Tuesday, 22 March 2011

உலகம் முழுக்க தேடுறாங்க..


'சிலபல வருடங்களுக்கு முன்னால்'.... இந்த டைட்டிலை படிக்கிறப்ப புகைமண்டலத்துக்கு நடுவுல கொசுவத்தி சுத்தறமாதிரி கற்பனை செஞ்சுக்கணும். ரைட்டா??... கொசுவத்தி நம்மை கொண்டு சேர்க்கிற இடம் ஒரு வீடு. அந்த வீட்டின் மூன்று மருமகள்களில் ரெண்டாவது மற்றும் கடைசி மருமகள்களுடைய குழந்தைகள் மழலையில் திக்கித்திக்கி.. 'ம்மா.. ப்பா'ன்னு பேச ஆரம்பிச்ச அப்புறமும், மூத்த மருமகளுக்கு குழந்தைச்செல்வம் இன்னும் கிடைக்கலை. அதுவும் கல்யாணமாகி ஐந்துவருடங்களுக்கப்புறமும்..

அவங்களும் வேண்டாத தெய்வமில்லை.. போகாத கோயில்குளமில்லை. புகுந்தவீட்லேயிருந்து எந்த நெருக்கடியும் கொடுக்கலைன்னாலும் அவங்க மனசுல ஒரு பயம் இருந்துட்டேயிருந்தது. அந்த பயத்தை நீக்கி எல்லோர் மனதிலும் அமைதியை நிலவச்செய்தது ஒரு தளிரின் வருகை.. அதுக்கப்புறம்தான் க்ளைமாக்ஸே :-))). பேரு வைப்பதில்தான் ஒரே கச்சாமுச்சான்னு ஆச்சு :-)))).

அந்தக்காலத்துல தாத்தா,பாட்டியின் பேரை வைப்பதுதான் வழக்கம். அதுவும் மூத்த மகன்னா.. கண்டிப்பா அப்பாவழி தாத்தாபாட்டியோட பேரைத்தான் வைக்கணும். அம்மாவின் அப்பாவுக்கும், அப்பாவின் அம்மாவுக்கும் ஒரே பெயர்தான்.. சில பெயர்கள் பொதுப்பெயர்களா இருக்குமே.. அதுமாதிரி. அதனால 'பாட்டியோட பேரை வெச்சாலும், மாமனார் பேரைத்தான் வெச்சிருக்கான்னு சொல்லுவாங்க.. எதுக்கு வம்பு??..'ங்கற குழப்பத்துலயே பேருவைக்காமயே ரெண்டொருமாசம் ஓடிப்போச்சு. அப்புறம், எல்லாப்பிரச்சினையும் நீங்கி அமைதி நிலவட்டும்ன்னு என் பேரை எனக்கு வெச்சாங்க.

எல்லாக்குழந்தைகளுக்கும் உள்ள உலக வழக்கப்படி, எனக்கும்.. எம்பேரு மொதல்ல எல்லாம் எனக்கே பிடிக்காது. ஒவ்வொருத்தர் எவ்ளோ அழகா, ஸ்டெயிலா பேருவெச்சிருக்காங்க.. எனக்குன்னு தேடிப்பிடிச்சீங்களேன்னு புலம்புவேன். அதுவும் நம்ம டி.ராஜேந்தர், எம்பேர்ல ஒரு தேசியகீதத்தை இயற்றியதும் ரொம்ப வெக்ஸாகிடுச்சு :-))).. அதுவரைக்கும் என்னை வம்பிழுக்கிறதா நினைச்சுக்கிட்டு, தேசப்பிதாவை வம்பிழுத்து வெறும்வாயை மென்னுக்கிட்டு இருந்த ஜெலுசில்களுக்கு அவல்,பொரி,சுண்டல்ன்னு எல்லாமே கிடைச்சுப்போச்சு..

