Tuesday, 16 February 2010

தைப்பூசமும்... ஆரெம்கேவியும்..


இன்னிக்கு காலை விமானத்தில் ரங்க்ஸும், பெண்ணும் வர்றதா ஏற்பாடு. நாலரைக்கெல்லாம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேர்ந்துட்டாங்க. ஃப்ரீ பெய்டு டாக்ஸி மூலம் வந்துடுவாங்க.ரெண்டே நாள்தான் ஊரில் தங்கல்ன்னாலும், ப்ளான் மட்டும் எக்கச்சக்கமா போட்டு வெச்சாச்சு. இதில் சில இடங்கள் விட்டுபோனது வேறு விஷயம்.

பையரை பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், ஓட்டப்பிடாரம், குற்றாலம் எல்லாம் கூட்டிப்போவதா நினைச்சிருந்தேன். நெனச்சதெல்லாமா நடக்குது.... இதுவும் நடக்கலை. சின்னப்புள்ளைல சொன்ன கதைகளை வெச்சு, பையர் அதெல்லாம் பாக்கணும்ன்னு ஆர்வமா இருந்தார். அடுத்த தடவை போனா ஆச்சு...

இன்றைய நிகழ்ச்சி நிரலில்,முதல்ல விடு ஜூட்..... வாசுதேவ நல்லூருக்கு.உறவினரை பாத்துட்டு அப்படியே ,திருநெல்வேலிக்கு வந்து கொஞ்சம் ஷாப்பிங்கும் செய்யணும்.

ஒரு வாரம் முன்னாடிதான் மழை பெஞ்சிருந்ததால் வெக்கை ரொம்ப இல்லை. வழியெங்கும் தைப்பூசத்திற்காக நடந்தே செல்லும் பக்தர்கள் கூட்டம்.கூடவே ஒரு வண்டியில் அவங்களுக்கு வேணுங்கிற சாப்பாடு,செஞ்சு கொடுக்கிற ஆட்கள் இன்னும் தேவையான பொருட்கள் போகுது.வண்டியில போறவங்க முன்னாடியே போய் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சமைச்சு வெச்சிகிட்டு காத்திருப்பாங்க. நடைபயணம் போற ஆட்கள் வந்ததும் சாப்பிட்டுட்டு கொஞ்சம் ஓய்வும் எடுத்துகிட்டு கிளம்பிடுவாங்க.இதேமாதிரி இங்கேயும் ஷிர்டி சாயிபாபாவை தரிசிக்க நடைப்பயணம் போவாங்க.சில பேர் பால்கி அதாவது பல்லக்கில் சாயிபாபாவின் உருவப்படமோ,சிலையோ வெச்சு எடுத்துகிட்டு போவாங்க. ஊரூருக்கு ஒரே வழக்கம்தான் போலிருக்கு.

கந்தனுக்கு வேல்..வேல்..
அங்கங்க தாகத்தை தணிக்க நல்ல இளநீர் கிடைக்குது. நகரங்களில் வரும் காஞ்சுபோன காயா இல்லாம 'இள'நீரா இருக்குது.பொதுவா தள்ளுவண்டிகளில் குவிச்சி வெச்சிருப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். இங்க வித்தியாசமா தூக்குல போட்டிருக்காங்க. நல்ல ஒரு ஐடியா.. தரையில வெச்சா அப்பிடியே வளர்ந்து மரமாயிட்டா என்னாகிறது.!!!!.வாழைப்பழத்தை பாதுகாக்க கிராமங்களில் ஒரு டெக்னிக் செய்வாங்க. முதல்ல துணி காயப்போடுற மாதிரி நீளமா ஒரு கொடி கட்டுவாங்க, அதுல வாழைப்பழத்தை சீப்பு சீப்பா வெட்டி ,கோர்த்து வெச்சிடுவாங்க. பார்க்க, கொடியில பழத்தை காயப்போட்டது மாதிரி இருக்கும், ரொம்ப நாள் அழுகிப்போகாம இருக்கும்.

எளனீ... எளனீ.

திருநெல்வேலிக்கு போய் ஆரெம்கேவிக்கு போகாம வந்தா யாத்திரை பூர்த்தியாகாதுன்னு, புளுகியபுராணம் சொல்லுது. இல்லையின்னா... பரிகாரமா 51 புடவை எடுத்து தங்ஸம்மனுக்கு படையல் வெச்சாகணுமாம். எதுக்கு வம்புன்னு நுழைஞ்சாச்சு.புத்தம்புதுசா இருக்குது. கடை. நெல்லை டவுனிலிருந்து,பாளை வரும் திருவனந்தபுரம் ரோட்டில் ஆச்சீஸ் உணவகம் எதிரே இருக்குது.இது அவுங்க சொந்தக்கட்டிடம். கோவிலுக்கு பக்கத்தில் இருப்பது வாடகைக்கட்டிடம். அது ஆகிவந்த கடை..பக்கத்து கிராமங்களிலிருந்து வருபவர்களுக்கு அதுதான் சவுகரியமானது. அதனால இன்னும் குறைஞ்சது இருபது வருடங்களுக்காவது அங்கதான் இருக்குமாம்.

கடையின் முகப்புத்தோற்றம்

க்ரவுண்ட் ஃப்ளோர் நீங்கலாக,மூன்றுமாடிக்கட்டிடம்.க்ரவுண்ட் ஃப்ளோரில் நுழைவதற்கு முன் சோதனை மேல் சோதனை. கைப்பை, மெட்டல் டிடெக்டர் சோதனை எல்லாம் தாண்ட வேண்டும் . மும்பையில் இது வழக்கமான ஒன்று. வெற்றி பெற்றபின் வீரநடை போட்டு உள்ளே நுழைந்தால் நேர் எதிர்க்க இடதுபக்கம் வாட்ச்சுகள்,வலதுபக்கம் பில்போடுமிடம். நடுவில் காஸ்மெடிக் சாதனங்கள்.மற்றும் இமிடேஷன் நகைகள். பில்டிங்கை குறுக்குவாக்கில் ரெண்டா பிரிச்சு நடுவில் லிஃப்டும் படிக்கட்டும். அதாவது முன்பாதி, பின்பாதின்னு வெச்சுக்கலாம்.பின்பாதியில் காட்டன் வகைகள் உள்ளாடைகள் இத்யாதி.

முதல் மாடியில் தான் பட்டுப்புடவைகளின் வாண வேடிக்கை.படியேறி நுழைஞ்சதும்,நமக்கு இடதுபக்கம் பட்டுப்புடவைகள் செக்ஷன். இடதுபக்கம்,சல்வார்,சுடிதார்,குர்த்தி வகைகள்.பட்டுப்பாவாடை ஒன்னு எடுத்துக்கிட்டு பில்லு போடப்போனா... ஹை... பட்டு நெசவு செய்யும் தறி ஒன்னு பார்வைக்கு வெச்சிருக்காங்க. கேட்டுக்கிட்டா நெசவு செய்தும் காட்டுவாங்களாம். ஏற்கனவே காஞ்சிபுரத்தில் செய்முறையை பாத்துட்டதால் இப்போ வேண்டாம்.

பட்டுச்சேலை இங்கேதான் நெய்யப்படுகிறது.

இன்னும் என்னென்ன அதிசயங்கள் இருக்குன்னு பாத்துடலாம்ன்னு,பில்டிங் முழுக்க சுத்தியாச்சு. ரெண்டாம் மாடியில் இடதுபக்கம் ஆண்களுக்கானது. அந்தப்பக்கம் எட்டிக்கூட பாக்கலை. வலதுபக்கமும் என்னன்னவோ இருக்கு... யாருக்கு வேணும்.வேறென்ன.. சன் க்ளாஸஸ், அக்ஸசரீஸ்.. அவ்வளவுதானே...

ஆரெம்கேவியில் சிந்தடிக் புடவைகளும், செயற்கைபட்டுகளும் நிறைய கிடக்குது.ஒவ்வொரு தளத்திலும், சீலிங்கில் இருக்கும் பெயிண்டிங் அவ்வளவு அழகு. பட்டுப்புடவைகள் இருக்கும் தளத்தில் அவ்வளவு பிரம்மாண்டமான ஓவியம் இருக்கு. நிலைக்கண்ணாடிகளும் அதைச்சுற்றி இழைத்திருக்கும் வேலைப்பாடுகளும் அரண்மனையில் இருப்பதைப்போல் இருக்கு.

மூன்றாம் தளம் இடதுபக்கம் குழந்தைகளுக்கானது. தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சின்னப்பசங்களை இங்க கூட்டிட்டு வருமுன் கொஞ்சம் யோசிச்சுத்தான் கூட்டி வரணும்.அவங்களுக்கானது அவ்வளவு இருக்கு. வலதுபக்கம் வீட்டு உபயோகப்பொருட்கள், பரிசுப்பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள்,பள்ளி உபகரணங்கள். இன்னும் நிறைய இருக்..... இதுவும் இருக்கா!!!! நம்ப முடியவில்லை!!!...ல்லை!!!!.

புத்தகண்கள்...ஆஹா!!!! என்னல்லாம் இருக்கு... கிழக்குப்பதிப்பகம், காலச்சுவடு, விகடன் பதிப்பகம் இப்'போதைக்கு'. ஏற்கனவே தொடர்கதையா படிச்சதுதான்னாலும் ,கள்ளிக்காட்டையும், கருவாச்சியையும் அள்ளியாச்சு. 'புலி நகக்கொன்றை' ரொம்ப நாள் தேடுனது. அதையும் எடுத்தாச்சு. இன்னும் படிக்கல்லை. கலெக்ஷன் நிறைய இருக்கு. ரெண்டு மூணா வாங்கிப்போகணும்.

சுட்டிப்பசங்களுக்காக ஒரு அழகான ஏற்பாடு இருக்கு. உங்க குழந்தைகளை தேவதையாகவோ.. இல்லை வாலுப்பசங்களை கார்ட்டூனாகவோ மாத்தி அதை போட்டோவும் எடுத்து வெச்சிக்கலாம் எப்படியா!! ... இப்படித்தான்.

நான் எப்படி இருக்கேன்!!!!

இவ்வளவு நேரம் சுத்தினதுல காலு வலி எடுத்திருக்கும் பசியும் லேசா ஆரம்பிச்சிருக்கும். வெஜ் வேணுங்கிறவங்க இடதுபக்கம் ஹோட்டல் ராம் பிரசாத் போங்க. நான்வெஜ் பிரியர்கள் எதுக்காப்புல இருக்க ஆச்சீஸ்க்கு போயிட்டு வாங்க. அடுத்தாப்புல மன்னார் வளைகுடா போலாம். தெம்பு வேணுமில்ல!!!!
24 comments:

சந்தனமுல்லை said...

நல்ல நகர்வலம். ப்ரெண்ட் கல்யாணத்துக்கு ஒரு முறை திருநெல்வேலி வந்திருக்கேன்...ஆனா ரொம்பல்லாம் சுத்த முடியலை...கோயில் அப்புறம் அல்வா - அவங்க உறவினர் வீடு - ரிட்டர்ன்! :-)

புதுகைத் தென்றல் said...

ரவுண்ட் அப் கூட்டிகிட்டு போயிட்டு சாப்பிட மட்டும் நீங்களே போங்கன்னு சொல்வது என்ன நியாயம்?? அப்புறமா அதை கவனிக்கலாம். ஆரெம்கேவியில் உங்க கலெக்‌ஷன் எம்புட்டு???

என் பொண்ணு சென்னை ஆரம்கேவியிலேர்ந்து லாங்க் கவுன் தன் பர்த்டேவுக்கு எடுத்துகிட்டா. பில்லை பாத்து வாய் பிளந்தேன்.

LK said...

//அந்தப்பக்கம் எட்டிக்கூட பாக்கலை.//

paavam rangss :D

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா சுத்திக்காமிச்சிருக்கீங்க லீவு லிஸ்ட்ல சேத்துக்கலாம்..

துபாய் ராஜா said...

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா... :))

ம்ம்ம்ம்.இப்போதைக்கு பெருமூச்சு மட்டும்தான்...சீக்கிரம் ஊருக்கு போகணும்பா... :((

சசிகுமார் said...

நல்ல பகிர்வு நண்பரே , தொடர்ந்து எழுத என் உளமார்ந்த வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

வாங்க முல்லை,

இந்த சம்மருக்கு முடிஞ்சா போயிட்டு வாங்க.. பப்பு நிச்சயம் enjoy செய்வாள்.

அமைதிச்சாரல் said...

ஒரு தென்றல் புயலாய் மாறியதே!!!!!..

