Thursday 28 July 2011

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு :-))))



'அரிது.. அரிது.. ஆரோக்கியமாய் இருத்தல் அரிது; அதனினும் அரிது மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடல்'ன்னு நிகழ்காலக்கலம்பகத்துல படிச்சப்பகூட நான் நம்பலை.. வறுபட்டு ஃப்ரைட்ரைஸ் ஆனப்புறம்தான் நம்புனேன் :-)))

அந்த சரித்திரமுக்கியத்துவம் பெற்ற சம்பவம் நடைபெற்று பத்துப்பதினஞ்சு நாளானப்புறமும்கூட அதோட பாதிப்பு இன்னும் நெஞ்சைவிட்டு நீங்கலைன்னா, அதோட மகிமை என்னான்னு புரிஞ்சுக்கோங்க. பையருக்கு பல்லில் பிரச்சினை காரணமா, பல்டாக்டரைப்பார்க்கவேண்டி வந்தது (பல்டாக்டரைப்பார்க்காம பின்னே,.. கண் டாக்டரையா பார்ப்பாங்கன்னு கமெண்டுறவங்கல்லாம் அப்டியே ஒன் ஸ்டெப் பேக் :-)).

இந்த E.N.T. ஸ்பெஷலிஸ்டுகளெல்லாம் ஏன், பல்லுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடாதுன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். காது,மூக்கு,தொண்டை எல்லாத்துக்கும் ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இருக்கறமாதிரியே பல்லோடயும் சம்பந்தம் இருக்குதுதானே!!.. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் பக்கத்துப்பக்கத்து வீட்டுக்காரங்க இல்லியா :-)

சொல்லவந்ததை விட்டுட்டு எங்கியோ போயிக்கிட்டிருக்கேன்.. முந்திய நாளே ஆசுத்திரிக்கு போன் செஞ்சு, 'இந்த மாதிரி இந்தமாதிரி பையனுக்கு பிரச்சினை இருக்கு,.. அதனால இந்தமாதிரி இந்தமாதிரி டாக்டர்கிட்ட கலந்தாலோசிக்கணும். அதனால அப்பாயிண்ட்மெண்ட் குடுங்க'ன்னு கேட்டேன். அதுக்கு அங்க வரவேற்பறையில இருந்தவங்க,' இந்த மாதிரி இந்த மாதிரி மொத நாளே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது,.. அதனால நாளைக்கு காலேல போன் செய்யுங்க'ன்னு சொன்னாங்க.

அதேமாதிரி மறு நாள் காலேல போன் செஞ்சப்ப, 'டாக்டர் மத்தியானம் ஒருமணிக்குத்தான் வருவாரு,.. உங்களுக்கு ரெண்டுமணிக்கு அப்பாயிண்ட்மெண்டு கொடுத்திருக்கேன்'னு சொன்னாங்க. சரீன்னுட்டு 'நோயாளியோட பேரை எழுதிக்கோங்க'ன்னுட்டு பையரோட பேரைச்சொன்னேன். 'பரவால்லைங்க.. நீங்க மத்தியானம் வரச்சே வரவேற்புப்பிரிவுல வந்து பேரைச்சொன்னாப்போதும்'ன்னாங்க. அவங்க சொன்னதை நம்ம்ம்ம்பி மெத்தனமா இருந்துட்டேன்.

மத்தியானமா, குறிச்ச நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னாடியே கிளம்புனோம். ஆக்சுவலி அந்த ஆசுத்திரிக்கு பதினஞ்சு நிமிஷத்துலயே போயிடலாம். ஆனா, ஆசுத்திரிக்கும், பஸ் நிலையத்துக்கும் நடுவால இருக்கற ரோட்டுல பாலம் கட்டுற வேலை நடக்குது. அதனால, ஊரெல்லாம் ஊர்கோலம் போயித்தான் சேரணும். அங்க போனா, மூணாவது மாடிக்கு போங்கன்னாங்க. அங்க போயி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா காத்திருந்தோம். ஒவ்வொரு காமணி நேரத்துக்கொருக்கா, சிஸ்டர் கிட்ட டாக்டர் வந்தாச்சான்னு கேக்கறதும், இப்ப வந்துடுவார்ன்னு அவங்க பதில் சொல்றதும், இடையிடையே, எதுக்காப்ல இருந்த வார்டுகள்ல இருக்கற குட்டிக்குட்டி பேஷண்டுகளை வேடிக்கை பார்க்கறதுமா இருந்தோம்.

கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சதும்,   டவுட்டு வந்து தலைல தட்டுச்சு. தடவிவிட்டுக்கிட்டு, மறுபடி வரவேற்புப்பிரிவுல வந்து 'டாக்டர் எப்போங்க வருவாரு.. குறைஞ்சபட்சம் அவருக்காவது போன் செஞ்சு கேளுங்களேன்'னு ஐடியா கொடுத்தேன்.. (எல்லாம் நேரம்... அவங்க வேலையையும் நாமளே பாக்க வேண்டியிருக்கு!!..). போன் செஞ்சு கேட்டவங்க, அப்படியொரு குண்டைத்தூக்கிப்போடுவாங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.

விஷயம் என்னான்னா,.. அன்னிக்கு காலைல டியூட்டியில இருந்தவங்க,.. நாங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கறதையே டாக்டர்கிட்ட சொல்லாம இருந்திருக்காங்க.உடனே, நானே நேரடியா டாக்டர்கிட்ட பேசி, ரெண்டு நாளைக்கப்புறம் அப்பாயிண்ட்மெண்டை அவர்கிட்டயே உறுதிசெஞ்சுக்கிட்டு, அப்றமா பழைய வரவேற்பாளினியை லேசா டோஸ்விட்டுட்டு வந்தேன்.அவங்க சார்பா இவங்க மன்னிப்பு கேட்டாலும், 'மாஃபி.. இந்தியில எனக்கு புடிக்காத ஒர்ர்ரே வார்த்தை'ன்னுட்டு கிளம்பி வந்துட்டோம்.

அப்றமா, டாக்டர் கிட்ட போயி செக்கப் செஞ்சப்ப, B12ங்கற விட்டமின் குறைபாடு இருக்குமோன்னு தோணுது. எதுக்கும் இரத்தப்பரிசோதனை செஞ்சுடுங்கன்னு எழுதிக்கொடுத்தாரு. அங்க இருக்கற லேபோட லட்சணம் தெரிஞ்சும், இப்பவாவது குறையையெல்லாம் சரிசெஞ்சுருப்பாங்கன்னு நம்ம்பி,.... லேபுக்கு போனா,.. பையரை விட்டுட்டு, ஜாலியா கையைக்கட்டிக்கிட்டு அங்கியும் இங்கியும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கற எங்கிட்ட ஊசியும் கையுமா ரத்தம் எடுக்கவர்றாங்க.. (எனக்கெதிரா உள் நாட்டு சதி நடக்குதோ???) எனக்கு அழறதா சிரிக்கறதான்னு தெரியலை.

 'ஏங்க.. பேஷண்டோட பேரை படிச்சுப்பாக்கமாட்டீங்களா??..பேஷண்ட் யாருன்னுகூட செக் பண்ண மாட்டீங்களா'ன்னு அழாக்குறையா கேட்டேன். தப்பு எம்மேலதானாம்.. நான் உக்காந்திருந்த இருக்கையிலதான் பேஷண்டை உக்காரவெச்சு ரத்தத்தோட மாதிரியை எடுப்பாங்களாம். (அது பேஷண்டா இல்லைன்னாக்கூடவா :-))))). ரிப்போர்ட் வந்ததும் போன்செஞ்சு சொல்லுவோம். நீங்க வந்து வாங்கிக்கலாம்ன்னு சொல்லிட்டு போன் நம்பரை அவங்க தப்பா எழுதிக்கிட்டதும், அதை ஒருவாரத்துக்கப்புறம் நான் போனப்ப கண்டுபிடிச்சு டோஸ்விட்டப்ப,.. எங்கிட்டயிருந்து வாங்கிக்கட்டிக்கிட்டதும் இடைச்செருகல் :-))

