Monday, 1 August 2011

தமிழ்மணத்துல இந்த வார நட்சத்திரமாம் : -) அறிமுகம்..


எழுத ஆரம்பித்தது...


சின்னவயசுல, அதாவது அஞ்சாறு வயசு இருக்கும்போதே எழுத ஆரம்பிச்சுட்டேன். சிலேட்டுக்குச்சியால் 'அ' ன்னு எழுதினதுதான் என்னோட முதல் எழுத்தனுபவம். என்னோட முதல் வாசகரான அப்பா, ' ஆஹா!!.. என்பொண்ணு என்ன அழகா எழுதறா!!..' அப்படீன்னு பாராட்டினதுதான் முதல் விமர்சனமும் கூட.. :-))))).

ஒவ்வொரு எழுத்தாளர்களையும் வாசிக்க வாசிக்கத்தான், நாமளும் எழுதணும்கற ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சது. கதை, கவிதைன்னு மனசுல தோணுறதையெல்லாம் ரகசியமா ஒரு நோட்டுல எழுதி நானே படிச்சுப்பார்த்துப்பேனே தவிர, அதை மத்தவங்க பார்வைக்கும் கொண்டுபோகணும்ன்னு தோணவேயில்லை. எதேச்சையா, என்னோட கவிதைக்கு கல்லூரியில் கிடைச்ச பாராட்டு, 'பரவால்லையே நாம எழுதறதும் வாசிக்கறாப்லதான் இருக்கு'ன்னு ஒரு திருப்தியை கொடுத்தது.

அந்த உத்வேகத்துல, 'விடிய மறுக்கும் இரவுகள்' ங்கற தலைப்புல நடத்தப்பட்ட, ஒரு கவிதைப்போட்டிக்கு எங்க கல்லூரி சார்பா அனுப்பப்பட்ட கவிதைகள்ல என்னோட கவிதை, ஆறுதல் பரிசை தட்டிக்கிட்டு வந்தது... கலந்துக்கிட்ட முதல் போட்டியிலேயே அது பரிசை தட்டிக்கிட்டு வந்ததால, ஏதோ,.. முதல்பரிசே கிடைச்ச சந்தோஷம் எனக்கு :-) கவிதை நோட்டு ரொம்ப காலத்துக்கு முன்னாடி தொலைஞ்சு போனதால, முழுக்கவிதையும் இப்ப ஞாபகம் இல்லை..

'ஒரு வேளை
கனவுகளை மட்டும் அனுபவிப்பதற்காகத்தான்
எங்கள் இரவுகள்
இன்னும்
விடிய மறுக்கின்றனவோ...' அப்டீன்னு முடியும் கடைசிபத்தி வரிகள் மட்டும் ஞாபகமிருக்கு :-).  கல்லூரியோட ஆண்டுவிழா மலர்லகூட பரிசுகிடைச்ச விஷயம் என்பேரோட வந்துச்சு..  போனஸா என்னோட இன்னொரு கவிதை வெளியீட்டோட... ரொம்ப சந்தோஷமா இருந்தது :-)

அங்கிருந்து ஆரம்பிச்ச எழுத்துப்பயணம் இப்போ வலைப்பூவில் தொடர்ந்துக்கிட்டிருக்கு.. இதோ இப்ப, தமிழ்மண நட்சத்திரமா உங்க முன்னாடி நின்னுட்டிருக்கேன். செய்தியறிஞ்சதும் லேசா ஒரு உதறல் இருந்தாலும், இதையும் ஜமாய்ச்சுடலாம்ன்னு ஒரு உற்சாகத்துல இறங்கிட்டேன். ஜமாய்க்கப்போறேனா.. சொதப்பி வைக்கப்போறேனான்னு தெரியலை :-))


இப்ப என்னைப்பத்தி ஒரு சின்னஅறிமுகம்:

வலைப்பதிவில் தோன்றும் பெயர்..

அமைதிச்சாரல்.

பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம்..

