Friday, 22 March 2013

ஊக்கம் கொடுத்த தினகரன் வசந்தம்..

எந்தவொரு செயலையுமே ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்று சொல்வதுண்டு.சுமாராகவோ நன்றாகவோ.. எப்படிச்செய்தாலும் சரி,.. அதற்கு ஒரு சின்னப்புன்னகையாகவோ மெல்லிய தலையாட்டலாகவோ கிடைக்கும் அங்கீகாரம் தரும் போதை அதீதமானது. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டுமென்ற உற்சாகம் நிச்சயமாக ஊற்றெடுக்கும். அதுவே மேலும் முன்னேறவும் தூண்டும். 

என்னதான் எதையும் எதிர்பார்க்காமல்தான் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், "இன்னிக்கு சமையல் நல்லாருக்கு.." என்று ரங்க்ஸ்கள் வாய்தவறிச் சொல்லி விட்டால் நாம் மகிழ்ந்துதானே போகிறோம். தினமும் சொல்லத்தான் நம் புத்திர சிகாமணிகள் இருக்கிறார்களே :-) இந்த ஒரு வார்த்தைக்காகவே அடுத்த வேளைச் சமையலை இன்னும் ருசியாகச் செய்து போடுகிறோமா இல்லையா? :-))

வீட்டில் கிடைக்கும் சின்ன அங்கீகாரமே நம்மை இவ்வளவு உற்சாகப் படுத்தும்போது, ஊரளவில் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தாதா என்ன? அதுவும் பெரிய பத்திரிகைகள் நம்மையும் நம் எழுத்துகளையும் கவனிக்கிறார்கள், வாசிக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள் என்பதை அறிய வரும்போது நம் மதிப்பும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் உயர்கிறது. "பரவாயில்லை,.. ஏதோ உபயோகமாகச் செய்கிறாள்" என்று அவர்களும் நம்மை எழுத்தாளினி ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். 

இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றுதானே கேட்கிறீர்கள்? நிற்க.. இயலாதவர்கள் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்க. சென்ற ஞாயிறன்று வெளியான தினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள் தொகுப்பில் என் பெயரையும் இணைத்து இனிய அதிர்ச்சி கொடுத்து விட்டார்கள். ஃபேஸ்புக்கில் ஜலீலாக்கா பகிர்ந்திருந்ததைப் பார்த்து கை தவறுதலாக என் பெயரை டைப்பிட்டார்களோ என்று நினைத்து வசந்தத்தின் இணைய பக்கத்திற்குப் போய்ப்பார்த்தால் செய்தி நிஜம். வலைப்பூவையும் அறிமுகம் செய்திருக்கிரார்கள். பக்கத்தைப் பெரிதாக்கிப்பார்த்து சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன். உடனேயே ஸ்க்ரீன் ஷாட்டும் எடுத்து விட்டேன். நாளப்பின்னே 'நீயெல்லாம் இலக்கிய வியாதி இல்லை' என்று பல்டியடித்து விட்டால் நம் நிலைமை என்ன? காலத்துக்கும் அழியாதபடி கல்வெட்டில் செதுக்கியாயிற்று :-)) 
இணையத்திலும் வசந்தத்தை வாசிக்கலாம்..

என்னுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நம் மதுமிதா, மனோம்மா,சுசீலாம்மா, அருணா, ருக்மணிம்மா, புவனேஸ்வரி ராமநாதன், கோமதிம்மா, ஜலீலாக்கா, ஸாதிகா, பத்மஜா, கீதா இளங்கோவன், மலிக்கா அப்புறம் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் புதுகைத்தென்றல் எல்லோருக்கும் வாழ்த்துகள்.இதில் ஓரிருவரைத்தவிர எல்லோருமே நம் தோஸ்துகள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

ஃபேஸ்புக்கிலும் தனிமடல்களிலும் குழுமங்களிலும் வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

38 comments:

துளசி கோபால் said...

மனம்கொள்ளா மகிழ்ச்சிப்பா!

பலரும் நம்ம ஆளுங்கன்னதும் மகிழ்ச்சி நாலுமடங்காச்சு!

ராமலக்ஷ்மி said...

இனிய வாழ்த்துகள் சாந்தி:)!

அறிமுகமாகியிருக்கும் தோழியர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் எழுத்தில் உள்ள மகிழ்ச்சியை விட எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள்...

அனைவருக்குமே...

VijiParthiban said...

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!! வாழ்த்துக்கள் அக்கா . அக்காவின் நலம் அறிய ஆவல். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் சாந்தி.தினகரன் அறிமுகத்தில் இந்த முறை அனைவருமே ஒருவருக்கொருவர் அதிகம் அறிதவர்களாக இருந்ததில் மகிழ்ச்சி.

thirumathi bs sridhar said...

வாழ்த்துகள்,வாழ்த்துகள்

அநன்யா மஹாதேவன் said...

வாழ்த்துக்கள் அக்கா!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.
எனக்கும் முதலில் வை.கோபாலகிருஷ்ணன் சாரும், அடுத்து ஜலீலாவும் வந்து சொன்னார்கள். இருவரும் எனக்கு ஸ்க்ரீன் ஷாட்டும் எடுத்து அனுப்பி இருந்தார்கள். நானும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன் வை,கோ சார் சொன்ன உடனே.

உங்கள் எல்லோர் உடன் என் பெயரும் இடம் பெற்றது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிவிலும் அதை நீங்கள் குறிபிட்டதற்கு மகிழ்ச்சி நன்றி.

வசந்தம் இதழில் இடம் பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

தினகரன் வசந்தம் இதழில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.


//நாளப்பின்னே 'நீயெல்லாம் இலக்கிய வியாதி இல்லை' என்று பல்டியடித்து விட்டால் நம் நிலைமை என்ன? காலத்துக்கும் அழியாதபடி கல்வெட்டில் செதுக்கியாயிற்று :-)) //

நல்ல நகைச்சுவை ;)))))

Bala subramanian said...

தோழியர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!!

இலக்கிய வியாதி தான் என்று உறுதியா ஆணி அடிச்சீங்க போங்க இவ்வோளுவு பேறும் சாட்சியா போது இழுத்திர மாட்டம் இழுத்து

அன்புடன் அருணா said...

அடடா நானுமா உங்களோட?????
பூங்கொத்துப்பா!!!

பால கணேஷ் said...

இந்தாங்க... பிடியுங்க என் பூச் செண்டையும், கேக்கையும்! இன்னும் நிறைய நிறைய மகிழ்வுகள் உங்களை அடைய மனம் நிறைய நல்வாழ்த்துகள்! உங்களோட அறிமுகம் பெற்ற 99% தோழிகள் எனக்கும் வேண்டியவங்கன்றதுல டபுள் சந்தோஷம் எனக்கு!

poovizi said...

வாழ்த்துகள்மென்மேலும் வளர வாழ்த்துகள்

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் தொடர்ந்து அசத்துங்க..

Mano Saminathan said...

இனிய வாழ்த்துக்கள் சாந்தி!

நேற்று இங்கு [ ஷார்ஜா] திரும்பி வந்த‌‌ பிற‌கு தான் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் மூலம் இந்த விபரம் அறிந்து மகிழ்ந்தேன். வசந்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சகோதரியர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீமதி முதற்கொண்டு அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.பத்திரிக்கையில் பொறிக்கப் படுவது இன்ய நிகழ்ச்சி. இது போல இன்னும் நிறைய ஆரங்கள் கிடைக்க வாழ்த்துகள் மா சாரல்.

அமைதிச்சாரல் said...

வாங்க துள்சிக்கா,

வாழ்த்துக்கு நன்றி.

'அங்கே' எல்லோரும் தெரிஞ்ச முகங்கள்தான்னதும் தனிமை உணர்வு போயிருச்சு எனக்கு :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

இந்த வாரமும் நம்மாளுங்க அறிமுகம் ஏதாவது இருக்கான்னு செக் செஞ்சுக்கணும் :-)

அமைதிச்சாரல் said...

வாங்க தனபாலன்,

சக நட்புகளின் மகிழ்ச்சியில் மகிழும் உங்கள் நல்ல குணம் கண்டு எனக்கும் மிகவும் மகிழ்ச்சி :-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

உளங்கனிந்த வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

வாங்க விஜி,

நீங்களும் நலம்தானே?..

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகா,

ஆமாம்,.. தெரிஞ்ச முகங்களா இருந்ததால் இன்னுமே சந்தோஷமா இருந்தது.

உங்களுக்கும் வாழ்த்துகளுடன் நன்றிகளும்.

அமைதிச்சாரல் said...

வாங்க திருமதி ஸ்ரீதர்,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க அனன்ஸ்..

மறு பிரவேசத்திற்கு உங்களுக்கும் வாழ்த்துகள். அடிக்கடி எழுதுங்கப்பா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

எனக்கும் வை.கோ ஐயா புத்தகத்தை ஸ்கேன் செஞ்சு அனுப்பியிருந்தார். அனைவரையும் பாராட்டும் அவரது பெரிய மனதிற்கு இன்னொருக்கா நன்றி சொல்லிக்கிறேன்.

அமைதிச்சாரல் said...

வாங்க ரஞ்சனிம்மா,

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

வரலாறு முக்கியமில்லையா?? அதான் செதுக்கி வெச்சுட்டேன் :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பாலசுப்ரமணியன்,

ஆஹா!!.. இந்த சப்போர்ட் போதுமே சகோ :-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அருணா,

உங்களையும் ஜீப்புல பிடிச்சுப்போட்டாச்சுங்க :-))

வாழ்த்துகளுக்கும் பூங்கொத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

ஸ்ட்ராபெர்ரி கேக்தானே நீங்க அனுப்பியது?.. பாக்கெட்டைப் பிரிக்கும்போதே வாசனை தூக்குது :-))

மீதம் இருக்கறவங்களையும் அறிமுகப்படுத்திக்கிட்டா எல்லோருமே நெருங்கியவங்களாயிடுவோம் இல்லையா :-)

வாழ்த்துகளுக்கும் பூச்செண்டுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பூவிழி,

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

இப்படிக்கிடைக்கிற சின்னச்சின்ன ஊக்கங்களால்தான் தொடர்ந்து எழுதவும் தோணுதுங்க..

வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மனோம்மா,

தமிழகப்பயணம் நல்லபடியா முடிஞ்சதா.

உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

அன்பான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜெயக்குமார்,

வாழ்த்துகளுக்கும் வரவுக்கும் மிக்க நன்றிங்க.

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

கோவை2தில்லி said...

வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க...

LinkWithin

Related Posts with Thumbnails