Sunday, 7 August 2011

பாவ்பா.....ஜி வைபோகமே...

'பாவ்பாஜி' மும்பையின் பிரபலமான உணவுவகைகளில் ஒண்ணு. வட நாட்டுல எல்லோரையும் மரியாதையா அவங்க பேரோடயோ உறவைக்குறிக்கும் சொல்லோடயோ 'ஜி' என்ற விகுதியைச்சேர்த்தே கூப்பிடுவாங்க. 'இந்த' 'ஜி'..  அந்த 'ஜி' இல்லை :-)). பாஜின்னா கறின்னு அர்த்தம்.  'பாவ்'ன்னு சொல்லப்படும் பன்னை,..  காய்கறிகளைக்கொண்டு செஞ்ச கறியைத்தொட்டுக்கொண்டு சாப்பிடுவாங்க. கறியோட மேல, நறுக்கிய கொத்துமல்லியிலை,நறுக்கிய வெங்காயம், சுட்ட அல்லது வறுத்த அப்பளம் (நொறுக்கியது) போட்டுச்சாப்பிட்டா.... ஸ்ஸ்ஸ்!!!! அதுவும் இந்த மழைக்காலத்துல இதான் இப்ப ஹாட் ஸேல்.

வீடுகள்ல நைட் இதான் டிபன்னா,.. மத்தியானத்துலேர்ந்தே வயித்தைக்காலியா வெச்சுக்கற ஆட்களும் உண்டு :-) செய்யறதும் ஈஸிதான். என்ன.. வட நாட்டுல கிடைக்கிற 'பாவ்' மத்த இடங்கள்ல கிடைக்கறதில்லை. அதனாலென்ன.. ப்ரெட்டைத்தொட்டுக்கிட்டும், அந்தந்த இடங்கள்ல கிடைக்கற பன்னை துணைக்கு வெச்சுக்கிட்டும் சாப்டலாமே. நல்லாவே பொருந்தும்.

சுமாரான அளவுல ஒரு காலிஃப்ளவர்.. மழைக்காலத்துல எதுவுமே சுமாரா கிடைக்கலை,.. எல்லா காலிஃப்ளவருமே ஃப்ரெஷ்ஷா, ஜூப்பராதான் இருக்குது ன்னாலும் பரவால்லை. அளவு நடுத்தரமா இருந்தாக்கூட போதும் :-))

ஒரு கப் உரிச்ச பட்டாணி,.. உரிக்காததுதான் மார்க்கெட்டுல கிடைக்கும். கால்கிலோ வாங்கிட்டு வந்து உரிச்சு ஃப்ரிஜ்ஜுல வெச்சுக்கிட்டா, அடுத்ததடவை செய்யறதுக்கோ,.. இல்லைன்னா வேற க்ரேவிகள் செய்யறதுக்கோ உபயோகப்படுத்தலாமில்ல..

 நடுத்தர அளவுல ஒரு கேரட்டும் ஒருஉருளைக்கிழங்கும் ,.. தோலுரிச்சு வட்டவட்டமா வெட்டி வெச்சுக்கோங்க. அதெல்லாம் முடியாது!!.. என்னிஷ்டப்படி சின்னதாதான் வெட்டுவேன்னாலும்.... சரி. ஓ.கே; உங்க இஷ்டம்.

ஒரு மழையில நனையாத காய்.. அதான்,.. 'குடை'மிளகாயையும் நீள்வாக்குல நறுக்கி வெச்சுக்கோங்க. இப்ப,.. நறுக்கப்பட்ட எல்லாக்காய்களையும் ஒரு பாத்திரத்துல போட்டு அது மூழ்கறவரைக்கும் தண்ணி ஊத்தி தேவையான அளவு உப்புப்போட்டுக்கோங்க. அந்தப்பாத்திரத்தை குக்கர்ல வெச்சு, குழையறவரைக்கும் வேகவெச்சு எடுங்க. (உங்க வீட்டு குக்கர் எத்தனை விசிலடிக்கும்ன்னு எனக்கு தெரியாதே. எங்கூட்டு குக்கர்ல நாலுவிசில் அளவுக்கு வெச்செடுப்பேன் :-))

அப்படியே மூணு தக்காளிகள், மூணு வெங்காயங்கள், மூணு இஞ்ச் அளவுல இஞ்சித்துண்டுகள், மூணு+மூணு ஆறுபல் பூண்டுகள் எல்லாத்தையும் பொடியா நறுக்கி, நல்ல விழுதா அரைச்சு தனியா ஒரு கிண்ணத்துல வெச்சுக்கோங்க.