கிட்டத்தட்ட சொந்தப்பேரு மாதிரிதான். தமிழ்ப்படுத்தியிருக்கேன்.. பேரு யோசிக்கும்போது காசை சுண்டிவிட்டேன். பூ விழுந்தா பூப்பாதை(சொந்தப்பேரு),தலை விழுந்தா சிங்கப்பாதை(புனைப்பேரு). அது என்னடான்னா ஓடிப்போயி சிஸ்டம் இருக்கிற டேபிளுக்கு கீழே போயி தூங்கிடுச்சு. என்னடா செய்யறதுன்னு யோசிச்சேன்.எனக்கு மழை பிடிக்கும்.. அதுவும் அடிச்சிப்பெய்யுற மழையை விட மெல்லிய சாரல் ரொம்பப்பிடிக்கும். அதனால அந்தப்பேரு.

தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பொழுதுபோகாத ஒரு நாள்லதான் கூகிள்ல தமிழ்வார்த்தைகள் வர்றதை கண்டுபிடிச்சேன்.. அது என்னடான்னா துளசிதளத்துக்கு கொண்டுபோய் விட்டது. 'வாங்களேன்.. கேக் சாப்புடலாம்'ன்னு கூப்பிட்டு துளசியக்கா விருந்து வெச்சாங்க. அப்புறம் அங்கியே செட்டிலாயிட்டேன்.. மறுபடி கண்டுபிடிக்கத்தெரியாம ரெண்டுமூணு நாள் முழிச்சது தனிக்கதை. கடைசியில் கூகிள் அண்ணாச்சி கண்டுபிடிச்சுக்கொடுத்தார். மொதல்ல தமிழ்மணம் இருக்கிறது தெரியாது.. இடுகைகளுக்கு பின்னூட்டம் வரும்ன்னும் தெரியாது..

கொஞ்சம் கொஞ்சமா தமிழ்மணம் பக்கமும் வர ஆரம்பிச்சேன். ரொம்ப நாளுக்கப்புறம் சொந்தவூடு கட்டலாம்ன்னு முடிவெடுக்கும்போதுதான் கெட்டப்பை கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு இந்தப்பேரு வெச்சிக்கிட்டேன்.. அக்காவுக்கு லாரி அனுப்ப யோசிக்கிறவங்க அது நெறைய ரோஜாப்பூவை அனுப்பிவையுங்க, முட்களை எம்பக்கம் அனுப்பிவிடுங்க :-)))

எழுதுவது பொழுதுபோக்குக்காகவா,.. அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிறைய சம்பாதிச்சிருக்கேன்..அதவெச்சு,மும்பையின் கொலாபாபகுதியில் வில்லா வாங்கிப்போடணும்ன்னு திட்டம்.எவ்வளவுன்னு சொன்னா ஐ.டி.லேர்ந்து ஆட்கள் வந்துடுவாங்க.:-))))). இப்படீல்லாம் சொல்லுவேன்னு நினைச்சீங்களா... நான் சம்பாரிச்சது ஓரளவு தன்னம்பிக்கையை.. நிறைய நட்புகளை, கொஞ்சூண்டு எழுத்தை.

எழுதும் தமிழ் வலைப்பதிவுகள்..

ஒண்ணு உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச 'அமைதிச்சாரல்'.

கவிதைன்னு கிறுக்கறதை தனியா தொகுக்க வசதியா 'கவிதை நேரமிது'

பேரண்ட்ஸ் கிளப்பிலும் இருக்கேன்.

எனக்கு கொஞ்சம் பாட்டுக்கிறுக்கு உண்டு. மென்மையான பாடல்களை கேக்கப்பிடிக்கும். அதுக்காக ஆரம்பிச்சது குயில்களின் கீதங்கள்.

பதிவை பற்றி முதன் முதலில் தொடர்புகொண்டு பாராட்டியவர்கள்...

முதல்பின்னூட்டம் போட்ட சகோ எல்.கே,ராமலஷ்மி மேடம், துளசியக்கா, வல்லிம்மா,முத்தக்கா, அப்புறம் இப்ப பின்னூட்டத்துல பாராட்டுற நீங்க வரைக்கும் பெரிய லிஸ்டே இருக்குதே.. எதைன்னு சொல்ல!!! :-)

என்னைப்பற்றி...

நானே என்னைப்பத்தி என்ன சொல்றது..என் எழுத்துக்கள் சொல்லட்டுமே..(அப்படி ஒண்ணு நான் போடுற மொக்கையில் இருக்கா என்ன???):-))))))

வாசிப்பனுபவம்..

