Friday, 16 November 2012

கொண்டாட்டங்கள் முடியவில்லை..

மழை முடிந்தபிறகு குடை பிடித்த கதையாக தீபாவளி வாழ்த்துகளை அனைவருக்கும் இப்போது சொல்லிக்கொள்கிறேன். எங்களூரில் இன்னும் தீபாவளி முடியவில்லை. ஆகவே வாழ்த்துச்சொல்வதிலும் தப்பில்லை :-)
செமஸ்டர் பரீட்சையைக் காரணம் காட்டி சிஸ்டத்தைக் குழந்தைகள் பிடுங்கிக்கொண்டு விட தற்காலிகமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. பற்றாக்குறைக்கு செமஸ்டர் பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முதல் நாள், மகள் கீழே விழுந்து உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் அடி பட்டுக்கொண்டு வந்தாள். மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் பரீட்சை சமயம் உறக்கம் வந்தாலும் வரலாம். அப்புறம் பட்ட பாடெல்லாம் வீணாகி விடும் என்று வெறும் முதலுதவியோடு நிறுத்திக்கொண்டு விட்டாள். அவள் நன்கு தூங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, "பரீட்சைக்காக விழுந்து விழுந்து படிச்சதுல அடிபட்டிருச்சு" என்று வாய்மொழியை உதிர்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார் பையர். பின்னே, மகளின் காதில் இந்த கமெண்ட் விழுந்தால் யார் மாத்து வாங்குவது? :-) அப்புறம் பரீட்சைகள் முடிந்தபின் ஸ்கேன் எடுத்தல், எக்ஸ்ரே எடுத்தல் என்று மருத்துவமனைக்கு அலைந்தது தனிக்கதை :-)

இந்த களேபரத்தில் வீடு சுத்தம் செய்வது, அலங்கார மின் விளக்குகள் கட்டுவது போன்ற தீபாவளி வேலைகளை பையரின் உதவியோடு ஓரளவு செய்து முடித்து, தீபாவளிக்கு முதல் நாள் மிச்சம் மீதி ஷாப்பிங்கும் முடிந்தது. பட்டாசு விலையேற்றம் காரணமாகவும், சுற்றுப்புற சூழல் மீதுள்ள அக்கறை காரணமாகவும் இந்த வருஷம் மும்பையில் அமைதியான தீபாவளியாகக் கழிந்தது. புது வருடத்தை மிகவும் தாம்தூமென பட்டாசு வெடித்துக் கொண்டாடும் குஜராத்தியர் கூட கொஞ்சம் அடக்கியே வாசித்தனர். 
கடைகளில் தொங்கும் கந்தில்கள் எனப்படும் விளக்கலங்காரங்கள்..
எக்கச்சக்க அலங்காரங்கள், விளையாட்டுகள் என்று களை கட்டும் மால்கள் கூட கொஞ்சம் சுரத்தின்றி ஆனால் ஓரளவு களையுடன் இருந்தன. 
இருந்தாலும் எண்ணெய்யின்றி திரியுமின்றி விளக்கேற்றி,
பட்டாசு வெடித்து,
 



நேற்றைய பாவ்பீஜ் வரைக்கும் தீபாவளியைக் கொண்டாடி முடித்தாயிற்று. ஆனால் இன்னொரு கொண்டாட்டமும் இன்றைக்கு இருக்கிறது. இன்று அதாவது நவம்பர்-16 என் பையரின் பிறந்த நாள். 

எல்லாச் செல்வங்களும் நலங்களும் பெற்று நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மனமார்ந்த ஆசீர்வாதங்கள் பாஸ்கர்..
கேக்கை மட்டும் அவனிலும் சுடவில்லை, காமிராவாலும் சுடவில்லை. கூகிளில் சுட்டேன் :-)

25 comments:

துளசி கோபால் said...

மகனுக்குப் பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

மகளுக்கு உடல்நலம் சரியாகிவிட்டதுதானே?

நமக்கெல்லாம் தினம் தினம் தீபாவளிதான். கவலைப்பட ஏதுமில்லை:-)))))

Yaathoramani.blogspot.com said...

படங்கள் அசத்தல்.அருமை
வேறெப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை

தங்கள் செல்ல மகனுக்கு இனிய
பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பெண் இப்ப எப்படி இருக்கா?

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அட்டகாசம்...

தங்களின் மகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்தையும் சொல்லிடுங்கோ...