குக்கருக்கு இருக்கற ஹைப்ரஷர், லோ ப்ரஷரானதும் பாத்திரத்தை வெளியில் எடுத்து, காய்கறிகளை மத்துகொண்டு மசிச்செடுங்க.இல்லைன்னா, இப்பல்லாம் உருளைக்கிழங்கை மசிக்கறதுக்குன்னே ஒரு கருவி கிடைக்குது. அதாலயும் மசிச்சுக்கலாம். மொத்தத்துல நல்லா மசியணும்.. அவ்ளோதான். மிக்ஸில போடறதெல்லாம் வேணாம். போட்டா, காய்கறிகளெல்லாம் காணாமப்போயிடும். மசிச்செடுத்தா ஒன்னு ரெண்டு காய்கள் நான் இங்க இருக்கேன்னு காட்டிக்கொடுக்கும்.அதான் பாவ்பாஜிக்கே ருசி :-))

இப்ப அடுப்புல ஒரு வாணலியோ, அல்லது அடிபிடிக்காத பெரிய பாத்திரமோ வெச்சு, அதுல பத்துகிராம் வெண்ணெயும், ரெண்டு பெரிய ஸ்பூனளவு எண்ணெயுமா விட்டு சூடாக்குங்க. நல்லா சூடானதும், அதுல அரைச்செடுத்த தக்காளி+வெங்காயக்கலவையை விட்டு பச்சை வாசனை போறவரைக்கும் வதக்குங்க. அப்றம், ரெண்டு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்ப்பொடி, நாலு கரண்டி பாவ்பாஜி மசாலாப்பொடி, தேவையான அளவு உப்பு போட்டு வதக்குங்க. காஷ்மீரி மிளகாய்ப்பொடி நல்ல நிறத்தை மட்டுமே கொடுக்கும்.. காரத்தைக்கொடுக்காது. காஷ்மீரி மிளகாய்ப்பொடி கிடைக்கலைன்னா நம்மூரு மிளகாய்ப்பொடியை ஒரு டீஸ்பூன் மட்டும் போட்டு வதக்குங்க. இல்லைன்னா காரம் நாக்கை உரிச்செடுத்துடும் :-)

நல்ல வாசனை வந்ததும், மசிச்ச காய்கறிக்கலவையை அதுல ஊத்துங்க. கொஞ்சம் நீர்க்க,.. அதாவது பாயாசம் அளவுக்கு இருக்கணும். அதனால தேவைப்படற அளவுக்கு தண்ணீரை ஊத்தி, உப்பு சரிபார்த்துட்டு நல்லா கொதிக்கவையுங்க. கொதிக்கறவரைக்கும் சும்மா இருக்காம, ரெண்டு வெங்காயம், அரைகட்டு கொத்தமல்லி இதுகளை பொடியா நறுக்கி வெச்சுக்கிட்டா நலம்.. விருப்பமிருந்தா அப்பளம் சுட்டோ, பொரிச்சோ வெச்சுக்கலாம். முந்தியெல்லாம் ஹோட்டல்கள்ல அப்பளம் கண்டிப்பா பரிமாறப்படும். இப்பல்லாம் சில ஹோட்டல்கள்ல மட்டும்தான்...

பன்,பாவ், ப்ரெட் இதுல ஏதாவதொண்ணை வெண்ணெய் தடவி தோசைக்கல்லுல வாட்டி வெச்சுக்கிட்டா இன்னும் ருசியாயிருக்கும். உடல் நலத்துல கவனம் செலுத்தறவங்க வெண்ணை சாத்தாமலும் சாப்பிடலாம்..

எல்லைக்கோடுகள் பிரிக்கப்பட்ட ஒரு தட்டில்,(ஹோட்டல்கள்ல இட்லி பரிமாறுவாங்களே.. அதே ரகம்)பெரியபாகத்தில் பாஜியை ஊத்தி, பக்கத்துல இருக்கற சின்னச்சின்ன இடங்கள்ல பாவ், வெங்காயமல்லி கலவை, அப்பளம், சின்னத்துண்டு எலுமிச்சைன்னு பரிமாறணும்ங்கறது மரபு. அப்றம் சாப்பிடுறவங்க பாஜியின் தலையில் வெங்காயமல்லி அட்சதையை தூவி, அப்பளம் நொறுக்கி நலங்கிட்டு, எலுமிச்சைச்சாறு அபிஷேகம் செய்து பின் அதெல்லாத்தையும் கலந்து பின்நவீனத்துவ உணவாக்கி சாப்பிடணும்கறது சம்பிரதாயம்.. ஒரு ஸ்பூனையும் பக்கத்துல வெச்சுட்டா, பாஜியை மட்டும் வயித்துக்குள்ள ஏற்றுமதி செய்யவும் சுலபமாயிருக்கும் :-))
(படங்கள் உபயம் -  இணையம்)

டிஸ்கி: இந்த நட்சத்திர வாரம் முழுக்க பொறுமையா என்னோட இடுகைகளை படிச்சு, பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தின உள்ளங்களுக்கு ஒரு சிறு விருந்தளிச்சு நன்றி சொல்லிக்கிறேன்.



54 comments:

'பரிவை' சே.குமார் said...

நட்சத்திர வாரத்தை கலக்கல் வாரமாக்கியதற்கு வாழ்த்துக்கள்.
பாவ்யா... சூப்பரா இருக்கும் போல... உங்கள் செய்முறை விளக்கமே அதை சொல்கிறதே...

ராமலக்ஷ்மி said...

//சிறு விருந்தளிச்சு//

வாரம் முழுக்கவே கிடைத்த விருந்தில் மகிழ்ந்தோம். மனமார்ந்த வாழ்த்துக்கள் சாரல்.

சிறப்பாகச் சென்றன நட்சத்திர நாட்கள்!!!!!!!

ஆமினா said...

ரொம்ப நாளா தேடிட்டு இருந்த ரெசிபி

வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எங்கள் வீட்டில் சமைத்துப் பார்த்து உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

//வெண்ணை சாத்தாமலும்...//

ஹாஹாஹாஹா........

இங்கே நியூஸியில் வெய்யில் காலத்தில்

பார்ப்பிக்யூ விருந்துக்குக் கூப்பிடுவது வழக்கம். சாகபட்சிணிகளுக்கு பாவ்பாஜி பார்ப்பிக்யூதான். தணலில் பாவ் சுட்டுக்குவோம். ஒரிஜனல் பாவ் கிடைக்காது என்பதால் டின்னர் ரோல் வாங்கிப்போம்.

இராஜராஜேஸ்வரி said...

அட்சதையை தூவி, அப்பளம் நொறுக்கி நலங்கிட்டு, எலுமிச்சைச்சாறு அபிஷேகம் செய்து பின் அதெல்லாத்தையும் கலந்து பின்நவீனத்துவ உணவாக்கி சாப்பிடணும்கறது சம்பிரதாயம்//

சூப்பரா இருக்குங்க.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
இனிய நண்பர்தின வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

//காஷ்மீரி மிளகாய்ப்பொடி நல்ல நிறத்தை மட்டுமே கொடுக்கும்.. காரத்தைக்கொடுக்காது//

எங்கே? இப்ப ஒரு வருஷமா இங்க வர்ற காஷ்மீரி பொடி, சாதாரண பொடியை விட காரத்தில தூக்கலா இருக்குது!! வழக்கமா வாங்கிற இந்தியக் கடையில கேட்டா, “நிறைய கம்ப்ளெயிண்ட் வருது. ஆனா, எங்களுக்கு வர்றதைத் தர்றோம்; வேறொன்றறியேன் பராபரமே”ன்னு முழிக்கிறாங்க!!

ஹேமா said...

அட...அருமையான விருந்தோட நட்சத்திரப் பதிவை நிறைவாக்கியிருக்கீங்க.நல்ல வாசனை சாரல்.சமைச்சுப் பாக்கணும் !

பாச மலர் / Paasa Malar said...

மீண்டும் நட்சத்திர வாழ்த்துகள் சாரல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நட்சத்திர பதிவை நிறைவாக முடித்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

குறையொன்றுமில்லை. said...

இப்ப போனவாரம் அடைமழை பெய்த நாளில் பேரக்குழந்தைகள் பாவ்பாஜி தான்
வேணும்னு அடம்பிடிச்சங்க. அதுவும் கடையில் வாங்கினது வேணாம்.
பாட்டி செய்ஞ்சது தான் வேனும்னாங்க.
அது எப்பவுமே சொதப்பாம நல்லாவே
வரும் கூட ரெண்டு பாவ் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. உண்மையிலேயே ருசி
யான குறிப்புதான்.

குறையொன்றுமில்லை. said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.

தமிழ் said...

சூப்பரா இருந்துச்சு, நீங்க சொன்னது. இனிமேல் தான் வீட்டில் முயற்சிக்கணும்.

நன்றி சாரல் அக்கா!