வாசிப்பது என்பது, எப்பொழுதும் என்னை, என் உலகத்துக்கு இட்டுச்செல்வதாகவே இருந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது, குமுதம், விகடனை எழுத்துக்கூட்டி படிப்பதில் ஆரம்பித்தது, நாளடைவில் கதைப்பைத்தியமாகவே ஆகிவிட்டேன். அம்மா திட்டியதோ,டியூஷன் டீச்சரிடம் வத்தி வைத்து கண்டிக்க செய்வதோ, எதுவும், கதைப்புத்தகத்தை, பாடப்புத்தகத்தில் மறைத்து வைத்து படிக்க ஆரம்பித்த நிமிடத்தில் மறந்துவிடுவேன், இந்த உலகத்தையும் சேர்த்து.

நாளடைவில் பூந்தளிர் படிக்க கிடைத்தது. என் வாசிப்புத்தோழன் என் கடைசி தம்பிதான். கடையில் இருந்து வாங்கி வந்ததும், என் மடியில் அமர்ந்து கொண்டு,... வாசிப்போம். அப்போது அது மாதமிரண்டு முறை வந்து கொண்டிருந்தது, எட்டு ரூபாய் என்று நினைக்கிறேன்.காக்கை காளி,சமந்தகன், வேட்டைக்கார வேம்பு எல்லோரும் எங்கள் தோழர்கள். அதன்பின் champak,அம்புலிமாமா,என்று வளர்ந்து, சுஜாதா கதைகளை தேடிப்பிடித்து வாசிப்பதில் தீவிரமடைந்தது.

எனது மாமா ஒருவர், அப்போது லைப்ரரி ஒன்றில் உறுப்பினராகியிருந்தார்.அங்கிருந்து நாவல்களை எடுத்துக்கிட்டு வருவார். பாக்கெட் நாவல் அப்போதுதான் அறிமுகமான சமயம். ராஜேஷ்குமார் மட்டும்தான் அதில் எழுதிக்கொண்டிருந்தார். த்ரில்லர் கதைகளுக்காக விரும்பி படிப்பேன். வார இதழ்களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் நாவல்கள், ஒவ்வொன்றாக படிக்க கிடைத்தது. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது, வாசிக்கும் பழக்கம் வந்தது. பாடப்புத்தகங்கள் மூளைக்குள் ஏற்றும் சுமையை, கொஞ்சம் இறக்கி வைக்க முடிந்தது. இப்போதும், சாப்பிடும்போது படிக்க ஏதாவது இருக்க வேண்டும். தவறென்று தெரிந்தும் விட முடியவில்லை.

பள்ளியில் படிக்கும்போது, தமிழாசிரியர் கல்கியை அறிமுகப்படுத்தினார். சாண்டில்யனையாவது, சிலவார இதழ்களில் வாசிக்க கிடைத்தது. கல்கியை வாசிக்க கல்லூரி வரை காத்திருக்க வேண்டி வந்தது. எங்கள் கல்லூரியில், ஒவ்வொருவருக்கும் இரண்டு டோக்கன்கள் கொடுப்பார்கள். அதாவது ஒரே நேரத்தில், இரண்டு புத்தகங்கள் எடுக்க அனுமதி.படித்து விட்டு திருப்பிக்கொடுக்கும்போதுதான் அடுத்த புத்தகம் கிடைக்கும்.கோ-எஜூகேஷன் ஆதலால் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மட்டும்தான் பெண்கள் லைப்ரரிக்கு செல்ல அனுமதி உண்டு.பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் எத்தனைமுறை வாசித்திருப்பேன் என்று நினைவில்லை.

இப்போதும் அடிக்கடி சென்னை லைப்ரரி. காம் சென்று வாசிப்பேன். தமிழாசிரியர் மெர்க்குரிப்பூக்களைப்பற்றி சொன்னதிலிருந்து, பாலகுமாரன் அறிமுகமானார்.ஜெயகாந்தனின் எழுத்துக்களை தேடித்தேடி படித்ததுண்டு.சிவசங்கரி எழுதியதில், நண்டு எனக்கு பிடிக்கும், இன்னொரு நாவலான 'குட்டி' திரைப்படமாகக்கூட வந்தது. சுஜாதாவின்,' கரையெல்லாம் செண்பகப்பூ' எங்கள் லைப்ரரியில் ஒரு நாளும் இருந்ததில்லை. எப்போது கேட்டாலும் யாராவது எடுத்துப்போயிருப்பதாகத்தான் பதில் வரும். காத்திருந்தே மூன்று வருட படிப்பும் முடிந்துவிட்டது. கடைசியில்,திரைப்படமாக பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டேன்.

