இங்கே மும்பையில் கண்ணனின் பிறந்த நாள் அன்னிக்கு 'தஹி ஹண்டி'ன்னு ஒரு உற்சவம் தெருவுக்குத் தெரு நடக்கும். நம்மூர் உறியடித் திருவிழாதான் அது. உயரத்தில் தொங்கவிடப் பட்டிருக்கும் ஒரு அலங்கரிக்கப்பட்ட பானையில், பாலும் தயிரும், சில்லறைக் காசுகளும் இருக்கும். சில இடங்களில் சாயம் கலக்கப்பட்ட தண்ணீரையும் நிரப்புவதுண்டு.
பானையின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இரண்டு பக்கமும் ரொம்ப உயரமான மாடிகள்ல இழுத்துக் கட்டியிருப்பாங்க. இந்த தயிர்ப் பானை கட்டப்படும் உசரம் முன்னெல்லாம் இரண்டு மாடிகள் அளவுல இருந்தது,.. இப்பல்லாம், ஏழெட்டு மாடிகள் உசரத்துக்கும், சில இடங்கள்ல அதுக்கும் மேல, க்ரேன் கொண்டும் உசரத்தை கூட்டிக்கிறாங்க. இந்த உசரம் சர்வ சாதாரணமா முப்பது நாற்பது அடி உசரம் வரைக்கும் போகும்.
உறியடிக்கிறவங்களை இங்கே கோவிந்தாக்கள்ன்னு சொல்லுவோம். கண்ணனோடு சேர்ந்து வெண்ணெய் திருடித் தின்ன, அவனது நண்பர்கள் குழாமும் போகுமாம்.அவங்களைத்தான் கோவிந்தாக்கள் ஞாபகப்படுத்தறாங்க. உறியடிக்கிறதுக்கு ஒவ்வொரு குழுக்களா சேர்ந்துதான் கோவிந்தாக்கள் போவாங்க.
ஒவ்வொரு குழுவிலும் சுமார் 100 அல்லது 150 கோவிந்தாக்களோ, அதுக்கு மேலயோ இருப்பாங்க. உறியடிக்க வந்ததும், ஒவ்வொரு குழுவா தங்களோட புஜபல பராக்கிரமத்தோடு, தங்களால பானை கட்டப்பட்டிருக்கும் உசரத்தை எட்ட முடியுமான்னும் காட்டறதுக்காக ஒருத்தர் தோள்ல ஒருத்தர் ஏறி நின்னு பிரமிட் செஞ்சு காமிச்சு, ஒரு சின்ன டெமோ கொடுப்பாங்க. ஒவ்வொரு குழுவா, பானையை உடைக்க முயற்சி செய்வாங்க.

இதுல எந்த குழு, பானையோட உசரத்தை எட்டற அளவுக்கு, பிரமிட் செஞ்சு காமிக்குதோ அவங்கதான் அனேகமா ஜெயிப்பாங்க. அந்த உசரத்தை எட்ட முடியாதவங்க, அங்கிருந்து பின்வாங்கி வேற இடங்கள்ல, உறியடி உற்சவத்துக்கு போயிடுவாங்க. சிலசமயங்கள்ல ரெண்டு சம பலமுள்ள குழுக்களுக்கிடையில போட்டி நடக்கும். அதுல ஜெயிக்கிறவங்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கும். ஜெயிக்கலைன்னா.. அதான் ஜெயிக்கலையே.. ஒண்ணும் கிடைக்காது.
இதில், தானாவருகே மஸ்காவ் என்ற இடத்தில்தான் உலகிலேயே மிக உயரமான பிரமிட்ன்னு கின்னஸ் சாதனை அந்தஸ்து பெற்ற ஒன்பது நிலை பிரமிட் அமைச்சிருக்காங்க. போன வருசத்துல நடத்துன தங்களோட சாதனையை தாங்களே முறியடிக்கணும்ன்னு இந்த வருசம் பத்து நிலைகள்ல பிரமிட் அமைக்க முயற்சி செஞ்சுருக்காங்க. ஆனா, முயற்சி வெற்றி பெறலை.
