1.பிடிவாதம், ஈகோ போன்ற முகமூடிகளைக் கழற்றி வைத்து விட்டுப் பொது நலனை மட்டுமே குறியாகக் கொண்டு நடத்தப்படும் பேச்சு வார்த்தைகள் தோற்றுப்போவதில்லை.
2.விரும்பியவை கிடைக்காவிடினும் கிடைத்தவற்றைக் கொண்டு சுவையாய்ச் சமைப்பவர் திறமைசாலிகள். வாழ்க்கையும் அது போல்தான்.
3.ஒருவரது தவறுகள் மற்றவர்களுக்குப் படிப்பினைகளாக அமைந்து விடுகின்றன.
4.வேலையை "இன்று" செய்து முடிக்காமல், நாளை செய்யலாமென்று தள்ளிப்போடும் சோம்பேறிகளின் வாழ்நாள் "நாளை"கள் மட்டுமே நிரம்பியதாகக் கழிந்து விடுகிறது.
5.சுறுசுறுப்பாய்ச் செய்வதாய் எண்ணிப் பதட்டத்துடன் செய்பவர்களின் வேலைகள் நிறைவாய் அமையாமல் அள்ளித்தெளித்த கோலமாய் அமைந்து விடுகின்றன.
6.நேர்மறைச் சிந்தனைகளும், மனம் நிறைந்த சந்தோஷமும் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் சிறிதளவாவது நிரப்புகின்றன.
7.கோடுகளை இழந்தாலும் கர்ஜிப்பதைப் புலி மறந்து விடுவதில்லை, அது போல் புற அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரது அடிப்படைக் குணாதிசயங்களில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுவதில்லை.
8.மலர்ந்த சில பொழுதுகளிலேயே சருகாகி விடப்போகிறதென்பதற்காக மொட்டு மலராமல் இருப்பதில்லை. வாசம் பரப்பித் தன் கடமையைச் சரியாகச்செய்கிறது,
9.வளைந்து கொடுப்பதன் எல்லையென்பது ஒடிந்து விடும் புள்ளியில் தீர்மானிக்கப் படுகிறது.
10.மறந்து விட்டதாக நினைப்பவையெல்லாம் ஏதாவதொரு தருணத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
22 comments:
நல்ல சிந்தனைகள்.
"மலர்ந்த சில பொழுதுகளிலேயே சருகாகி விடப்போகிறதென்பதற்காக மொட்டு மலராமல் இருப்பதில்லை. வாசம் பரப்பித் தன் கடமையைச் சரியாகச்செய்கிறது,"
நன்கு பிடித்தது.
மலர்களைப் பின்பற்றி நடப்போம்.
அனைத்துமே அருமை. 4, 7 மிகவும் பிடித்தது.
த.ம. 1
பத்தும் முத்துக்கள்...
அருமை... (படமும்)
நன்றி...
tm2
அருமை.அருமை..
நிரம்பும் வெளிகள் அத்தனையும் நன்று.
/நேர்மறைச் சிந்தனைகளும், மனம் நிறைந்த சந்தோஷமும் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் சிறிதளவாவது நிரப்புகின்றன./
நிச்சயமாய்.
அருமையான மொழிகள் , கருத்துகள்
இன்று
அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
அவ்வப்போது அட்வைஸ்கள் ரொம்ப தேவை படுகிறது. அருமை.
//மறந்து விட்டதாக நினைப்பவையெல்லாம் ஏதாவதொரு தருணத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.//
உண்மை தான்...
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நல்ல சிந்தனைகள். அருமை.அருமை..
"நேர்மறைச் சிந்தனைகளும், மனம் நிறைந்த சந்தோஷமும் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் சிறிதளவாவது நிரப்புகின்றன."
நல்ல சிந்தனை
வைஸ் அட்வைஸஸ், :-)
நல்ல வாழ்வியல் சிந்தனைகள்!
பொன்மொழிகள் ஜொலிக்கின்றன.அனைத்தும் நன்று.
எல்லா கருத்துக்களுமே நல்லா இருக்கு ரொம்ப பிடித்தது
.மறந்து விட்டதாக நினைப்பவையெல்லாம் ஏதாவதொரு தருணத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
அனத்தும் அருமை.
அனைத்து பொன்மொழிகளும் அருமை.
நல்ல பொன்மொழிகள்.
அனைத்தும் அருமை ஆனாலும் பத்துக்கு தனி ஷொட்டு!
4.வேலையை "இன்று" செய்து முடிக்காமல், நாளை செய்யலாமென்று தள்ளிப்போடும் சோம்பேறிகளின் வாழ்நாள் "நாளை"கள் மட்டுமே நிரம்பியதாகக் கழிந்து விடுகிறது.// இது எனக்கு வேண்டியது. எல்லாப் பொன்மொழிகளும் வாழ்க்கையில் நம்மைப் பாதிக்காமல் இருப்பதில்லை, நன்றி சாரல்.
நல்ல சிந்தனைகள்.
அனைத்துமே அருமையான சிந்தனைகள். விரும்பியது கிடைக்கா விட்டால் (2) கிடைத்ததை விரும்ப வேண்டும் என்று சூப்பர் ஸ்டாரும் சொல்லியிருக்கிறார்!! :))))
Post a Comment