Monday, 10 May 2010

வல்லவனுக்கு பனைமரமும் ஆயுதம்.-6


'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு'ன்னு ஒரு பழமொழி இருக்கே. பழமொழின்னு இருந்தா,.. அதை மாத்தக்கூடாது இல்லியா :-). அன்னபூர்ணா கொடுத்த 'வெஜ் தாலி' நல்லாருந்துச்சு. நார்த் இண்டியன் சாப்பாட்டுவகைகளும் நல்லாவே இருக்கு. ருசி கொஞ்சம்கூட வித்தியாசப்படலை. திருப்பதியில் ஒருதடவை, தந்தூரி ரொட்டி ஆர்டர் செஞ்சோம். சாப்பாட்டுத்தட்டுக்கும், ரொட்டிக்கும் கொஞ்சம்கூட வித்தியாசமில்லாத 'கடக்'கான ஒரு வஸ்துவை கொண்டாந்து வெச்சாங்க. திங்கமுடியாம பேய்முழி முழிச்சிட்டு, கடைசில சிக்கூமில்க் ஷேக் குடிச்சிட்டு வெளியே தப்பிச்சு வந்தோம். இங்கே அப்படியில்லை. ஒரிஜினல் ருசி அப்படியே இருக்கு. சைனீஸ் வகைகளும் செம டேஸ்ட். இதனால், நான் சொல்ல வருவது, விரும்புவது என்னவென்றால் அன்னபூர்ணா பெயருக்கேத்தமாதிரி இருக்கு, நம்ம்பி சாப்பிடலாம்.

சாப்பாட்டுக்கப்புறம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்துக்கு கிளம்பினோம். பாண்டிய மன்னர்களும், திருவிதாங்கூர் மன்னரும், டச்சுக்காரர்களும் சம்பந்தப்பட்டது. இந்தியாவின் தென் கோடி பாதுகாப்பு மையமா இருந்தது. நான், சின்னவயசில் விசிட் அடிச்சது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வட்டக்கோட்டைக்குத்தான்.. இப்போ போய்க்கிட்டு இருக்கோம். கன்னியாகுமரியிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கு. கன்னியாகுமரியிலிருந்து, நாகர்கோவில் செல்லும் பாதையில், சில கிலோமீட்டர் தொலைவில் வலதுபக்கம் ஒரு ரோடு பிரியும். அதுதான் வட்டக்கோட்டைக்கு செல்லும் சாலை. கிளைச்சாலை பிரியும் இடத்துல போர்டும் வெச்சிருக்காங்க. அதனால குழப்பமில்லை.

வழியில், நீல நிற வேஷ்டியும், வெள்ளைச்சட்டையும், வெள்ளி நிறத்துல தொப்பியும், யூனிஃபார்மா போட்டுக்கிட்டு, ஆட்கள் நடந்துபோய்க்கிட்டிருக்காங்க. வேளாங்கண்ணிக்கு நடைப்பயணமாம். பழனி, திருச்செந்தூருக்கு போறமாதிரி, விசேஷம் இருந்தாத்தான் போகணும்ன்னு இல்லையாம். எப்போ வேணும்ன்னாலும், க்ரூப்பா கிளம்பிருவாங்களாம்.
நடைப்பயணம்.
வட்டக்கோட்டைக்கு போகணும்ன்னா டோல் டிக்கெட் எடுக்கணும். பாதிவழியில் ஒரு சின்ன ஓலைக்குடிசை. அதுதான் டோல் ஆப்பீசாம்.அஞ்சு ரூபா வசூலிக்கிறாங்க, அவ்வளவுதான். கொஞ்சதூரத்திலேயே வட்டக்கோட்டை வந்துடுச்சு.
கோட்டையின் முகப்பு.

இது பதினெட்டாம் நூற்றாண்டில், திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால கட்டப்பட்டது. கடல்வழி தாக்குதல் மூலமா, எதிரிகள் நாட்டுக்குள்ள ஊடுருவாம இருக்கிறதுக்காக கட்டியிருக்கார். சுவர்கள் சுமார் 25 அல்லது26 அடி உயரம் இருக்கலாம். நல்ல கிரானைட்கற்களால் கட்டியிருக்காங்க. யானையும், சங்கும் மார்த்தாண்டவர்மா அரசாண்ட கேரள அரசின் சின்னங்கள். அதனால முகப்பிலேயே அவங்கதான் வரவேற்கிறாங்க. இந்தக்கோட்டை இப்போ தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் பராமரிப்பில் இருக்காம். பராமரிப்பு நல்லாவே இருக்கு.

கோட்டைக்குள் நுழைஞ்சதும்தான், அதன் பிரம்மாண்டம் புரியுது. நாலுபக்கமும் காவலாளிகள் தங்கறதுக்கான மண்டபங்கள், குதிரைகளை குளிப்பாட்டும் குளம், எல்லாமும் இருக்கு. இடதுபக்கம் படிக்கட்டுகளில் ஏறிப்போனால், கோட்டையின் மேற்புறம். மார்த்தாண்டவர்மா காலத்தில் வில் ,அம்புகளோடு காவலாளிகள் காவல் இருந்திருப்பாங்க. அதனால அப்ப, கோட்டையின் மதில்சுவர் மொழுமொழுன்னு.. மொட்டையா கட்டியிருந்திருக்காங்க. அப்புறமாத்தான் டிலனாய் வந்து, துப்பாக்கி வெச்சு சுடத்தோதா.. எடுத்துக்கட்டியிருக்கார். பார்க்கும்போதே ரெண்டு கட்டமைப்புகளுக்கும் வித்தியாசம் தெரியுது. பழைய கட்டிடம் கிரானைட் கற்களாகவும்,மேற்பகுதி காங்கிரீட்டிலும் இருக்கு.

பழசும், புதுசும்.
டிலனாய் எங்கே இங்க வந்தார்?.. அவர் டச்சுத்தளபதியில்லையா!!! சொல்றேன். திருவாங்கூர் மன்னருக்கும், டச்சுக்காரர்களுக்கும் இடையே போர் நடந்தது. எல்லாம் நாடுபிடிக்கவும், நம்மூர் கறுப்புத்தங்கம் மிளகை அள்ளிக்கிட்டு போகவும்தான்.. குளச்சல் போர்ன்னு ரொம்ப புகழ்பெற்ற சண்டை இது. அப்போ, கடல்வழியா, யூஸ்டாசியஸ் டிலனாய் தாக்கவர்றார்ன்னு தெரிஞ்சதும், என்ன செய்றதுன்னு புரியாம திண்டாடியிருக்காங்க. அவங்களோ துப்பாக்கி வெச்சிருக்காங்க. நம்ம கிட்ட வில்லும் அம்பும்தான். சுத்திலும் நிக்கிற தென்னை, பனை மரங்களை பாத்ததும் ஒரு யோசனை.. மரங்களையெல்லாம் அறுத்து துண்டாக்கி, மாட்டுவண்டிகளிலும், கோட்டை மதில்சுவரிலும் சாய்ச்சு வெச்சிட்டாங்க. தூரத்திலிருந்து பார்த்த டிலனாய்க்கு, 'ஆஹா... இவங்க பீரங்கியெல்லாம் வெச்சிருக்காங்க போலிருக்கு. உடம்புக்கு சேதாரமில்லாம பொழைக்கணும்ன்னா.. சரண்டர் ஆறதுதான் ஒரே வழி' ன்னு சரணடைஞ்சுட்டார்.

அவரோட போர்த்திறமையை கண்ட மார்த்தாண்ட வர்மா, தன்னோட படையில் அவரை தளபதியா சேத்துக்கிட்டார். தன்னோட போர் நுட்பங்களை, படைவீரர்களுக்கும் கத்துக்குடுக்கணும்ன்னு கேட்டுக்கிட்டார். இந்தக்கோட்டை கொஞ்சகாலம் பாண்டியர்கள் வசம் இருந்திருக்கும்ன்னு சொல்லப்படுது. தெற்குப்பக்கம் இருக்கும் மண்டபத்தின் கூரையில் இருக்கும் மீன்சின்னங்கள் இதுக்கு ஆதாரம். பீரங்கிகளை யானைகளின் உதவியோடு கோட்டையின் மேல்மதில்சுவருக்கு கொண்டு போவாங்களாம். ரெண்டுபக்கமும் படிக்கட்டுகளோடு கூடிய ஒரு சறுக்குப்பாதை இருக்கு.

பீரங்கிப்பாதை.
இங்கிருந்து ,பத்ம நாபபுரத்துக்கு ஒரு சுரங்கப்பாதை போகுது. காலப்போக்கில் இது மூடப்பட்டுவிட்டது. கோட்டையின் வடக்கே ஒரு ஆறு போகுது. ஆத்துக்கும் கடலுக்கும் இடைப்பட்ட மணல்பகுதியில் கபடி ஆட்டம் நடக்குது. சின்னப்பசங்களும் ஆடறாங்க. கடல் அலைகளும் ஆடுது. ஏதாவது ஒரு பெரிய அலை வந்தா, தண்ணி நடுக்கோட்டைத்தாண்டி ஆறுவரை வந்துபோகுது. ஆத்துக்கு அந்தப்பக்கம் திருநெல்வேலி மாவட்டமாம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை காத்தாடி ஆலைகள். ஒரு வீடுமட்டும் தனியா இருக்கு.

கபடி...கபடி.. கபடி..
சுரங்கப்பாதை..
கோட்டையின் மதில்சுவர்கள் நல்ல அகலமானவை. உறுதியானவை. இல்லைன்னா சுனாமியை எதிர்த்து நின்னுருக்க முடியுமா?.. மதிலுக்கு முக்கால் பாகம் வரை தண்ணி வந்துச்சாம். அலை அடிச்ச வேகத்துல கோட்டைக்குள்ளும் தண்ணி புகுந்திடுச்சு. நல்லவேளையா, அதுக்கு கொஞ்சம் முன்னாலதான் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகளை வெளியேத்தியிருக்காங்க. காவலுக்கு இருந்த சோமசுந்தரம் ,அவரோட நேம் பேட்ஜை சட்டையில் நல்லா இறுக்கமா பொருத்திக்கிட்டு கோட்டைக்குள்ள உக்காந்துக்கிட்டாராம். ஏதாவது ஆச்சுன்னா அடையாளம் கண்டுபிடிக்க வசதியா இருக்குமில்லன்னார். அப்பத்தான், அரசாங்க உதவியோ, வேலையோ அவரோட குடும்பத்துக்கு கிடைக்குமாம். அப்பா காலமாகிட்டாராம். அம்மா, மனைவி, புள்ளைங்கல்லாம் சுனாமி வந்த அன்னிக்கு எப்படி துடிச்சிருப்பாங்க.. பாவம்.

கோட்டைக்குள்ள, குதிரைங்க குளிக்கிற குளமொன்னும், பக்கத்திலேயே லாயம் இருந்ததுக்கு அடையாளமா, கருங்கல்லுகளும் இருக்குது. சுனாமி வந்துபோனதும் ஒரே சேறும் சகதியுமா இருந்த கோட்டை, குளம் எல்லாத்தையும் சுத்தப்படுத்தி, புதுசா புல்வெளியெல்லாம் அமைச்சிருக்காங்க. பெரிசா இருந்த குளத்தை கொஞ்சம் சிறுசாக்கியிருக்காங்களாம். எண்கோண வடிவில் ஒரு கிணறு இருக்கு. கடல்பக்கத்துல இருந்தாலும் நல்ல தண்ணீரா இருந்ததாம். நிறைய வேப்பமரங்களை நட்டுவெச்சு பராமரிக்கிறாங்க. இப்போ சீசன்கிறதால பூத்துக்குலுங்குது.

பூக்களினூடே பூத்த சூரியன்..

..பார்வையாளர்கள், கோட்டையின் மேற்புறத்துல காத்துவாங்கிக்கிட்டே பொழுதைப்போக்கலாம். இங்கே ,பெயர்தெரியா மரமொன்னு இருக்கு. மதுரையிலிருந்தெல்லாம் தோட்டக்கலை ஆட்கள் வந்து பாத்துட்டு போயிருக்காங்களாம். என்ன மரம்ன்னு தெரியலையாம். இலையை பாத்தா வில்வமரத்தோட ஜூனியர் மாதிரி இருக்கு.

மர்ம மரம்..
அந்தக்காலத்துல பீரங்கி இருந்ததுக்கு அடையாளமா, பீரங்கியின் ஒரு சிறுபாகம் இருக்கு. பசங்களுக்கு இங்கே வந்ததுல ரொம்ப சந்தோஷம். இங்கே வர்றவங்க பத்மநாபபுரம் அரண்மனையோ, உதயகிரிக்கோட்டையோ போய்வந்தா அந்தக்காலத்திய சரித்திரத்தை இன்னும் புரிஞ்சிக்க முடியும்.

இங்கே பார்வையாளர்கள் நேரம் நாலு, நாலரை வரைதான். சுத்திப்பாக்க ஒண்ணரை, ரெண்டுமணி நேரம் போதுன்னாலும், கொஞ்சம் டைம் எடுத்துப்போனா, கடலலையை தவிர ஏதும் சத்தமில்லாத அந்த அமைதியை ,கடல்காத்தோட அனுபவிக்கலாம். நகரத்தோட பரபரப்புலேர்ந்து மனசுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைதான் இல்லியா. அஸ்தமனத்தை, இங்கிருந்து பார்க்க முடியாதுன்னு ஆகிப்போச்சு. கன்யாகுமரியிலேயே பார்த்துக்கலாம்ன்னு கிளம்பினோம்.

போட்டோ செஷன் இங்கே இருக்கு.





19 comments:

நசரேயன் said...

உள்ளேன் டீச்சர்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Pictures as well as narration, sounds like a guide travelling with us. Good job... keep it up... thanks for such great information too

Chitra said...

very nice photos and write-up.... :-)

வெங்கட் நாகராஜ் said...

அருமையான ஒரு சுற்றுலா போன அனுபவம் கிடைத்தது. புகைப்படங்களும் நன்றாக உள்ளன.

வெங்கட் நாக்ராஜ்

Easwaran said...

ஒரு முழுமையான சுற்றுலாப் பதிவு. பலருக்கும் அதிக அறிமுகமில்லாத வட்டக்கோட்டையை அற்புதமான தகவல்களுடன் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

முதல் சீட்டில் உக்காருங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

உண்மைக்குமே குடும்பத்தோட எங்க போனாலும், கைடு வேலைதான் எனக்கு. போகும்முன்னே வலையில் பாத்து கொஞ்சூண்டு தெரிஞ்சுப்பேன். பிள்ளைகளுக்கு விளக்கணுமே.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

படிச்சதுக்கு நன்னிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாகராஜ்,

நீங்க கொடுக்கிற உற்சாகம், டானிக் சாப்பிட்டமாதிரி இருக்கு.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஈஸ்வரன்,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சுந்தரா said...

காலேஜ் படிக்கிறப்ப வட்டக்கோட்டையும் அடுத்து பத்மநாபபுரமும் பார்த்தது. படங்களும் விபரங்களும் பார்க்க, இன்னொருதடவை சுத்திவந்ததுமாதிரி இருக்குது.

ஒண்ணேஒண்ணு மிஸ்சிங்...அந்த ஸ்ப்ரிங் தென்னைமரத்தைப் பத்திமட்டும் சொல்லல நீங்க.

(எங்க கைடு அதைத்தான் விளக்கமா சொன்னார்:) )

prince said...

பனமர கதையை நானும் கேட்டிருக்கேன் செவிவழி செய்தி தானேன்னு விட்டுட்டேன்.அப்புறம் அந்த போட்டோ செச்சியன் ல கோட்டைக்கு மேல இருந்து கோட்டையின் அடிமட்டத்தை கடலோரமா எடுத்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும். அப்புறம் அந்த வளைந்த தென்னை மரம் இப்போ இருக்குதோ என்னமோ. அங்குள்ள மணல் கொஞ்சம் (purple நிறத்தில் இருக்கும். அந்த பீரங்கி அரம்பத்தில முழுசா தான் இருந்துச்சி நம்ம பயபுள்ளைங்க தான் விளையாடி புட்டைங்க.முன்னாடி இருந்ததுக்கு இப்போ நல்லா தான் வச்சிருக்காங்க.நடுவில் இருக்கும் குளம் ஒரு புதைகுழின்னு சொல்லுவாங்க உள்ள இறங்கி ஆராந்து பார்க்கல. அப்புறம் நாம போயிட்டா இந்தியாவ யாரு பார்ப்பாங்க.. "சின்ன பூவே மெல்ல பேசு" படத்தின் சில காட்சிகள் இங்கு தான் பதிவாக்கிருப்பாங்க... பல வருடங்களுக்கு பின் வட்ட கோட்டையை உங்கள் பதிவின் வாயிலாக தரிசித்தேன் நன்றி!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

ஸ்ப்ரிங்கை பார்க்கலியேப்பா. ஒருவேளை சுனாமியில் போயிட்டதோ என்னவோ.உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன்.

சுனாமிக்கப்புறம் நிறைய மாற்றங்கள் செஞ்சிருக்கிறதா சோமு சொன்னார். அதிலும் அந்த மர்ம மரத்தைப்பத்திதான் நிறைய சொல்லிக்கிட்டிருந்தார். சின்னப்பூவே மெல்லப்பேசு படத்துல அதுவும் நடிச்சிருக்காம்.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ப்ரின்ஸ்,

புட்டுப்புட்டு வெச்சிட்டீங்கப்பா.. அங்குள்ள மணல் கனிம வளம் நிறைஞ்சது. அதனால்தான் அந்தக்கலர்.
சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தின் பெரும்பாலான பகுதி நாகர்கோவிலிலும் சுத்துவட்டாரங்களிலும்தான் எடுக்கப்பட்டது. அதுல வட்டக்கோட்டையும் ஒண்ணு. குதிரைக்குளம் புதைகுழியா அடடா...

முதல்வருகைக்கு நன்றிப்பா.

எல் கே said...

nalla leuhti irukeenga, ippathan intha edathai pathi kelvi padaren...

:)

adutta payanap pathivar viurhtu ungaluku taralamnu irukken. avlo arumaya eluthareenga

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ஊரை விட்டு தள்ளி இருக்கிறதாலேயோ என்னவோ, இப்பத்தான் வெளியூர்காரங்ககிட்ட பிரபலமாகிக்கிட்டு வருது.

வருகைக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

நானும் காலேஜ் படிக்கும்போதுதான் இங்க போனேன். அந்த வளைஞ்ச தென்னை மரம்தான் அதிசயமா இருந்துது அப்ப.

இப்பத்தாங்க இதுகுறித்த வரலாற்று விவரங்கள் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப நன்றி!! தொடருங்க!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஆஹா.. அடுத்ததடவை போனா தென்னைமரம் இருக்கான்னு பாத்துடணும். இப்ப பாத்தவரைக்கும் வேப்பமரங்கள்தான் நிறைய நிற்குது. சுனாமிக்கப்புறம் கோட்டையில் நிறைய மாற்றங்கள் செஞ்சுருக்காங்களாம்.

வருகைக்கு நன்றி.

Madhu said...

super pictures

LinkWithin

Related Posts with Thumbnails