ல்அ
எல்லா கோவிந்தாக்களும் பிரமிட் மாதிரி ஒருத்தர் தோள்ல இன்னொருத்தர் ஏறி நின்னுக்க, கடைசியா, ஒரு சின்னப்பையன் எல்லாத்துக்கும் மேல ஏறி, பானையில் வைக்கப்பட்டிருக்கும் தேங்காயை எடுத்து, பானையை 'டமார்....'ன்னு உடைக்க, பானையிலிருக்கும் தயிர் அத்தனை பேர் மேலயும் சிந்தும். உறியடிக்கறப்ப, அவங்களை உற்சாகப்படுத்த, "ஆலா ரே.. ஆலா. கோவிந்தா ஆலா.."ன்னு பாடுவாங்க. 'கோவிந்தன் வந்து விட்டான்' என்பதே இதன் பொருள்.

இதுல, கோவிந்தாக்கள் மேல தண்ணீர் ஊத்தணும்ங்கற சம்பிரதாயத்துக்காக, சுத்தியிருக்கற கட்டிடங்கள்ல இருந்து வாளி வாளியா தண்ணீரை ஊத்திக்கிட்டே இருப்பாங்க. அதையெல்லாம் சமாளிச்சு ஜெயிக்கறதுதான் சாகசம். (சில இடங்கள்ல பசங்க,கேட்டு வாங்கி தண்ணீரை தங்களோட மேல ஊத்திக்கிறதுண்டு). சில சமயங்கள்ல, பிரமிட்ல மேல இருக்கறவங்க வழுக்கி விழுந்து மொத்த அமைப்பும் 'டமடம' ன்னு சரியும். சில சமயங்கள்ல காயமும் படுமாம். இந்த வருசம் குறைஞ்ச பட்சம் 250 பேருக்கும் மேலே,இப்படி காயம் பட்டதால மருத்துவ மனைகள்ல அனுமதிக்கப் பட்டிருப்பதா புள்ளி விவரம் சொல்லுது.
இப்பல்லாம் அவங்களுக்கு மட்டுமல்ல, சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கறவங்களுக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கு. இது எதுக்குன்னா, மனித பிரமிடு கீழே விழும்போது, அதை உருவாக்கினவங்களுக்கு மட்டுமல்ல, சுத்தி நிக்கிறவங்களுக்கும் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அந்தளவுக்கு கலந்துக்கறவங்களும், உறியடிக்கிற கூட்டமும் வருசா வருசம் பெருகிட்டே இருக்கு.

இப்பல்லாம், பெண்களும் இப்படியோர் கோவிந்தா குழுவமைச்சு, உறியடி உற்சவத்துல கலந்துக்கறாங்க. இங்க நவி மும்பையிலிருக்கும் ஐரோலியில் (Airoli) அப்படியொரு பெண் கோவிந்தாக்கள் குழுதான் இந்த வருசம் உறியடிக்கப்போறாங்களாம்.. ரொம்பவே கட்டுப்பெட்டி நகரம்ன்னு பேரெடுத்த பூனாவிலும் கூட, மும்பையைப் பார்த்து, பெண் கோவிந்தாக்கள் குழு அமைக்கப்பட்டிருக்கு.
பெண் கோவிந்தாக்கள் குழுவில் அறுபது வயசு பேரிளம் பெண்ணிலிருந்து ஆறு வயசு சிறுமி வரைக்கும் பங்கெடுத்துக்கறாங்க. படிச்சவங்க, படிக்காதவங்கன்னு எந்த வித்தியாசமும் இங்கே கிடையாது. அத்தனை கோவிந்தாக்களும் ஒரே மாதிரி சீருடை போட்டுக்கிட்டு உறியடிக்கிறதைப் பார்க்கவே அத்தனை அம்சமா இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் நிறையப் பேர் இருக்கறதால, எல்லோருக்கும் சீருடை, சாப்பாட்டுச் செலவு, போக்குவரத்துச் செலவுன்னு ஒரு நாளைக்கு ஒரு பெரிய தொகை செலவாகுமாம்.
