(படம் கொடுத்து உதவிய இணையத்துக்கு நன்றி)
‘டட்ட்டடட்ட்…’ என்று ஒரே சீராகப்போய்க்கொண்டிருந்த ஆட்டோ வேகம் குறைத்து, ஒரு காரின் பின்னால் நின்றபோதுதான்,.. ‘ஓ.. சிக்னல் விழுந்துடுச்சா’ என்று நினைத்தபடி லேசாக தலையைத்தாழ்த்தி, பக்கத்தில் அமர்ந்திருந்த ரோஷினியைத்தாண்டி, கிடைத்த இடைவெளியில் தெரிந்த ஆட்டோமேடிக் சிக்னலுக்கு பார்வையை அனுப்பினேன். ரெய்டு வரப்போகிறார்கள் என்பதைத்தெரிந்துகொண்ட அரசியல்வாதியின் பல்ஸைப்போல சிகப்பு நிற எண்கள் வேகவேகமாக இறங்குவரிசையில் மாறிக்கொண்டிருந்தன.‘தீதி… ஒரு ரூபா கொடேன்.. காலைலேர்ந்து என் தம்பிக்கு சாயாகூட வாங்கிக்கொடுக்கமுடியலை.. பசிக்குது..’ என்றபடி பரிதாபமாக நோக்கியபடி, ரோஷினி தடுக்கத்தடுக்க ஆட்டோவுக்குள் தெரிந்த சல்வார்கால்களைத்தொட இடுப்பிலிருந்த தன்தம்பியுடன் குனிந்தாள்,.. நிமிர்ந்தபோதுதான் என்னைப்பார்த்திருக்கவேண்டும். வறுமையின் மொத்த உருவமாய் நின்ற அவள், அடுத்தவினாடியில் கழுகைக்கண்ட கோழிக்குஞ்சாய் ஓடி ரோட்டின் அந்தப்பக்கம் நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்னால் மறைந்துவிட்டாள்.
‘அந்தப்பொண்ணு ஏன் உன்னைப்பார்த்துட்டு ஒளிஞ்சு ஓடுது?..’ கேள்வியாய் நோக்கிய ரோஷினிக்கு பதில் சொல்ல எத்தனிக்குமுன் பச்சைவிளக்கு எரிந்து ஆட்டோ புறப்பட்டுவிட்டது. அவளுக்கு பதிலாய்ச்சொன்ன சொற்களை காற்றோடு அரைத்துச்சென்றது எங்களைக்கடந்த ட்ரக் ஒன்று. ‘அப்புறம் சொல்கிறேன்.. ‘ என்று கையசைத்துவிட்டு, ரயில்வே ஸ்டேஷன் முன்னால் வந்து நின்றதும் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய்க்கலந்து டிக்கெட் கூப்பன்களை தானியங்கி மெஷின்களுக்கு தின்னக்கொடுத்து, அடையாளம் வாங்கிக்கொண்டுவிட்டு திரும்பினேன்.
ப்ளாட்பாரத்தில் வந்து தூண்களைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரானைட் திண்ணைகள் ஒன்றில் வாகாக அமர்ந்துகொண்டோம். ‘பயணிகள் கவனத்திற்கு..’ என்று ஆரம்பித்து குறிப்பிட்ட இரண்டு ஸ்டேஷன்களுக்கு இடையே ரிப்பேர் வேலை நடப்பதால் சாயந்திரம் வரை அந்தப்பாதையில் மட்டும் ரயில்கள் ஓடாது என்பதை வருத்தத்துடன் சொல்வதாக ரயில்வே அறிவிப்பு ஒலித்து ஓய்ந்தது. நாங்கள் எங்களது ரயில் வருவதற்காக காத்திருந்த நேரத்தில்,…’ இப்ப சொல்லு..’ என்றபடி என் முகத்தை ஏறிட்டாள். விடமாட்டாள் போலிருக்கிறதே!!..
‘அது ஒண்ணுமில்லை.. வழக்கமா தினமும் அந்த சிக்னல் பக்கம் பார்க்கறதுதான். குடும்பம் அங்கியேதான் ப்ளாட்பார்முல வசிக்குது போலிருக்கு. அதான் பார்த்தியே, பத்துப்பதினஞ்சு பசங்க அங்கியே சுத்திக்கிட்டு, சிக்னல்ல நிக்கிறவங்ககிட்ட காசு கேக்கறதை..’