நன்றி...
tm2

குறையொன்றுமில்லை. said...

எல்லாச் செல்வங்களும் நலங்களும் பெற்று நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மனமார்ந்த ஆசீர்வாதங்கள் பாஸ்கர்..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்
படங்கள் மிக அழகு.

இராஜராஜேஸ்வரி said...

தங்கள் மகனுக்கு எல்லாச் செல்வங்களும் நலங்களும் பெற்று நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மனமார்ந்த ஆசீர்வாதங்கள் .

rishi said...

நாங்களும் உங்களுடன் உங்கள் ஊரிலேயே தீபாவளி கொண்டாடின உணர்வினை ஏற்படுத்தின உங்கள் புகைப்படங்களும் உங்களின் இந்த பதிவும். பாப்பாவின் உடல்நலம் நல்லபடியாக விரைவில் குணமடைய இறைநிலையைப் பிரார்த்திக்கின்றேன். தம்பிப் பையருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

ஒரே ஒரு ஐயம். கடைசி இரண்டு படங்களை எப்படி க்ளிக்கினீர்கள் ? அதில் என்ன ட்ரிக் இருக்கின்றது ..? அதேபோல் க்ளிக்க என்ன செய்யவேண்டும் ?

CS. Mohan Kumar said...

Birthday wishes to ur son.

Photos are fantastic

ராமலக்ஷ்மி said...

மகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

மகளுக்கு இப்போது பரவாயில்லையா?

மக்கள் அதிகம் வெடி வாங்காமல் அடக்கி வாசித்தார்கல் என அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

படங்கள் நன்று.

ADHI VENKAT said...

மகனுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

மகளுக்கு இப்போ உடம்பு தேவலையா?

அமைதியான தீபாவளி நல்ல விஷயம்.

Asiya Omar said...

நல்ல படங்கள் பகிர்வு.தங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

2013 தீபாவளிக்கு அதற்குள் வாழ்த்து சொல்கிறீர்களோ என்று பார்த்தேன்! :))

'விழுந்து விழுந்து படிச்சதுல பட்ட அடி' வரிக்கு சிரிப்பதா அனுதாபப் படுவதா என்று? 50-50! இப்போது பெண்ணுக்கு முற்றிலும் சரியாகி விட்டதா?

பொதுவாக தமிழ்நாட்டிலும் இந்த முறை காற்றை மாசு படுத்திய அளவு குறைவுதான் என்று செய்தித் தாளில் படித்தேன்.

பாஸ்கருக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள்.

மாதேவி said...

மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

படங்கள் அழகாக இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

மகளுக்கு இப்போது தேவலையா சாரல்.
அன்பு மகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். தீபாவளிப்படங்கள் ஜோர்.
நானே உங்களுக்குக் கடிதம் எழுத நினைத்திருந்தேன். பத்திரமாக இருக்கிறீர்களா என்று அறிய.

மோகன்ஜி said...

அடடா தீபாவளி வந்துட்டு போயிடுச்சா?
உங்கள் மகள் உடல்நலம் நன்கு தேறியிருப்பாள் என நம்புகிறேன். உங்கள் மகனுக்கு தாமதமானாலும்,பிறந்த நாளுக்கு ஆசிகள்.மற்றபடி யாவும் நலம் தானே?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்க மகளும் விரைவில் குணமாகி வரட்டும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

மகள் இப்ப சிகிச்சையில் இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா தேறி வர்றாங்க.

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

எல்லாவற்றுக்கும் ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

தீபாவளியன்னிக்கு உங்க கிட்ட பேசினதில் ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகளுக்கும் நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முரளிதரன்,

ரொம்ப நன்றிங்க வாழ்த்தினதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ரொம்ப நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

எல்லாருக்கும் வாழ்த்துகள்.

//கடைசி இரண்டு படங்களை எப்படி க்ளிக்கினீர்கள் ? அதில் என்ன ட்ரிக் இருக்கின்றது ..? அதேபோல் க்ளிக்க என்ன செய்யவேண்டும் ?//

இதுக்கு பதில் சொல்லிருப்பீங்கன்னு (தெரிஞ்சுகிட்டு என்ன படமா பிடிக்கப் போறேன்? ச்சும்மா, ஒரு ஆர்வம்தான்) பாத்தா, சொல்லவேயில்லியே? ரொம்ப சீக்ரெட்டோ? :-))))

LinkWithin

Related Posts with Thumbnails