ஆண்,பெண் கோவிந்தாக்களின் ஒவ்வொரு குழுவும், கோகுலாஷ்டமி அன்னிக்கு குறைஞ்ச பட்சம் ஏழெட்டு இடங்கள்லயாவது உறியடிப்பாங்க. ஒவ்வொரு இடத்துலயும் மேள தாளத்தோட ஒரு பெரிய ட்ரக் நிறைய அவங்க வர்றதும், போறதும் பார்க்கவே அத்தனை உற்சாகமா இருக்கும்.
இத்தனையும் இவ்ளோ நாளா சாகசத்துக்காக மட்டுமே நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பல்லாம் பரிசுத் தொகையையும் கணக்கிலெடுக்கறாங்க. பரிசு எவ்ளோன்னு சொன்னா, மயக்கம் போட்டு விழுந்துடாதீங்க. ச்சும்மா.... ரெண்டு, மூணு லட்சத்தில் இருந்துதான் ஆரம்பிக்குது.
மொதல்லயே, இந்த இடத்துல இவ்ளோ பரிசுன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவாங்க. அன்னிக்கு, அப்படியொரு போஸ்டரைப் பார்த்தேன்... 2,555,55/-ன்னு அறிவிச்சிருந்தாங்க. இன்னொரு இடத்தில 11,00000/- தானாம். இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே, தானா என்னும் பகுதியில் அறிவிக்கப் பட்டதுதான் கூடுதல். தொகை ஒண்ணும் அதிகமில்லை.. வெறும் இருபத்தைந்து லட்சம் மட்டுமே.

48 comments:
கோவிந்தாக்கள் ஒவ்வொருவராக மேலே ஏறுவது
ஏதோ தாமரை இதழ்கள் ஒவ்வொன்றாய் மலர்ந்து
விரிவதைப் போலே மிக மிக நேர்த்தி
பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கிறது
மிக அழகாக பதிவு செய்து நேரடியாகப்
பார்ப்பதைப் போல பதிவாக்கித்தந்தமைக்கு நன்றி
தானா என்னும் பகுதியில் அறிவிக்கப் பட்டதுதான் கூடுதல். தொகை ஒண்ணும் அதிகமில்லை.. வெறும் இருபத்தைந்து லட்சம் மட்டுமே.
..... Oh my!
சுவாரசியமான தகவல்களுடன், பதிவு தூள் கிளப்புது.
சுவாரஸ்மான தகவல்க்ள....
கிருஷ்ண ஜெயந்திஅன்று எங்கள் ஊரிலும் உரியடி நிகழ்ச்சி நடந்தது...
தானாவுல தான் என் மகன் இருக்கான்
அப்போ ஒருமுறை தையாண்டி பாக்க
கூட்டிண்டுபோனா. பாட்டும் கூத்துமா
ஒரே அமர்க்களமாஇருந்தது.
புது தகவல்கள் நல்லாயிருக்கு.ஆனால் அமெளண்ட்ம் ஏகப்பட்டதாக இருக்கு
பரிசுத் தொகையையும் கணக்கிலெடுக்கறாங்க. பரிசு எவ்ளோன்னு சொன்னா, மயக்கம் போட்டு விழுந்துடாதீங்க. ச்சும்மா.... ரெண்டு, மூணு லட்சத்தில் இருந்துதான் ஆரம்பிக்குது.
அம்மாடி பேசாம கோவிந்தா ஆகிடலாமா?
உறியடி காணொளி அருமை
சுவாரசியமான தகவல்களுடன் மிகவும் அருமையானதொரு பகிர்வு.
