Friday, 5 March 2010

உடனிருந்தே கொல்லும் வியாதி..


உங்களுக்கு கோபம் வருவதுண்டா?...' இது என்ன கேள்வி!!...மனுஷனாப்பொறந்தவனுக்கு கோபம் வர்றது சகஜமானதுதானே'ங்கிறீங்களா!!!. உண்மைதான்..நம்ம ஆழ்மனசுல அடக்கி வைக்கப்பட்ட உணர்வு மற்றும் மன அழுத்தங்களே எல்லை மீறும் போது கோபமாக வெளிப்படுகின்றன. கோபப்படறது சகஜம்ன்னாலும் , அது எல்லை மீறி, நம்மை அழிச்சிடாம இருக்கிறவரைக்கும் அதுவும் ஓர் உணர்வுதான்.(வேறொன்னுமில்லை.. பதிவு கொஞ்சம் நீளமா போச்சு.. டைம் எடுத்து படிச்சிடுங்க. ப்ளீஸ்..ஹி..ஹி..)

நமக்கு அதிகமா கோபம் வருதுங்கிறதை நம்ம உடல்மொழிகளே(body language) காட்டிக்கொடுத்திடும். தாடை இறுகி, நறநறன்னு பல்லைக்கடிப்போம்,இதயத்துடிப்பு கூடுதலாகும், முகமெல்லாம் சிவந்து உடம்பெல்லாம் வேர்த்துக்கொட்டும்,பாதாதிகேசம் நடுங்கும்,பின் தலையில் பாரமா இருக்கிறது மாதிரி இருக்கும்,தலைசுத்தும்.

கொஞ்சம்கொஞ்சமா தலைக்கேறிடுச்சுன்னா, குரலை உயர்த்தி கத்த ஆரம்பிப்போம்,எதிரில் இருக்கிறவங்களை என்ன செஞ்சா தகும்ன்னு மனசுக்குள்ள இருந்து சாத்தான் குரல் கொடுப்பான்..அந்த இடத்தை விட்டே போயிடலாமான்னு தோணும்.எரிச்சலா வரும்.கையிலிருக்கிறதை விட்டெறியிற ஆட்களும் இருக்காங்க.

கோபம்ங்கிறது ஒரு உடனிருந்தே கொல்லும் வியாதி.கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்கலைன்னா நம்மையே அது அழிச்சிடும். நாம கொஞ்சம் கவனிச்சு பாத்தோம்ன்னா எந்தெந்த விஷயங்கள் நமக்கு கோபமூட்டுதுன்னு தெரிஞ்சிக்கலாம். ஒவ்வொருத்தரையும் கேட்டுப்பாத்தா, கீழ்க்கண்ட காரணங்கள் கண்டிப்பா இருக்கும்.

 1. நான் சொல்ற எதையும் காதுல போட்டுக்கறதே இல்லை.. என்மேலே அக்கறையே கிடையாது. இது தங்க்ஸ்களின் டெம்ப்ளேட் புலம்பல்.
 2. எங்கிட்ட ரொம்பத்தான் எதிர்பாக்கிறாங்க,என் கண் முன்னால சிரிச்சிப்பேசிட்டு முதுகுக்கு பின்னால எளக்காரமா பேசுறாங்க. என்னை ஒருத்தனும் மதிக்கிறதே இல்லை.
 3. அவங்களுக்கு சாதகமா உபயோகப்படுத்திக்கிட்டு பின்னாடி கழட்டி விட்டுர்றாங்க, சரியான சுய நலம் பிடிச்சவங்களா இருக்காங்கப்பா.இதெல்லாம் வேலைக்குப்போகும் தங்க்ஸ்+ரங்க்ஸ்களின் ஆபீஸைப்பற்றிய அங்கலாய்ப்புகள்.
 4. வரவர ஒரு வேலையும் செய்றதில்லை. தனியா கிடந்து அல்லாடுறேனே.கூடமாட ஒத்தாசை செஞ்சா என்னவாம்?எப்பப்பாரு என்னை அதிகாரம் செய்றதை தவிர வேற நெனப்பே கிடையாது.. இது யாருடைய புலம்பல்ங்கிறதை உங்க ஊகத்துக்கே விட்டுர்றேன் :-))).
 5. எவ்வளவுதான் பாத்துப்பாத்து நகை, புடவைன்னு வாங்கிக்கொடுத்தாலும்,பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு அம்மணிங்க வாங்கியிருக்கிறது மாதிரி லேட்டஸ்ட்டா இல்லைன்னு புலம்பறாங்களே..இது ரங்க்ஸின் புலம்பல்கள்.
 6. மும்முரமா ஒரு போஸ்டை படிச்சிக்கிட்டோ, இல்லை எழுதிக்கிட்டோ இருக்கும்போது நெட் கனெஷன் புடுங்கிக்கிச்சின்னா வருமே .. அதுக்குப்பேர் என்னப்பா :-))).
 7. குடும்பத்தோட உக்காந்து டி.வி. பாத்துக்கிட்டிருக்கும்போது, ஒலக மகா முக்கியமான சில கண்றாவிகளை பாக்க நேரிடும்போது..
 8. மேல படிக்கணும்ன்னு, பொண்ணுங்க ஆசைப்படும்போது,பெத்தவங்க ஒத்துக்கிட்டாலும்,"பொம்பளைப்புள்ளை படிச்சு கலெக்டர் வேலைக்கா போகப்போற.."ன்னு மத்தவங்ககிட்டேயிருந்து ஒரு நொட்டச்சொல்லு வந்து விழும்போது..
 9. பெண் என்பதற்காகவே திறமைகள் மதிக்கப்படாம போகும்போது...
 10. ஆணோ, பெண்ணோ.. அவர்களின் உணர்ச்சிகள் மதிக்கப்படாவிட்டால்...,
இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும் அபாயம் இருப்பதால் ஒரு கமா போட்டுக்கறேன்.உங்க கோபத்தை தூண்டும் விஷயங்கள் என்னென்னன்னு யோசிச்சு, குறிச்சு வெச்சிக்கங்க.

இப்ப, அந்த பேப்பரை எடுத்து வாசியுங்க.. மேலோட்டமா பாத்தா மத்தவங்க உங்ககிட்ட சரியா நடந்துக்காததால்தான் நீங்க கோபப்பட்டிருப்பீங்க,...சில சமயம் ஏதாவது ஒரு விஷயம் உங்களை அடிக்கடி கோபப்படுத்தியிருக்கலாம். உங்க கோபம் நியாயமானதுதான்னு தோணும்.. ஆனா,..யோசிச்சுப்பாத்தா,ஒரே விஷயத்தை இருவேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமா கையாண்டிருப்போம்.ஒரு சமயம் டேக் இட் ஈஸின்னு போயிருப்போம். அதுவே வேறொரு சந்தர்ப்பத்தில் பாய்ந்து பிறாண்டியிருப்போம்..இதிலேருந்து நீங்களே புரிஞ்சிட்டிருப்பீங்களே!!.. யெஸ்..நம்ம கோபத்தை எது தூண்டுதுன்னு உண்மையிலயே,.. நம்மாலயே புரிஞ்சிக்க முடியாது..

இப்படி, கொஞ்ச நாள் உங்களை நீங்களே கவனிச்சு வந்தாலே எது உங்க கோபத்தை தூண்டப்போகுதுன்னு நீங்களே கண்டுபிடிச்சிடலாம், நீங்க தன்னிலை மறந்து கத்த ஆரம்பிக்குமுன்னே உஷாராயிடலாம்.கோபத்தை தூண்டும் எண்ணங்கள் பெரும்பாலும் அந்த ஒரு நிமிட உணர்ச்சிகளாகவே இருக்கும்.அப்படின்னா எதுக்குமே கோபப்படாம இருக்க முடியுமான்னு தானே கேக்கறீங்க. நாம அந்த ஒரு நிமிடத்தை ஜெயிச்சிட்டோம்ன்னாலே, ஆத்திரம் கட்டுக்குள்ள வந்திடும்.