ஒருவாரத்துக்கப்புறம் ரிப்போர்ட்டை வாங்கிக்கிட்டு, டாக்டர்கிட்ட போனா,.. பி12 குறைச்சலா இருக்கு. இங்கிருக்கற பொதுமருத்துவர்கிட்ட நான் அனுப்பினேன்னு சொல்லி, ரிப்போர்ட்டை காமிங்க, மருந்து கொடுப்பார்ன்னு சொல்லி அனுப்பிவெச்சார். பொதுமருத்துவரும் ஊசிபோடணும்ன்னு சொல்லி, எழுதிக்கொடுத்தார். அங்கிருந்த மருந்தகத்துல சிரிஞ்ச் உட்பட வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதுல விட்டமினோட அளவு குறைச்சலா இருக்குதுன்னுட்டு சிஸ்டரையே சரியான மருந்தை வாங்கிட்டு வரச்சொல்லி அனுப்பிவெச்சார். மருந்து மட்டும் போதும்.. புதுசிரிஞ்ச் அவங்களே கொடுப்பாங்கன்னு சொன்னதால நான் வாங்கின சிரிஞ்சை திருப்பிக்கொடுத்தேன். ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக்கட்டுதே :-))

அடுத்து நடந்ததுதான் வேடிக்கையின் உச்சக்கட்டம்..
நான் : "மொத்தம் எவ்ளோங்க ஆச்சு??.."
மருந்தாளுனர் : "104 ரூபா ஆச்சுங்க.."
நான் : (குழப்பத்தோட)"சிரிஞ்சோட விலை எட்டு ரூபாயை இதுல கழிச்சுக்கச்சொன்னேனே.. செய்யலையா ?.."
மருந்தாளுனர் : "அட!.. ஆமால்ல. இதோ கழிச்சுடறேன்... ம்ம்ம் ஆங்... இப்போ, 196 ரூபா தரணும் நீங்க.." (இவரு எந்த ஊர்ல கணக்குப்பாடம் படிச்சார்ன்னு தெரியலியே )

ஊசியே போடவேணாம் போங்க.. :-)))). இத்தனைக்கும் அந்த ஆசுத்திரியில எங்கூரு பெரியதலையின் மருமகள் நிர்வாக இயக்குனர்களில் ஒருத்தரா இருக்காங்க. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கிட்ட இவ்ளோ அலட்சியமா நடந்துக்காம அவங்களுக்கு உதவறது, மருத்துவர்களுக்கு மட்டுமான கடமை இல்லைதானே??. அங்கிருக்கறவங்களுக்கும் அந்தக்கடமை உண்டுதானே!!.. அங்கேயுள்ள லட்சணம் ஓரளவு தெரிஞ்சிருந்தும் அங்கே ஏன் போனீங்கன்னு உங்க அடிமனசுல கேள்விகள் வருதுல்ல.. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குதில்லையா,.. அதேமாதிரி அங்கேயுள்ள டாக்டர்கள் நல்லபடியாத்தான் சேவை செய்யறாங்க. இந்த பரிவார தேவதைகள்தான் இப்படி :-))

61 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பருங்கோ......!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மனசு ஆறுச்சா இல்ல இன்னும் ஆறலயா.. கூலா ஜூஸைக் குடிச்சு ,காற்றாடிக்கு கீழ உக்காந்து ஆத்துங்க..:)

இமா க்றிஸ் said...

ஒரு சோக கதை... சொல்லி இருக்கிற விதம் சூப்பர். ;)))
//பரிவார தேவதைகள்தான்// ;))))))))) இன்னமும் சிரிச்சுட்டே இருக்கிறேன்.

Unknown said...

கலக்கல் பதிவு.

ஸாதிகா said...

இது எல்லா இடத்திலும் உள்ளதுதான்.என்ன செய்ய?

'பரிவை' சே.குமார் said...

இது எல்லா இடத்திலும் உள்ளதுதான்.

ஹேமா said...