சுவாரசியமான தகவல்கள் .அருமை
அருமையான பதிவு ...வீடியோ காட்சியும் அருமை ... நம்ம ஊர்பக்கமெல்லாம் கொஞ்சம் காசு பணம் வந்துட்டா இந்த மாதிரி திருவிழா எல்லாத்தையும் ஷாட்டா முடித்து விடுகிறார்கள்...
போன பதிவில் நான் கேட்ட கேள்விக்கு எனக்கு தனிப் பதிவாக பதில்! நன்றி ஹை!
அத்தனை கோவிந்தாக்களும் ஒரே மாதிரி சீருடை போட்டுக்கிட்டு உறியடிக்கிறதைப் பார்க்கவே அத்தனை அம்சமா இருக்கும். //
பகிர்வும் அம்சமாக அனைவரையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்துச் சென்றதைப்போல் உற்சாகமளிக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
மும்பைக்கே கூட்டிட்டு போனது போல் உள்ளது. முதல் முறையா உறியடி திருவிழா பற்றி இவ்ளோ விஷயம் படிக்கிறேன்.
என்னான்னு சரசரன்னு ஏறுறாங்க.. பாக்கிற நம்க்குத்தான் திகைப்பா இருக்கு!!
மிகத் திறமையான விளையாட்டு!
போன வருட விழா பற்றி செய்திகளில் பார்த்தேன். பரிசுத் தொகை அதிகம் என்பதால் இப்போதெல்லாம் அதற்கு விளம்பரங்கள் கூட வருகிறது... நிறைய விளம்பரதாரர்கள் பெருகிவிட்டார்கள்...
நல்ல தகவல்களுக்கு நன்றி சகோ.
ஓ நைஸ்..
உறியடி அருமை
முன்பு படத்தில் தான் பார்த்து இருக்கேன்
உறியடி உற்சவமும், கோவிந்தாக்களின் தகவல்கள், காப்பீடு என எல்லாமே சுவாரசியமான தகவல்கள்.
பரிசுத்தொகை!!!!!!!!!!!!
wov ....super Shanthy. Really nice. congrats.
அருமையான பகிர்வு. தானாவில் இருந்த போது இதைப் பார்க்கத் தவறி விட்டிருக்கிறேனே.
நல்ல பதிவு...
நேரில் பார்க்கவேண்டும் போல் உள்ளது
உறி உற்சவத்தை .,
கோவிந்தகளையும்
வாங்க ரமணி,
இடுகை மட்டுந்தான் என்னோடது. யூ டியூபுல போட்டதை சுட்டுட்டு வந்துட்டேன். இப்பல்லாம் ராத்திரி பத்து மணிக்கு மேலத்தான் தஹி ஹண்டி உடைக்கவே இறங்கறாங்க. அதனால நானே நேரடியாப் போயி பதிவு செய்யறது கொஞ்சம் கஷ்டமான காரியம்.
ஆனால் நேரடியா பார்க்க ரொம்பவே த்ரில்லா இருக்கும்.
வாங்க சித்ரா,
ஆமாங்க. ரொம்ப குறைச்சலான தொகையா இருக்குதில்லே :-)
வாங்க சௌந்தர்,
நம்மூர்லயும் கிருஷ்ணன் கோயில்கள் இருக்குமிடத்துல எல்லாம் உறியடி கட்டாயம் நடக்கறதுண்டுதான். அவனது திருவிளையாடல்கள்ல இதுவும் ஒண்ணு இல்லியா :-)
வாங்க தேன்கூடு,
மீண்டும் இயங்க ஆரம்பிச்சது அறிந்து மகிழ்ச்சி.
வரவுக்கு நன்றி.
வாங்க லஷ்மிம்மா,
உண்மைதான். பாண்டு வாத்தியம் முழக்கி அமர்க்களப்படுத்திடுவாங்க. திருவிழாவுக்கான உற்சாகச் சூழல்தான் எங்கியும் இருக்கும் :-)
வாங்க திருமதி ஸ்ரீதர்,
தொகை கூடுதல்தான். அதே சமயம் அதுக்கேத்த மாதிரி ரிஸ்க்கும் கூடுதல்ங்க..