‘ஆமா,.. பார்த்திருக்கேன். சிலதுகள் வெறுமே காசு கேக்கும். சிலதுகள் இன்னிக்கு மாதிரி கால்ல விழுந்துடும். சில பசங்க போட்டிருக்கற சட்டையையோ, துப்பட்டாவயோ வெச்சு காரு கண்ணாடிகள தொடச்சுட்டு காசு கேக்கும். ப்பா.. பார்க்கவே பரிதாபமாயிருக்கும். காசு கொடுத்தா இதுகளை ஊக்குவிக்கறாப்ல ஆகிடுமேன்னும் தோணுது.. பசங்களைக்கடத்திட்டு வந்து இந்தத்தொழில்ல இறக்கி சம்பாத்தியம் செய்யற கும்பல் இன்னும் பெருகிடுமே. அதுக்காக, பார்த்துட்டு சும்மாப்போகவும் முடியலை. என்ன செய்யறதுன்னுதான் தோணலை..’
‘ஒரு வயசு வந்தப்புறம், சில ஆம்பிளைப்பசங்க கெட்ட சகவாசம் காரணமா, சமூகவிரோதச்செயல்கள்ல ஈடுபடறாங்க.. ஆனா, அந்தப்பொண் குழந்தைகள்?... அவங்க எதிர்காலம். அறிஞ்சும் அறியாமலும் இருக்கற வயசுல யாராச்சும் அவங்களை தப்பிதமா உபயோகப்படுத்தவும் ச்சான்ஸ் இருக்கு.. அது இன்னும் பரிதாபம். அதான், இப்ப பார்த்தோமே!!.. அந்தப்பொண்ணுகிட்ட இப்படி பிச்சை எடுக்கறதுக்கு பதிலா, குறைஞ்சபட்சம் சிக்னல்கள்ல ஏதாவது சின்னச்சின்ன பொருட்களை வித்துப்பொழைக்கலாமேன்னு டோஸ் விடுவேன். அதான், என்னைப்பார்த்ததும் ஓடுது..’
‘ இவ்ளோதானே.. எப்படியும் திரும்பிப்போகறச்சே அந்தவழியாத்தானே போகணும். நான் பார்த்துக்கறேன்…” என்று அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ரோஷினி.
போன வேலையை நல்லபடியாக முடித்துக்கொண்டு திரும்பியபோது, அதே ரோடு, அதே சிக்னலில் அதே பெண் பார்வைக்குக்கிடைத்தாள். இப்போது வேறு ஒரு வாகனத்தில், கார்க்கண்ணாடியை துடைத்துக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருந்தாள். ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னவோ.. சிக்னல் கிடைத்து அந்த வாகனம் கிளம்பியபோது, என்னவோ உதட்டுக்குள் திட்டுவதுபோல் தெரிந்தது. துப்பட்டாவை தோள்மேல் போட்டுக்கொண்டு ப்ளாட்பாரத்துக்கு திரும்பியவள், சத்தமில்லாமல் வந்து பின்னால் நின்ற எங்களைக்கவனிக்கவில்லை.
கவனித்து ஓடத்தயாரானவளை கையைப்பிடித்து நிறுத்தினாள் ரோஷினி. ‘ தீதி.. என்னை விட்டுடுங்க.. அப்பா அடிப்பாரு..’ என்று பார்வையை அங்குமிங்கும் செலுத்திக்கொண்டே அலைபாய்ந்தவளை அமைதிப்படுத்திப்பேசிய ரோஷினியை ஏறிட்டாள் அந்தப்பெண்.
‘வேற என்னதான் செய்யறது.. பிச்சை எடுக்கறது எனக்கும் பிடிக்கலைதான். வயிறுன்னு ஒண்ணுஇருக்கே.. ஏழையா, ப்ளாட்பாரத்துல பொறந்தது என் தப்பா?..’ வெறுப்பை உமிழ்ந்தன அவளது வார்த்தைகள்.
‘சரி.. அதுக்காக பிச்சை எடுக்கறது ரொம்ப ஒசத்தியோ..’ ரோஷினியும் விடவில்லை. ‘ இங்க பாரு. நான் N.G.O.வுல இருக்கேன்.. என்னால முடிஞ்ச உதவிகளைச்செய்யறேன். ஏன்னா, தேவைப்படறவங்களுக்கு உதவுறதுதான் எங்க வேலையே. உன்னாட்டம் எத்தனைபேரு பூவு, சின்னப்பசங்களுக்கு புக்கு, பென்சில்ன்னு கூட சிக்னல்ல வித்துப்பொழைக்கிறாங்க. உனக்கென்ன?..”
‘அதுக்கு காசு வேணுமே..’ தரையைப்பார்த்துக்கொண்டு பதிலளித்தாள் சிறுமி. ‘விவரமானவளாத்தான் இருக்கே.. நேத்து கூட இனிமே பிச்சை எடுக்காதேன்னு சொல்லி பத்து ரூபா கொடுத்தேனே. என்ன செஞ்சே?..’ என்னிடமிருந்து புறப்பட்ட கேள்விக்கணையை, ‘ எங்கப்பா குடிக்கிறதுக்கு புடிங்கிட்டுப்போயிட்டாரு..’ என்ற பதில் கணையால் முறித்துப்போட்டாள்.
‘சரி.. இப்ப நான் காசு தரமாட்டேன். அதுக்குப்பதிலா கொஞ்சம் பூவு வாங்கிட்டு வந்து தருவேன். எப்படி விக்கணும்ன்னும் சொல்லித்தருவேன். புத்தியா பொழைச்சுக்க. என்ன?..’ என்றாள் ரோஷினி.
மெல்ல தலையாட்டிய சிறுமியின் கைகளில், பக்கத்து செக்டரில் இருந்த மொத்தமாய் விற்பனை செய்யும் பூமார்க்கெட்டிலிருந்துநான் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்த,.. ஒரே சீராக வெட்டப்பட்டிருந்த பத்து மல்லிகைப்பூச்சரத்துண்டுகளை திணித்தாள். ‘ஒரு துண்டு நாலு மூணுலேர்ந்து நாலுரூபாய்க்குள்ள விக்கணும்.. பேரம் பேசி வாங்குறவங்களும் இருப்பாங்க. சட்னு ஒத்துக்கிட்டு ஒரேயடியா அவங்க சொல்ற விலைக்கு குடுத்துடாதே. விலையை குறைக்க மாட்டேன்னு கொஞ்ச நேரம் பிகு செஞ்சுக்கிட்டு அப்புறமா கொஞ்சமா குறைச்சுக்கொடு. எல்லாம் போகப்போக நீயே பழகிப்பே.. இப்ப ஓடு. சிக்னல் விழுந்துடுச்சு பாரு..’
ஏதோ பிறந்ததிலிருந்தே இதே தொழில்செய்துகொண்டிருப்பவள் போல ஒவ்வொரு வண்டியாக ஓடியோடி பூ விற்றுக்கொண்டிருந்தாள். ‘ அக்காவுக்கு பூ வாங்கிக்கொடுங்க சாரே.. வண்டிக்குள்ள இருக்கற சாமிபடத்துக்கு பூ போடுங்க ஐயா..’ ஒவ்வொன்றாய் விற்றுத்தீர்ந்துகொண்டிருந்தன. கோடுபோட்டால் ரோடு போட்டுவிடுகிறாளே.. சாமர்த்தியசாலிதான்.
அங்கேயே காத்துக்கொண்டிருந்த எங்களிடம் முகம் கொள்ளாப்பூரிப்புடன் திரும்பி வந்தாள். கையில் இரண்டு மூன்று பூத்துண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்தன. ஒரு பூத்துண்டு இரண்டு ரூபாய் என்று நான் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தது அவளுக்கு எத்தனை ரூபாய் லாபத்தைச்சம்பாதித்துக்கொடுத்திருக்கிறது என்று கணக்குப்போட்டு அவளுக்குச்சொன்னபோது நம்பமுடியாமல் விழிபிதுங்கப்பார்த்தாள்.
மலங்க மலங்க விழித்த அந்தக்குழந்தையை பார்க்க பரிதாபமாக இருந்தது..
லேசாக திரையிட்ட கண்ணீரை சமாளித்துக்கொண்டு, ‘ பார்த்தேயில்ல.. பூ விக்கிறப்ப உன்னை யாரும் அடிச்சுவெரட்டலை. வேணாம்ன்னாக்கூட மரியாதையா ‘வேணாம்மா’ன்னுதான் சொல்றாங்க. இந்த வாழ்க்கை உனக்கு வேணும்ன்னா சொல்லு.. என்னால முடிஞ்ச ஏற்பாடு செய்யறேன். உங்க அப்பாவ பத்தி கவலைப்படாதே.. தேவைப்பட்டா நாங்க லேசா மெரட்டிவைப்போம். பயப்படாதே..’ என்றேன்.
‘‘மெரட்ட தேவையிருக்காதுண்ணே.. அதை நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு வசதிப்பட்டா இதேமாதிரி தேவைப்படறப்ப ஒத்தாசை செய்யுங்க. அது போதும்..’ என்றவள், ‘அக்காவுக்கு பூ வாங்கிக்கொடுங்கண்ணா.. வெளியே கூட்டிட்டு வந்துருக்கீங்கல்ல..’ சின்னச்சிரிப்புடன் ஒரு துண்டு பூவை நீட்டினாள் என்னிடம்.
‘எங்கிட்டயேவா!!!.. அது சரி!!. ரெண்டு துண்டாவே கொடு..’ என்று சிரித்தபடி எட்டு ரூபாயை நீட்டினேன் பேரம் பேசாமல்.. அப்போதுதான் மலரத்தொடங்கியிருந்த அரும்புகள் மெலிதான வாசனையை அந்த பிராந்தியம் முழுவதும் பரப்பத்தொடங்கின.
டிஸ்கி: இந்த சிறுகதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி.
டிஸ்கி: இந்த சிறுகதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி.
58 comments:
அருமையான கதை
சூப்பர்
இது உண்மையா நடந்ததா இல்லை சிறு கதையா...???
படிக்கும் பொழுது நாமும் இப்படி ஏதாவது குழந்தைக்கு உதவ வேண்டும் எண்ணம் வருகிறது :))
மனதை தொட்ட கதை. வல்லமையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!
இவர்களுக்கு தேவை
வாய்ப்பு என்னும் வழிகள் தான்..
அனுதாபம் என்னும் வழிகளல்ல..
என் நடைபாதை மனிதர்கள் கவிதையில் நான் எழுதிய வரிகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது
அருமையான படைப்பு
அருமையான வாழ்த்துக்கள்
மனதை தொட்ட கதை.
மீன்களை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது நன்று.. கவிதை அருமை சகோ..
அருமையான கதை [[நிஜமா..??]] வாழ்த்துக்கள்......!!!
அருமையான கதை [[நிஜமா..??]] வாழ்த்துக்கள்......!!!
நட்சத்திர வாழ்த்துக்கள்.
வாங்க ராஜா,
ராஜாவே அருமையாயிருக்குன்னு சொன்னப்புறம் அப்பீல் கிடையாது :-)))
வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.
வாங்க சௌந்தர்,
ஏதாவதொரு சம்பவம் இப்படி இருந்திருந்தா நல்லாருக்குமேன்னு நினைக்கும்போதுதானே அது கதையாகுது. இதுவும் அப்படித்தான்.. கதை மட்டுமே :-))
உங்களால் ஆன உதவியை சமுதாயத்துக்கு செய்யுங்களேன் :-)
வாங்க சித்ரா,
ரொம்ப நன்றிங்க..
வாங்க ஷீ- நிசி,
ரொம்ப சரியான வரிகளைத்தான் மேற்கோள் காட்டியிருக்கீங்க.. அனுதாபம் எத்தனை நாளைக்கு துணைவரும்?..
நன்றி..
வாங்க தோழி பிரஷா,
வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க குமார்,
வாசிச்சதுக்கு நன்றிங்க..
வாங்க நாடோடி,
ரொம்ப சரியா சொன்னீங்க.. கத்துக்கொடுத்துட்டா அவங்களே அவங்க பாட்டைப்பார்த்துப்பாங்களே..
வாங்க மனோ அண்ணாச்சி,
மும்பையில் நீங்க கவனிச்சிருப்பீங்களே!!.. அதேதான்.. ஆனா இது நிஜமா நடக்கலை. கதை மட்டுமே :-)))
வாங்க சமுத்ரா,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
வாங்க சமுத்ரா,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
வாழ்த்துக்கள்.
அருமை.
நம்பிக்கை ஒளி பரப்பும் நட்சத்திரக் கதை.
மிக நன்று அமைதிச் சாரல்.
நெகிழ்வாய் பாடம் சொல்லும் கதை. அருமை.
இந்தச்சிறுகதையில் அருமையான பூ மணம் வீசி மனம் மகிழச்செய்கிறது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
மனதை வருடும் கதை... பாராட்டுக்கள்
கதை வழக்கம்போலத்தான். நல்லாருக்குன்னு சொல்ரேன். அதவிடுங்க, அங்க ஃபோட்டோ போட்டிருக்காங்களே, அது நிஜமா நீங்களா? காலேஜ் போற பொண்ணு, பசங்க இருக்காங்கன்னு சொன்னீங்களே? ஸோ ஸ்வீட்!!! :-))))))
கண் கலங்கிவிட்டது சாரல்..பரிதாபப்படுவதுடன் நின்றுவிடாமல் உதவியும் செய்ய வேண்டும்...நட்சத்திரத்தின் அறிவுறுத்தும் கதை...
கதை நன்று.
//அங்க ஃபோட்டோ போட்டிருக்காங்களே, அது நிஜமா நீங்களா? //
எங்க போட்டோ போட்டிருக்கீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே...?! உங்க போட்டோவை பத்திரிகை ஒன்றில் பார்த்த நினைவு. சரியா?
எப்பவும்போல கதையின் கருவும் நீங்கள் எழுதிய விதமும் அருமை சாரல் !
Very nice story, akka. Is that you in Vallamai magazine?
நடந்த கதையா கற்பனையா
என்னைப் பொறுத்தவரை இது எதுவாய் இருந்தாலும பரவாயில்லை
மொட்டுமலர பூமணம் வீசியது
அது போதும்
சிந்திக்க வைக்கும் பதிவு
தமிழ் மணம் நட்சத்திர
வரிசையில் இடம பெற்றதற்கு
வாழ்த்துக்கள் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பூங்கொத்து!
நட்சத்திர வாழ்த்துகள் :))
அருமையான கதை.
லவ்லி ஸ்டோரி... கருத்தும் கற்பனையும் எங்கயோ போயிட்டீங்க அக்கா... congrats for publishing in vallamai
நிஜமாவே சூப்பர். மனதைத் தொட்டது உங்கள் கதை.
வாங்க அமுதா,
வாழ்த்துகளுக்கும் வாசிச்சதுக்கும் நன்றிங்க..
வாங்க ரத்னவேல் ஐயா,
வாசிச்சதுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க..
வாங்க ராமலஷ்மி,
ரொம்ப நன்றிங்க..
வாங்க ஸ்ரீராம்,
வாசிச்சதுக்கு நன்றிங்க..
வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,
வாசிச்சதுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க.
வாங்க மாய உலகம்,
வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி.
வாங்க ஹூஸைனம்மா,
கதை உங்களுக்கு பிடிச்சிருந்ததுல எனக்கும் சந்தோஷமே :-)
வாங்க பாசமலர்,
ரொம்ப சரியான பாயிண்ட் :-))
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க அமைதி அப்பா,
கதை நல்லாருக்குன்னு சொன்னதுக்கு நன்றி..
நீங்க சொன்னது கரெக்ட்தான். 'தேவதை' பத்திரிகையில் என்னோட வலைத்தளத்தை அறிமுகம் செஞ்சப்ப போட்டிருந்தாங்க..
வாங்க ஹேமா,
வாசிச்சதுக்கு நன்றிப்பா..
வாங்க வானதி,
கதை நல்லாருக்குன்னு சொன்னதுக்கு தாங்கீஸ் :-))
வாங்க புலவர் ஐயா,
வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க அருணா மேடம்,
பூங்கொத்துக்கு நன்றிங்க.
வாங்க ஷங்கர்,
வாழ்த்துகளுக்கு நன்றி :-)
வாங்க உழவன்,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அப்பாவி,
எங்கியும் போகலை.. இங்கியேதான் இருக்கேன் :-)))
நன்றி வாசிச்சதுக்கு.
வாங்க இமா,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி :-)
ஹா. மிக மிக அருமை. உண்மையில் இப்படி நான்கு பேர் ஒவ்வொரு ஊருக்கும் இருந்தால் நாட்டில் பசி தொலையும்
ஹா. மிக மிக அருமை. உண்மையில் இப்படி நான்கு பேர் ஒவ்வொரு ஊருக்கும் இருந்தால் நாட்டில் பசி தொலையும்
வாங்க சுல்தான் ஐயா,
நீங்க சொன்னது ரொம்ப கரெக்டு.. எல்லாத்தையும் அரசாங்கமும் , சேவை நிறுவனங்களும்தான் செய்யணும்ன்னு எதிர்பார்க்காம தனி மனிதர்களும் சில விஷயங்களை செஞ்சா நல்லாத்தான் இருக்கும்..
Post a Comment