Wednesday 17 March 2010

நீர்வளத்தைக்காப்போம்.

ஒரு மனிதனின் வாழ்வாதாரம் தொடங்குவதே நீரிலிருந்துதான்.இயற்கை நமக்களித்த அற்புதமான வரங்களில் ஒன்று அது. நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கும், அறிவியல் முன்னேற்றத்துக்கும் விலையாக நாம் கொடுக்க நேர்ந்தது,வரங்களை... பெற்றுக்கொண்டது சாபங்களை. விளைவு..இன்று குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஒரு மனிதனின் உடம்பில் சுமார் 60% நீர்தான் நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 40%தான் இன்னபிற அம்சங்களான தசை, நரம்புகள், எலும்புகள் எல்லாம்.ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!!. இந்த நீர்தான் நமது உடலின் வெப்பத்தை சம நிலையில் வைத்திருக்கிறது. வெய்யில் காலத்தில் நமது உடலின்வெப்ப நிலை உயரும்போது, வியர்வையாக வெளிப்பட்டு, வெப்பத்தை குறைக்கிறது. மேலும் ,..ரத்த ஓட்டம், சுவாசம்,ஜீரணம் போன்ற செயல்கள் தடையில்லாமல் நடக்க காரணம் இந்த நீர்தான்.

பூமியில் இருக்கும் நீர் வளத்தில் 97% கடல்நீராக இருக்கிறது. வெறும் 3%தான் நல்ல நீர். அதிலும் மூன்றில் இரண்டு பங்கு உயர்ந்த மலைப்பகுதிகளிலும்,துருவப்பகுதிகளிலும் உறைபனியாக உறைந்திருக்கிறது.மீதமுள்ளது நிலத்தடி நீராகவும், சிறிதளவு காற்றில் ஈரப்பதமாகவும் உள்ளது. நினைக்கும்போதே நாம் எதிர்கொள்ளவிருக்கும் நிலை புரிகிறதல்லவா...

அதனால்தான் அணைகளை கட்டுகிறோம். ஏரி, குளங்களை ஏற்படுத்தி தண்ணீரை சேமித்து வைக்கிறோம்.. அதிலும் பெரும்பாதி ஆவியாகி போய்விடுகிறது. விளைவு.. அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை. ஏனெனில் நாம் நீர்த்தேக்கங்களை பெருக்குகிறோமே தவிர, நீர் ஆதாரங்களை பெருக்குவதில்லை. முக்கியமாக மரம், மழைக்கு நண்பன் என்பதை தெரிந்து கொண்டும் மரங்களை அழிக்கிறோம்.நிலத்தடி நீரை சொட்டு விடாமல் மோட்டார் போட்டு உறிஞ்சி விடுகிறோமே தவிர, அதை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை.

நமது முன்னோர்கள் புத்திசாலிகள். கோயில் தோறும் குளங்கள் ஏற்படுத்தி வைத்து நிலத்தடி நீர் வற்றிப்போகா வண்ணம் பாதுகாத்தார்கள். ஊருக்கொரு ஊருணி அமைத்து விவசாயத்துக்கான நீரை பகிர்ந்து கொண்டார்கள். நாம் அவற்றையெல்லாம் பிளாட் போட்டு, நிலத்துக்குள் சொட்டு நீர்கூட போகாவண்ணம் தடுத்து வைத்திருக்கிறோம்.ஆறுகளில் மணலை எடுப்பதால் அந்த சுற்று வட்டாரத்தில் நிச்சயமாக நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, என்று தெரிந்தபின்னும் அதை கட்டாயமாக செய்கிறோம்.

தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முக்கிய காரணமாக மக்கள் தொகை பெருக்கத்தை சொல்லலாம். கூடவே இலவச இணைப்பாக தொழிற்சாலைகள் பெருகுதல், வேலைவாய்ப்புக்காக நகரத்துக்கு இடம் பெயரும் மக்கள் புற நகர்களை உண்டாக்குதல், இவற்றை சொல்லலாம். அவற்றுக்கான தண்ணீர் சப்ளை அதிகரிக்கும்போது ஏற்கனவே அங்கு வசிப்பவர்களுக்கு நிச்சயமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கிராமங்களிலோ விதவிதமான மோட்டார்கள் இரவும் பகலும் பூமித்தாயின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.

இருக்கும் நீர் நிலைகளையும் வேண்டியமட்டும் பாழ்படுத்தி வைத்திருக்கிறோம். "தூரப்போடுறதை தண்ணியில போடு" என்று புது மொழி உண்டாக்கி வைத்திருக்கிறோம்.ஆறுகளில் வந்து சேரும் குப்பைகளும்,கழிவுகளும் தான் எத்தனை விதங்கள். அதிலும் தொழிற்சாலைக்கழிவுகளை அப்படியே தண்ணீரில் கலக்க விடுகின்றனர். சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுகளை விடக்கூடாது என்று சட்டமே இருந்தாலும் அதை நிறைய பேர் பின்பற்றுவதில்லை. இதனால் அந்த தண்ணீர் எதற்கும் பயன்படாமல் போகிறது. தமிழ் நாட்டில் நொய்யல் ஆற்றை ஒரு உதா'ரணமா' சொல்லலாம். கழிவு நீரின் வீரியம் பக்கத்து வயல்களுக்கும் பரவியிருப்பதால் அவைகளும் தரிசாக கிடக்கின்றன. இங்கே உல்ஹாஸ் என்றொரு நதி இருக்கிறது. ஆனால் சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கிறது.பக்கத்திலுள்ள ஃபேக்டரி கழிவுகளெல்லாம் அதில்தான் கொட்டப்படுகின்றன. தொட்டுபொட்டு வைத்துக்கொள்ளலாம்போல் கரேலென்றுதான் ஓடுகிறது. கடந்து போக வேண்டுமென்றால் மூக்கு வேலை நிறுத்தம் செய்தால்தான் முடியும்.



உல்ஹாஸ் நதி???..

கடலையும் நாம்விட்டு வைப்பதில்லை. எல்லாக்கழிவுகளும் கடைசியில் அங்கேதான் போய் சேர்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு, எதிர்ப்பு வந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.மேலும் காற்றில் கலந்திருக்கும் நச்சுப்புகையிலிருக்கும் கெமிக்கல்கள் மழை பெய்யும் போது நீரில் கலந்து, கடைசியில் கடலை அடைகின்றன. சில இடங்களில் அமில மழை பெய்தது என்று கேள்விப்படுகிறோமே அது இப்படித்தான் நடக்கிறது.நம் முன்னோர் சிறுகச்சிறுக சேமித்து வைத்த செல்வமாகிய நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக செலவு செய்து கொண்டிருக்கிறோம்.இப்படியே போய்க்கொண்டிருந்தால் நம் சந்ததியினருக்கு தண்ணீர் என்பது மியூசியத்தில் இருக்கும் பொருளாகத்தான் இருக்கும். நாம் முயற்சி எடுத்தால் நிலைமையின் தீவிரத்தை கொஞ்சமாவது மாற்ற முடியும்.



தண்ணீர் சுழற்சி.

மழை நீர் சேகரிப்பு என்பது ஒரு அற்புதமான விஷயம். இயற்கை கொடுக்கும் பரிவை நாமும் கொஞ்சம் திருப்பிக்கொடுக்கலாம். பெய்யும் மழையை சிமிண்ட் திரையிட்டு தடுக்காமல் இருக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். நிச்சயமாக அதன் பிரதிபலன் விரைவிலேயே தெரிய வரும்.

இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் என்பது விலைமதிப்பில்லாத பொக்கிஷமாகத்தான் தோன்றும்.ஆகவே சில விஷயங்களில் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சில லிட்டர்களையாவது மிச்சம் பிடிக்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் அது நிச்சயம் பெருகும்.

  • காய்கறிகளை கழுவ குழாய் நீரை திறந்துவிடாமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் முக்கி கழுவலாம் .கழுவிய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.

  • பாத்திரங்களையும் இதே போல கழுவலாம் . இரண்டு பாத்திரங்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு முதல் பாத்திரத்திலுள்ள தண்ணீரைக்கொண்டு கழுவி, பின் இரண்டாவது பாத்திரத்தில் முக்கி கழுவலாம். இந்த முறை மும்பை மழையின் போது ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டின் போது எனக்கு பலன் கொடுத்தது. இது என் ஆச்சி சொல்லிக்கொடுத்தது.

  • வாகனங்களை கழுவ பக்கெட் தண்ணீர் போதும். எங்க பில்டிங்கில் ஒரு வாளித்தண்ணீரைக்கொண்டே, சுமார் நாலு காரை எங்க செக்யூரிட்டி துடைத்து விடுவார்.

  • நிறைய பேர் தன்னை அறியாமல் செய்யும் தப்பு இது. அதாவது பல் தேய்க்கும்போது தண்ணீரை திறந்து விடுவது. ஒரு மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டால் போதுமே. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

  • துணி துவைக்க வேண்டிய துணிகள் சேர்ந்தபின்னே மெஷினை இயக்கலாம். சிறு சிறு துணிகளாக இருந்தால் கைகளாலேயே துவைக்கலாம் இது இன்னும் தண்ணீரை மிச்சப்படுத்தும். துணி துவைத்த தண்ணீரை பெரிய டப்பில் பிடித்து வைத்து பாத்ரூமில் உபயோகப்படுத்தலாம்.
  • தனி வீடுகளாக இருந்தால், பாத்திரம் கழுவிய தண்ணீர் நேராக தோட்டத்துக்கு போகுமாறும் ஏற்பாடு செய்யலாம்..

  • வீடுகளில் பைப்பில் தண்ணீர் லீக்கேஜ் இருந்தால் உடனடியாக வாஷரை சரி செய்யலாம். அதுவரை ஒரு பக்கெட்டை வைத்து, தண்ணீர் வீணாக போகாதவாறு பார்த்துக்கொள்ளலாம்.

  • இப்போதெல்லாம் ஃப்ளஷ் டேங்க் half மற்றும் full வசதியுடன் வருகிறதாம். நம் தேவைக்கேற்றவாறு பாதி டேங்க் அல்லது முழு டேங்க் ஃப்ளஷ் ஆகிறதாம் . இதனால் தேவையில்லாமல் தண்ணீர் வேஸ்ட் ஆகாது.

  • செடிகளுக்கு காலை அல்லது மாலையில் மட்டும் தண்ணீர் ஊற்றலாம்.மதிய வேளையில் மண் லேசாக சுட ஆரம்பித்திருக்கும் அப்போது ஊற்றினால் நிறைய தண்ணீரை வாங்கும்.
  • மழைக்காலங்களில் வீடுகளில் மழை நீரை சேகரித்து உபயோகப்படுத்துவது நிறைய வீடுகளில் வழக்கம். கூரையை ஒட்டினாற்போல் ஒரு தகரம் அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை பதித்து, வழியும் நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரிப்பார்கள். இதை வென்னீர் போட மற்றும் வடிகட்டிய சுத்தமான நீராக இருந்தால் சமைக்கவும் பயன் படுத்தலாம்.
தொலை நோக்கு திட்டமாக வீட்டுக்கொரு மரம் வளர்க்கலாம். மரங்கள் நமக்கு தரும் பயன்கள் கணக்கில் அடங்காதவை.இதை உணர்ந்து கொள்ளாமல் வெட்டி வீழ்த்தி வருகிறோம். மரங்கள் செழித்தால் மழை செழிக்கும். மழை செழித்தால் தண்ணீர் வளமும் செழிக்கும். 'வரப்புயர' என்று அவ்வையார் பாட்டி வாழ்த்தியதை நாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வோம்.

இயற்கை நமக்கு இரண்டு சந்தர்ப்பங்களை தந்திருக்கிறது. ஒன்று அசுத்தங்களோடு கூடியது. இன்னொன்று தூய்மையானது. இரண்டில் நாம் எதை தேர்ந்தெடுக்கப்போகிறோம்?...

தொடர் பதிவுக்கு அழைத்த மாதேவிக்கு நன்றி.இப்போ நானும் யாரையாவது அழைக்கணுமே.

வாங்க அம்பிகா,

இன்னும் விருப்பமுள்ளவர்கள் எல்லோரும் எழுதலாம்.

39 comments:

சாந்தி மாரியப்பன் said...

கடைசியாக கிடைத்த வானிலை அறிக்கையின்படி அமைதிச்சாரல் 25-ம் தேதிவரை ஓய்ந்திருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதுக்காக இந்தப்பக்கம் வராம இருந்துடாதீங்க. கடையை பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க.எப்படியெல்லாம் சிக்கனப்படுத்தலாம்னும் சொல்லியிருக்கீங்க. நன்றி.

// இது என் ஆச்சி சொல்லிக்கொடுத்தது.
//
இது எனக்கு ஆச்சி சொல்லிக்கொடுக்காமயே தெரியுமே :-)

நசரேயன் said...

//கடையை பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.//

கல்லாப் பட்டி சாவியை கொடுத்திட்டு போங்க

முகுந்த்; Amma said...

நெறைய செய்திகள் சேகரித்து நல்லா சொல்லி இருக்கீங்க. உல்ஹாஸ் நதி (சாக்கடை) பற்றி அறிந்தபோது மனது வலிக்கிறது. சீக்கிரம் எதாவது செய்யாட்டி எதிர் காலத்தில ரொம்ப கஷ்டம்னு நல்லா புரியுது. ரொம்ப நல்லா பதிவுங்க.

எல் கே said...

நல்லாதான் சொல்லி இருக்கீங்க ஆனா நம்ம மக்கள் எங்க கேக்கறாங்க ??
கடைய பார்த்துக்கறோம்.. பார்த்துக்க எவ்ளோ காசு அத சொல்லுங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அமைதிச்சாரல்..
செய்யவேண்டியதும் அழகா தொகுத்திருக்கீங்க..

“தூரப்போடறதை தண்ணியில போடு “ இப்படித்தான் பழமொழிய திட்டிட்டு புதுமொழி செய்யராங்களா.. ;)

அம்பிகா said...

நிறைய விஷயங்கள் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். என்னையும் அழைத்ததற்கு நன்றி அமைதிசாரல். விரைவில் தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

நீர் வளம் உயர,நீர்வளம் காக்க அருமையான யோசனைகள் சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி.

ஹுஸைனம்மா said...

நம்மால் ஆகக்கூடிய விஷயங்களை எழுதிருக்கீங்க. நிச்சயமா பின்பற்றணும் எல்லாரும். ஆச்சி/ அம்மா காலத்துலலெல்லாம் சிக்கனமாத்தான் இருந்தோம். இப்பத்தான் இப்படி ஆகிட்டோம்.

நானும் சீக்கிரம் எழுதுறேன், நன்றி அமைதிச்சாரல்.

கண்மணி/kanmani said...

பயனுள்ள பதிவு

வின்சென்ட். said...

"நமது முன்னோர்கள் புத்திசாலிகள். கோயில் தோறும் குளங்கள் ஏற்படுத்தி வைத்து நிலத்தடி நீர் வற்றிப்போகா வண்ணம் பாதுகாத்தார்கள்".

திரும்ப அவைகளை புரட்டினால் பிழைத்தோம். இல்லையேல் துன்பம் காத்திருக்கிறது. புள்ளிவிபரங்களுடன் இருப்பது சிறப்பை தருகிறது.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அருமையா எடுத்துச் சொல்லி இருக்கீங்க சாரல். கடையைப் பாத்துக்கறோம். சாவி கொடுக்கலியே:)ஓ!திறந்த புத்தகமோ!!

பா.ராஜாராம் said...

நிறைய விபரங்கள்.உழைப்பு,பகிரல்.நல்ல பதிவு அமைதிச்சாரல்!

malar said...

நல்ல பதிவு...

பனித்துளி சங்கர் said...

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .
மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி!

DREAMER said...

நல்ல தகவல்கள்... பயனுள்ள பதிவு....

-
DREAMER

மாதேவி said...

அருமையாக விபரங்களுடன் எடுத்து கூறியுள்ளீர்கள்.

நீரை சிக்கனமாய் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் நன்றாய் சொல்லியுள்ளீர்கள்.

அமைதி அப்பா said...

பூமியில் இருக்கும் நீர் வளத்தில் 97% கடல்நீராக இருக்கிறது. வெறும் 3%தான் நல்ல நீர்//

அனைவரும் அவசியம் அறியவேண்டியத் தகவல்.
நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கபீஷ்,

முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

திறந்த கடைக்கு ஏது சாவி?.. :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகுந்த் அம்மா,

முதல் வரவா?..

உல்ஹாஸ் நிலைமை உண்மையிலேயே பரிதாபம்தான்.வெறும் கழிவு நீர்தான் அங்கே ஓடுகிறது.

வரவுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

நூத்துல ஒருத்தர் சிந்திக்க ஆரம்பிச்சாலே போதுமே.

கடையை பாத்துக்கிட்டதுக்கு கோடி,கோடி ....நன்றிகள் :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

பழமொழியை திட்டலைப்பா... தட்டிக்கொட்டி உல்டா பண்ணியிருக்கேன்.. :-))

'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு'ன்னு கேள்விப்பட்டதில்லையா??.. ஆத்துல ஏன் கொட்டி அசுத்தமாக்கணும்ன்னு ஒரு தோணல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

தொடர்ந்ததுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதி அரசு,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்மணி மேடம்,

பயனளித்தால் சந்தோஷம்தான்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வின்செண்ட்,

முதல்வரவுக்கு நன்றி.
அருமையான தொடர்பதிவை ஆரம்பித்து வைத்ததுக்கும் நன்றிகள்.

இருக்கும் குளங்களும் பரப்பளவில் சுருங்கி வருகின்றன.மக்கள் எப்போதான் விழித்துக்கொள்ள போறாங்களோ:-(

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

தொடர்ந்ததுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பா.ராஜாராம்,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மலர்,

புதுவரவா.. நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி சங்கர்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கனவு காண்பவரே..


முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

எல்லோருக்கும் தெரிந்த வழிமுறைகள்தான்,முயற்சிக்கலாமே..

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

முதல்வரவா...

நினைக்கும்போதே மலைப்பாக இருக்கிறது அல்லவா.. இதுவும் குறைய ஆரம்பிச்சா நம்ம கதி என்னாகும்??..

வரவுக்கு நன்றி.

அம்பிகா said...

அமைதிசாரல்,
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். விரும்பினால் உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிருங்களேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

அழைத்ததற்கு நன்றி. சீக்கிரமே பதிய முயல்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails