Saturday 6 August 2011

இளைய தலைமுறைக்கொரு சல்யூட்!!!...

( நன்றி- இணையம்).
1. 'டிர்ர்ர்ர்ரிங்....' வழக்கம்போல பள்ளிக்கூடம் முடிஞ்சதுக்கான கடைசி மணியடிச்சதும்,'ஹே...' என்ற கூப்பாடோடு வகுப்பறைக்கூண்டிலிருந்து விடுபட்ட சீருடைப்பட்டாம்பூச்சிகள் பறந்து வந்தன. சிலபேரைக்கூட்டிச்செல்ல அம்மாக்கள், தாத்தாக்கள், பாட்டிகள் வந்திருந்தாங்க. இன்னும் சிலபேர் இரண்டு,மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்காக காத்திருந்தாங்க.

பெரிய சைஸ் நான்கு சக்கரவாகனம்.. அதாங்க ஸ்கூல் பஸ்ஸில் ஏறி உக்காந்த குழந்தைகள், வகுப்பறையில் பாடம் நடத்தும்போது குடிக்க அனுமதிக்கப்படாமல் மீந்துபோன தண்ணீரை தாகமெடுத்த தொண்டையில் சரித்துக்கொண்டனர். அப்படியும் தண்ணீர் மீதமிருந்தது அவங்களுக்கு விளையாட்டுப்பொருளாவதற்காக.

'ச்சளப்....' ஒருத்தனின் உடையை நனைத்த புண்ணியத்தை கொட்டிக்கொண்டுவிட்டு சரேல்ன்னு புத்தகமூட்டையை சரணடைஞ்சது  ஒருத்தனின் தண்ணீர் பாட்டில். கோபப்படுறதுக்கு பதிலா, சிரிச்சுக்கிட்டே அவனுக்கு அபிசேகம் செய்தான் ஏற்கனவே நனைஞ்சவன்.

'பஸ்ஸுக்குள்ள தண்ணீரை சிந்தாதீங்கடா..' பசங்களுக்கும்,டிரைவருக்கும் துணையாக வரும் பெரியண்ணனின் குரல்,.. கிளம்புவதற்கு அடையாளமாக டிரைவர் கொடுத்த ஹாரனின் ஒலியோடு தேய்ஞ்சு மறைஞ்சது. பஸ்ஸின் ஜன்னலுக்கு வெளியே தலைகீழாக கவிழ்க்கப்பட்ட பாட்டிலிலிருந்து அருவியெனக்கிளம்பிய தண்ணீர், எதிர்காத்தால சிதறி,... பக்கத்துல வாகனங்கள்ல வந்துக்கிட்டிருந்தவங்க மேல பூஞ்சாரலைப்பொழிஞ்சதை ரசிச்சான் பாட்டிலுக்கு சொந்தக்காரன்... அவங்க திட்டுறதையும் பொருட்படுத்தாம..

கொளுத்துற கோடையில மக்களும்,மாக்களும்,மரஞ்செடி கொடிகளும் தண்ணீர் கிடைக்காம அவஸ்தைப்படறப்ப இப்படி தன் கண் முன்னால் தண்ணீர் வீணாவதை சகிக்காத,.. அதே பள்ளியைச்சேர்ந்த 'கிமயா' என்ற சிறுமிக்கு மட்டும்.. 'ஏதாவது செய்யணும் பாஸ்..'ன்னு தோணியது. பள்ளிக்கூட நிர்வாகத்தோட ஒத்துழைப்போட, வாசல்லயே ஒரு பிளாஸ்டிக் தொட்டிய வெச்சு, பசங்களை மிச்சம்மீதி இருக்கற தண்ணீரை அதுல கொட்டும்படி கேட்டுக்கிட்டா.. அப்படி சேகரிக்கப்பட்ட தண்ணீர் பள்ளிக்கூட வளாகத்துல இருக்கற தாவரங்களுக்கு ஊற்றப்பட்டது. இதனால், பள்ளிக்கூடத்துல இருக்கற தண்ணீர்த்தொட்டியில் நிறைய தண்ணீர் மிச்சப்பட்டது... சிறுதுளி பெருவெள்ளமென....

2. பாய்ந்தோடி வந்த லோக்கல் ரயில் நிக்கறதுக்கு முன்னாடியே, அடிச்சுப்பிடிச்சு ஏறின இரண்டு கல்லூரி மாணவிகளை எரிப்பது போல் பார்த்தார், ஏற்கனவே அங்கே நின்னுக்கிட்டிருந்த பெண்மணி ஒருவர். ஏறும்போது அவங்க காலை லேசா மிதிச்சுட்டாங்களாம். அதான் அம்மணிக்கு கோவம்.. 'அதான் மாத்திமாத்தி ஸாரி சொல்லிட்டோமில்ல.. இன்னும் எத்தன தடவைதான் ஸாரி கேக்குறது. லோக்கல்ல இப்படித்தான் கூட்டமிருக்கும்ன்னு உங்களுக்கு தெரியாதா?.. இடிபடாம வரணும்ன்னா,. உங்களுக்குன்னு ஸ்பெஷல் ரயில் விடச்சொல்லுங்க.." மாணவியொருத்தி பொரிஞ்சதும்தான் அம்மணியின் பார்வைக்கனல் குறைஞ்சது... ஆனா குறையலை.

பக்கத்துல இருந்தவங்களோட பார்வைகளெல்லாம், 'இந்தக்காலத்து பசங்களுக்கு பொறுமையே இல்லை.. மரியாதை தெரியலை'ன்னு சொல்றமாதிரியே இருந்தது. அப்பப்பார்த்து,...'டமுக்கு.. டம்.. டமுக்கு.. டம்..'ன்னு ஒரு ஏனோதானோங்கற ஒரு மேளச்சத்தம். அஞ்சாறு வயசிருக்கும் ரெண்டு குழந்தைங்க... பையனும் பொண்ணுமா. ரெண்டுத்துக்கும் ஒண்ணு இல்லைன்னா.. ஒண்ணரை வயசு வித்தியாசமிருந்தாலே அதிகம்.

ரயில்ல வாசக்கதவுக்கு நேரா இருக்கற அகலமான இடத்துல, பயணிகள் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்னுக்கிட்டிருந்த அந்த குறுகலான இடத்துல, பையன் வாகா குத்தவெச்சு உக்காந்துக்கிட்டு, மேளமடிக்க ஆரம்பிச்சான். பொண்ணு, ஒரு இரும்புக்கம்பி வளையத்தை வெச்சுக்கிட்டு, வித்தை காமிக்க ஆரம்பிச்சா.. சட்னு வளையத்தை பக்கத்துல வெச்சுட்டு, அப்படியே குட்டிக்கரணமடிச்சா பாருங்க.. எங்கே ரயிலுக்கு வெளியே விழுந்துடுவாளோன்னு ஒரு கணம் பதட்டமாயிடுச்சு.

எழுந்துவந்த சிறுமி தட்டேந்தி வசூலுக்கு வர, ரெண்டும், அஞ்சுமா காசுகள் கலகலத்துச்சு அந்தத்தட்டுல. டக்ன்னு அந்த கல்லூரி மாணவிகள், அந்தப்பசங்களை கிட்டே கூப்பிட்டு இருபது ரூபாய்களை எடுத்து நீட்டினாங்க. வாங்கிக்கிட்டு, மறுபடியும் அந்தப்பெண் குட்டிக்கரணமடிக்க தயாராக, அவ கையைப்பிடிச்சு,.. 'இங்கே பாரு.. இங்க இருக்கற எல்லோருடைய சார்பாவும்தான் அந்தக்காசைக்கொடுத்தேன். இந்தமாதிரி விபரீதமான வித்தையெல்லாம் செய்யாதே.. ஓடு..'ன்னாங்க. அடுத்த ஸ்டேஷன் வரவும் இறக்கியும் விட்டுட்டாங்க. இப்ப அவங்களை மத்த சக பயணிகள் பார்த்த பார்வையில் நிச்சயமா பெருமிதம் இருந்திச்சு. மனிதம் இன்னும் சாகலைப்பா..