பூர்வீகம் திர்னவேலி மாவட்டமா இருந்தாலும் ,  வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியை கன்யாகுமரி மாவட்டத்துல கழிக்க நேர்ந்ததன் பலனா, அந்த மாவட்டத்துலயே, நாஞ்சில் நாட்டுப்பகுதியில் புகுந்தவீடும் அமையப்பெற்று இப்போ மும்பையில் மையம் கொண்டிருக்கிறது என்வாழ்க்கை :-)). இங்கே வந்தபுதுசுல தமிழ்படிக்க, கேக்க ரொம்பவே ஏக்கமாருக்கும். இப்ப எல்லாத்துக்கும் சேர்த்து, வலைப்பூக்கள், இணைய இதழ்கள்ன்னு படுதீவிரமா, விட்டுப்போனதையெல்லாம் சேர்த்துவெச்சு வாசிக்கவும், விட்டுப்போன எழுத்தை தொடரவும் ஆரம்பிச்சிருக்கேன் :-))

இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம ராஜாங்கம் இங்கேதான்.. மறக்காம நண்பர்களெல்லாம் சுற்றம்சூழ வந்துருங்கோ :-))))

டிஸ்கி: அறிமுகப்படலத்தை எங்கியோ படிச்சமாதிரியே இருக்குன்னுதானே நினைக்கிறீங்க. ஏற்கனவே பகிர்ந்துக்கிட்டதுதான்.. ஆனா, இப்ப கொஞ்சம் மாற்றங்களோடு :-))


96 comments:

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் மேடம்.

pudugaithendral said...

வலைச்சரத்துல அதிகமானது என்னோட போஸ்ட்தான். அதை நீங்க பீட் செய்யணும்னு வாழ்த்தறேன்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ ...

Chitra said...

Great news! Congratulations!!!!

cheena (சீனா) said...

தமிழ் மண நட்சத்திரமாகச் ஜொலிப்பதற்கு நல்வாழ்த்துகள் அமைதிச் சாரல் - நட்புடன் சீனா

Anonymous said...

அறிமுகப் பதிவு திறந்துவிட்டது. படித்தேன். A good light hearted writing it is!

திருனெல்வேலி, கன்யாகுமரி, பின்னர் மும்பாய். நிறைய அனுபவங்கள். வெவ்வேறாக இருக்கும். இல்லையா ?

குட் லக்.

settaikkaran said...

congrats! God Bless You! Wish You All the Best!

ராமலக்ஷ்மி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

இதமான சாரலில் நனைவது எங்களுக்கும் பிடிக்கும். இந்த ஒருவாரமும் தினம் தினம்:)! காத்திருக்கிறோம் குதூகலமாக.

மிக அருமையான அறிமுகம். ரசித்து வாசித்தேன்.

கரையெல்லாம் செண்பகப்பூ ஜெ-யின் ஓவியங்களுடன் தொடராக வந்த போதே வாசித்திருக்கிறேன். தொடர் வந்த அன்று அது பற்றிதான் பேச்சாக இருக்கும் பள்ளியில்:)! சினிமா அந்த அளவு இல்லை. என்ன போச்சு. தேடி வாங்கி இப்போது வாசித்திடுங்கள்!

ராஜ நடராஜன் said...

இவ்வளவு பெரிய அறிமுகப்படலத்துக்கு நிறையவே பின்னூட்டம் சொல்லலாம்:)

நட்சத்திர வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

என்னது!படங்களுடன் பின்னூட்டமா!

ஆமினா said...

வாழ்த்துக்கள்!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

சுவாரஸ்மாக இருக்கிறது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மண நட்சத்திர அந்தஸ்த்து பெற தாங்கள் தகுதியான பதிவர்தான்...

வாழ்த்துக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் இனிப்பான செய்தி.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.

RVS said...

நட்சத்திரத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!! :-)

ஆடுமாடு said...

வாழ்த்துகள்

தருமி said...