பட்டப்பெயரெல்லாம் எதுவும் எனக்கு வெச்சதில்லை.. ஏன்னா, நான் பேருக்கேத்தமாதிரி அமைதியாவே இருப்பேன்( நம்புங்கப்பா :-D). ஆனா, அதுக்கு பதிலா எம்பேரு எனக்கே மறந்துடுறமாதிரி இன்னொரு பேரு வந்து ஒட்டிக்கிச்சு. ஆறாம்வகுப்புல நுழைஞ்சப்ப, என்னோட பேர்ல இன்னும் ரெண்டுபேர் இருந்தாங்க. ஒருத்திய கூப்பிட்டா இன்னொருத்தி எழுந்து நிப்போம். ஒரே காமெடியா இருக்கும். கடைசியில எங்க செண்பகவல்லி டீச்சர் ஒரு வழி கண்டுபிடிச்சாங்க. அவரவர் அம்மா பேரோட முதலெழுத்தையும் இனிஷியலா சேர்த்துக்கச்சொன்னதோட பதிவேட்டிலும் பதிவு செஞ்சுட்டாங்க.

எங்க அம்மாவோட பேரு 'ராமலஷ்மி'.. எல்லோரும் 'லஷ்மி'ன்னுதான் கூப்பிடுவாங்க. அவங்க பேரையும் இனிஷியல்ல சேர்த்ததுலேருந்து எல்லோருக்கும் நான் 'L.S' ஆகிட்டேன். காலேஜ் வரைக்கும் இது தொடர்ந்துச்சு. வீட்ல இன்னிக்கும் எல்லோருக்கும் பாசமா... 'லேய்',  ரங்க்ஸுக்கு மட்டும் 'மக்கா :-)). என் பேரு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சதுன்னா, என் பையன் பேச ஆரம்பிக்கச்சே மழலையில் என்னை பேருசொல்லி கூப்பிட்ட பொழுதுகள்லதான் :-)). அதுவும் அவன் சீனாக்காரன் மாதிரி மூக்கால பேசறச்சே இன்னும் அழகா இருக்கும் :-))

ப்ளாக் ஆரம்பிச்சப்ப, ஏற்கனவே ரெண்டுபேரு இதேபேர்ல எழுதிக்கிட்டிருந்தாங்க. அதனால, குழப்பம் வேணாம்ன்னு நினைச்சேன். அதுவுமில்லாம புனைப்பெயர்ல எழுதுனா ஒரு கெத்தாயிருக்குமேன்னு ஒரு நினைப்புதான். N.P.Kன்னு ஆரோ கூவுற சத்தம் கேக்குது :-)))))))). திருனேலிக்கு பக்கத்து ஊரான, வாசுதேவ நல்லூர்ல இருக்கற மாரியம்மனோட பேரைத்தான் ரங்க்ஸுக்கு வெச்சிருக்காங்க. மாரின்னா மழைன்னு அர்த்தமாகுது.. இல்லியா?.. அடிச்சிப்பெய்யற மழையை விட, இதமான மெல்லிய சாரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, ப்ளாகுக்கு பேரு வைக்கிறப்ப ரங்க்ஸை கூட்டணியில் சேர்த்துக்கிட்டேன் (வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கட்சியின் தலைவர் அவர் :-))). ஆனா, பேஸ்புக்கிலும், ஃப்ளிக்கர்லயும் சொந்தபேர்லதான் திருவுலா..

எவ்வளவு அருமையான அழகான பேரை சுமந்துக்கிட்டிருக்கோம்ன்னு உணர ஆரம்பிச்சப்போ, எனக்கே ரொம்ப பெருமையாயிருந்தது... புல்லரிச்சுப்போச்சு. அதுவும் வடநாட்டில் அடிக்கொருதரம் பேச்சில் என்பேரை உச்சரிப்பாங்க. நானில்லாம எந்தவொரு பூஜைகளும்கூட நிறைவுபெறாது, எந்தவொரு பேருக்கும் இல்லாத பெருமை எம்பேருக்கு இருக்குன்னு ஒரு சின்ன தற்பெருமையும் தலைதூக்கும். 'அந்தப்பேராலதான் உனக்கு பெருமை... அத மொதல்ல புரிஞ்சுக்கோ'ன்னு அந்த தற்பெருமையை தலைல குட்டி உக்காரவெச்சுடுவேன்.