'இந்தக்காலத்துப்பசங்கல்லாம் பெரியவங்களை எங்கேங்க மதிக்கறாங்க, மரியாதை கொடுக்கறாங்க ?..' அப்படீன்னு கேக்கறது எந்தக்காலத்துலயுமே வழக்கமாத்தான் இருக்குது. என்ன ஒண்ணு.. அந்தக்காலத்துல குழந்தைகளாயிருந்து இந்தக்காலத்து பெரியவங்களானவங்க கூட இதைச்சொல்லி புலம்பறதுதான் வேடிக்கை.

இந்தக்காலத்து குழந்தைகளுக்கு இன்னும் என்னென்ன தெரியாதுன்னு கேட்டா, ஒரு பெரிய லிஸ்டே வெச்சிருப்பாங்க. சமூக விழிப்புணர்வு குறைஞ்சுக்கிட்டு வருது, சுற்றுப்புறத்தை சுத்தமா வெச்சுக்கத்தெரியலை, மனிதாபிமான உணர்வும் குறைஞ்சுக்கிட்டே வருது, விருந்தோம்பல் போன்ற நல்ல பழக்கங்களும் தெரியலை. கத்துக்கொடுத்தாலும் கத்துக்கற பொறுமை இல்லை, அப்படி இப்படின்னு அடுக்கிடுவாங்க.

இந்தக்குற்றச்சாட்டுகளெல்லாம் ஓரளவு மட்டுமே உண்மையாயிருந்தாலும், அதுல பெத்தவங்களோட பங்களிப்பும் இல்லாமலில்லை. சின்ன வயசுலயே அவங்களுக்கு நல்ல பழக்கங்களை கத்துக்கொடுக்காம வளர்ந்தப்புறம் அதையெல்லாம் அவங்ககிட்ட எதிர்பார்க்குறோம். குழந்தைகளை குழந்தைகளா வளரவிடாம, நம்மோட கல்விச்சூழலும் அவங்களை அழுத்தி, குழந்தைப்பருவத்தை இனிமையா கழிக்கவிடாம செய்யுது. ஆனா, நம்ம தலைமுறையிலாவது இதையெல்லாம் உணர்ந்து சரி செய்ய முயற்சிக்கிறோம். அதன் பலனா வருங்காலத்தலைமுறையும் கொஞ்சம் கொஞ்சமா மீண்டுவருதுன்னே சொல்லலாம்.

இங்கே சொன்னது ஒருசில உதாரணங்கள்தான்.. இதேமாதிரி வெளிச்சத்துக்கு வராத இன்னும் எத்தனையோ வாலிப,வாலிபிகள் இருக்கக்கூடும். அந்த இளைய தலைமுறைக்கெல்லாம் ஒரு ராயல் சல்யூட்...

46 comments:

'பரிவை' சே.குமார் said...

//இங்கே சொன்னது ஒருசில உதாரணங்கள்தான்.. இதேமாதிரி வெளிச்சத்துக்கு வராத இன்னும் எத்தனையோ வாலிப,வாலிபிகள் இருக்கக்கூடும்//

Yes... 100% Correct.

சக்தி கல்வி மையம் said...

அந்த இளைய தலைமுறைக்கெல்லாம் ஒரு ராயல் சல்யூட்......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தந்தை தாயும் அரவணைத்து வளர்க்கும் குழந்தையே வாழ்க்கையில் வெற்றிப்பெரும்..

பெற்றோரின் பராமரிப்பு இல்லையென்றால் அவ்வளவுதான்...

ஹேமா said...

