Wednesday 24 February 2010

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..


மஹாராஷ்ட்ராவில் 23-பெப்ரவரியிலிருந்தும், தமிழ் நாட்டில் மார்ச் ஒன்னாம் தேதியிலிருந்தும் பரீட்சை சீசன் ஆரம்பிக்கவுள்ளது.மொதல்ல பன்னிரண்டாம் வகுப்புக்கான பரீட்சைகளும்,அப்புறம் பத்தாம் வகுப்புக்கான பரீட்சைகளும் அதை தொடர்ந்து entrance exam களும் வரிசை கட்டி வரப்போகுது. (எங்க வீட்டிலும் திருவிழா உண்டு).

அட்வைஸ் கேட்டுக்கேட்டு காது புளிச்சுபோயிருக்கும்.. ஸோ.. நோ அட்வைஸ். உங்களுக்கு தெரியாததா என்ன! :-)))). இருந்தாலும் நானும் ஒரு பெற்றோர் என்ற முறையில்.. உங்களோடு கொஞ்ச நேரம்..

  • பரீட்சைக்கு முதல் நாளே ஹால் டிக்கெட், பேனா, ரீஃபில், பென்சில்,(தேவைப்பட்டால் கொஸ்டின் பேப்பரில்,ச்சாய்ஸ் கேள்விகளை குறித்துக்கொள்ள)ரப்பர், கணித உபகரணங்கள்,இன்னபிற(பிட் இல்லை)வற்றை சரிபார்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.காலையில எந்திரிச்சு, ஓடாதீங்க.

  • எக்ஸாம் சென்டரில் குறைந்தது இருபது நிமிடம் முன்பே இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்க. தேவையற்ற டென்ஷனை இது தவிர்க்கும்.

  • முக்கியமான விஷயம், காலை ஆகாரத்தை தவிர்க்கவேண்டாம். ஏதாவது லைட்டாகவாவது எடுத்துக்கொள்வது நல்லது. அட்லீஸ்ட் ஃப்ரூட் சாலட்,வெஜிடபிள் சாண்ட்விச் ஏதாவது எடுத்துக்கோங்க.மூளை சோர்வடையாம இருக்கும்.

  • அணியும் உடைகள் இறுக்கமாக அசௌகரியமாக இல்லாம பாத்துக்கோங்க.கோடை ஆரம்பிச்சுட்டதால பரீட்சை எழுதும்போது வேர்த்து வழிஞ்சு,கவனம் சிதறி அவஸ்தைப்பட வேண்டாம்.

  • முக்கியமான ஒன்று.. வீட்டுக்கு வந்தப்புறம் கொஸ்டின் பேப்பரை கையில் வெச்சிக்கிட்டு,விடைகள் கரெக்டா தப்பான்னு, உங்களுக்கு நீங்களே மார்க் போடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. அடுத்த நாளே வேற பேப்பருக்கான எக்ஸாம் இருந்தா இது நம்ம மனவுறுதியை அசைச்சு பாக்க வாய்ப்பு இருக்கு. தைரியமானவங்களை இந்த லிஸ்டில் சேக்கலை :-)))

  • ஆன்ஸர் ஷீட்டை திரும்ப கொடுக்கும்போது சரியா கட்டியிருக்கீங்களான்னு சரிபார்த்துக்கோங்க. பேப்பர் ஏதாவது விட்டுப்போச்சுன்னா அப்புறம் ஐயோன்னாலும் வராது.. அம்மான்னாலும் வராது. உங்க வாழ்க்கை உங்க கையில்.

  • அனைவருக்கும்(என் பொண்ணு உட்பட),எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க, பதிவுலகம் சார்பாக எங்க வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.


ENJOY THE EXAMS.



25 comments:

எல் கே said...

எங்க வீட்ல திருவிழா இப்ப இல்ல ஒரு மாசம் கழிச்சு ஏப்ரல் மாசத்தில. தங்கமணி பரிசை எழுத போரங்கள்ள

Anonymous said...

நல்லவேளை , இந்த பரிட்சை , அதுக்கு தயார் பண்ணறது எல்லாம் இப்ப இல்லை.
நான் வளந்துட்டேனே மம்மி

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை. பேச்சு நடையில் எழுதியிருப்பது அக்கறையுடன் உங்கள் குரலே ஒலிப்பது போல நல்லாயிருக்கு.

வல்லிசிம்ஹன் said...

கேள்வித்தாள், எடுத்து மீண்டும் அதற்கு மார்க் போடுவது தள்ளி வைக்க வேண்டும்.
இதுதான் சரி. அடுத்த பரீட்ஷையை எதிர்நோக்க வேண்டிய நேரத்தில் மற்றவைகளை ஒதுக்கணும். நல்ல அட்வைஸ் அமைதி. அருமையாக இருந்தது. நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்.:)

pudugaithendral said...