-முகில்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

தொடர்ந்து வந்து வாசிச்சு ஊக்கமளிச்ச அன்புள்ளங்களுக்கு நாந்தான் நன்றி சொல்லணும்.. :-))

செஞ்சு சாப்டுட்டு சொல்லுங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ரொம்ப நன்றிங்க தொடர்ந்து உற்சாகமளிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

கிடைச்சதை விட்டுடாம, செஞ்சு சாப்டுட்டு சொல்லுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

உங்களுக்கு நிச்சயம் பிடிச்சுப்போகும் இந்த ரெசிப்பி :-))

பாவ்பாஜிக்கு நான் கேரண்டி :-))))))))

வெங்கட் நாகராஜ் said...

பாவ்பாஜி சாப்பிட்டாச்சு ஜி!

நல்ல டேஸ்ட்.... தில்லியில் கிடைத்தாலும் மும்பை அளவு சுவை இருப்பதில்லை :)))

கோகுல் said...

நட்ச்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

படிக்கும்போதே சுவைக்க வேண்டுமென்ற ஆவல்.

Unknown said...

நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை இந்த பதிவாலே ஒர் தடவை
சாப்பிட்டு பார்க்கனும்
நன்றி

புலவர் சா இராமாநுசம்

கோமதி அரசு said...

முதலில் தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

சுவையான விருந்துக்கு நன்றி.

மாய உலகம் said...

பாவுபாஜி தின்றேன்... அருமை

RVS said...

பரவை முனியம்மா மற்றும் ம்யூசிக் போட்டு போணியாகாத ஆதித்யன் போன்றவர்கள் பேசிக்கிட்டே டி.வியில சமைக்கிற மாதிரி....

சமைக்க தெரியாதவங்க கூட படிக்கிற மாதிரி வித்தியாசமா சொல்லியிருக்கீங்க...

பேஷ்.. பேஷ்... ரொம்ப நல்லாயிருக்கு. :-)

ஸ்ரீராம். said...

பாவ் பாஜி- டிஃபன் போட்டாச்சு...சாப்டாச்சு...படத்தை பார்த்தாலே ஆசை வருது...வெற்றிகரமாக இந்த வாரத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்னைக்கு எங்கவீட்டுல பாவ் பாஜி தான் சாப்பிட்டோம்..

இந்த பரிமாறல் கலை எப்படின்னு வரக்கட்டத்துல கலக்கிட்டீங்க போங்க :))

sultangulam@blogspot.com said...

இப்பத்தான் சில மாதத்துக்கு முன் மும்பையில் ஒரு பாவ்பாஜிக் கடைக்காரர் பாத்திரத்தில் ஒன்னுக்கடிச்சதை, பக்கத்து வீட்டு பொண்ணு வீடியோ எடுத்து, லோக்கல் கேபிளில் போட்டுக்காட்டி, மக்கள் அந்த ஆளை நல்லா பின்னியெடுத்து போலிஸில் விட்டது ஊரெல்லாம் நாற்றம்.

பாவ்பாஜின்னு நினைத்தாலே அந்த சம்பவம் நினைவுக்கு வந்து குடலைப் புரட்டுகிறது. உவ்வே!

Anonymous said...

பாவ் பாஜி... பலே பலே ஜி! :)

இந்திரா said...

இதுவரை சாப்பிட்டதில்லை.
படங்களே ஆர்வத்தை தூண்டுகிறது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

பாவ்பாஜி பார்பிக்யூவா... ஹைய்யோ!!!!

இங்கே 'தாபேலி'ன்னு ஒரு அயிட்டம் கிடைக்கும். பாவை ரெண்டா கீறி, நடுவுல மசாலா அடைச்சு, தவாவுல வாட்டித்தருவாங்க.. கிட்டத்தட்ட அதுமாதிரிதான் இருக்குமோன்னு தோணுது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

உங்களுக்கும் நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

சமைச்சு சாப்ட்டுட்டு சொல்லுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

மீண்டும் வாழ்த்துகளுக்கு நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

மீண்டும் வாழ்த்துகளுக்கு நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

உங்க எல்லோரோட ஆதரவுதான் டானிக்கா இருந்து எழுதவெச்சது. அதுக்கு உங்க அனைவருக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

பாட்டி கையால செஞ்சதுன்னா ருசி இன்னும் கூடுதலாச்சே.. கொடுத்துவெச்சவங்க உங்க பேரக்குழந்தைகள் :-))

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் லஷ்மிம்மா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகில்,

செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ஒவ்வொரு அயிட்டத்துக்கும் ஒவ்வொரு இடம் பெயர்போனது.. திர்னேலிக்கு அல்வா, நாரோயிலுக்கு ஏத்தங்கா வத்தல், மும்பைக்கு ச்சாட் அயிட்டங்கள் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோகுல்,

செய்முறையும் ஈஸியாவே கொடுத்திருக்கேன்.. சுலபமா செய்யலாம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாழ்த்துகளுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாழ்த்துகளுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

ருசி எப்டின்னு சொல்லலையே :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க RVS,

என் பசங்களுக்கும் இப்டித்தான் சமையல் கத்துக்கொடுப்பேன் :-))))

வெளம்பரத்துல ஒரு நாஞ்சில் ஜேக்கப்பையும் சேர்த்துருக்கலாமில்ல :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

உங்க அனைவருடைய ஆதரவு இல்லைன்னா இது முடிஞ்சிருக்குமா??

ஆளில்லாத தியேட்டர்ல படம் ஓட்டினமாதிரி இல்லே இருந்திருக்கும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

பரிமாறுவதும் ஒரு கலையாச்சே!!..

நாரோயில் பக்கங்கள்ல, புதுப்பொண்ணு எப்டி சாப்பாட்டை பரிமாறுதுன்னு கூட கவனிப்பாங்க.. சொதப்பினா அவ்ளோதான்.. ஆயுசுக்கும் கிண்டல் ஓட்டி எடுத்துடுவாங்க.. அங்கெல்லாம் சரியா பரிமாறலைன்னா சமையலே தெரியாதமாதிரி அர்த்தமாக்கும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுல்தான் ஐயா,

நீங்க சொன்னது பாவ்பாஜி சம்பந்தப்பட்டது இல்லை.. ஒரு பானி பூரிக்காரர் செஞ்ச வேலை அது.. எங்கூரு சேனைக்கட்சி அந்த பிரச்சினையை ஒருவழி செஞ்சுடுச்சு :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷீ - நிசி,

ஷுக்ரியா ஜீ :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இந்திரா,

சாப்டாம விட்டு வைக்கலாமோ.. செஞ்சு சாப்டுட்டு சொல்லுங்க :-))))

vanathy said...

சூப்பரோ சூப்பர். இந்த வாரம் எப்பாடுபட்டாவது செய்துடறேன்.

ADHI VENKAT said...

பாவ்பாஜி செய்முறை விளக்கமே சூப்பராயிருக்குங்க.

நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

settaikkaran said...

//'பாவ்பாஜி' மும்பையின் பிரபலமான உணவுவகைகளில் ஒண்ணு//

ஆமாங்க, அதுவும் இப்போதைய CST(முந்தைய VT)க்கு எதிரே இருக்கிற ’Canon'-லே பாவ்-பாஜி சாப்பிட்டிருக்கீங்களா? அது தான் நம்பர் ஒன்; அடுத்தது சயானில் இருக்கிற குரு-க்ருபா! அது நம்பர் டூ! நம்பர் த்ரீ செம்பூரிலே இருக்குது, பெயர் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது!

//வட நாட்டுல கிடைக்கிற 'பாவ்' மத்த இடங்கள்ல கிடைக்கறதில்லை.//

அதைச் சொல்லுங்க! சென்னையிலே இருக்கிற பாவு ஸ்வீட்-பன் மாதிரி இருக்குதுங்க! பாவ்-பாஜி சாப்பிட்டா மாதிரியே இல்லை!

ஹும்! ஏக்கத்தைக் கிளறிட்டீங்க படத்தையும் போட்டு....!

ஸாதிகா said...

பாவ் பாஜி கிரெவி கலர்ஃபுல்லாக இருக்கு

கீதமஞ்சரி said...

பாவ்பாஜி செய்முறையையும் பரிமாறும் கலையையும் மிக சுவாரசியமாகப் பதிவிட்டுள்ளீர்கள். மிகவும் நன்றி. இதுவரை பிள்ளைகளுக்கு வாங்கிகொடுத்துதான் பழக்கம். இனிமேல்தான் செய்துபார்க்கவேண்டும். செய்முறை சுலபமாகத்தான் தெரிகிறது உங்கள் வார்த்தைகளில்.

சாந்தி மாரியப்பன் said...

கருத்து தெரிவிச்ச அனைவருக்கும் நன்றி.
[im]http://greetings.webdunia.com/cards/tm/thank_you/hin_thanks_cs-5.jpg[/im]

LinkWithin

Related Posts with Thumbnails