சாரல் அசத்தலான பதிவு.என் பார்வையின்படி என்னதான் பெற்றவர்கள் சொல்லிக்கொடுத்தாலும் இதுதான் நம் வழி,கலாசாரம், பண்பு,பழக்கம் என்பதை சுயஉணர்வோடு மனதில் ஏற்றிக்கொண்டால் மட்டுமே நல்ல எதிர்காலக் குழந்தைகள் நம்மோடு இருப்பார்கள் !

ஸ்ரீராம். said...

அருமை. ஹேமாவின் கருத்துதான் எனக்கும். எப்போதுமே இளைய தலைமுறையிடம் வயதுக்குரிய குறும்பும் இருக்கும். பெரியவர்கள் மூலம் மனதில் பதிந்துள்ள பொறுப்புணர்வும் இருக்கும்.

ஹுஸைனம்மா said...

//சின்ன வயசுலயே அவங்களுக்கு நல்ல பழக்கங்களை கத்துக்கொடுக்காம வளர்ந்தப்புறம் அதையெல்லாம் அவங்ககிட்ட எதிர்பார்க்குறோம்//

கரெக்டுப்பா. ஒரு வயசுல, இந்த நல்லப் பழக்கங்களை அவங்க விட்டுட்டாக்கூட, பின்னாளில் அதன் நற்பயனை நிச்சயம் உணர்வார்கள். தொட்டில் பழக்கம் விட்டுப் போகாது.

பாச மலர் / Paasa Malar said...

இந்தக் காலகட்டத்துக்குத் தேவையான பதிவு..வாழ்த்துகள்

அமுதா கிருஷ்ணா said...

உண்மை..

Rathnavel Natarajan said...

அந்த இளைய தலைமுறைக்கெல்லாம் ஒரு ராயல் சல்யூட்...


நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

vidivelli said...

இளைய தலைமுறை தொடர்பான கருத்துக்கள் பலவற்றை சொல்லுகிறது உங்க பதிவு..
அருமையான பகிர்வு...
அன்புடன் பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்....

குறையொன்றுமில்லை. said...

குழந்தைகளை வளர்ப்பதில்
கவனமாகத்தான் இருக்க்னும்
வெரும் கண்டிப்பு மட்டுமே
இல்லாம இதமா சொன்னா
கேப்பாங்க்தான்.

ஜெய்லானி said...

அருமையான கருத்துக்கள் சூப்பர் :-)

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய நிலைக்கு தகுந்த பொருத்தமான பதிவு. பாராட்டுக்கள்.

Ahamed irshad said...

தேவையான‌ ப‌திவு..



ந‌ட்ச‌த்திர‌ வாழ்த்துக்க‌ள்.

ந‌ல‌மா..

மாய உலகம் said...

//, நம்மோட கல்விச்சூழலும் அவங்களை அழுத்தி, குழந்தைப்பருவத்தை இனிமையா கழிக்கவிடாம செய்யுது. //

கல்வி அவசியந்தான் கவுரவுத்துக்கான கல்வி நம்முடையா வாழ்க்கையை உணர வைக்காமல் குழந்தை பருவத்தை மட்டுமல்ல நம் முழுபருவத்தில் எவ்வளவோ விசயங்களை அழித்துவிடுகிறது....பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

ஆமினா said...

அருமையான கட்டுரை

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

/இப்ப அவங்களை மத்த சக பயணிகள் பார்த்த பார்வையில் நிச்சயமா பெருமிதம் இருந்திச்சு. மனிதம் இன்னும் சாகலைப்பா../

மனதில் நம்பிக்கை பூக்குது. நல்லதொரு பகிர்வு சாரல்.

இராஜராஜேஸ்வரி said...

இளைய தலைமுறைக்கெல்லாம் ஒரு ராயல் சல்யூட்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

நல்லவங்களை காலம் நமக்கு சீக்கிரமே அடையாளம் காட்டுது.

வரவுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேடந்தாங்கல்-கருன்,

வாசிச்சதுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

அரவணைப்பும் இருக்கணும்,.. அதை தவறுதலா பயன்படுத்தாத குழந்தைகளும் இருக்கணும்.. அப்படி இருந்தா எல்லாம் நலமே..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

நீங்க சொன்னது சரிதான். அதே அர்த்தத்துல இங்கெல்லாம் ஒரு பழமொழி சொல்லுவாங்க.. 'குதிரைக்கு கொள்ளு போடறது நம்ம வேலை, அதை திங்கறதா இல்லையான்னு குதிரைதான் முடிவு செய்யணும்'ன்னு சொல்லுவாங்க.

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

வயசுக்குரிய குறும்பு ஒரு குறிப்பிட்ட வய்சு வரைக்கும்தான் இருக்கும்.அதுக்கப்புறம் ஏற்கனவே ஊட்ட்ப்பட்ட பொறுப்புணர்வுதான் காலமுழுக்க துணைவரும்.. சரிதானா!!..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

ரொம்ப சரியா சொன்னீங்கப்பா..

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விடிவெள்ளி,

நாளைய உலகம் அவங்க கையிலேதானேங்க :-))

வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

ரெண்டும் கலந்து இருக்கணும்..

இந்த உலகம்,.. ரொம்பவும் இனிப்பா இருந்தா முழுங்கிடும், ரொம்பவும் கசப்பா இருந்தா துப்பிடும். அதை அனுசரிச்சு எப்போ எது தேவையோ அதை செய்யணும்ன்னு நான் நினைக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

வாசிச்சதுக்கும் வரவுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா மேடம்,

பூங்கொத்துக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா மேடம்,

பூங்கொத்துக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

வாசிச்சதுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நலமுடன் நன்றி :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

ரொம்ப சரியா சொன்னீங்க..

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
:-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நிச்சயமா.. ஒன்னு ரெண்டு இடத்துல நடக்குற நல்லவிஷயங்கள் எல்லா இடங்களிலும் நடக்க ரொம்ப நாளாகாது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நிச்சயமா.. ஒன்னு ரெண்டு இடத்துல நடக்குற நல்லவிஷயங்கள் எல்லா இடங்களிலும் நடக்க ரொம்ப நாளாகாது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

நம்ம எல்லோரோட சல்யூட்டும் உரித்தாகட்டும் :-))

கோமதி அரசு said...

பள்ளிக்கூட நிர்வாகத்தோட ஒத்துழைப்போட, வாசல்லயே ஒரு பிளாஸ்டிக் தொட்டிய வெச்சு, பசங்களை மிச்சம்மீதி இருக்கற தண்ணீரை அதுல கொட்டும்படி கேட்டுக்கிட்டா.. அப்படி சேகரிக்கப்பட்ட தண்ணீர் பள்ளிக்கூட வளாகத்துல இருக்கற தாவரங்களுக்கு ஊற்றப்பட்டது. இதனால், பள்ளிக்கூடத்துல இருக்கற தண்ணீர்த்தொட்டியில் நிறைய தண்ணீர் மிச்சப்பட்டது... சிறுதுளி பெருவெள்ளமென....//

சிறுதுளி பெருவெள்ளம் தான் அந்த குழந்தைக்கு நிச்சியம் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
பெருதன்மையான் குழந்தைகள் இருக்கிறார்கள் நிறைய.

இந்த மாதிரி குழந்தைகளை அறிமுகபடுத்தியதற்கு வாழ்த்துக்கள்.

sultangulam@blogspot.com said...

உண்மைதான். இந்த காலத்து பிள்ளைகள் பலவற்றை இழந்தாலும் சிலவற்றை பெற்றிருக்கிறார்கள்.

நாடோடி said...

உண்மை தான்..

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு அதிகம்.. வாழ்த்துக்கள்..

தெய்வசுகந்தி said...

உண்மை!!!

சாந்தி மாரியப்பன் said...

கருத்து தெரிவிச்ச அனைவருக்கும் நன்றி.
[im]http://greetings.webdunia.com/cards/tm/thank_you/hin_thanks_cs-5.jpg[/im]

LinkWithin

Related Posts with Thumbnails