உலகம் முழுக்க அமைதியை வேண்டி எத்தனை தேடல்கள்.. பிரார்த்தனைகள், வேண்டுதல்கள். எது இருக்கோ இல்லியோ அமைதி இருந்தாப்போதும்ன்னு எத்தனை பெருமூச்சுகள். இப்படி எல்லோரும் விரும்பற ஒரு பேரை எனக்கு வெச்சதுக்காக கணக்கில்லாத நன்றிகளை என்னை பெற்றவர்களுக்கு சொல்லிக்கிறேன். பெயர்க்காரணத்தை விளக்க கோபி வெச்ச அழைப்பிதழ் இங்கே இருக்கு.. அவருக்கும் நன்றிகள்.

இதை தொடர

வல்லிம்மா,

வை.கோபாலகிருஷ்ணன்.

அன்புடன் ஆனந்தி,

ஜெய்லானி,

நாஞ்சில் பிரதாப்,

லஷ்மிம்மா,

தேனம்மை,

ராமலஷ்மி..

ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்..:-))

ஓம்.. ஷாந்தி.. ஓம்..



64 comments:

Prathap Kumar S. said...

இனிமே டி.ஆரோட. தேசியகிதத்தை கேட்ககேநர்த்நால் ஒங்க நியாபகம் தான வரும் போலருக்கு...
தேசீய கீதம் மட்டுமில்லை அந்தபேர்ல ஒரு தேசிய காவியம் கூட படைச்சிருக்காரு...அவருக்கு நிங்க ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கீங்க... ...:))

எல் கே said...

நல்ல காரணம் சொன்னீங்க போங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெயர்க்காரணம் பற்றி என்னையும் எழுதச்சொல்லி தாங்கள் அழைப்புக் கொடுத்திருந்ததைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.

ஏற்கனவே திருமதி ராஜி அவர்கள் என்னை இதுபோல அழைத்ததால் நான் சமீபத்தில் தான் எழுதி வெளியிட்டுள்ளேன்.

அதற்கான இணைப்பு இவ்விடம் கொடுத்துள்ளேன். படித்துவிட்டு கருத்துக்கள் கூறவும்.

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_09.html

அன்புடன்
வை கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com 22.03.2011

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

இப்ப நினைக்கறச்சே எம்பேர்ல பாட்டெல்லாம் வந்திருக்கேன்னு ஒரு பெருமையாயிருக்கு, ஆனா.. அந்தக்காலத்துல கொலைவெறியோட அவரை தேடிக்கிட்டிருந்ததும் நிஜம் :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

இந்தக்காரணம் போதுமா?.. இன்னும் கொஞ்சம் வேணுமா? :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

உங்க தளத்துக்கு வந்துட்டே இருக்கேன் :-))

ஹுஸைனம்மா said...

அமைதியை வேண்டித்தானே எல்லாரும் அலைகிறோம்? பெயரிலேயே வாய்க்கப்பெற்ற உங்களுக்கு பாக்கியம்தான்.

முஸ்லிம்களின் முகமனான ‘ஸலாம்’ என்றாலும் பொருள் ’சாந்தி’தான். ஏன், இஸ்லாம் என்ற பதத்திற்கும் அந்தப் பொருள்தான்!!

//டி.ராஜேந்தர், எம்பேர்ல ஒரு தேசியகீதத்தை இயற்றியதும் //
கொடுத்து வச்சவங்க நீங்க!! :-))))

அந்தக் காலத்துல பேரை வச்சு பாட்டுதான் ஃபேஷன். அந்தப் பேருள்ளவங்க பாடுதான் திண்டாட்டம்!!

வல்லிசிம்ஹன் said...

சொல்லிடலாம். நாமதான் முல்டிபிள் பர்சனாலிட்ய் ஆச்சே:)
நன்றி சாரல். சாந்தி நிலவ வேண்டும்;)

ராமலக்ஷ்மி said...

//எங்க அம்மாவோட பேரு 'ராமலஷ்மி'.. //

ஹை:)!

சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கீங்க. பள்ளிகாலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் உங்க பெயருள்ளவர்கள் ஒன்றுக்கு மேலாக இருப்பார்கள்தான் அப்போது:)!

என்னையும் அழைத்திருக்கும் அன்புக்கு மிக்க நன்றி சாரல். நீங்களே சொல்லியிருப்பது எனக்கு அப்பா வழி பாட்டியின் பெயர்:)!

சசிகுமார் said...

சூப்பர் ஓம் சாந்தி ஓம்

நாடோடி said...