சாரல்...நீங்க அந்த அண்ணைக்கு யார் முகத்தில முழிச்சீங்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க இப்ப.அங்கயும் ஒரு கச்சேரி வைக்கலாமே.ஏதோ என்னால முடிஞ்சது !

நம்ம நாடுகள் வாய்ப்பேச்சோடு மட்டும்தான் சாரல்.செய்கையால் முன்னேற இன்னும் இன்னும் காலம் கிடக்கு !

rajamelaiyur said...

என்று என் வலையில்

டி.வியாடா நடத்துறிங்க

rajamelaiyur said...

நல்ல பதிவு

இராஜராஜேஸ்வரி said...

இந்த மாதிரி இந்தமாதிரி பரிவாரதேவதைகளை களை எடுக்கவேண்டும்.

ராமலக்ஷ்மி said...

முறையாகப் பயிற்சி பெற்றவர்களை சரியான சம்பளம் கொடுத்து வைப்பதில்லை பல மருத்துவமனைகள்.
நிர்வாகம் இதை சீர் செய்யவில்லையெனில்.., டாக்டர்களின் சேவையும் பயனற்றே போகும்.

அவசியமான பகிர்வு சாரல்.

அமுதா கிருஷ்ணா said...

ம்.ம்.வேதனையை போக்க அங்கே போனால் இப்ப டபுள் வேதனை.

pudugaithendral said...

பரிவார தேவதைகளின் படுத்தல்களினால் சாமிக்கே கெட்ட பேரு வரும்.

மனோ சாமிநாதன் said...

நிகழ்காலக்கலம்பகம் பிரமாதம்!

இந்த அனுபவம், அதுவும் மதிய நேரம் 2 மணி, 3 மணி என்றெல்லாம் போனால் இப்படிப்பட்ட அனுபவங்கள்தான் கிடைக்கிறது இப்போதெல்லாம்!!

RVS said...

என்ன கொடும சாரல் இது?

இந்த கம்பவுண்டருங்க தொல்ல தாங்க முடியலை.

ரொம்ப பேர் ரொம்ப அலட்சியமா பார்ப்பாங்க.. பேஷண்ட் கூட வந்தவங்க எதாவது சந்தேகம் கேட்டுட்டா போதும்... சுள்ளுன்னு கோபம் பொத்துகிட்டு வந்துடும். கேட்டாக்க... ஒரு நாளைக்கு நிறைய பேரை அட்டெண்ட் பண்றாங்களாம்.... அது சரி.. அப்படி அட்டெண்ட் பண்ணினால் எறிஞ்சு விழனும்னு இருக்கா என்ன?

Yaathoramani.blogspot.com said...

சாமி சரியாக இருந்தாலும் இந்த பூசாரிகள் லொள்ளு
எல்லா இடத்திலும் இப்படித்தான் இருக்கு
எரிச்சலான விஷயத்தைக் கூட இவ்வளவு
நகைச்சுவையாக சொல்ல தனித் திறன் வேண்டும்
ரசித்துப் படித்த பதிவு
தொடர வாழ்த்துக்கள் (பதிவைச் சொல்லுகிறேன்)

மாய உலகம் said...

தேவதைகள் திருந்த மாட்டாங்க பாஸூ

vanathy said...

இவ்வளவு நடந்திருக்கா? ரொம்பவும் கொடுமை தான் போங்கள். கலக்கலா எழுதி இருக்கிறீங்க. ரசிச்சேன், அமைதி அக்கா.

ஹுஸைனம்மா said...

மருத்துவமனைகள், குறைந்த சம்பள ஆதாயத்திற்காக, பயிற்சியில்லாதவர்களை வேலைக்கு வைக்கிறார்கள். இவர்களும் முறையான பயிற்சியோ, அறிவுரைகளோ, கட்டளைகளோ தருவதில்லை. இவர்களும், தாங்களாகத் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயலுவதுமில்லை பெரும்பாலும்.

மருத்துவமனைகள் என்றாலே அலர்ஜியாகி, ‘சுய மருத்துவமே’ செய்துகொள்ளலாம் என்ற எண்ணமே இந்நிலைகளால் மேலோங்குகிறது. :-((((

இன்னொரு அனுபவம்: போன வருடம், திருநெல்வேலியில் ஒரு புகழ்பெற்ற பல் டாக்டரிடம் போயிருந்தபோது, தன்னிடம் கேட்காமல் ஒருவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்ததற்காக, ரிஸப்ஷனிஸ்டை, நோயாளிகள் முன்னேயே , அவர் அழ அழ, வார்த்தைகளால் வறுத்தெடுத்ததில் அதிர்ந்துபோய் நின்றோம். தவறு ரிஸப்ஷனிஸ்டுடையதுதான், ஆனாலும்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கொன்னுட்டீங்க போங்க

அமைதி அப்பா said...

//நான் : "மொத்தம் எவ்ளோங்க ஆச்சு??.."
மருந்தாளுனர் : "104 ரூபா ஆச்சுங்க.."
நான் : (குழப்பத்தோட)"சிரிஞ்சோட விலை எட்டு ரூபாயை இதுல கழிச்சுக்கச்சொன்னேனே.. செய்யலையா ?.."
மருந்தாளுனர் : "அட!.. ஆமால்ல. இதோ கழிச்சுடறேன்... ம்ம்ம் ஆங்... இப்போ, 196 ரூபா தரணும் நீங்க.." (இவரு எந்த ஊர்ல கணக்குப்பாடம் படிச்சார்ன்னு தெரியலியே )//

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

நன்றிங்கோ :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

நன்றிங்கோ :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

வீட்டுக்கு வந்ததும் 'சரி சரி.. தண்ணியக்குடிங்க'ன்னு என் பொண்ணு ஜில்லுன்னு தண்ணியக்குடுத்தா.. குடிச்சு ஆத்திக்கிட்டேன் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இமா,

சாமி சும்மா இருந்தாலும்,இந்த தேவதைகளோட ஆராசனை இருக்கே.. அப்பப்பா :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கலாநேசன்,

ரொம்ப நன்றிங்க.. வாசிச்சதுக்கும் கருத்துக்கும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

அதான் தெரியலை :-(

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

ஆமாம்ப்பா.. ஆனாலும் கண்டும் காணாமப்போக பழகிக்கிறோம். வேறவழி ?..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

கச்சேரி வைக்கிறதானா அதையும் நாந்தான் கேக்கணும். ஏன்னா, காலைல முழிச்சதும் உள்ளங்கைகளைப்பார்க்கறது என் வழக்கம் :-))))

மேலிடத்துல புகார் கொடுக்க ரொம்ப நேரமாகாதுங்க.. ஆனா, ஏதாச்சும் கடுமையான நடவடிக்கை எடுத்துட்டாங்கன்னா,.. அவங்க குடும்பம் கஷ்டப்பட்டுடக்கூடாதில்லியா.. அதான் :-)

அப்படியும் அன்னிக்கு டாக்டர்கிட்டயே புகார் சொல்லிட்டுத்தான் வந்தேன், அவரே என்ன ஏதுன்னு விசாரிக்கட்டுமே :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

இந்தமாதிரியான சிலரால உண்மையா சேவை செய்யற மத்தவங்க பேரும், ஆசுத்திரி பேருமில்ல கெட்டுப்போவுது..

Avargal Unmaigal said...

///இந்த பரிவார தேவதைகள்தான் இப்படி :-))///

இந்த மாதிரி பரிவார தேவதைகள் இருக்கும் இடத்துக்கு ஆண்களை அனுப்பிவைத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் ஏனென்றால் தேவதைகளுக்கு புதிதாக வரும் தேவதைகளை கண்டால் பிடிக்காது


கலக்கலா எழுதி இருக்கிறீங்க. ரசிச்சேன்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

அப்படியும் அது ஓரளவு பெரிய ஆசுத்திரிதான். இப்படி நாலுதடவை நடந்தா, நமக்கே அந்த ஆசுத்திரி வேண்டாம்.. ரொம்ப அலைக்கழிப்பாங்கன்னுதானே தோணுது.. இவ்வளவுக்கும் அருமையான வசதிகள் கொண்ட மருத்துவமனை அது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

அதேதாங்க.. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா,.. அங்க ரெண்டு கொடுமை ஆடித்தாம் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

நிச்சயமா கெட்டபேரு வரத்தான் செய்யும்.. அதனால இவங்களும் பாதிக்கப்படத்தான் போறாங்க. அதை ஏனோ அவங்க நினைச்சுப்பார்க்கறதில்லை .

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் said...

அப்போல்லோ ல வயத்து வலின்னு போனா 400 ரூபாய் (Consulting Fee ) ன்னு பிடிங்கிட்டு நீ வயத்து வலின்னு பொய் சொல்றே, என் டைம் ஐயும் வேஸ்ட் பண்ணறேன்னு லந்து கொடுக்குது ஒரு டாக்டர்,

என்ன பண்றது?

:(

ஸ்ரீராம். said...

196 ரூபாய்...! பரவாயில்லையே...கம்பெனிக்கு நல்ல லாபம் பார்த்துக் குடுக்கறாங்களே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதைப்படித்ததும் சிரிச்சு சிரிச்சு என் பல்லெல்லாம் வலி எடுத்துப்போச்சுங்க. பல் டாக்டரிடம் போகவே பயமா இருக்கு இப்போது. நல்ல நகைச்சுவை வர்ணனை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

http://gopu1949.blogspot.com/2011/02/blog-post_6123.html

இதே போன்ற நகைச்சுவைச் சிறுகதை ஒன்று ”வாய் விட்டுச் சிரித்தால்” என்ற தலைப்பில் நான் எழுதியுள்ளேன். முடிந்தால் படித்துப்பாருங்கள். அன்புடன் vgk

Unknown said...

நல்ல பதிவு!
சொல்றவங்க திறமை
யாக இருந்தா எதையும் சுவையா
சொல்லலாம் என்பதற்கு இது
ஒரு எடுத்துக் காட்டு!
நீங்களும் என் வலைப்பக்கம்
வரலாமே
புலவர் சா இராமாநுசம்

Menaga Sathia said...

இந்தியாவில் எல்லா இடத்திலயும் நடக்கறதுதான்...நகைச்சுவையா சொல்லிருக்கீங்கக்கா...எனக்கும் பல் டாக்டர்னாலே பயமா இருக்கும்...

ரிஷபன் said...

நான் உக்காந்திருந்த இருக்கையிலதான் பேஷண்டை உக்காரவெச்சு ரத்தத்தோட மாதிரியை எடுப்பாங்களாம்.

நல்ல வேளை.. அந்த மாதிரி ஆபரேஷனுக்கு ஏதாச்சும் ஒரு இருக்கை இருக்கான்னு விசாரிச்சு பார்த்து ஒக்காரணும்.. ஊசியை போட்டு கூட்டுகிட்டு போயிட்டா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோம்மா,

ஆஹா!!.. இதுக்கெல்லாம் நேரம் காலம் கூட வெச்சிருக்காங்களா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.வி. எஸ்,

தேவதைகளைப்பத்தி கரெக்டா சொன்னீங்க.. ஊர்ல இருக்கற ஒரு புகழ்பெற்ற ஆசுத்திரில, காலைல பத்துமணிலேர்ந்து காத்திருந்து வெறுத்துப்போன ஒரு அம்மா, கவுண்டர்ல வந்து என் நம்பர் எப்போங்க வரும்ன்னு தன்மையா கேட்டதுக்கே, அந்த ரிசப்ஷனிஸ்ட் திட்டிய திட்டு இருக்கே.. அப்பப்பா!!..

அந்தம்மா ரிசப்ஷனிஸ்ட் கிட்ட வந்து விசாரிக்கறச்சே சாயந்திரம் நாலு நாலரை மணியிருக்கும்கறது இங்கே கட்டாயம் குறிப்பிடணும்.. அப்போ நீங்க குறிப்பிட்ட அதே புலம்பலைத்தான் ம
று ஒலிபரப்பு செஞ்சாங்க. .