வாழ்த்துகள்

CS. Mohan Kumar said...

மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!!பூங்கொத்தோடு!

vanathy said...

congrats!

Anonymous said...

வாழ்த்துக்கள்

ஷர்புதீன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

வாழ்த்துகளுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புதுகைத்தென்றல்,

ஆஹா!!.. அந்த விஷயத்துல நீங்க புயலாச்சே.. உங்களை மிஞ்ச முடியாதுங்க.
அப்பீட் ஆகிக்கறேன் :-)))))))

மனதார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

வாழ்த்துகளுக்கு நன்றி சகோ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

பயணமெல்லாம் நல்லாருந்துதா...

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சீனா ஐயா,

எல்லாம் உங்க ஆசீர்வாதம்..

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிம்மக்கல்,

வாழ்க்கைப்புத்தகத்துல ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு அனுபவங்களால்தானே எழுதப்பட்டிருக்குது :-)

வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சேட்டைக்காரன்,

வாழ்த்தினதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

பொதுவாவே நாவலை திரைப்படமாக்கும்போது அதன் ஜீவன் கொஞ்சம் மங்கித்தான் போகுது. இதுக்கு சுஜாதா ஸாரின் கதைகளும் விதிவிலக்கல்ல போலிருக்கு..

அடுத்ததடவை பாளை ஈகிளில் கிடைக்குதான்னு பார்க்கணும்..

வாழ்த்தினதுக்கு நன்றிங்க.

சௌந்தர் said...

வாழ்த்துக்கள் ஒரு வாரம் கலக்குங்க..!!!

உங்களை பற்றிய பதிவு நன்றாக இருந்தது...

ஸ்ரீராம். said...

தமிழ்மண தாராவிற்கு வாழ்த்துகள்!

ஜெய்லானி said...

//இப்போதும், சாப்பிடும்போது படிக்க ஏதாவது இருக்க வேண்டும். தவறென்று தெரிந்தும் விட முடியவில்லை.//

ஸேம் பிளட் :-)).
சாப்பிடும் போது ஏதாவது உப்பு சரியில்லை , வேகலன்னு கத்தினாப்போதும் . அமைதியா ஏதாவது ஒரு புக்கை கொண்டு வந்து போட்டுட்டு போவாங்க . அதோட என்னோட சவுண்ட் கட் :-))

நானும் ஒரு புத்தகப்புழுதான் .

தமிழ்மணத்துல கலக்குங்க :-)

நீச்சல்காரன் said...

-------------------=---------=---------------------------------=------
----------------------------------------------------------------------
--==----=-=====--=---==----=====------=====----=---=====----===--====-
-=--=---=-=--=---=--=--=---=--=-------=--=-----=---=--=----==--==--=--
=-=--=--=-=--=---=--=--=--========---========--=-========--=-=--=--=--
=-=--=--=-=--=---=--=--=-=----=---=-=----=---=-=-=----=--=-=-=--=--=--
-=--=====-=--=---=======--====----=--====----=-=--====--=--==---=--=--
----------------=---=-----------==----==========----------------------
-----------------======--------=--------=====-------------------------

நீச்சல்காரன் said...

░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░░▓▓▓▓▓░░░░▓░░░▓▓▓▓▓░░░░▓▓▓░░▓▓▓▓░
░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░░░░▓░░▓░░░░░▓░░░▓░░▓░░░░▓▓░░▓▓░░▓░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░░░▓▓▓▓▓▓▓▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░▓░▓░░▓░░▓░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░░▓░▓░░░░▓░░░▓░▓░▓░░░░▓░░▓░▓░▓░░▓░░▓░░
░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░░░▓░░▓▓▓▓░░░░▓░▓░░▓▓▓▓░░▓░░▓▓░░░▓░░▓░░
░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░▓▓░░░░▓▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░▓░░░░░░░░▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

மாய உலகம் said...

முதலில் தமிழ் மன நட்சத்திரமாக வந்ததற்கு வாழ்த்துக்குகள்

//ஒரு வேளை
கனவுகளை மட்டும் அனுபவிப்பதற்காகத்தான்
எங்கள் இரவுகள்
இன்னும்
விடிய மறுக்கின்றனவோ//

ஆஹா.. வாழ்வோடு பொருந்த கூடிய அற்புத கவிதை...வாழ்த்துக்கள்...

//பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம்..

கிட்டத்தட்ட சொந்தப்பேரு மாதிரிதான்.//
அப்ப உங்க பேரு சாந்தி தானே...

//குமுதம், விகடனை எழுத்துக்கூட்டி படிப்பதில் ஆரம்பித்தது, நாளடைவில் கதைப்பைத்தியமாகவே ஆகிவிட்டேன்//

ஆஹா..கதை பைத்தியமா.நகைச்சுவை கதையை எனது பதிவில் இட்டிருக்கிறேன் நேரம் கிடைக்கும் வந்து படிக்கவும் சகோ.. நன்றியுடன் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை மேடம்..!

நட்சத்திர வாழ்த்துகள் கலக்குங்க..!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜ நடராஜன்,

உங்கள் வாழ்த்துகளுக்கு,...

[im]http://2.bp.blogspot.com/_FhFvwWRNAao/TK3mzViSgBI/AAAAAAAAADA/V9g9nvKx-o4/s1600/thaks02-Editted.jpg[/im]

சாந்தி மாரியப்பன் said...

@ராஜ நடராஜன்,

படங்களுடன் பின்னூட்டுவதைப்பற்றி சகோ நீச்சல்காரன் எழுதிய இடுகையை நாங்களும் பகிர்ந்திருக்கோம்.. அவரோட அனுமதியுடன் :-)

தகவல்களுக்கு சுட்டியைப்பிடிச்சுப்போனா கிடைக்கும்.

http://amaithicchaaral.blogspot.com/2010/11/blog-post_09.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

வாழ்த்துகளுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆடுமாடு அண்ணாச்சி,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தருமி ஐயா,

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் குமார்,

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா மேடம்,

அட!!.. பூங்கொத்து. ரொம்ப நன்றி மேடம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வானதி,

ரொம்ப நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சதீஷ்குமார்,

வாழ்த்துனதுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷர்புதீன்,

வாழ்த்துகளுக்கு நன்றி..

உங்களுக்கும் இனிய நோன்புக்காலத்துக்கான நல்வாழ்த்துகள்.

Anonymous said...

நட்சத்திர அந்தஸ்துக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

அறிமுகமும் நன்றாக இருந்தது.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் சாரல்...எப்போதும் போலவே ஜொலித்திருக்க...

Kavinaya said...

நட்சத்திர வாழ்த்துகள், அமைதிச் சாரல் :) உங்க பெயர்க்காரணமும் அனுபவங்களும் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.

துளசி கோபால் said...

ஆஹா.......... நட்சத்திரமே! இந்த வாரமும் பளீர்ன்னு ஒளிவீசிப் பிரகாசிக்க என் இனிய வாழ்த்து(க்)கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

வாழ்த்துகளுக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

வாழ்த்துகளுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

//சாப்பிடும் போது ஏதாவது உப்பு சரியில்லை வேகலன்னு கத்தினாப்போதும். அமைதியா ஏதாவது ஒரு புக்கை கொண்டு வந்து போட்டுட்டு போவாங்க//

உப்பு சரியில்லன்னா உப்பு போடாம, ஏன் புக்க கொண்டாந்து போடறாங்க!!!!.. நாங்களும் டவுட்டு கேப்பமில்ல :-)))))
(just for fun)
உங்களை எப்படி சமாளிக்கிறதுன்னு நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்காங்க வீட்ல :-))))))))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நீச்சல்காரரே,

உங்க ஸ்டைல் வாழ்த்துகள்.. ரசிச்சேன். ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

என் சொந்தப்பேரை பெயர்க்காரணத்தை ஒரு இடுகையாவே போட்டுட்டேனே.. அதனால நிறையபேருக்கு அது தெரியும். இப்ப லேட்டஸ்ட்டா உங்களுக்கு :-)))))

உங்க இடுகையை வாசிச்சு பின்னூட்டமும் போட்டிருக்கேனே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்து,

ரொம்ப நாளா ஆளையே காணோம். சீக்கிரம் லீவு முடிச்சு வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.. புதிர்ப்போட்டி வெச்சு நாளாகுதில்ல :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷீ- நிசி,

வித்தியாசமான பேரு உங்களோடது..