எப்பவும், நம்முடைய நிலையிலிருந்தே பாக்காம எப்பவாவது அடுத்தவங்க கோணத்திலிருந்தும் யோசிக்க பழகிக்கலாம்.ஏன்னா.. எதுக்கெடுத்தாலும் கோபப்படுவதால நம்ம மன,உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகுதில்லையா?.. அதை தவிர்க்கலாமே.பொதுவா, நம்ம சமூகத்தில ஆம்பிளைங்க அழப்பிடாது,.. பொண்ணுங்கன்னா ஆத்திரப்படப்பிடாது,எதுக்கெடுத்தாலும் பயந்தா எப்படி?ன்னு உணர்ச்சிகளை அடக்கியே வாழ பழக்கப்படுத்திடறாங்க.இப்படி மனசுக்குள்ளயே அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் என்னிக்காவது வெடிச்சி சிதறும்போது,அது சுனாமியை விட பேரழிவை குடும்பத்தில் உண்டாக்கும்.

ஆத்திரம் என்பது ஒரு நோய். உடனிருந்தே கொல்லும் ஒரு வியாதி.. இந்த வியாதி நம்மை அழிக்க விடலாமா?.. நாலஞ்சு வகையிலே இதுக்கான மருந்துகள் இருக்கே..
 1. ஆழ்ந்த சுவாசம்: ஒரு மனிதன் ஆத்திரப்படும்போது அவனு(ளு)டைய சுவாசம் தாறுமாறா எகிறும். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கும்.இதை சமனப்படுத்துவதன் மூலம் ,வியாதி கட்டுக்குள் வரும். இதற்கு முதலில்,மூச்சை நன்கு இழுத்து விடவேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது நான்கு வரை மனசுக்குள் எண்ண வேண்டும். வெளிவிடும்போது எட்டு வரை எண்ண வேண்டும். இப்படி ஒரு பத்துப்பதினஞ்சு தடவை மூச்சுப்பயிற்சி செய்யலாம். இந்தப்பயிற்சியை யார்வேண்டுமானாலும் செய்யலாம். ஆஸ்துமா காரங்க இதை தவறாம செஞ்சா நல்லது.
 2. ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணலாம். எதிர்க்க இருக்கறவங்களைப்பொறுத்து இந்த எண்ணிக்கை வித்தியாசப்படும். தங்க்ஸ் முன்னாடி வாயைத்திறக்க பயப்படும் கைப்புள்ளைகளும் இதை செய்யலாம். யாராவது கேட்டா, சமாளிக்கலாமுல்ல :-))
 3. கோபத்தை மத்தவங்களுக்கு தொந்தரவில்லாம வெளிப்படுத்த சிபாரிசு செய்யப்படும் சில விஷயங்கள்--தலையணையை குத்துதல், சுவரில் தலையை முட்டிக்கொள்தல்(ஹி..ஹி.. ச்சும்மா... செஞ்சு பாக்காதீங்க).ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சுக்கு நூறாக கிழித்தல்,.. இதெல்லாம் வேணாமுங்க..கிழிச்ச பேப்பர் முக்கியமானதா இருந்தா ஆத்திரம் கூடுவிட்டு கூடு பாயும் அபாயம் உண்டு. தலையணையை குத்திக்கிழிச்சா புதிசு வாங்கிய செலவு இன்னொருத்தருக்கு, இல்லாத கோபத்தை வரவைக்கும்.
 4. உங்களுக்கு அமைதிதர்ற மாதிரி ஏதாவது படிக்கவோ,ஏதாவது உடலுழைப்போ இருந்தா செய்யுங்க.வாக்கிங், நீந்துதல்,தோட்ட வேலை இதெல்லாம் கூட physical outletsதான்.
 5. கண்ட கண்ட அழுவாச்சி சீரியல்களை பாக்காதீங்க. இலவச இணைப்பா வீடியோ கிளிப்பிங்க்ஸை பாக்க வேண்டியிருக்கும். :-)
 6. மறுபாதி கிட்ட, நீங்க எனக்கு உதவி செய்றதில்லைன்னு புகார் வாசிக்கிறதை விட்டுட்டு,உதவி செஞ்சா நல்லார்க்கும்ன்னு சொல்லலாம்.அவங்க உதவி செய்யும்போது குத்தம் கண்டுபிடிக்காம இருக்கலாம்(அது முடியாதே ..கொஞ்சம் கஷ்டமாச்சே :-)))) இதைவிட இன்னொரு வழி இருக்கு. கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். எல்லோருக்கும் பொதுவா ,ஒரு பழமொழி சொல்வார்கள்.. "சொல்லிப்பார்...தல்லிப்பார்... தள்ளிக் களெ"...தப்பிருந்தா சொல்லித்திருத்தலாம், கேக்கலையா ரெண்டு தட்டு தட்டலாம்(தங்க்ஸ்+ரங்க்ஸை இல்லைங்க)அதுக்கும் அடங்கலையா விட்டுவிடலாம். அவங்களுக்கு தெரிஞ்சவரையில் செய்றாங்க.. அதுவே பெரிசில்லையா. உதவி செய்யணும்கிற மனசுதானே முக்கியம்.
 7. எல்லாத்தையும் விட முக்கியம், சம்பந்தப்பட்டவங்களை மன்னித்து, அந்த நிகழ்ச்சியை மறந்துடறதுதான். இதுக்கு ரொம்பப்பெரிய,பக்குவப்பட்ட மனசு வேணும் சாமி..
ஆத்திரம் என்பது ஒரு உணர்ச்சி மட்டுமல்ல. ஒரு பிரச்சினையும் கூட..அது நம்மை கட்டுப்படுத்துகிறதா?..நாம் அதை கட்டுப்படுத்துகிறோமா?என்பதுதான் அது.கட்டுப்படுத்த தவறினால் சீக்கிரமே அது நம்முடைய குணங்களில் ஒன்றாக மாறிவிடும். 'அட.. அது ஒரு முசுடுப்பா'ன்னு நம்ம கோபத்துக்கு பயந்து பணிஞ்சு போறாங்களே... அது உண்மையான அன்பினால் வந்த பணிவா?

கோபத்தை ஒட்டுவாரொட்டி (ஒட்டுவார் ஒட்டி)அப்படீன்னும் சொல்வாங்க. ஒருத்தர் தன்னோட கோவத்தை அடுத்தவர் மேல காமிக்க, அவங்க இன்னொருத்தர் மேல பாய, இது ஒரு தொடர்கதையாக்கூட சமயங்களில் ஆகிடும்.எதுக்கெடுத்தாலும் ஆத்திரப்படுறவங்க ஒரு எரிமலைக்கு சமம். அவங்க எங்கே போனாலும், அவங்களைச்சுத்தி அழிவைத்தான் உண்டாக்குவாங்க. மத்தவங்களை அடக்கியே பழக்கப்பட்டவங்க வேற எப்படி இருப்பாங்க?... விளைவு.. குடும்ப உறவுகளில் விரிசல், உடல் நலக்கேடு,வெளியுலகத்தொடர்பு அற்றுப்போதல் இதுதான் மிச்சம்.ஒரு கிருமியைக்கண்ட மாதிரி விலகிப்போவாங்க .. இதெல்லாம் தேவையா?...

32 comments:

LK said...

//ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணலாம். எதிர்க்க இருக்கறவங்களைப்பொறுத்து இந்த எண்ணிக்கை வித்தியாசப்படும்//

எண்ணி முடிக்கற வரைக்கும் கோபம் வராம இருக்கணுமே ...

//நான் சொல்ற எதையும் காதுல போட்டுக்கறதே இல்லை.. என்மேலே அக்கறையே கிடையாது. இது தங்க்ஸ்களின் டெம்ப்ளேட் புலம்பல்//

இந்த வார்த்தைகள் வரும் பொழுது எங்களுக்கு காது கேக்காது
:D:D

பிரியமுடன்...வசந்த் said...

படிக்க 10 நிமிசமானாலும் கோபம் வரலை நிறைய விஷயங்கள் குறிப்பா

//ஆழ்ந்த சுவாசம்: ஒரு மனிதன் ஆத்திரப்படும்போது அவனு(ளு)டைய சுவாசம் தாறுமாறா எகிறும். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கும்.இதை சமனப்படுத்துவதன் மூலம் ,வியாதி கட்டுக்குள் வரும். இதற்கு முதலில்,மூச்சை நன்கு இழுத்து விடவேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது நான்கு வரை மனசுக்குள் எண்ண வேண்டும். வெளிவிடும்போது எட்டு வரை எண்ண வேண்டும். இப்படி ஒரு பத்துப்பதினஞ்சு தடவை மூச்சுப்பயிற்சி செய்யலாம். இந்தப்பயிற்சியை யார்வேண்டுமானாலும் செய்யலாம். ஆஸ்துமா காரங்க இதை தவறாம செஞ்சா நல்லது.//

இந்த முயற்சி செய்து பார்க்கலாம்

//கோபத்தை மத்தவங்களுக்கு தொந்தரவில்லாம வெளிப்படுத்த சிபாரிசு செய்யப்படும் சில விஷயங்கள்--தலையணையை குத்துதல், சுவரில் தலையை முட்டிக்கொள்தல்(ஹி..ஹி.. ச்சும்மா... செஞ்சு பாக்காதீங்க).ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சுக்கு நூறாக கிழித்தல்,.. இதெல்லாம் வேணாமுங்க..கிழிச்ச பேப்பர் முக்கியமானதா இருந்தா ஆத்திரம் கூடுவிட்டு கூடு பாயும் அபாயம் உண்டு. தலையணையை குத்திக்கிழிச்சா புதிசு வாங்கிய செலவு இன்னொருத்தருக்கு, இல்லாத கோபத்தை வரவைக்கும்.//

ஹிஹிஹி

//எல்லாத்தையும் விட முக்கியம், சம்பந்தப்பட்டவங்களை மன்னித்து, அந்த நிகழ்ச்சியை மறந்துடறதுதான். இதுக்கு ரொம்பப்பெரிய,பக்குவப்பட்ட மனசு வேணும் சாமி..//

மிகச்சரி

பேப்பர் மேட்டர் ரொம்ப பிடிச்சுருக்கு மேம்

உங்க டீல் நல்லாருக்கு...!

LK said...

இன்னொரு வழி இருக்கு .. எது நடந்ததோ நன்றாக நடந்தது எது நடக்கிறதோ நன்றாக நடக்கிறது அப்படின்னு அமைதியா இருக்கறது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு கோவம் வந்தா நான் கத்துவேன் .. சில சமயம் கத்தக்கூடாதுன்னு உள்ளுணர்வு தடுத்துடுச்சுன்னா அதை வெளிப்படுத்த வீடே தலைகீழாக்கி ஒதுங்க வைப்பேன்.. இல்லன்னா பாத்திரம் கழுவுவேன்..தியானம் மாதிரி இதெல்லாம்..:))

நசரேயன் said...

உள்ளேன் போட்டுட்டு அப்புறமா வந்து படிக்கிறேன்

அமைதிச்சாரல் said...

வாங்க L.K.

//எண்ணி முடிக்கற வரைக்கும் கோபம் வராம இருக்கணுமே//

வந்தாலும் பிரச்சினை இல்லை. அதுக்கும் வழி இருக்கு.. சிம்பிள் வழிதான்.. மறுபடியும் எண்ண ஆரம்பிச்சிடுங்க :D

கண்ணகி said...

நல்லா ஆராய்ஞ்சு சொல்லி இருக்கீங்க...சாரல்..

சுவத்துல முட்டிகறது கூட நல்லாத்தான் இருக்கு..ஹ....ஹா...

நல்லா இருக்கு..

சந்தனமுல்லை said...

நிறைய இடங்கள்லே வாய் விட்டு சிரிச்சுட்டேன்...அமைதிச்சாரல். எங்கம்மாவுக்கும் முகிலுக்கும் பிரிண்ட் எடுத்துட்டு போய் கொடுக்கறேன்...அப்பவாவது என் மேலே கோவம் குறையுதான்னு பார்க்கலாம்! :-)

அன்புடன் அருணா said...

அடடே எனக்கு ரொம்ப உபயோகப் படும் போலிருக்கே!

ராமலக்ஷ்மி said...

முணுக் முணுக்கென எதற்கெல்லாம் கோபம் வரும் எனச் சொல்லியிருப்பதை ரசிச்சேன். வியாதிக்கான மருந்தையும் தந்துட்டீங்க. நன்றி அமைதிச்சாரல்:)!

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

பொறுமையா படிச்சதுக்கே உங்க எல்லோருக்கும் ஸ்பெஷல் நன்றி சொல்லணும். :-)

ரசிச்சு படிச்சதுக்கு நன்றிப்பா..

பேப்பரில் இன்னொரு மேட்டர் சொல்லவா?..

யார்மேலயாவது கோபம் இருந்தா, அவங்களுக்கு, அதை தெரிவிச்சி எழுதற மாதிரி கடிதம் எழுதி, அப்புறம் அதை கிழிச்சோ.. இல்லாட்டி எரிச்சோ போட்டுடணும்.அவங்க மேல இருந்த கோபம் குறைவதை நீங்களே உணர்வீங்க. தப்பித்தவறி போஸ்ட் பண்ணினா, பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல :D :D :D

அமைதிச்சாரல் said...

வாங்க L.K.

உண்மைதான்..சரியா சொன்னீங்க

எங்க வீட்டுல எது நடந்தாலும் நன்மைக்கேன்னு விட்டுடுவோம்.இதுக்கும் நல்ல பலன் இருக்குப்பா

வந்ததுக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

கோவம் எனக்கும் அதிகம் தான். ஆனா கட்டுப்படுத்தும் மந்திரம் யோகா, தியானம்னு செய்வதால் தப்பிச்சேன். எல்லாத்தையும் விட உடல்நிலையும் ஒத்துழைச்சாதான் நல்லது. இல்லாட்டி கோவம் தான் வரும்.

அமைதிச்சாரல் said...

வாங்க முத்துலெட்சுமி,

இங்கயும் அதே கதைதான்.ரொம்ப முக்கியமான வேலை மாதிரி பாத்திரம் கழுவ, கீரை,தனியா பழுதுபார்க்கன்னு போயிடுவேன்.லிமிட் தாண்டிட்டாங்கன்னா போச்சு.செல்லுபடியாகுமிடங்களில்தானே கோவத்தை காமிக்க முடியும் :D

அமைதிச்சாரல் said...

வாங்க நசர்,
கட்டாயம் படிக்கணும். இல்லைன்னா... :-)))).

வந்ததுக்கு நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க கண்ணகி,

சுவத்துல முட்டிக்கிறதுக்கு முன்னால மறக்காம தலையணையை சுவத்துல வெச்சிக்கோங்க :D :D :D

வந்ததுக்கு நன்றிப்பா..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கோவம் வரும் சூழ்னிலைகலை ரசிக்க தெரிஞ்சாலே பிறகு சிரிப்புதாங்க..:))

அமைதிச்சாரல் said...

வாங்க சந்தனமுல்லை,

வந்ததுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிப்பா,

அமைதிச்சாரல் said...

வாங்க அருணா,

என் பதிவு யாருக்காவது உபயோகமா இருந்தா, அதுவே பெரிய சந்தோஷம்.

வருகைக்கு நன்றிங்க.

கண்மணி/kanmani said...

லிஸ்ட்டுல விட்டுப் போன ஒன்னு
பதிவுகளுக்கு பின்னூட்டம் ஓட்டு வரலைன்னாலும் வருமாம் :)))))))))

கோபத்தின் மொத்த உருவம் நான்.செம டென்ஷன் பார்ட்டி...
ஆனா அதுபோல ஜாலியின் மொத்த உருவமும் [கோபம் போன பிறகு] என்ன செய்ய?

ஹுஸைனம்மா said...

நல்ல விஷயங்கள்; ஆனா கோபம் வரும்போது இதெல்லாம் ஞாபகமா மறந்துடுது!!

அம்பிகா said...

நல்ல பகிர்வு அமைதிச்சாரல்.
அப்படியே காரணம் இல்லாம கோப படுறவங்களையும் பத்தி எழுதியிருக்கலாம்.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி மேடம்

வந்ததுக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க புதுகைத்தென்றல்,

கோவத்தை கட்டுப்படுத்த நீங்க சொல்லியிருக்கிற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றலாம்.

உண்மைதான், மனசு போற வேகத்துக்கு உடல்நிலை ஒத்துழைக்கலைன்னா கோவம் வரத்தான் செய்கிறது.

வந்ததுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஷங்கர்,

சில சூழ் நிலைகள் அப்படித்தான் இருக்கின்றன. இதுக்கா கோவம் வந்ததுன்னு சிரிப்புத்தான் வரும்.

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கண்மணி.

ஒன்னும் பண்ண முடியாது..நீ பாதி,நான்..பாதி கண்ணேன்னு பாட்டு வேணா பாடலாம். :-)))

பின்னூட்டம் சரி.. ஓட்டுப்போட்டீங்களா.. கிர்ர்ர்ர்.

வந்ததுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

இந்த வியாதி அப்படித்தான்.புத்தியை மழுங்கடிச்சிடும். :-)) வியாதியை முழுசா விரட்ட முடியாவிட்டாலும் கட்டுப்பாட்டுக்குள்ளயாவது வெச்சிக்கலாம். நானும் அதுக்குத்தான் முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கிறேன்.

வந்ததுக்கு நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பிகா,

//கட்டுப்படுத்த தவறினால் சீக்கிரமே அது நம்முடைய குணங்களில் ஒன்றாக மாறிவிடும்//

இதுதான் காரணமில்லாம கோபப்படுறதுக்கு காரணம். ஆரம்பத்தில் தற்காத்துக்கொள்ளவும்,பிறரை அடக்கியாள்வதிலுள்ள இன்பத்துக்காகவும்தான் இப்படி ஆரம்பிப்பாங்க..அப்றம் அதுவே பழகிடும். பேசி சரிப்படுத்த முயற்சிக்கலாம், இல்லைன்னா இருக்கவே இருக்கு மருந்து லிஸ்ட் நமக்காக :-))))

"உழவன்" "Uzhavan" said...

கோபத்தில் எழுதிய இடுகையா? :-)

அமைதிச்சாரல் said...

வாங்க உழவன்,

அச்சச்சோ.. அப்படியா தெரியுது :-))

முதல்வருகைக்கு நன்றி.

நானானி said...

கோபம் இல்லாமல் சொல்றேன்
கோபப் படாமல் சொல்றேன்
கோபமே வராமல் சொல்றேன்
கோபிச்சுக்காம சொல்றேன்
கோபம் முன்னா என்னான்னு தெரியாம சொல்றேன்....

பதிவு நல்லாருந்துச்சு..ர்ர்ர்ம்ம்ம்!!!

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

நன்றிம்மா :-))))

LinkWithin

Related Posts with Thumbnails