கன்யாகுமரியோட சிறப்பு அம்சங்கள் பகவதியம்மன் கோவில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி, காமராஜர் மண்டபங்கள். இதோட முக்கியமான விஷயங்கள் சூரிய உதய, அஸ்தமனங்கள். கன்யாகுமரிக்கு வந்துட்டு இதெல்லாம் பார்க்காதவங்க இருக்க முடியாது. உதய, அஸ்தமன நேரங்களில் ஒரு கூட்டமே கடற்கரையில் காவல் இருக்குது. அதுவும் சித்ரா பௌர்ணமி அன்னிக்கு கூட்டம் கூடுதலாவே இருக்கும். அன்னிக்கு என்ன ஸ்பெஷல்ன்னா, இந்தப்பக்கம் சூரிய அஸ்தமனமாகிக்கிட்டிருக்கும்போதே அந்தப்பக்கம் நிலவு உதயமாகும். இருந்த இடத்திலிருந்தே லேசா கழுத்தை மட்டும் திருப்பித்திருப்பி பாத்துக்கலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்துல ஒரே சமயத்துல ரெண்டு சூரியன் மாதிரி இருக்குமாம். அடடா!!! அந்த கண்கொள்ளா காட்சியை வாழ் நாளில் ஒரு தடவையாவது பாத்துடணும்ன்னு நினைக்கிறேன்.
காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் எல்லாத்தையும் தாண்டிப்போயிட்டிருக்கோம். சங்கிலித்துறையில் கூட்டமான கூட்டம். அதுவுமில்லாம இங்கிருந்து பாத்தா எல்லா சமயங்களிலும் அஸ்தமனம் தெரியும்ன்னு சொல்லமுடியாது. சூரியனின் பாதையைப்பொறுத்து இடம் மாறிக்கிட்டே இருக்கும். வழியில அக்வேரியம் ஒண்ணைப்பாத்ததும் பசங்க ப்ரேக் போட்டமாதிரி நின்னுட்டாங்க. உள்ளே போய் பாக்கணுமாம். பத்து ரூபாய் டிக்கெட் இதுக்கு. உள்ளே விதவிதமான வகைகளில் மீன்கள் சிறுசும் பெருசுமா தொட்டிகள்ள நீஞ்சிக்கிட்டிருக்கு. அரவானா வகை மீனும் இருக்கு. இதுக்கு இன்னொரு பேரு வாஸ்து மீன்.
முன்னொரு காலத்துல அஸ்தமனத்தை நல்லாப்பாக்கணும்ன்னா கன்யாகுமரி கடற்கரையில மணல்தேரின்னு ஒரு இடத்துக்கு வந்துடுவாங்க. கடல் மணலை காலங்காலமா அலையடிச்சு சேத்துவெச்சு உண்டாக்கிய இடமது. அஸ்தமனத்துக்கு எந்த இடஞ்சலுமிருக்காது. இப்போ மணல்தேரி இருக்கான்னு தெரியலை. மணலையெல்லாம் அள்ளிக்கிட்டு போயிட்டாங்கன்னு எப்பவோ பேப்பர்ல படிச்ச ஞாபகம். இப்பல்லாம், அதுக்கு பதிலா வியூ டவர்க்கு போறாங்க. இது ஒருகாலத்துல முழுசும் கண்ணாடியாலான ரெஸ்டாரண்டா இருந்திச்சு. ஜிலுஜிலுன்னு கடல் காத்தோட, கடலைப்பாத்துக்கிட்டே ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்.ஒரு காலத்துல அங்க போய் பேஸ்ட்ரியும், காப்பியும் சாப்பிட்ட நினைவுகள் மட்டும்தான் இப்போ மிச்சமாருக்கு. ஊரிலிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிறதாலோ என்னவோ,... ரெஸ்டாரண்ட் போய் வ்யூ டவர் வந்துச்சு டும்..டும்.. டும்.