அந்த‌ பாட்டு வ‌ந்த‌ டைம் டி.ஆர் உங்க‌ கையில‌ கிடைச்சிருந்தா ஒரு வ‌ழி ப‌ண்ணியிருப்பீங்க‌....... :)))))))

Gayathri said...

rombha azhaga sollirukeenga...nalla irukku peyarkaaranam vilakkam..chinna chinna azhagana vishayangal than peria peria thakkuthalai erpaduthugirathu...

ஜெய்லானி said...

நான் சொல்ல வந்ததை ஹுஸைனம்மாவே சொல்லிட்டாங்க..!!சந்தோஷமான பேரை டி ஆர் அழுதுகிட்டேயில்ல சொன்னார் :-))


கை வசம் ஏகப்ப்ட்ட தொடர் பாக்கி இருக்கு இதுல இன்னொன்னாஆஆஆஆ... :-)) விரைவில் போடுகிறேன் :-))

Yaathoramani.blogspot.com said...

பெயர்க்காரணம் சொல்லிப்போகும்விதம் கூட
அமைதிச் சாரலைத்தான் நினைவுறுத்திப் போகிறது
அருமை.

ADHI VENKAT said...

புனைப்பெயருக்கு சொன்ன விளக்கம் நல்லாயிருக்குங்க. எங்கும் அமைதி நிலவட்டும். ஓம் ஷாந்தி ஓம்!

"உழவன்" "Uzhavan" said...

பெயருக்குப் பின்னால இவ்ளோ இருக்கா :-)

அமுதா கிருஷ்ணா said...

சாந்தி..சாந்தி..அமைதிக்கு இதுதான் காரணமா?

மாதேவி said...

தெரிந்துகொண்டோம் அமைதி.:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அமைதிச்சாரல் said...
//சுவாரஸ்யமான பெயர்க்காரண இடுகை :-))

ஊரையும் கோவில், குளத்தையும் வர்ணிக்கச்சே கண்முன்னால் நிறுத்திட்டீங்க..

அசத்தல் :-))//

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் வாங்க.
அன்புடன், வை கோபாலகிருஷ்ணன் 22/03/2011

raji said...

டி கே பட்டம்மாள் குரல்ல "எங்கும் ஷாந்தி எங்கும் ஷாந்தின்னு"
கேட்கும் பொழுது அப்படியே ஒரு அமைதியான உலகத்துக்கு
நான் போயிடுவேன்.அந்த வார்த்தைக்கு அப்பிடி ஒரு சக்தி
இருக்குங்க.அதையே பேரா வச்சுக்கிட்டிருக்கற உங்க
உள்ளம் என்னிக்கும் அமைதியானதா இருக்கும்.

உங்க பதிவும் "அமைதிச்சாரல்"னு இருக்கறதால
அதைப் படிக்கற எங்களுக்கும் அமைதி கிட்டும்

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பெயர்க்காரணம் பற்றிய பகிர்வு அருமை! பகிர்வுக்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

//என் பேரை எனக்கு வெச்சாங்க. //

கிகிகிகி..!

//வன் சீனாக்காரன் மாதிரி மூக்கால பேசறச்சே இன்னும் அழகா இருக்கும் //

ஞானி..

நினைச்சேன் சிரிச்சேன்

:-))))))

பார்த்திபன் புதியபாதை படத்துல கூட கூவி கூவி விப்பாருங்ளே...!

ஹேமா said...

அமைதிக்குப் பெயர்தான் ஷாந்தியா !

அமைதிச்சாரலே ரொம்ப அழகு !

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

கலக்கிட்டீங்க போங்க... இவ்ளோ அழகா ஒரு விளக்கம் இருக்கு, சொல்லிட்டீங்க..

பக்ஷே ஞான் எந்து செய்யும்?? ;-))


என்னையும் அழைத்து சோதனைக்கு ஆளாக்கி விட்டீர்களே....(இப்போ தான் அங்க சௌந்தர் இதே பதிவுக்கு எழுத சொல்லிருக்காங்க... அவ்வ்வ்வ்வ்)


...அழைப்பிற்கு நன்றிங்க.. சீக்கிரம் எழுதுறேன்.. முயற்சி பண்றேன்.. :-)

அமைதி அப்பா said...

மிக அருமையான பெயர் விளக்கம்.
நல்ல நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.

எனது பெற்றோர் வைத்தப் பெயர் என்னுடைய அலுவலக பயன்பாட்டைத் தவிர்த்து மற்ற இடங்களில் நேரடியாக பயன்படவில்லை.
பெரும்பகுதியினருக்கு இந்த அனுபவம் இருக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

மனசின் ஒரு ஓரத்துல கொண்டாட்டமாவும் இருந்ததே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உங்க விரிவான இடுகைக்காக வெயிட்டிங் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

காலேஜ் வந்தப்புறம்கூட விடாதுகருப்பு மாதிரி தொடர்ந்துக்கிட்டிருந்துச்சுங்க :-))

நழுவினாலும் இடுகை போடச்சொல்லி கேப்போமில்ல :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

அப்படியே ஆயிரத்தெட்டு முறை ஜெபிச்சா, உலகம் நல்லாருக்குமாம் :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

அவரோட படங்களை நூறுமுறை அவரே பாக்கணும்ன்னு தண்டனை கொடுத்திருப்பேன் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க காயத்ரி,

நிச்சயமா.. சின்னச்சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாவும் ஆக்குது :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

அழுதுக்கிட்டே சொன்னதால்தான் தண்டனையே கொடுக்கப்போறேன் :-))

உங்க இடுகைக்காக வெயிட்டிங்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

நன்றிங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

ரிப்ப்ப்ப்பீட்டேய்ய்ய் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உழவன்,

எக்கச்சக்கமா இருக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

:-)))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

நன்றிங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

கண்டிப்பா வரேன் கோபாலகிருஷ்ணன் ஐயா :-)

Asiya Omar said...

ரொம்ப சந்தோஷமாக இருந்தது,உங்க இந்தப்பதிவை வாசிக்க,சுவாரசியமும் கூட.வாசு தேவநல்லூர் என்றவுடன் என்னுடன் கல்லூரியில் பயின்ற ஏஞ்சலின் மார்க்ரெட் தான் நினைவுக்கு வந்தாள்,அந்த ஊரில் அப்படி யாரையும் தெரியுமா?இப்ப தொடர்பில் இல்லை.
நல்ல பகிர்வு.

குறையொன்றுமில்லை. said...

அமைதிச்சாரல் என்னையும் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கீங்க உடனே எழுதியாச்சு. உங்க அளவுக்கேல்லாம் எனக்கு சுவாரசியமா எழுதவரலை . நீங்க வந்து படிச்சு பாத்தீங்களா? நீங்க ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

R. Gopi said...

நல்லா எழுதி இருக்கீங்க . ரமணி சார் சொல்வதுதான் நான் சொல்ல வந்ததும்.

Mukil said...

சாரல் அக்கா,

இத்தன நாளா யோசிச்சுட்டே இருந்தேன், உங்கப் பேரு என்னவா இருக்கும் ன்னு... அதுக்காகவே வந்த மாதிரி அமைஞ்சுடுச்சு இந்த பதிவு... :-))

அழகான பேரு, அர்த்தத்தோடத்தான் வெச்சிருக்காங்க...

எனக்குக் கூட ச்ச்சின்ன வயசுல என் பேரே பிடிக்காது. அப்புறம் சங்க இலக்கியங்கள், கவிதைகள் ல்லாம் படிக்க ஆரம்பிச்சப்புறம் தான் பிடிக்க ஆரம்பிச்சது...

இலக்கியம் ன்னா ரொம்ப பெரிய புலவி அளவுக்கு நெனச்சிடாதீங்க... தமிழ் மனப்பாடச் செய்யுட்களைத்தான் சொன்னேன்... ஹி ஹி ஹி :-))

உண்மையிலேயே, நம்ம பேர மத்தவங்க கூப்டறத விட, குழந்தைங்க கூப்டும் போது ரொம்ப வித்தியாசமா, ரொம்ப அழகா இருக்கும்.:-))

சுதி, லயங்களைக் கேட்டதாகச் சொல்லவும்... :-))

-முகில்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

ரொம்ப நன்றிங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்து,

அம்மா, மாம், இப்ப சிலசமயங்கள்ல காரியம் ஆகணும்ன்னா, மிம்மீ.. இப்படி எத்தனை முறைகள்ல கூப்ட்டாலும் அந்த 'ஞாந்தீ' ரொம்ப இனிமை. இப்பவும் அடிக்கடி அதை நினைவுகூர்வதுண்டு :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

நீங்க சொன்னா சரிதாங்க :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

காத்திருக்கோம்.. :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

எனக்குமே பள்ளி, கல்லூரிக்காலங்கள்ல எம்பேரே மறந்துபோச்சுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

எனக்கு அந்த ஊர்ல எங்க ரங்கா சித்தியையும், மாரியம்மன் கோயிலையும் மட்டுந்தான் தெரியும்
:-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

உங்க ஒருத்தர கூப்ட்டா வீடே வந்து நிக்கற இடம் ஒண்ணே போதுமே.. ஒரு பானைக்கு ஒரு சோறு பதமா :-))

சுவாரஸ்யமா எழுதியிருந்தீங்க.. படிச்சிட்டேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபி,

ரைட்டுப்பா :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலு,

பசங்க கூப்டற அழகுக்காகவே, அம்மான்னுதான் கூப்பிடணும்ன்னு கட்டுப்பாடெல்லாம் போடலை.

விசாரிச்சதுக்கு ரொம்ப நன்றி :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பசங்களுக்கு கதை சொல்லச்சொன்னா என் கணவர் சொல்கிற அருள்குழந்தை பிறந்த கதை மாதிரியே இருக்கே..ஹஹ்ஹா.. ஓகே
எங்க க்ளாஸில் கூட ரெண்டு பேரு இருந்தாங்க இதே பேருல..எம் . கே, எம் என் ந்னு ரெண்டுபேருக்கும் இனிஷியல் வச்சி த்தான் கூப்பிடுவோம்..
எங்க போனாலும் வந்தாலும் நமக்கு மனசுல ”உங்க பேரு” வந்தா போதும் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கடைசி வரி வரை பேரு சொல்லாம இழுத்தது சூப்பர்... (எனக்கு உங்க தெரியாம இருந்திருந்தா டென்ஷன் ஆகி இருப்பேன்...:)

"சாரல்" விளக்கம் சூப்பர்... சிவனின்றி சக்தி ஏது...??? (சக்தி இன்றியும் சிவனேது:)

சாந்தி நிலவ வேண்டும்னு நாங்களும் வேண்டிக்கறோம்...:)

Thenammai Lakshmanan said...

பேரு காரணம் இன்னிக்குத்தான் தெளிவா வெளங்கிச்சு தங்கச்சி..ஹிஹிஹி

அழைப்புக்க்கு நன்றி.. பாஜியும் அழைத்திருக்கிறார்..:)

Thenammai Lakshmanan said...

பாலாஜி சரவணன் அவசரத்தில் பாஜி ஆகிட்டார் பா.. டோண்ட் லாஃப்..:)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நீங்க அழைத்த தொடர்பதிவு.. எழுதி இருக்கேங்க.. அழைப்பிற்கு நன்றி :-))

http://anbudanananthi.blogspot.com/2011/03/blog-post_25.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

உங்களுக்கும் இனிஷியல்தான் அடையாளமா :-)))

அருள்குழந்தை கதை என்னப்பா.. சொல்லுங்களேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

மீ த ஜாலி.. அப்பாவி கொஞ்சமா டென்ஷன் ஆகியிருப்பாங்க கண்டிப்பா
:-))

அதானே.. உலகத்துல கூட்டுப்பிரார்த்தனைகள் எதுக்காம் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

உங்க ப்ளாக்ல என்னக்கா வெச்சிருக்கீங்க.. டேஷ்போர்டை திறந்தாலே 'தேனக்கா வூட்டுக்கு போகாதே'ன்னு கத்துது. அதான் முறையா வீட்டுக்கு வந்து கூப்டமுடியலை.. இருந்தாலும் ரீடர்ல படிச்சிடுவேன்ல :-))))

சாந்தி மாரியப்பன் said...

'பாஜி'ன்னதும் ஹர்பஜன் சிங்குதான் ஞாபகம் வந்தார். சத்தியமா சாப்பிடற பாஜி ஞாபகம் வரலை :-))))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

தொடர்ந்ததுக்கு நன்றிப்ப்பா..

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் பெயர்க்காரணம் பற்றிய பகிர்வு அருமை! பகிர்வுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

LinkWithin

Related Posts with Thumbnails