Thursday, 4 February 2010

ராஜ்தானியில் முதல் நாள்.

பயணங்கள் வாழ்வின் சுவாரஸ்யத்தை கொஞ்சம் கூட்டத்தான் செய்யுது.. அதுவும் சொந்தங்களை பாக்கப்போறோம்னா இன்னும் கூடுதல்.சீக்கிரம் போகணும்னு நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜ்தானியில் டிக்கெட் புக் செஞ்சாச்சு.. ஃப்ளைட் போர்.. வேணாமுன்னு முதல்லேயே முடிவு செஞ்சாச்சு. மேலும் கொங்கண் ரெயில் பாதை எப்படி இருக்குமுன்னும் பாக்கணுமே...புறப்படுமிடம், சேருமிடம் ரெண்டையும் சேத்து மொத்தம் பதினேழே ஸ்டாப்பிங்குகள்தான்.இது வாரத்தில் மூணு நாட்கள் தில்லியிலிருந்து புறப்படுகிறது.

காலை அஞ்சு மணி அஞ்சு நிமிஷத்துக்கு ரயில் பன்வெல் வந்து சேருமாம். நாங்க எங்க வழக்கப்படி முக்கால் மணி நேரம் முன்னாடியே ஸ்டேஷன் போயாச்சு.வெயிட் பண்ணும்போது தூக்கமா வருது.. பின்னே!.. முதல் நாள் தூங்கல்லை.. 'குச்..குச்.. ஹோத்தா..ஹை.' படம் பாத்தா எப்பிடி தூங்கிறது.ரெண்டு நாள் நீங்க இல்லாம இருக்கப்போறேனே.. அதுக்கு காம்பன்சேஷனா இப்போ எங்கூட படம் பாருங்க'ன்னு பொண்ணு கூப்பிட்டா மறுக்க மனசு வருமா..அதுவும் 'கஜோல்,ஷாருக்' ஜோடி.

ஒரு வழியா பத்து நிமிஷம் லேட்டா ட்ரெயின் வந்தது. பெட்டிகள் வந்து நிற்கும்போது அதுக்கு நேரா ப்ளாட்பார்மில் இருக்கும் டிஸ்ப்ளேயில் எந்த பெட்டி எங்கே நிக்குதுன்னு டிஜிட்டல் நம்பரில் காண்பிக்கும். பார்த்தவரையில் நிறைய ஸ்டேஷங்களில் அது வேலை செய்வதே இல்லை. புதுசா வர்றவங்க பெட்டி எங்க இருக்குன்னு தெரியாம லக்கேஜோட ஓடறது நடக்குது. இன்ஃபர்மேஷனில் முதலிலேயே விசாரிச்சிகிட்டா இந்த டென்ஷனை தவிர்க்கலாம்.

எடுத்ததுமே, சும்மா நாலுகால் பாய்ச்சலில் ஓடுது வண்டி. பத்து நிமிஷத்தில் டீ..வந்தது. விமானத்தில் இருப்பதைப்போல் சர்வீஸ் இருக்குமுன்னு ரங்க்ஸ் சொன்னது சரிதான். ஒரு ட்ரேயில் ரெண்டு மில்க்பவுடர் சாஷேக்கள்,ரெண்டு சர்க்கரைப்பொட்டலங்கள்,ரெண்டு டீ பவுடர் பாக்கெட்டுகள்,கடிச்சிக்க பிஸ்கெட், ஒரு மின்ட்,ஒரு ஃப்ளாஸ்கில் கொதிக்கும் வென்னீர். இவ்வளவும் வந்தது. டீ நாமதான் போட்டுக்கணும்.ஆறிப்போச்சுன்னா சூடாக்க அடுப்பும் தருவாங்களான்னு கேட்டுப்பாக்கணும்.

சாப்பாட்டை பொறுத்தவரை ராஜ்தானியில் கவலை இல்லை. புக் செய்யும் போதே வெஜ்ஜா.. நான்வெஜ்ஜா.. என்று குறித்து கொடுத்து விடலாம். வேளாவேளைக்கு, வந்து விடும்.சாப்பாட்டின் இடையில் ஸ்னாக்ஸ், சூப்,கூல்டிரிங்க்ஸ் எல்லாம் உண்டு. தண்ணீர் பாட்டில் அவுங்களே கொடுத்திடுவாங்க.சாப்பாட்டுக்கும் சேர்த்துதான் டிக்கெட் விலை.
இந்த ரயில் முழுக்கவும் குளிரூட்டப்பட்டது. காலையில் ந்யூஸ் பேப்பர் சப்ளையும் உண்டு.சர்வீசும் நல்லாவே இருக்கு. ஆரிஃப் சுறுசுறுப்பா, பயணிகள் தூங்கிகிட்டிருந்தாகூட எழுப்பி சாப்பாடு கொடுத்திட்டு போறார்.ராஜ்தானியின் மெனு

திருவனந்தபுரம் வரை சென்று அங்கிருந்து பேக்கேஜ் டூரில் சுற்றிப்பார்க்க வந்திருந்த ஜோடி எங்க எதிர் சீட்டில் இருந்தாங்க. வி.ஆர். எஸ். வாங்கி ரெண்டு வருஷமாச்சாம். எங்க வேலையாயிருந்தீங்கன்னு கேட்டேன். இந்திய கிரிக்கெட் அணியில் அம்ப்பயரா இருந்தாராம். பேரு..'சந்திரசேகர் மோஹித்தே'. இண்டர் நேஷனல் லெவல் இல்லையாம். இந்தியாவுக்குள் மட்டும்தானாம். Mrs.மோஹித்தே இல்லத்தரசி. கோவா வரை வந்திருக்காங்களாம். தெற்கே வந்ததில்லையாம். அவுங்களுக்காகத்தான் இந்த சுற்றுலாவே. மோஹித்தே தெற்கைப்பற்றி விசாரிக்க ஆரம்பிச்சதும், உற்சாகமா தெரிஞ்ச வரை விம் போட்டு விளக்க ஆரம்பிச்சேன்.

மேடம்,' புடவை எங்கே நல்லதா கிடைக்கும்,ஸ்பைசஸ் எங்கே மலிவா கிடைக்கும்'ன்னு கேட்டு, அவுங்க ஒரு நல்ல இல்லத்தரசிங்கிறதை நிரூபிச்சாங்க.காஞ்சிபுரம் போங்கன்னு அய்யாவோட பர்சு இளைக்க வழி சொன்னேன்.ஐயா உடனே ,நாங்க ஐந்து நாள்தான் ப்ளான் பண்ணியிருக்கோம்ன்னு பர்சை காப்பாத்திக்கிட்டார்.

வழி நெடுக பச்சைப்பசேல்ன்னு இருக்குன்னுதான் சொல்ல ஆசை.. ஆனா,மஹாராஷ்ட்ரா முடியும் வரை காஞ்சு போயில்ல இருக்கு. நிறைய டன்னல்கள் வருமாம், எத்தனைன்னு எண்ணணும்னு வெயிட்டிங்க். ஆனா,தூக்கம் வந்ததால் எட்டுக்கு மேல் எண்ணலை.


சாப்பாட்டுக்கு முன் சூப்

கோவாவைத் தொட்டுக்கொண்டு போகும்ன்னு நெனைச்சா, பார்டரில் இருக்கும்' மட்காவ்' வை தொட்டுக்கொண்டு போகிறது.சாயந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் 'மங்களூர்' வந்து விட்டது.ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கொஞ்ச நேரம்தான் நிக்குது.மங்களூரிலிருந்துதான் ரகளை ஆரம்பிக்குது.. தென்னை மரங்களும் சோலைகளும், கேரளா வருமுன்னே அந்த சூழ்நிலைக்கு மனசு போயிடுது.

கேரளாவில் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் ரயில் போவதால் ,சூரிய அஸ்தமனத்தை பாக்க முடிஞ்சது. காயல்களை பாக்க முடிஞ்சது.எதிர் சீட் அம்ப்பயருக்கு இதெல்லாம் பாக்க முடிஞ்சதில் கொள்ளை மகிழ்ச்சி.'குமரகம்','பூவாறு' போன்ற இடங்களை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.லிஸ்டில் சேத்துக்கப்போறேன்னார்.