வாங்க கோகுல்,
ஆஹா.. கோவிந்தா ஆகிடுங்க. ஆனா, பத்தாவது வரிசையில் எல்லாருக்கும் மேல நின்னு நீங்கதான் தயிர்ப்பானையை உடைக்கும் கோவிந்தாவா இருக்கணும். ரைட்டா :-)
வாங்க மாய உலகம்,
பார்க்கறச்சேயே பிரமிப்பா இருக்குதில்லையா..
வாங்க குமார்,
வாசிச்சதுக்கு மிக்க நன்றி.
வாங்க கோபிராஜ்,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க தினேஷ்குமார்,
எங்கூர்ல எந்தவொரு கொண்டாட்டமும் அமைதியா நடக்காது. வாழ்க்கை என்பது இன்னிக்கே முடிஞ்சுடப் போறதைப்போல அவ்ளோ ஆர்ப்பாட்டமா நடக்கும் :-)
வாங்க ஸ்ரீராம்,
கிருஷ்ணாவதாரம் பற்றி ராமாவதாரம் அறிஞ்சும் அறியாததுபோல் கேட்டாலும் சொல்லாம இருக்க முடியுமா (ஒரு இடுகை தேத்த ஐடியா கொடுத்ததுக்கு தன்யவாத் ஹை :-))
வாங்க ராஜராஜேஸ்வரி,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க சித்ராக்ருஷ்ணா,
நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமா கொண்டாடப்படுகிறது..
கேள்விப்படும் போது ஒவ்வொண்ணும் ரொம்பவே ஆச்சரியமூட்டுவதென்னவோ உண்மைதான்.
வாங்க ஹூஸைனம்மா,
இதன் பின்னாடி எக்கச்சக்க ப்ராக்டீஸ், விழுப்புண்கள் இருக்குங்க :-)
வாங்க சங்கரலிங்கம் அண்ணா,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி.
வாங்க ஷீ- நிசி,
உண்மைதான். கொஞ்சம் கவனக் குறைவா இருந்தாலும் ஆபத்து உண்டு.
வாங்க வெங்கட்,
வியாபார உலகம்ங்க இது. இப்ப புள்ளையார் இருக்கும் கொட்டகைகளிலும் வெளம்பரங்கள் மின்னுது.
வாங்க மாதேவி,
வாசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க ஜலீலாக்கா,
இந்திப்படங்களில் எல்லாப் பண்டிகைகளையும் அழகா காட்டியிருப்பாங்க. இப்போ, தஹி ஹண்டியின் போது பாடப்படும் 'கோவிந்தா ஆலா ரே ..'ங்கற பிரபலமான பாட்டு கூட மறைந்த நடிகர் 'ஷம்மி கபூரின்' ஒரு படத்துல வர்றதுதான்.
வாங்க கோவை2தில்லி,
இன்னும் சொல்ல விட்டுப் போனது நிறைய இருக்குங்க. உங்க பொறுமையை சோதிக்க மனசு வரலை :-)
எவ்வளவுக்கெவ்வளவு பரிசு கூடுதலா இருக்கோ, அவ்வளவுக்கவ்வளவு ஆபத்தும் இருக்குங்க :-)
வாசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க சங்கரி,
நேரமெடுத்து வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க ராமலஷ்மி,
ஆஹா.. ச்சான்ஸ் போச்சே.. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. மும்பைக்கு மறுபடியும் ஷிப்ட் ஆகிடுங்க ;-)
வாங்க சின்னத்தூரல்,
ஆஹா, கவிதைங்க உங்க பேரு :-)
கோயம்புத்தூர் டு மும்பை ப்ளைட் புடிச்சு வந்தா நேர்லயே பார்க்கலாமே ;-)
திருவோணத் திருநாள் இனிய வாழ்த்துக்கள்.
Post a Comment