைத்தேர்ந்தெடுப்பவையும் நம் வாழ்வின் போக்கைத் தேர்ந்தெடுக்கின்றன.

சினம் ஒரு நெருப்பு என்பது பேருண்மை என்று ஒத்துக்கொள்கிறோம், சூடு பட்டபின்.

ஏதாவதொரு நல்ல நோக்கத்துடன் வாழ்ந்து அதில் வெற்றியடைவதே நம் வாழ்வியல் நோக்கமாக இருக்கட்டும்.

கையிலிருப்பதை விட கை நழுவிச்சென்று விட்டவற்றைப்பற்றியே வருத்தப்பட்டு, இறுதியில் இருப்பதுவும் நழுவுவதை அறியாதவர்களாகிறோம்.

சின்னப்பூக்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் பூங்கொத்தாய் மணக்கிறது வாழ்க்கை சின்னச்சின்ன முடிச்சுகளில் ஒளிந்திருக்கும் சந்தோஷங்களால்.

ஆடிக்கொண்டேயிருக்கிறது தராசுமுள் சில சமயங்களில், மனசாட்சிக்கும் செயலுக்கும் இடையில்.

நம்மை மீறிச்சென்று விட்ட விஷயங்களைப்பற்றி வீணே கவலைப்படுவதை விட அதை எவ்விதத்திலாவது சரி செய்ய இயலுமாவென்று முயலுவது மேலானது.

27 comments:

semmalai akash said...

மிக அருமையான சிந்தனை நண்பரே!

வல்லிசிம்ஹன் said...

கையிலிருப்பதை விட கை நழுவிச்சென்று விட்டவற்றைப்பற்றியே வருத்தப்பட்டு, இறுதியில் இருப்பதுவும் நழுவுவதை அறியாதவர்களாகிறோம்.//
அருமை. சாந்தி.அத்தனயும் முத்துக்கள்.

Ramani said...

மிக மிக அருமையான கருத்து
புத்தாண்டுச் செய்தியாக எடுத்துக் கொண்டேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 2

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துப் பொன்மொழிகளும் அருமையாக உள்ளன.

இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தவை:

//ஆடிக்கொண்டேயிருக்கிறது தராசுமுள் சில சமயங்களில், மனசாட்சிக்கும் செயலுக்கும் இடையில்.//

//கையிலிருப்பதை விட கை நழுவிச்சென்று விட்டவற்றைப்பற்றியே வருத்தப்பட்டு, இறுதியில் இருப்பதுவும் நழுவுவதை அறியாதவர்களாகிறோம்.//

அருமையான இந்தப்பதிவு கொடுத்துள்ள தங்களுக்கு சூடான சுவையான அடை காத்திருக்கிறது.

அது ஆறும் முன்பு ரஸித்து சுவைத்து கருத்தளிக்க வாருங்கள்.

gopu1949.blogspot.in

அன்புடன் VGK

Lakshmi said...

நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

சிந்தனை முத்துக்கள் அத்தனையும் நன்று.

ஹேமா said...

எல்லாச் சிந்தனைகளும் வாழ்வியலோடு பொருந்துகிறது சாரல் !

ஸ்ரீராம். said...

புல்வெளியின் படம் மிக அழகு.

ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைத்து, 'ஆமாம், ஆமாம்' போட வைக்கின்றன!

கோமதி அரசு said...

நம்மை மீறிச்சென்று விட்ட விஷயங்களைப்பற்றி வீணே கவலைப்படுவதை விட அதை எவ்விதத்திலாவது சரி செய்ய இயலுமாவென்று முயலுவது மேலானது.//

உண்மைதான் சாந்தி.
போனவை போகட்டும் இனியாவது அப்படி நடக்காமல் என்ன் செய்யலாம் என யோசிப்போம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அன்பு பற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

Kanchana Radhakrishnan said...

நல்ல கருத்துகள். பகிர்வுக்கு நன்ற

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

அமைதிச்சாரல் said...

வாங்க செம்மலை ஆகாஷ்,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

சூடான அடையைப் பரிமாறியமைக்கு நன்றி.

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

புல்வெளியை ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

சரியாச்சொன்னீங்க.

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க காஞ்சனா,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க அவர்கள் உண்மைகள்,

ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி :-)

அருணா செல்வம் said...

அருமையான கருத்துக்கள் அமைதிச்சாரல்.

நிலாமகள் said...

மனக்கலக்கமும் மனக்குழப்பமும் அமாவாசை இருளாய் ஆக்கிரமிக்கும் பொழுதில் நம்பிக்கையொளியாய் நட்சத்திரங்களின் வெளிச்சம்.

LinkWithin

Related Posts with Thumbnails