அது ஒன்னுமில்லைப்பா.. நா மட்டும் சாப்பிட்டா உங்க வயிறு நிறையுமா!!!

சிம்பிளான செயற்கை வெண்பட்டு ஒன்னு.இயற்கை பட்டுகளிலிருந்து கொஞ்சம் எட்டி நிற்கிற ஆள் நான்.ஜரிகாட்டன் வகைகள் தான் ஃபேவரிட்.

அமைதிச்சாரல் said...

வாங்க L.K.

சிரிப்பாணி பொங்குது!!!!

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

சீசன் இருந்தா, முடிஞ்சா, குத்தாலமும் போயிட்டு வாங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க துபாய் ராஜா,

திக்விஜயம் சீக்கிரமே ஆகட்டும். :-))

அமைதிச்சாரல் said...

வாங்க சசிகுமார்,

முதல்வரவுக்கு நன்றி.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

இயற்கை பட்டுகளிலிருந்து கொஞ்சம் எட்டி நிற்கிற ஆள் நான்.//

sameblood. கல்யாணத்தின் போதே பட்டு கட்டச் சொல்லக்கூடாதுன்னு கண்டீஷன் போட்டு ஒத்துக்கிடுறவர் தான் மாப்பிள்ளைன்னு வீட்டுல தகராறு செஞ்சு சாதிச்சிட்டோம்ல. :))

கண்மணி/kanmani said...

ஆத்தி என்ன எடுத்தீங்கன்னு சொல்லலையே
ஆரெம்கேவி போயிட்டு போத்தீஸ் போகலைன்னாலும் சாமி குத்தம் தெரியுமோ

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

படம், பதிவு = சூப்பர்..:)

பிரியமுடன்...வசந்த் said...

வாசுதேவநல்லூர் குலசாமி கோவிலும் இந்த வருஷம் மிஸ்ஸிங் சே...

இவங்க சாரல் எல்லாத்தையும் ஞாபகப்படுத்துறீங்க...

கோவிலுக்கு போகும்ப்போது போகுற சங்கரன் கோவில்,குற்றாலம்,அம்புட்டும் மிஸ்ஸ்...

அர்த்தந்நாரீஸ்வரர் கோவில் போனீங்களா சாரல் மேடம்...?

ஆரெம்கேவி கேள்விபட்டுருக்கேன் போனதில்ல இம்புட்டு விஷயம் கவனிச்சுருக்கீங்க...

அமைதிச்சாரல் said...

வாங்க கண்மணி,

தென்றலுக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க.

போத்திஸில் அடுத்த தடவை பொங்க வெச்சிடலாம்.

அமைதிச்சாரல் said...

வாங்க ஷங்கர்,
நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

வாசுதேவ நல்லூரில் குலசாமியா!!!

அர்த்த நாரீஸ்வரர் கோவில் இனிமேதான் விசாரிக்கணும்.

அமைதிச்சாரல் said...

வாங்க புதுகைத்தென்றல்,

தகராறு செய்ய முடிஞ்சதில்லைப்பா...

என்னளவில் தவிர்த்துடுவேன். அன்பளிப்பா வர்றதை பெரியவங்க மனசுக்காக ஏத்துக்கிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கு.

மாதவராஜ் said...

ம்..... எங்களைத் தாண்டித்தான் வந்து போயிருக்கீங்க... :-)))))))

அமைதிச்சாரல் said...

வாங்க மாதவராஜ் அண்ணா,

இதில் உள்குத்து எதுவுமில்லையே :-))))

நானானி said...

//ஆச்சீஸ் உணவகம் எதிரே இருக்குது//

நல்லாருக்கு...ஆரஎம்கேவிக்கு லாண்ட்மார்க் சொல்ல இப்படியா?

என்னே! ஆரம்கேவிக்கு வந்த சோதனை!!!

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

இன்னிக்கு வெளியே சாப்பிட்டுட்டு போலாமேன்னு ரங்க்ஸை கூட்டிட்டு போயிட்டு, நைஸா எதிர்ப்பக்கம் நுழைஞ்சுடலாமே.. நேரடியா 'அங்கே' கூட்டிட்டு போனா பார்ட்டி எஸ்கேப்பாக ச்சான்ஸ் இருக்கு :-))))

LinkWithin

Related Posts with Thumbnails