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

எப்படியும் அந்தக்கட்டத்தை கடந்துதான் போகணும்.. அதை சிரிச்சுட்டே கடந்துடலாமே. வெக்ஸாயி புலம்பறதால ஒண்ணும் மாறப்போறதில்லை :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

தேவதைகளை மிஞ்சற அதிதேவதைகள் வ்ந்தாக்கூடவா :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வானதி,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ரொம்ப கொடுமைதான் நீங்க சொன்ன சம்பவம்.. தப்பே செஞ்சுருந்தாலும் தன்னோட அறைக்கு கூப்டு திட்டியிருக்கலாம். வெளியில் வெச்சு கண்டிச்சதுக்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும். அது,

'நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு....' :-))))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா சுப்ரமணியம்,

ஹா..ஹா..ஹா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

மருந்தகத்தை திறக்கறதுக்கு முன்னாடி தினமும் வாய்ப்பாடு ஒப்பிச்சுட்டுத்தான் திறக்கணும்ன்னு மருத்துவமனை இவருக்கு கட்டளை போட்டா தேவலை :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அவர்கள் உண்மைகள்,

அடடா!!.. அப்படியும் இருக்குதோ?. அவங்களுக்கு தெரியலை பாருங்க :-))

ரசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அவர்கள் உண்மைகள்,

அடடா!!.. அப்படியும் இருக்குதோ?. அவங்களுக்கு தெரியலை பாருங்க :-))

ரசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அ.அ.தாழ்,

செம எரிச்சலா இருந்துருக்குமில்லையா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

ஒருவேளை உள்வேலை ஏதும் இருக்குமோன்னு இருக்கு. கண்டுபிடிக்கலைன்னா வந்தவரை லாபம், கண்டுபிடிச்சா இருக்கவே இருக்கு,..'அட!!.. ஆமால்ல..ஸாரி' என்ற வழக்கமான டயலாக் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

நோ பிரச்சினை. பல் டாக்டர்கிட்ட போகும்போது, ரிசப்ஷனிஸ்டுகள், நர்ஸுகள் இல்லாத கிளினிக்கா பார்த்து போயிட்டு வாங்க :-)))

உங்க தளத்துக்கு எப்போதும் வர்றதுதான்., சத்தமில்லாம வாசிக்க.. அப்பப்ப ப்ரெசண்ட் போடறேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புலவர் ஐயா,

உங்க தளத்துக்கும் எப்பவும் வர்றதுதான். சிலசமயங்கள்ல ரீடர்ல அப்டேட் ஆகாம விட்டுப்போகும்.

வாசிக்கிறதுண்டு. இனிமே அடையாளமும் கண்டிப்பா வெச்சுட்டு வரணும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

உடம்புல வேற எங்க ஊசி போட்டாலும் ஐயோன்னு வாயால கத்தலாம். பல்டாக்டர் வாய்லயே ஊசிபோடுவாரே.. எப்டீன்னு கத்தறது :-))

Anonymous said...

உங்கள் அறிமுகப்பதிவு திறக்கவில்லையே ???

பதிவுகள் post dated ஆக உள்ளனவே ?

அமைதிச்சாரல் வினோதமான peyar. but இலக்கிய நயத்துடன் இருக்கிறது.

அறிமுகப்படம் அருமை.

க‌லை ந‌ய‌ம் இல‌க்கிய‌ ந‌ய‌ம். Wonderful person u r?

Slut March is coming to Mumbai shortly. It was over in Delhi and Chennai yeterday.

பெண்ணியத்தில் வருவது இந்த ஊர்வலம். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஊர்வலம் நினைத்த இலக்கை அடையுமா ?

ஒரு பதிவு போடுங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிம்மக்கல்,

post dated???.. புரியலை.

அறிமுக இடுகை இப்ப வெளியிட்டாச்சு :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

நீங்க சொல்றமாதிரி நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.. ஒக்காந்தாத்தானே பிரச்சினை?.. எதுக்கு வம்பு?. இனிமே நின்னுக்கிறேன் :-)

LinkWithin

Related Posts with Thumbnails