'சும்மா ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன்'என்று சொல்லி ஆரம்பிப்பவர்கள் ஒரு பேருரையையே நிகழ்த்தி விடுகிறார்கள்.
கனிகளைத் தராத மரத்தைக் கடிந்து கொள்கிறோம், அதன் வேரில் வெந்நீரை ஊற்றி விட்டு.
பிறர் நம்மீதோ நாம் பிறர் மீதோ வைத்திருக்கும் முழுநம்பிக்கையை இழக்க ஒரு நொடி போதும். அதை மீண்டும் பெறுவதற்கோ ஒரு பிறவி கூடப் போதாமலாகி விடுகிறது சில சமயங்களில்.
பகையை வளர்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் முறிக்க சகிப்புத்தன்மையுடன் கூடிய விட்டுக்கொடுத்தல் எனும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.
எதிரிகளாக இருப்பவர்கள் திடீரென்று புகழ ஆரம்பிப்பதும், நண்பர்களாக இருப்பவர்கள் காரணமில்லாமல் விலக ஆரம்பிப்பதும் அதற்குப்பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று யோசிக்கத்தூண்டுகிறது.
வாதத்தை விட விதண்டாவாதத்தையே பலரும் பிறரைப் பணியச்செய்யும் வழியாகக் கைக்கொள்கின்றனர்.
கடந்தகாலக் கசப்புகளை மறக்க முயல்வதே எதிர்கால சந்தோஷங்களுக்கான திறவுகோல்.
ஒருவரின் தவறை மன்னிக்கிறோமென்றால் அத்தவறை முழுவதுமாக மறந்தும் விடுவதே நல்லது.
பொக்கிஷங்களைத் தொலைத்துவிட்டு வெறும்பெட்டியைக் காவல் காக்கிறோம் பல சமயங்களில்.
சொல்வதைவிட ஏற்று நடப்பதுதான் கடினமாக இருக்கிறது அறிவுரைகளைப் பொறுத்தமட்டில்.
23 comments:
அத்தனையும் அருமை.
2,7,8,9 மிகப் பிடித்தன.
சிறப்பான பகிர்வு. பூவும் பொருத்தமாகத் தான் பகிர்ந்து இருக்கீங்க!
சொல்வதைவிட ஏற்று நடப்பதுதான் கடினமாக இருக்கிறது அறிவுரைகளைப் பொறுத்தமட்டில்.//
உண்மைதான் சாந்தி.
மலர் அழகு.
அனைத்தும் அருமை.
//கடந்தகாலக் கசப்புகளை மறக்க முயல்வதே எதிர்கால சந்தோஷங்களுக்கான திறவுகோல்.//
;)))))
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
படத்தேர்வும் அழகு.
மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ஒவ்வொரு வரிகளும் சிறப்பான வரிகள் இது எல்லோர் மனதிலும் ஆணிபோல் பதிக்கவேண்டும். வாழ்த்துகள்.
நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும் நண்பரே!
அருமை.
உண்மைதான்,அறிவுரை கொடுப்பது வெகு சுலபம். அதை வங்கிக் கொள்வதும் அதன் படி நடப்பதும் மஹா கஷ்டம் சாரல்:)))))
எல்லா வரிகளுமே அருமையாக இருக்கின்றன.
பகையை வளர்க்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் முறிக்க சகிப்புத்தன்மையுடன் கூடிய விட்டுக்கொடுத்தல் எனும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.
சிறப்பான சிந்தனை ...
புதுமொழிகள் அருமை :)
வாங்க ராமலக்ஷ்மி,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க வெங்கட்,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க கோமதிம்மா,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க வை.கோ ஐயா,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க மலர்,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க செம்மலை ஆகாஷ்,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க மோகன் குமார்,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க வல்லிம்மா,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க தென்றல்,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க ஸ்ரீராம்,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க ராஜராஜேஸ்வரி,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
வாங்க என்றென்றும்,
ரசித்து வாசித்தமைக்கும் வரவுக்கும் மிக்க நன்றி :-)
Post a Comment