வாழ்த்துகளுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

பாசமான வாழ்த்துகளுக்கு நன்றிங்க :-)

நிரூபன் said...

தமிழ்மண நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் சகோ.

நாடோடி said...

வாழ்த்துக்கள் சகோ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிநயா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
:-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

குருஜியோட பேரை இந்த சிஷ்யை எப்படியாவது காப்பாத்துவேன். (ஆஸ்ரமத்துல எனக்கு இடம் கன்ஃபர்ம்டுதானே :-))))

வாழ்த்துகளுக்கு நன்றிக்கா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நிரூபன்,

வாழ்த்துகளுக்கு நன்றி சகோ :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

வாழ்த்துகளுக்கு நன்றி சகோ :-)

ஹேமா said...

நேத்து முழுக்க வலை மேயவில்லை சாரல்.தவறவிட்டுவிட்டேன்.
பிந்தினாலும் நட்சத்திரமாய் ஜொலிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி !

மாய உலகம் said...

அமைதிச்சாரல் said...

//உங்க இடுகையை வாசிச்சு பின்னூட்டமும் போட்டிருக்கேனே :-)//

நான் ஃபாலோயராவும் இணைந்து பின்னூட்டமும் போட்டுக்கொண்டிருக்கிறேன்..ஹி ஹி ஹி

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வாழ்த்துக்கள். நல்ல அறிமுகம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

லேட்டானாலும், லேட்டஸ்டான வாழ்த்துக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

ரொம்ப நன்றி சகோ :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா சுப்ரமணியம்,

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.

வருண் said...

***சின்னவயசுல, அதாவது அஞ்சாறு வயசு இருக்கும்போதே எழுத ஆரம்பிச்சுட்டேன். சிலேட்டுக்குச்சியால் 'அ' ன்னு எழுதினதுதான் என்னோட முதல் எழுத்தனுபவம். என்னோட முதல் வாசகரான அப்பா, ' ஆஹா!!.. என்பொண்ணு என்ன அழகா எழுதறா!!..' அப்படீன்னு பாராட்டினதுதான் முதல் விமர்சனமும் கூட.. :-))))).***

சிறுவயதிலேயே அழகான "அ" எழுதி "ஆஹா" னு பாராட்டு வாங்கி அதை அடக்கமா எங்களிடம் பகிர்ந்து இருக்கீங்க!

வாழ்த்துக்கள்! :)

அமர பாரதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்!

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் , கலக்குங்க

goma said...

வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வருண்,

நீங்க ஒருத்தர்தாங்க 'பொடி'யை கவனிச்சிருக்கீங்க.. ஸ்பெஷல் நன்றீஸ் :-)) வாழ்த்துகளுக்கும் சேர்த்து.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமரபாரதி,

பெயரில் அமரகவியை வைத்திருக்கும் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றீஸ் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாதுரை,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாதுரை,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மஹி,

அதுக்கென்ன.. கலக்கிருவோம்.. :-)) வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மஹி,

அதுக்கென்ன.. கலக்கிருவோம்.. :-)) வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமாக்கா,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

vetha (kovaikkavi) said...

வாழ்த்துக்கள்! sakothara!...
தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதை,

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

sultangulam@blogspot.com said...

வாழ்த்துகள். நட்சத்திர பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். குழந்தைகளுக்கு சொல்வது போன்ற மெல்லிய நடை. அழகு

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுல்தான் ஐயா,

நேரமெடுத்து அத்தனை இடுகைகளையும் வாசிச்சதுக்கும் பாராட்டினதுக்கும் ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுல்தான் ஐயா,

நேரமெடுத்து அத்தனை இடுகைகளையும் வாசிச்சதுக்கும் பாராட்டினதுக்கும் ரொம்ப நன்றி..

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

தாமதமான வருகைக்கு சாரி. ஒருமாதம் திருன வேலி பக்கம் சுத்த்போயீட்டே. இப்பதான் ஒவ்வொருவரின் பழைய பதிவு
களும் படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுட்டு இருக்கேன். வாழ்த்துக்கள்.

natchiar kothai said...

ezhutthunarvin pathippukalai mala malavendru madai thirantha vellam pol kottivitteerkal... vadikaalkal palavayitru...vazhthukkal.

LinkWithin

Related Posts with Thumbnails