இங்கேயும் அஞ்சுரூபா டிக்கெட் எடுத்துக்கிட்டு, மேலே போனோம். டாப் ஃப்ளோரில் பயங்கர கூட்டம். ஸ்கூல் பசங்கள்ளாம் பிக்னிக் வந்திருப்பாங்க போலிருக்கு. ஒரே கும்மாளமும் சிரிப்புமா எஞ்சாய் நடக்குது. மெல்ல மெல்ல எதிர்ப்பார்த்த அந்த நேரமும் வந்திச்சு. தகதகன்னு வெள்ளித்தட்டாய் இருந்த சூரியன் இப்ப தங்கத்தட்டாய் ஜொலிக்கிரார். வீட்டுக்கு வெளியிலதான் அட்டகாசம் பண்ணுவார் போலிருக்கு. வீட்டுக்கு போகும்போது அமைதியான ஆரஞ்சுத்தமிழனா போறார். உக்கிரமெல்லாம் அடங்கி, குளுமையான சொரூபமா பாக்கும்போது இவரா இவ்வளவு நேரம் நம்மையெல்லாம் காய்ச்சி எடுத்தவர்ன்னு ஒரு எண்ணம் வரும். பாவம்,.. அவருக்கும் வேர்த்திருந்துதோ என்னவோ, மேகத்தை எடுத்து முகம் துடைச்சிக்கிட்டே ஓடிட்டார். தண்ணிக்குள்ள போறதை பார்க்க முடியலை. ஆனாலும் பசங்க அந்த கடைசி நிமிஷத்துல கூச்சல் போட்டதை பார்க்கணுமே. ஹ்ம்... மறுபடியும் அந்தக்காலத்துக்கே போக முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்.
சூரியாஸ்தமன காட்சிகள்.
நாலஞ்சு க்ளிக் எடுத்துட்டு கீழே வந்தா, தி ஃபேமஸ் சோழிக்கடைகள். ஒண்ணு கவனிச்சேன். கன்யாகுமரியில் ஒரு காலத்துல மரவேலைப்பாடுகள் உள்ள பொம்மைகள், (பஸ், ட்ரக் கூட கிடைக்கும்) கலைடாஸ்கோப்பு, பாசிமணிகள், சங்கு வேலைப்பாடுகள் உள்ள மாலைகள், கைவினைப்பொருட்களுக்கான கடைகள்ன்னு இருக்கும். நவராத்திரிக்கு கூட கலெக்ஷன் செஞ்சு வெச்சிக்கலாம். இப்போ எல்லாமே இட்ஸ் கான்,.. காயப்,.. போயே போச்சு.. போயிந்தி. அதுக்குப்பதிலா அஞ்சுரூபா கடைகள் வந்துடுச்சு. ரெண்டு ப்ளாஸ்டிக் ப்ளேட்டுகளை கையில் வெச்சிக்கிட்டு எதெடுத்தாலும் அஞ்சு ரூபான்னு கூவிக்கிட்டே நம்ம கிட்டவந்து டமார்ன்னு ப்ளேட்டுகளை ஒண்ணோடு ஒண்ணு அடிச்சிக்காமிக்கிறாங்க. உடையாதாம்... அவ்வளவு க்வாலிட்டியானதாம். திடீர்ன்னு அவ்வளவு கிட்டேவந்து டெமோ காமிக்கும்போது, நமக்குத்தான் எங்கெ நம்ம மூஞ்சியை உடைச்சிடுவாங்களோ!!!ன்னு பயம் வந்துடுது :-)
பொண்ணு, தன்னோட ஃப்ரெண்ட்சுக்கு கொடுக்க நாலஞ்சு, சோழிகளாலான ஃப்ரெஸ்லெட்டுகள் வாங்கிக்கிட்டா. அம்மணி இந்த வருஷம் பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சாச்சு. அதனால, நினைவுப்பரிசா கொடுக்கறதுக்கு, தோழிகளுக்கு சோழிகள் வாங்கணும்ன்னா. பெயரெழுதி, என்ன எழுதணும்ன்னு சொல்லிட்டா செஞ்சு கொடுத்துடுவாங்க. பையர் உடனே சிவப்புக்கொடி காமிக்க ஆரம்பிச்சுட்டார். இப்படி நாமெல்லாம் வாங்கறதாலதான், இந்த உயிர்களெல்லாம் அழியுது. நாம வாங்கறதை நிறுத்திட்டா, இதுகளெல்லாம் உயிரோட இருந்திருக்குமே. ஒரு விதத்துல இந்தமாதிரி இயற்கை வளங்களெல்லாம் அழியறதுக்கு நாமதான் காரணம்ன்னார். பாயிண்ட் இஸ் நோட்டட். ஆனாலும் இறுதியில் ஆசைதான் வென்றது.
beachன்னு ஒண்ணை கண்ணுலயே பாக்கமுடியலை. கடல் அரிப்பை தடுக்கிறதுக்காக கருங்கற்களை போட்டு வெச்சிருக்காங்க. சங்கிலித்துறையில் மட்டும் ஏதோ கொஞ்சம் இருக்கு. கூட்டமும் இருக்கிறதுனால குப்பையும் அதிகமாவே இருக்கு. கொஞ்ச நேரம் காத்துவாங்கிட்டு ரூமுக்கு வந்தோம். இருளின் அமைதியில் விவேகானந்தரும், வள்ளுவரும் ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காங்க.
காலையில சூரிய உதயத்தை பார்க்கிறதுக்காக அஞ்சுமணிக்கே அலாரம் வெச்சு எழுந்தோம். அஞ்சரை, அஞ்சேமுக்கால் இருக்கும்.. திடீர்ன்னு சைரன் ஒலி. சுனாமி எச்சரிக்கையோன்னு பதறியடிச்சுக்கிட்டு பாத்தா, விவேகானந்தர் பாறையில் ஸ்ரீபாத மண்டபத்தின் முன்னால் இருக்கும் கம்பத்துல கொடி ஏறிக்கிட்டிருக்கு. கடலுக்கடியில் கேபிள் போட்டு பாறைக்கு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கு. மீன்பிடி படகுகள் வந்து நிற்குமிடத்தில் கூட்டமோ கூட்டம். எல்லாம் உதயம் பார்க்க வந்தவங்களும், மீன்வாங்க வந்தவங்களுமா நிக்கிறாங்க.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கீழ்வானம் சிவந்தது. இப்பவும் ஏமாத்திட்டார். வரும்போதே மேகத்தை குடையா பிடிச்சிக்கிட்டு வர்றார். தண்ணிக்குள்ள போறதைத்தான் பார்க்கமுடியலைன்னா,.. வர்றதையும் பார்க்க முடியலை. மெதுவா, நான் இங்கே இருக்கேன்னு கண்ணாமூச்சி ஆடுற குழந்தை மாதிரி தலைய நீட்டுனார். எப்போ!!... உதயமாகி கால்மணி நேரம் கழிச்சு. வந்து போஸ் கொடுத்துட்டுப்போங்கன்னு சொல்லி நாலஞ்சு க்ளிக் எடுத்தேன்.
கடலுக்கு போயிருந்த மீன்பிடி படகுகள், வரிசையா வந்து நிக்க ஆரம்பிச்சது. பெட்டி பெட்டியா மீன்கள் வந்திறங்குது. ஃப்ரெஷ் மீனுக்காக எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் வந்துருக்காங்க. கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டு, ரூமை காலி செஞ்சுட்டு கிளம்பினோம். வீட்டுக்குப்போனப்புறம் இன்னொரு இடத்துக்குப்போகணும்.
முதல் முதலா 'பிட்' அடிக்கலாம்ன்னு இருக்கேன். இந்த மாச தலைப்பு சூரிய உதயம், அஸ்தமனம். எந்த போட்டோவை அனுப்பலாம்ன்னு எல்ப் பண்ணுங்களேன்...
அறிவிப்பு: பெருவாரியான மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற அஸ்தமனத்தின் மூன்றாவதுபடம் போட்டிக்கு அனுப்பப்பட்டது.
37 comments:
//http://4.bp.blogspot.com/_BVNDFwELPf4/S-j0Rd3Y0mI/AAAAAAAAAgI/CfjAiEUUhcI/s400/IMG_0558.JPG//
அனுப்புங்க,பரிசு கிடைச்சா கட்டிங் கொடுக்கணும்
கன்னியாகுமரியை நேரில் பார்த்த திருப்தி.....
என் வோட்டு சூரியன் ஓய்வெடுக்கச் செல்லும் காட்சிகளுக்கே...... கவிதை.
படம் மூணு என் சாய்ஸ்.
குதித்து நிற்கும் அலையும் சூரியனுக்கு கீழே இறக்கை விரித்து நிற்கும் ஒளியும் அருமையோ அருமை.
பதிவு நாளை வந்து படிக்கிறேங்க கட்டாயம்:)!
அருமையான படங்கள்.
ஒருபதிவுல கன்யாகுமரிய சுத்தி காமிச்சிட்டீங்க.
சூர்யோதய அஸ்தமன காட்சிகளைப் பற்றிய கமெண்ட்ரி ரொம்ப சுவாரஸ்யம் அமைதிச் சாரல்.
PiT-க்கு வாழ்த்துக்கள்:)!
சூரிய அஸ்தமனம், உதயம் பற்றிய விவரிப்புகள் அபாரம். படங்கள் எல்லாம் அருமை. “பிட்” டில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வெங்கட் நாகராஜ்
அஸ்தமனத்தில் கடைசி படம்,உதயத்தில் முதல் படம் ஓகே.
வாங்க நசரேயன்,
நானும் பதிவர்தான்னு எனக்கு ஞாபகப்படுத்தத்தான் கலந்துக்கறேன் :-))) இதுக்கு மேல பரிசு வேணுமா என்ன.
கட்டிங் ச்சாய் பார்சலில் வருது :-)))))
நன்றிப்பா.
வாங்க சங்கவி,
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :-)
நன்றிப்பா.
வாங்க சித்ரா,
ம்.. அப்டீங்கறீங்க!!!!.
நன்றிங்க.
வாங்க ராமலஷ்மி,
தங்கமங்கை சொன்னா அதுக்கு அப்பீலே இல்லை.
வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க அம்பிகா,
நல்லா சுத்தி பார்த்தீங்கதானே :-)கூட வந்ததுக்கு நன்றிங்க.
வாங்க நாகராஜ்,
உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி. நானும் பிட்டில் கலந்துக்கிட்டேன்னு சொல்லிக்க வேண்டாமா அதுக்குத்தான் இது :-))))))
வாங்க வடுவூர் குமார்,
முதல் வரவுக்கு வரவேற்பு,
உதயத்தின் முதல் படத்துக்கு ரெண்டு ஓட்டு கிடைச்சிருக்கு. பார்ப்போம்.
வரவுக்கு நன்றிங்க.
Akka really good,manaltheri is still there me and geetha went thr last september.
ஹை.. தில்லை,
அடடா.. தெரியாம போச்சே. பாக்கணும்ன்னு ரொம்ப நாளா ப்ளான் போட்டு ஏமாந்துக்கிட்டிருக்கேன்.
அடிக்கடி வரணும்.
//குதித்து நிற்கும் அலையும் சூரியனுக்கு கீழே இறக்கை விரித்து நிற்கும் ஒளியும் அருமையோ அருமை//
என் சாய்ஸும் அதேதான்.போட்டோக்கள் சூப்பர்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.
கன்னியாகுமரியை பலமுறை பார்த்திருக்கிறேன். உங்கள் பதிவை படித்ததும் மீண்டும் ஒருமுறை சென்று பார்க்க முடிவெடுத்துவிட்டேன், 'இதயம் பேசுகிறது' மணியன் அவர்களே! மன்னிக்கவும், அமைதிச் சாரல் அவர்களே!
வாவ், அசத்தல் படங்களுடன் கலக்கல் தொகுப்பு. போட்டிக்கு மேலிருந்து மூணாவது படம் அனுப்புங்களேன்.
அன்பு சாரல், அந்த அஸ்தமன போட்டொல அலைகள் கைகுவிக்கிற மாதிரி ஒரு படம் இருக்கே அது சூப்பர்பா. என்ன தெளிவா எழுதறீங்க. ரொம்ப நல்லா இருக்கு படிக்க. தெரிஞ்சிருந்தா நானும் சோழிகள் கேட்டு இருப்பேன்.
இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை ஒரு நாலஞ்சு சென்னைக்கு அனுப்புங்க. வந்து வாங்கிக்கறேன்:)
Super pictures. Love them
பெருவாரியான வாக்குகள் பெற்ற அஸ்தமனத்தின் மூன்றாவதுபடம் போட்டிக்கு அனுப்பப்பட்டது. நன்றி.
கொஞ்சம் கழிச்சு எல்லோருக்கும் பதில் போடறேன். பொறுத்தருள்க.
வாங்க மல்லி,
அதையே அனுப்பிட்டேன். நன்றிப்பா.
வாங்க ஈஸ்வரன்,
அடடா... ரொம்பப்பெரிய வார்த்தைங்க அது. அவரெல்லாம் பெரிய ஜாம்பவான்ங்க. நான் ஒரு சிறுதுரும்பு. அவ்வளவே.
கன்யாகுமரிக்கு எத்தனைதடவை போனாலும் அலுக்காது. கட்டாயமா போய் ரசிச்சுட்டு வாங்க.
நன்றிங்க.
வாங்க விக்னேஷ்வரி,
மூணாவது படம் மெஜாரிட்டியில் வந்ததால் அனுப்பியாச்சு.
வந்ததுக்கு நன்றிங்க.
வாங்க வல்லிம்மா,
பேத்தி கூட செம எஞ்சாய் போலிருக்கு :-). மூணாவது படத்தையே அனுப்பிட்டேன்.
நன்றிம்மா.
வாங்க முகுந்த் அம்மா,
நன்றிங்க உற்சாகம் கொடுத்ததுக்கு.அடிக்கடி வரணும்.
கன்யாகுமரியை கண்ணில் நிறுத்திவிட்டீர்கள் அமைதிச்சாரல்
அசத்தல் படங்கள்! :)
வாங்க தேனம்மை,
நன்றிங்க.
வாங்க ஷங்கர்,
நன்றிப்பா.
படங்கள்,கட்டுரை அருமை.வெற்றிபெற வாழ்த்துக்கள்.
வாங்க மாதேவி,
வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.
படங்கள் அருமை.. எதை சொல்றது எதை வேணாம்னு சொல்றது..
வாங்க எல்.கே,
நன்றிப்பா.
Detailed report on Kanyakumari. Photos are also very good.
Post a Comment