Friday 29 March 2013

வகுத்தல் நிமித்தம்..


உண்மையைப்போலொரு பலமான அஸ்திவாரம் வேறொன்றுமில்லை.

தாய், தாரம், சகோதரி, நாத்தனார், அண்ணி, மகள், காதலி, பாட்டி என்று எத்தனை வேடங்களைப்புனைந்தாலும் அத்தனையையும் கலைத்த பின் மிஞ்சுவது மனுஷி என்ற ஒருவளே.

தவறு செய்து விடுவோமோ என்ற பயத்தில்தான் மேலும் அதிகத்தவறுகள் செய்கிறோம் எல்லாக்கணக்குகளிலும்..

சகிப்புத்தன்மைக்கான அளவுகோல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளைக்கொண்டிருக்கிறது.

விதிமுறைகள் வகுக்கப்படும்போதே விதிமீறல்களும் தங்களை உருவாக்கிக் கொண்டு விடுகின்றன.

விரும்பிய வண்ணம் அமைத்துக்கொள்ள இயலாதபடி வாழ்க்கையொன்றும் அத்தனை கடினமானதல்ல.

நல்லனவற்றை அறுவடை செய்ய வேண்டுமானால் அதற்கு முன் அவற்றை விதைத்திருக்கவும் வேண்டும்.

சிறிதளவே செலுத்தினாலும் பல மடங்காய் நம்மிடம் திரும்பி வரும் எதிரொலி போன்றவையே நம் செயல்களும். நல்லனவோ!! அல்லனவோ!! நம்மிடம் வந்தே தீரும்.

இன்றுதான்,.. இப்பொழுதுதான் செய்ய ஆரம்பித்திருப்பது போல் உற்சாகத்துடன் இருப்பதே, நம்மைத் திரும்பத்திரும்பச் செய்யும் செயல்களில் அலுப்புற்று முடங்கி விடாமலிருக்கச் செய்யும் வழி.

இலக்குகள் தெளிவாக நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் அதை நோக்கிச் செல்லும் பாதைகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. கண்டு கொள்வது மட்டுமே நாம் செய்ய வேண்டிய வேலை.

டிஸ்கி: முதல் இரண்டு துளிகளும் ஃபேஸ்புக்கில் குங்குமம் தோழியின் தினமொழிகளிலும் வெளியானவை :-)

9 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனை துளிகளும் நன்று.

ஒன்பதாவது மிகப் பிடித்தது.

மஞ்சள் மலரில் மனம் கொள்ளை போனது!

குங்குமம் தோழி ”கண்கள்” பகுதிக்கு அட்வான்ஸாக வலைப்பூவில் என் வாழ்த்துகள்:)! பகிரக் காத்திருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// நல்லனவற்றை அறுவடை செய்ய வேண்டுமானால் அதற்கு முன் அவற்றை விதைத்திருக்கவும் வேண்டும். ///

அனுபவ உண்மை... பல பதிவுகளில் குறிப்பிடுவதுண்டு...

வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

நல்லனவற்றை அறுவடை செய்ய வேண்டுமானால் அதற்கு முன் அவற்றை விதைத்திருக்கவும் வேண்டும்.//
இன்றுதான்,.. இப்பொழுதுதான் செய்ய ஆரம்பித்திருப்பது போல் உற்சாகத்துடன் இருப்பதே, நம்மைத் திரும்பத்திரும்பச் செய்யும் செயல்களில் அலுப்புற்று முடங்கி விடாமலிருக்கச் செய்யும் வழி.//

இரண்டும் மிகவும் பிடிக்கிறது.
வாழ்த்துக்கள்.


பூ விழி said...

எல்லா வரிகளும் உண்மையை உறைகின்றன பகிர்வுக்கு நன்றி

பால கணேஷ் said...

அனைத்து வரிகளும் முத்திரை வரிகள் என்றாலும் 8வது எனக்கு ரொம்பப் பிடித்தது! வாழ்வில் நிதர்சனமாய் நாம் காண்பதல்லவா...! அருமையான பகிர்விற்கு மகிழ்வுடன் நன்றி!

சுசி said...

arputham, athanaiyum unmai ! vazhuthukkal!

ஸ்ரீராம். said...

அனைத்துமே அருமை. குறிப்பாக 7,8,9.

மஞ்சள் மலர் கண்ணைப் பறிக்கிறது.

Unknown said...

Are u a writer, poet, orator,? Minda storming postings.

Unknown said...

are u a writer, poet, oratorian ? Ming storming postings usha rajan rajaheswRi madam. Wonderful

LinkWithin

Related Posts with Thumbnails