போர்ட் எக்ஸாம் இல்லாட்டியும் ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கு முழுஆண்டுத்தேர்வு மார்ச் 8 லேர்ந்து ஆரம்பமாகுது. ரிலாக்ஸ்டா படிக்க வெச்சு விளையாண்டுகிட்டு இருக்கோம். :))

உங்க கருத்துக்கள் கண்டிப்பா எல்லோருக்கும் உதவும். இதை அப்படியே பேரண்ட்ஸ் கிளப்ல போட்டிங்கன்னா நல்லாயிருக்கும்.
(தங்களின் திருக்கரத்தால்)
ப்ளீஸ்

துபாய் ராஜா said...

நல்லதொரு இடுகை. தேர்வு எழுதப்போகும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க வீட்டுல இன்னியோட திருவிழா முடிஞ்சிருச்சேய்.. மக ஆறாவது தான் ;)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

தங்கமணிகள்,ரங்கமணிகள்,எல்லோருக்கும்தான் இந்த டிப்ஸ்.பரீட்சை சமயம் தங்கமணிக்கு ஹெல்ப் செய்வீங்கதானே :-))

உங்க தங்கமணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

எல் கே said...

//தங்கமணிகள்,ரங்கமணிகள்,எல்லோருக்கும்தான் இந்த டிப்ஸ்.பரீட்சை சமயம் தங்கமணிக்கு ஹெல்ப் செய்வீங்கதானே :-))

உங்க தங்கமணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.//

கண்டிப்பா :)))
http://www.karthikthoughts.co.cc/2010/02/blog-post_24.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

கண்டம் தாண்டிட்டீங்கன்னு சொல்லுங்க :-)))

டிபார்ட்மெண்ட் பரீட்சைக்கும் இது பொருந்துமாக்கும்.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.வரவுக்கும் கருத்துக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ஆமாம்மா.. இன்னிக்கு பரீட்சை முடிஞ்சு வெளிய வந்ததும்,பாத்தா..பசங்க கூடிக்கூடி நின்னு டிஸ்கஸ் செய்றாங்க.அவங்க கிட்ட மாட்டாம தப்பிச்சு ஓடி வந்தோம்.இப்ப எவ்வளவுதான் கணக்குப்போட்டாலும் ஏற்கனவே எழுதியதை மாத்த முடியுமா!!!அதுக்குண்டானதுதானே கிடைக்கும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புதுகைத்தென்றல்,

ஆஷிஷ், அம்ருதாவுக்கு இங்கேயும் ஆல் த பெஸ்ட் சொல்லிக்கிறேன்.

பேரண்ட்ஸ் கிளப்பில் போட்டு பதிவும் வந்தாச்சு. மெம்பராக்கினதுக்கு இங்கேயும் நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய் ராஜா,

உங்க வாழ்த்துக்கள் டெலிபதியில் மாணவச்செல்வங்களுக்கு இந்நேரம் போய்ச்சேர்ந்திருக்கும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

கொஞ்ச நாளா பதிவு ஒன்னையும் காணோமேன்னு பாத்தேன். திருவிழா பாக்க போயிட்டீங்களா :-)

ஆறாவதுதான்னாலும் ஏழுக்கு ஆறு பழுதில்லை பாத்துக்கோங்க. :-))))

மாதேவி said...

மாணவச் செல்வங்கள்அனைவருக்கும் எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

கண்மணி/kanmani said...

ஆஹா பொண்ணுகிட்ட நேரடியா சொல்ல முடியலையாக்கும்.பதிவுல போட்டாச்சு....:))
பொண்ணுக்கு வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்மணி,

பொண்ணுகிட்ட சொல்லி நேரடி பின்னூட்டமும் வாங்கியாச்சு..

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

இங்கயும் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பிக்குது. பெரியவரை (ஏழாங்கிளாஸ்) நான் ஒண்ணும் கண்டுக்கிறதில்லை. சின்னவனை மட்டும் கவனிச்சுகிறது, அவ்வளவுதான்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

உங்க வீட்டுலயும் திருவிழா சிறப்பா நடக்க வாழ்த்துக்கள்.

வந்ததுக்கு நன்றிங்க.

அம்பிகா said...

உங்கள் மகளுக்கு வாழ்த்துக்க்ள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

வரவுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றிங்க.

பனித்துளி சங்கர் said...

நாங்களும் வாழ்த்து சொல்லுவோம்ல . திருவிழா சிறப்பா நடக்க வாழ்த்துக்கள் !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி சங்கர்,

முதல் வரவுக்கு நன்றி.

குளிர்ச்சியான வாழ்த்துக்களுக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails