மனுஷன் பிறக்கறதிலிருந்து , இறக்கறவரைக்கும் கூடவே சங்கீதமும் வருது. தாலாட்டுலேர்ந்து, ஆரம்பிச்சு ஒப்பாரி வரைக்கும் எல்லாமே சங்கீதம்தான். இதுக்கு இடைப்பட்ட காலத்துல சங்கீதத்தை ரசிக்கிறதுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கும். ஒவ்வொருவருக்கும் ரசனைகளும் வேறுபடும். சங்கீதத்தை ரசிக்கிறதுக்கு மொழி தேவையில்லை என்பது என் கருத்து. வரிகளை ரசிக்கிறதுக்கு வேணுமானா .. மொழி தேவைப்படலாம்.
எனக்கும் பாட்டு கேக்கிறதுன்னா, ரொம்ப பிடிக்கும் . அதுவும் மெலோடியஸான பாடல்களை, அமைதியான சூழ்நிலையில் கேக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும் . ஒரு காலத்துல சென்னை வானொலியில பத்து, பத்தரை மணிக்கு மேல பழைய சினிமா பாடல்களை ஒலிபரப்புவாங்க. கேக்கிறதுக்கே அவ்வளவு சுகமா இருக்கும். வானொலி போய் டிவி வந்து,.. இப்ப வானொலி மறுபடி எஃப். எம் ஆக அவதாரம் எடுத்தபின், ஆஹா...
சினிமா பாட்டுகளை தவிர, கர்னாடக சங்கீதம்ன்னு ஒண்ணு அறிமுகமானது ஸ்கூலில்தான். எங்களுக்கு பாட்டுவகுப்புன்னு ஒண்ணு , மரத்தடியில வெச்சு நடக்கும். பாட்டு வாத்தியார் மொதல்ல, பாட்டு வரிகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வெச்சுக்க சொல்வார். ராகம், தாளம் எல்லாம் குறிச்சுக்கணும். அப்றம் பல்லவி, அனுபல்லவி, சரணம்ன்னு ஒவ்வொண்ணா பாட கத்துக்கொடுப்பார். எப்படியும் ஒரு பாட்டை பத்துப்பதினஞ்சு நாட்களுக்குள்ள கத்துப்போம். "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்" இந்த பாட்டுதான் மொதமொத கத்துக்கிட்டது. ஆனா,.. நாங்க பாட ஆரம்பிச்சதும், அந்த ஏரியாவுல கச்சேரி நடத்திக்கிட்டிருந்த கழுதைகள் , எங்ககிட்ட தோல்விய ஒத்துக்கிட்டு வெளிநடப்பு செஞ்சுடுச்சு. பாவம்.. அதுகளும் பொழைக்க வேணாமா??.. அதனால பாட்டு வகுப்பை ,வரலாறு டீச்சர்கிட்ட விட்டுக்கொடுத்துட்டு தூங்கப்போயிட்டோம் :-))))
உண்மையான சங்கீதத்தை எம்.எஸ் அம்மா குரலில்தான் உணர்ந்தேன். எப்பவாவது சினிமாப்பாட்டுகளுக்கிடையே , கர்னாடிக் சங்கீதமும் கேக்கும். தேடிப்பிடிச்சு ரசிச்சதில்லை.ஆனா.. காதுல விழுறதை ரசிப்பேன் . உண்மையை சொன்னா அப்பல்லாம் எம்.எஸ், எம்.எல். வி அம்மா,ன்னு ரொம்பச்சில பேரை மட்டும்தான் எனக்கு அடையாளம் தெரியும். பூந்தோட்டத்துக்கு விளம்பரம் தேவையில்லை. எம். எஸ். அம்மா பாடினதில பிடிச்ச பாடல் ஒன்னு நீங்களும் கேளுங்க:
டிசம்பர் சீசன்ல எம். எல்.வி. அம்மாவோட கச்சேரிகளைப்பத்தி ஆனந்தவிகடனில் படிச்சதுண்டு. இப்ப யூடியூப் புண்ணியத்தில் கேக்கவும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. இவங்க நடிகை ஸ்ரீவித்யாவின் அம்மா என்பது கூடுதல் செய்தி.
இசையுலகில் இருக்கும் பெண்குரல்களில் சுசீலாம்மா, ஜானகியம்மா, சித்ரா, கவிதா கிருஷ்ணமூர்த்தி(இவங்க இந்திப்பாடல்களில் பின்னியெடுப்பாங்க).எல்லோருமே ரொம்ப பிடிக்கும். ஜானகியம்மா கூடுதல் விசேஷம். எப்படி வேணும்ன்னாலும் அவங்க குரல் வளைஞ்சு கொடுக்கும். மழலைக்கும் , முதுமைக்கும் கூட அழகா பாடியிருப்பாங்க . இப்பவும் அவங்க குரல் அவ்வளவு இனிமையா இருக்கு . அவங்க பாடினதில் இது ரொம்ப பிடிக்கும்.
இந்தியில் உதித் நாராயண்னு ஒரு பாடகர் இருக்கார். நம்மூருக்கு வந்து தமிழைக்கடிச்சு துப்புவாரே அவரேதான் . ஆனா,.. இங்கே அவரோட குரல் நிறைய பேருக்கு பிடிக்கும். சில பாடல்கள் , அவர்பாடினால்தான் உயிரோட்டம் இருக்கிறமாதிரி இருக்கு. 'உயிரே' படத்துல வர்ற இந்த பாடல் தமிழைவிட இந்திவெர்ஷன் ரொம்பபிடிக்கும். தமிழில் உன்னிமேனன் பாடியிருந்தாலும் இதை கேக்கும்போது தன்னையறியாமலே கண்கள் ஈரமாகும். கூட கவிதாவும் பாடியிருக்காங்க.
தமிழில் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் ரொம்ப பிடிக்கும். ஜேசுதாஸின் மெலோடியஸ் பாடல்களும் , எஸ்.பி.பியின் காந்தக்குரலும் எத்தனை கேட்டாலும் அலுக்காது. ஆனாலும் என் ஆல்டைம் ஃபேவரிட் 'ஸோனு நிகம்" . மனுஷன் பாடுறது அவ்வளவு குழைவா இருக்கும். இத்தனை வருஷங்களாக பாடினாலும் , அவரோட குரலில் எந்த மாற்றமும் இல்லை. அவரோட எல்லாப்பாட்டுக்களும் பிடிக்கும். லேட்டஸ்ட் பாட்டு உங்களுக்காக.
பிடிச்ச பாடல்களை பகிர்ந்துக்க சகோதரர் எல்.கே அழைச்சிருந்தார். அஞ்சுபேரைப்பத்தி சொல்லணும்னு சொல்லியிருந்தாலும், விதிமுறைகள் என்பதே மீறுவதற்காகத்தான் என்பதால் ...இன்னொரு பாட்டு பார்சல்ல்ல்ல்ல்.
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில், நிறைய பாட்டுகள் கேட்டிருந்தாலும், இந்த படத்தில் வரும் எல்லாப்பாடல்களும் பிடிக்கும். குறிப்பா இந்த பாட்டு.
இன்னும் ஹரிஹரன் , ஷங்கர் மஹாதேவன் , அருணா சாய்ராம்ன்னு என் லிஸ்ட் அனுமார்வால் மாதிரி நீண்டுகிட்டே போகும்.. அதனால பாட்டு கேக்கணும்ன்னு நினைச்சா என்னோட இன்னொரு புதுவீட்டுக்கு வாங்க. அங்கே எனக்குப்பிடிச்ச இசையை உங்களோட பகிர்ந்துக்கிறேன்.
19 comments:
nice choice. i will listen to songs in home and comment again. thanks for writing :)
தொடர்பதிவுன்னா யாரையும் கூப்பிடலையே!! அருமையான பாடல்கள்.
இனிமையான பாடல்கள். அருமையான தேர்வு.
இதையும் கேளுங்க
http://www.youtube.com/watch?v=yxzAloARwGk
//இறக்கறவரைக்கும் கூடவே சங்கீதமும் வருது//
எனக்கு சக்கரை பொங்கல் தான் தெரியும்..
very nice songs. :-)
//எனக்கு சக்கரை பொங்கல் தான் தெரியும்..//
சாப்பிடவ இல்ல செய்யவா
அடுத்த தடவ போடும்போது தரவிரக்கமாக இடவும்
வாங்க எல்.கே,
பாட்டை கேட்டுட்டு வந்து சொல்லுங்க
நன்றி.
வாங்க தென்றல்,
எழுத இஷ்டப்படற யார்வேண்டுமானாலும் எழுதட்டுமே என்ற நப்பாசையில் அப்படியே விட்டுட்டேன்.பாடல்களை ரசிச்சதுக்கு நன்றி.
வாங்க அம்பிகா,
என்னோட லிஸ்டில் இன்னும் நாலஞ்சு பேர் இருக்காங்க. எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது என்பதால் எல்லாத்தையும் குறிப்பிடமுடியல்லை. இந்த கஜினி படப்பாடலை,ஹைவேயில் லாங்க்ட்ரைவ் செஞ்சுக்கிட்டே கேக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் :-)
வரவுக்கு நன்றி.
வாங்க எல்.கே,
கேட்டேன்.. அதென்னவோ, எம்.எஸ் , சுதா ரகுநாதன் ,நித்யஸ்ரீ ,சௌம்யா எல்லோரும் பாடியிருந்தாலும் எனக்கு எம்.எல்.வி பாடியிருக்கிறது ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. நன்றி.
வாங்க நசரேயன்,
எல்.கே கேட்டிருக்காரு.... பதில் சொல்லுங்க :-))))
நன்றிப்பா.
வாங்க சித்ரா,
நல்லாருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.
வாங்க முருகன்,
முதல்வரவுக்கு நன்றி.
எனக்கு தொழில்நுட்பம் ரொம்ப தெரியாது. தெரிஞ்சவரை பாட்டுகளை எடுத்துப்போட்டிருக்கேன். தரவிறக்கம்....முயற்சி பண்றேன்.
சூப்பர் லிஸ்ட். பஜகோவிந்தம் எனக்கும் ரெம்ப பிடிக்கும்
வாங்க அப்பாவி,
நன்றிப்பா.
'உயிரே' படத்துல வர்ற இந்த பாடல் தமிழைவிட இந்திவெர்ஷன் ரொம்பபிடிக்கும். தமிழில்ஹரிஹரன் பாடியிருந்தாலும்/////
இப் பாட்டை பாடியவர் உன்னிமேனன்
வாங்க ஷபி,
அட.... ஆமாம். நார்மலா கேக்கும்போது ஹரிஹரன் பாடினதுமாதிரியே இருந்தது. நீங்க சொன்னப்புறம் செக் பண்ணேன்.. சரிதான். திருத்திட்டேன்.
நன்றி முதல்வரவுக்கு. அடிக்கடி வரணும்.
Post a Comment