தம்பியின் மாமனார், காலை நாலு மணிக்கு வருகிறார். ஃப்ளைட் கொஞ்சம் லேட் ஆனதால் நாலேகாலுக்கு லேண்டிங்க். என்னுடைய ட்ரெயின் அஞ்சேமுக்காலுக்கு திருவனந்தபுரம் போய்ச்சேரும். ஆகவே எல்லோரும் சேந்தே போகலாமுன்னு, தம்பியை கூப்பிட்டு சொல்லியாச்சு.மறக்காம அலாரம் வெச்சாச்சு..

12 comments:

பிரியமுடன்...வசந்த் said...

திருவனந்தபுரமா நீங்க? ஜொள்ளவே இல்ல...

மட்காவ் ஐ ட்ரெயின் எங்க கொண்டு போய் விட்டுச்சுன்னும் ஜொள்ளல...

பிரியமுடன்...வசந்த் said...

kuch kuch hota hai பாக்குற வயசா இது ம்க்கும்...

LK said...

//இந்திய கிரிக்கெட் அணியில் அம்ப்பயரா இருந்தாராம். //

indian teamlaellam umpirea iruka mudiyathu.. venumna indian cricket boardla umpira irukalam :D

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட உங்க வண்டியில் இப்பவும் சூப் குடுத்தாங்களா..

பெங்களூர் ராஜ்தானியில் நிறுத்திட்டோம்ன்னாங்களே.. முன்னாடி சென்னை ராஜ்தானியில் தந்து எங்களை பழக்கப்படுத்திவிட்ட்ருந்தாங்க.. அவங்களா குடுக்கறத குறைச்சா..நமக்கு ராஜ்தானி என்பதால் வேற வாங்கவும் முடியாதே..

புதுகைத் தென்றல் said...

ரயில் பயணம் எப்பவும் சுகானுபவம் தான். அலாரம் அடிச்சிச்சா? இல்ல அடிச்சது தெரியாம தூங்கிட்டீங்களா??
சரியான இடத்துல தொடரும் போட்டுட்டீங்க.

மீ த வெயிட்டிங்

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

நான் திருவனந்தபுரம் இல்லை..திருவனந்தபுரம் என்பது ஒரு ஊர். :-))).

jokes apart, திருவனந்தபுரம் எனக்கு பரிச்சயப்பட்ட ஊர்தான்.

அமைதிச்சாரல் said...

வசந்த்,

குச் குச் ஹோத்தா ஹை என் ஆல்டைம் ஃபேவரிட்.

இன்னும், yaadein,kabhi kushi kabhi gham எல்லாம் கூட லிஸ்டில் உண்டு.

அமைதிச்சாரல் said...

வாங்க L.K.,

ரெண்டும் ஒன்னுதான் போல.

ஹா..ஹா..

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

மதியம், இரவு, ரெண்டு நேரமும் சூப் வந்துச்சே...

மெனு லிஸ்ட் போட்டிருக்கேன்.செக் பண்ணிக்கிட்டு அடுத்த தடவை, சூப்பையும், பரிமாறுற ஆளையும் நல்லா வாங்கிடுங்க. :-)

அமைதிச்சாரல் said...

வாங்க புதுகைத்தென்றல்,

ரயிலின் மென்மையான,தாலாட்டுக்கு இணையே கிடையாதுங்க.

மொபைல் அலாரம் கரெக்டா அடிச்சிடும். அதுவும் பிடிச்ச பாட்டை அலாரம் டோன் வெச்சிருந்தா, சந்தோஷமா கண்ணு முழிக்கலாம். :-)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா ,ரொம்பப் பொறாமையா இருக்கே.
ரயிலே அழகு அதுவும் இந்த மாதிரி நீண்ட பயணம்னால் அலுப்புத்தட்டாமல் வெளியே பார்த்துக் கொண்டே வரலாமே.
ஒரு நாள் பயணமா,இல்லை இரண்டா?
ரொம்பச் சுவையா எழுதறீங்க சாரல்.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

ரயில் பயணம் எங்களுக்கு ரொம்பப்பிடிச்ச ஒன்னு.

இருபத்தி நாலே மணி நேரத்தில் பன்வெலில் இருந்து, திருவனந்தபுரம் கொண்டு சேர்த்துவிட்டது. வழக்கமான ரயில்களை விட நிறைய நேரம் மிச்சம்.
ஆகவே,என்னுடைய ஒரிஜினல் destination போய் சேர்வதற்க்கும் அலுப்பு தட்டவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails