Wednesday, 29 December 2010

காலி செஞ்சுட்டேன்..

ரொட்டி, சப்பாத்தி செய்யறதுகூட கஷ்டமில்லீங்க.. அதுக்கு சைடிஷ் செய்யறதுதான் நொள்ளைபிடிச்சது. ஒவ்வொரு நாளும் புதுப்புது வெரைட்டியா இருக்கணும். ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ன்னு பின்னூட்டம் போடறது வேண்ணா நல்லாருக்கும். ஆனா, சைடிஷ் மட்டும் குறைஞ்சது ஒருவாரத்துக்கப்புறம்தான் ரிப்பீட் ஆகணும்.

காலையில எந்திருக்கும்போதே சப்பாத்தியோட முகத்தில முழிக்கிற எங்கூர்க்காரங்களுக்கே இது ஒரு சவால். மதியம் டப்பாவுக்கு, ராத்திரிக்குன்னு ஒரு நாளைக்கு ரெண்டுவிதம். இதுல, ரிப்பீட்டும் ஆகாம பாத்துக்கணும். என்னதான் வீட்டுல உள்ளவங்க டிமாண்ட் செய்யலைன்னாலும் நமக்குன்னு ஒரு கெத்து இருக்கில்ல... அதை விட்டுக்கொடுக்க முடியுமா :-)))).

இப்ப சொல்லியிருக்கிற கறி செய்றதுக்கு ரொம்ப சிம்பிளானது. பேச்சிலர்கள்கூட கஷ்டமில்லாம செஞ்சுடலாம். இப்ப இதை செஞ்சு டேஸ்ட் பாருங்க. அப்பப்ப இதைமாதிரி கறிவகைகளை எடுத்துவுடறேன்.

ஒரு காலிஃப்ளவர், ரெண்டு உருளைக்கிழங்கு, ஒரு டீஸ்பூன் சீரகம், மூணு பச்சைமிளகாய், அரைகிண்ணம் நறுக்கிய கொத்தமல்லி இலை, அரைகப் ஊறவைத்த கடலைப்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள், 1டீஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் கரம்மசாலா, தேவைக்கேற்ப உப்பு இருந்தா இதை ஈஸியா செஞ்சுடலாம்.

 பருப்பு ஊறவைக்க நேரமாகுமேன்னு நினைக்கவேண்டாம்.  கொதிக்கவைத்த தண்ணீரை ஃப்ளாஸ்க், அல்லது ஹாட்பேக்கில் விட்டு அதுல பருப்பைப்போட்டு மூடிவெச்சுடுங்க. ஜஸ்ட்... பதினஞ்சு நிமிஷத்துல ஊறிடும். அதுக்குள்ள, நீங்க காய் நறுக்கி, மசாலா அரைச்சு வெச்சுட்டு, சப்பாத்தியை ரெடிபண்ணுங்க.. இல்லைன்னா வேற வேலை ஏதாவது இருந்தா பாத்துட்டு வாங்க.

காலிஃப்ளவரை சின்னச்சின்ன பூக்களாக உதிர்த்து வெச்சுக்கோங்க, உருளைக்கிழங்கை ஒரு இஞ்ச் அளவுக்கு துண்டுபோட்டுக்கோங்க.
சீரகம், கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய், மஞ்சள், கரம்மசாலா இதையெல்லாம் நல்லா மசிய அரைச்சு வெச்சுக்கோங்க.

இப்ப, அடுப்பில் சூடாகிக்கிட்டிருக்கிற கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்களையும், கடலைப்பருப்பையும் லேசா வதக்குங்க. அப்புறம் அரைச்சுவெச்ச மசாலாவை போட்டு நல்லா கிளறிவுடுங்க. பச்சைவாசனை போனதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைகப் தண்ணீரும் ஊத்தி, தேவையான அளவு உப்பும் போடுங்க. இப்ப, இதை குக்கரில் ரெண்டுவிசில் வரும்வரை வேகவிடுங்க. ப்ரஷர் பேனில் செய்யறதாயிருந்தா அப்படியே மூடிபோட்டு வெயிட்டை போட்டுடலாம்.


அவ்வளவுதான்... வெந்ததும் அதை மறுபடி ஒரு நிமிஷம் கொதிக்கவெச்சா இன்னும் ருசியாயிருக்கும். விரும்பினால் பச்சைப்பட்டாணியும் கூடுதலா சேர்த்துக்கலாம். இப்ப சீசன்தானே...

டிஸ்கி: விருந்து எதுக்குன்னு சொல்ல மறந்துட்டேனில்ல..... தமிழ்மணம் முதல்சுற்றில், 'பாறையில் ரெண்டுமண்டபம்' , அப்புறம், 'குழந்தைகள் பலவிதம்' ரெண்டும் தேர்வாகி ரெண்டாம் சுற்றுக்கு போயிருக்கு. வாக்களித்த அனைவருக்கும் நன்றி...



42 comments:

Unknown said...

அவ்ளோதானா
சரி அப்ப பார்சல் பண்ணிடுங்க அக்கா..
சப்பாத்தி 12 போதும்

ஆனந்தி.. said...

ஓகே..ஓகே...விருந்து சாப்டாச்சு...:)) வாழ்த்துக்கள் சகோதரி...:)) புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Vidhya Chandrasekaran said...

ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

இரண்டாம் சுற்று முன்னேறியதற்கு வாழ்த்துகள்.

Asiya Omar said...

இரண்டாம் சுற்றில் வந்தமைக்கும்,வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.ரெசிப்பி சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

கடலைப் பருப்பில் செய்ததில்லை. குறிப்புக்கு நன்றி செய்து பார்க்கிறேன்.

முதல் சுற்றில் வென்றதற்கு வாழ்த்துக்கள். அருமையான விருந்து.

இரண்டாம் சுற்றிலும் வெற்றி பெற என் அன்பான வாழ்த்துக்கள் சாரல்!

ஹுஸைனம்மா said...

//நமக்குன்னு ஒரு கெத்து இருக்கில்ல//

அதானே... ஆனாலும் சிலசமயம் தினமும் உருளை மசாலாவே செஞ்சிட்டா உனக்கும் ஈஸி, எங்களுக்கும் வசதின்னு முணுமுணுப்பு கேக்காம இல்லை!! :-)))

இதை க.பருப்பு சேர்க்காமலும், தேங்காய் சேர்த்தும் செய்வதுண்டு. இது கொஞ்சம் வித்தியாசம். செய்யணும். ஆமா, மதியத்துக்கும் சப்பாத்தியா? மும்பைவாலாவாகவே மாறிட்டீங்கபோல!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

12 போதுமா... அச்சச்சோ!! இப்படி குறைச்சலா சாப்பிட்டா உடம்பு என்னத்துக்காகும். கூடுதலா ரெண்டு சேர்த்து 122ஆ அனுப்பிவைக்கட்டுமா??
(சிரமம் பார்க்காம மாவுபிசைஞ்சு கொடுத்துட்டுப்போனீங்கன்னா நல்லது :-)))

மனம் தளராமல் விடாமுயற்சி செய்து வடையை கொத்திக்கொண்டு போனதுக்கு வாழ்த்துக்கள் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

விருந்து ருசியாயிருந்துதுன்னு நம்புறேன் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

சோதனைமுயற்சி சோதனையா இல்லாம இருக்காதுன்னு நம்புறேன் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வித்தியாசமா இருக்கும்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

தேங்காய் சேர்த்து நானும் செய்வதுண்டு. அது நாகர்கோவில் ஸ்பெஷலாக்கும் :-))

மத்தியானம் ஆபீசுக்கும், பசங்களுக்கும் கட்டுச்சோத்துக்குத்தான் அது. எனக்கு ரசம்,தயிர் இருந்தா யதேஷ்டம் :-))

நன்றி.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.!

நல்ல விருந்துக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் ஓட்டளித்தவர்களுக்கும் பார்சல் அனுப்புங்க. அச்சாச்சோ. சொல்லக் கூடாதோ:)0
இந்த சப்ஜி நல்லா இருக்கே. எங்களுக்கு வாரம் ஒரு முறைதான் சப்பாத்தி. அதனால கவலையே இல்லை. மென்மேலும் சகல்கலாவல்லியாக வாழ்த்துகள் மா.

ஆமினா said...

அடுத்த கட்டத்துக்கு முன்னேறுனதுக்கு வாழ்த்துக்கள்!!!

குறிப்பு எளிமையா இருந்துச்சு!!!

Prathap Kumar S. said...

ஓட்டுப்போடுங்கப்பான்னு சொன்னோம்....போட்டுட்டுப்போறோம்.... அதைவிட்டுட்டு கரண்டியும் கையுமா பயமுறுத்தாதீங்க...

சிவ்ஸ்டார் பவன் ரெகுலர் கஸ்டமர்
துபாய்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள். அடுத்த கட்டத்திலும் வெற்றி பெறவும்....

சப்பாத்திக்கான சைட் டிஷ் :) நல்லா இருக்கு!!

நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன தலைப்பு காலிஃப்ளவரையா குறிக்குது.. நான் வெங்காயம் தான் காலி செய்துட்டீங்கள் போலன்னு நினைச்சேன்:)

ADHI VENKAT said...

வாழ்த்துக்கள். இந்த குறிப்பை செய்து பார்க்கிறேன். எங்க வீட்டில் திங்கள் முதல் வெள்ளி காலை சப்பாத்தி தான். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல் கே said...

அடுத்த சுற்றுக்கு தேர்வு பெற்றதுக்கு வாழ்த்துக்கள். இந்த சனிக்கிழமை இதை செய்யவேண்டியதுதான்

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு.. தமிழ்மணத்தில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுனதுக்கு வாழ்த்துக்கள்..

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

நானானி said...

ஓஹோ...! ட்ரீட்டா? வாழ்த்துக்கள்!!!

இந்த காலிப்ளவரை உதிர்த்து குக்கரில் ரெண்டு விசிலுக்கு விட்டால்....காணாம போயிடாது?
மத்தபடி கிரேவி நல்லாருக்கு. செஞ்சிடலாம்!

THOPPITHOPPI said...

காலி செஞ்சுட்டேன்

------------------------
HAHAHA

Mukil said...

ரசமும், தயிருமா?? என்ன காம்பினேசன் இது!!?...

இரண்டாம் சுற்றுக்குத் தேர்வானதற்கு பாராட்டுகள்! வெற்றி பெற வாழ்த்துகள் சாரல்! :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

விருந்துக்கு வந்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

எங்க வீடு டின்னருக்கு தமிழ்நாடாவும் லஞ்சுக்கு மஹாராஷ்டிராவாகவும் அவதாரம் எடுக்கும் :-))))

பார்சல் அனுப்பிடவா :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

சிம்பிள்தான் ஆனா டேஸ்டு நல்லாருக்கும். ட்ரை பண்ணுங்க :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

ம்க்கும்... பயந்துட்டாலும்.....

உங்க சிவ்ஸ்டார் பவன் என்னிக்காவது லீவு வுட்டுட்டா, நீங்க கரண்டிய கையில் எடுத்துத்தான் ஆகணும் :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

சப்பாத்தி தேசமில்லையா இது :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

விலை இறங்கறவரைக்கும் வெங்காயத்தை கண்ணால பாத்துக்கிட்டேதான் சமைக்கணும். இந்த ரெசிப்பியில் கூட வெங்காயம் சேர்க்கலை பாருங்க :-))))))

நன்றி.

ஹேமா said...

அவசரச் ச‌மையலுக்கு நல்லாயிருக்கும்போல இருக்கே.செய்து பாக்கிறேன்.

தமிழ்மண விருதுக்கு
வாழ்த்துகள் தோழி !

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... உங்களது இரண்டு இடுகைகளும் விருது பெற வாழ்த்துக்கள்... அப்போ இன்னும் பெரிய விருந்தா வைக்கணும் சொல்லிட்டேன்...

Unknown said...

//காலி செஞ்சுட்டேன்..
ரொட்டி, சப்பாத்தி செய்யறதுகூட கஷ்டமில்லீங்க.. அதுக்கு சைடிஷ் செய்யறதுதான் நொள்ளைபிடிச்சது. ஒவ்வொரு நாளும் புதுப்புது வெரைட்டியா இருக்கணும். ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ன்னு பின்னூட்டம் போடறது வேண்ணா நல்லாருக்கும். ஆனா, சைடிஷ் மட்டும் குறைஞ்சது ஒருவாரத்துக்கப்புறம்தான் ரிப்பீட் ஆகணும்.//

மிகவும் சரிங்க.
குறிப்புக்கு நன்றி.
கடலைப் பருப்பில் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

இரண்டாம் சுற்றிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சக்தி,

முதல்வருகைக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

காணாமப்போகாது.. அப்படியே இருக்கு, பாருங்களேன். சில குக்கர்களில் விசிலடிக்க ரொம்ப நேரம் ஆகும். அந்தமாதிரி இருந்தா, எவ்ளோ நேரத்துல வேகும்ன்னு நாமளே அனுமானிச்சுக்கணும் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தொப்பிதொப்பி,

:-)))))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலு,

ரெண்டுக்கும் இடையில கமா இருக்குங்க. அந்த கமாவுல ஒருகை சோத்தைப்போட்டு நிரப்பணும் :-))))

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

சட்டுன்னு செஞ்சுடலாம்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஃபிலாஸபி பிரபாகரன்,

ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜிஜி,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails