Monday, 8 March 2010

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண் என்பவள் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை?? எத்தனை??... மகளாக,தாயாக,தோழியாக,மனைவியாக, சக மனுஷியாக, ... "சில சமயம் பத்ரகாளியாக".. மகனர் அணியினர்தான் குரல் விடுறாங்க... ஒன்னும் கண்டுக்காதீங்க.. சரி..சரி.. :-))). தீமைகளை காணும் போது அந்த அவதாரமும் எடுக்கத்தானே வேண்டியிருக்கு..

மகளிர் தின ஸ்பெஷலா 33% க்கான மசோதா நிறைவேறப்போகுது. ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், இதை எதிர்க்கவும் ஆளுங்க இருக்காங்களேன்னு கஷ்டமா இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணங்கள்.நமக்கு அரசியல் வேணாம்ப்பா.. அதனால அந்த பாயிண்டுகளை அலசப்போறதில்லை.
ஒரு மம்தா பானர்ஜியை பாத்தே தலைவர் முலாயம்சிங் யாதவ் பயந்து போய் "ஆத்தா.. ஒண்ணையே நாடாளுமன்றம் தாங்கமுடியலையே!! 33% கொடுத்தா என்னாகும்"ன்னு நடுங்கிக்கிட்டிருக்காராம்..ஹா..ஹா..ஹா...

ஒரே ஒரு பாயிண்ட் மட்டும்தான் மூளைக்குள்ள பூச்சி மாதிரி குடையுது. இப்ப இந்தியா முழுக்க பல்வேறு துறைகள்ள பெண்கள் புகுந்து புறப்பட்டுகிட்டிருக்காங்க. இதில் எத்தனை பெண்களுக்கு சுயமா முடிவு செய்யுற சுதந்திரம் இருக்கு?...முக்கியமா தமிழ் நாட்டில் பஞ்சாயத்து ,மற்றும் கிராமங்களில் முக்கிய பொறுப்புகளில், தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பெண்கள், வெறும் பொம்மைகளாக.. அவங்க வீட்டு ஆண்கள் சொல்படி கேட்கவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகளில் இருக்காங்க.

சில இடங்களில் கூட்டங்களுக்கே, அவங்க கணவர்கள்தான் வர்றாங்கன்னு படிச்ச ஞாபகம்.இந்த நிலைமை, நாடாளுமன்றத்துக்கும் வந்துவிடக் கூடாதுங்கிறதுதான் இப்போ கவலையா இருக்கு. நாடாளுமன்றத்துக்கு இதுவரை வந்த பெண்மணிகளைப்போலவே இந்த இடஒதுக்கீட்டின் மூலம் வரப்போறவங்களும், பெண்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செஞ்சா நல்லாருக்கும்.

பெண்கள் முந்திமாதிரி முழுக்க அடிமையா இல்லை.. பேச்சுசுதந்திரம், எழுத்து, உடை... ன்னு எல்லா வகைகளிலும் சுதந்திரம் ஓரளவாவது இருக்குது. இன்றைய பெண்களை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. ஆண்களுக்கு சமமா.. ஏன்?.. ஒருபடி மேலாவே இருக்காங்க. அவங்க இல்லாத துறைகளே இல்லை.. அரசியல்லேர்ந்து, விண்வெளிவரை கலக்குறாங்க.

சில பெண்கள் தங்களோட உரிமைகளை துஷ்பிரயோகமும் செய்றாங்கப்பா.. ஆணுக்குப்பெண் சமம்ன்னு சொல்லிக்கிட்டு குடி, சிகரெட், இன்னபிறன்னு ரொம்பத்தான் முன்னேற்றமா இருக்காங்க.இன்னும் சொல்லப்போனா ஒருபடி மேலயே இருக்காங்க. பெண் சுதந்திரத்தை இப்படி ஏந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்காங்களோ??!!!..

மகளிர் தின ஸ்பெஷலா மகளிர் மட்டுமே பைலட்குழுவாக கொண்ட ஏர் இந்தியா விமானம் மும்பையிலிருந்து நியூயார்க் செல்கிறது.கேப்டன் ராஷ்மி மிராண்டா,கேப்டன் சுனிதா நரூலா ரெண்டுபேரும் கமாண்டர்களாக வழி நடத்தப்போகிறார்கள். இது பதினாலு மணி நேரப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.நம்ம எல்லோரோட வாழ்த்தும், பிரார்த்தனையும் நிச்சயமா அவங்ககூட இருக்கும்.

பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு நிறைய கெட்டபெயர் சம்பாதிச்சு வெச்சிருக்கோம். நாம நெனச்சா இதெயெல்லாம் ஒழிச்சுக்கட்டி எதிராளிங்களை டெபாஸிட் இழக்க வைக்க முடியாதா என்ன???.. அதுதான் உண்மையான மகளிர் தினமாக இருக்க முடியும் என்பது என் கருத்து.

இங்கேயும் படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க..

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்:

பெண்மையை மதிக்கும் ஆண்களுக்கு நன்றிகள்


27 comments:

LK said...

Happy womens days wishes to you madam :)
//ஆணுக்குப்பெண் சமம்ன்னு சொல்லிக்கிட்டு குடி, சிகரெட், இன்னபிறன்னு ரொம்பத்தான் முன்னேற்றமா இருக்காங்க.இன்னும் சொல்லப்போனா ஒருபடி மேலயே இருக்காங்க. பெண் சுதந்திரத்தை இப்படி ஏந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்காங்களோ??!!!..//

correcttttt

ஹுஸைனம்மா said...

//சில இடங்களில் கூட்டங்களுக்கே, அவங்க கணவர்கள்தான் வர்றாங்கன்னு படிச்ச ஞாபகம்//

உண்மைதான்; ஆரம்பகாலங்களில் அரசியல் அனுபவமின்மை காரணமாக இதைச் செய்தாலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தொடர்வது தவறு.

ஆனால், ஆண் அரசியல்வாதிகளின் குடும்பங்களில் உள்ள பெண்களும் அவர்களின் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

பிரியமுடன்...வசந்த் said...

//எத்தனை பெண்களுக்கு சுயமா முடிவு செய்யுற சுதந்திரம் இருக்கு?...//

நல்லா சத்தமா கேளுங்க...

//பெண்கள் முந்திமாதிரி முழுக்க அடிமையா இல்லை.. பேச்சுசுதந்திரம், எழுத்து, உடை... ன்னு எல்லா வகைகளிலும் சுதந்திரம் ஓரளவாவது இருக்குது.//

பேச்சு,எழுத்து சுதந்திரம் மிக சந்தோஷம் ஆனால் உடை சுதந்திரம் காற்றில் பறக்கிறதே...

//ஆணுக்குப்பெண் சமம்ன்னு சொல்லிக்கிட்டு குடி, சிகரெட், இன்னபிறன்னு ரொம்பத்தான் முன்னேற்றமா இருக்காங்க.//

சில நல்லது இருக்கும்போது கெட்டதும் கலந்து வர்றது சகஜம்தானே

தங்களுக்கு எதிர் கோஷ்டிக்குன்னு ஒரு தினம் இல்லாத பொழுது
மகளிர்தினம் கொண்டாடுவது சரியா?தவறா? இதுலயும் சிறுமைப்படறாங்களா இல்லை கொண்டாடுறதுதான் சரியா?

மகளிர் தின வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.//பெண்கள் முந்திமாதிரி முழுக்க அடிமையா இல்லை.. பேச்சுசுதந்திரம், எழுத்து, உடை... ன்னு எல்லா வகைகளிலும் சுதந்திரம் ஓரளவாவது இருக்குது. இன்றைய பெண்களை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. ஆண்களுக்கு சமமா.. ஏன்?.. ஒருபடி மேலாவே இருக்காங்க. அவங்க இல்லாத துறைகளே இல்லை.. அரசியல்லேர்ந்து, விண்வெளிவரை கலக்குறாங்க. ..//

ரொம்பச் சரி.
உரிமைகளை தவறாகப் பயன்படுத்துகையில்தான் பெண் சுதந்திரம் நீங்கள் சொன்ன மாதிரி கேள்விக்குறியாகுது.

மகளிர்தின வாழ்த்துக்கள்!

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு, அழகாய் சொல்லிறிக்கீங்க.. மகளிர்தின வாழ்த்துக்கள்...

அமைதிச்சாரல் said...

வாங்க L.K.

உங்க தங்க்ஸுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஆணோ,பெண்ணோ அரசியல்வாதின்னாலே அவங்க குடும்ப உறுப்பினர்கள் பதவி துஷ்பிரயோகம் செய்றது நடக்கத்தான் செய்கிறது. அதுவே பெண் அரசியல்வாதின்னா பகிரங்கமாவே நடக்கும்.

ராப்ரிக்கு ஒன்னும் தெரியாது,லாலுஜிதான் மறைமுகமா ஆட்சிசெய்றார்ன்னு அவங்க பணிப்பெண் அவங்களை எதிர்த்து போட்டியிட்டப்ப, பேட்டியெல்லாம் கூட கொடுத்திருந்தாங்க

புதுகைத் தென்றல் said...

பெண்கள் சுதந்திரத்தை துஷ்ப்ரயோகம் செய்யறாங்கதான்.

தன்னை மணக்க இருக்கும் ஆண்களிடம் கேட்கும் கேள்விகள் :(
(ஒரு காலத்துல ஆண்கள் ஆடினாங்க இல்ல, இப்ப அனுபவிக்கட்டும்னு நினைச்சாலும்)டூ டூ மச்.

உதாரணமா ஒரு பெண் கேட்ட கேள்வி, “என்னது மாப்பிள்ளைக்கு 1 1/2 லட்சம் தானா??!!! இதை வெச்சுகிட்டு நான் என்ன செய்வது???

நம்புங்க. இது நிஜம். கதையல்ல

புதுகைத் தென்றல் said...

இங்கே மறைந்த முதல்வர் நடிகர் என்.டி.ராமராவ் அவர்களின் மகனுக்கும் எம் பி பதவி கொடுக்கப்பட்டிருக்கு. ஆள் அவைக்கு வருவதேயில்லை.அவரது மகள் புரந்தரேஸ்வரி காங்கிரஸில் சேர்ந்து அமைச்சராகி கலக்குகிறார்.

அவரது கணவரால் கூட அரசியலில் பெயர் எடுக்க முடியவில்லை.

இங்கே புரந்தரேஸ்வரிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

“என்னது மாப்பிள்ளைக்கு 1 1/2 லட்சம் தானா??!!! இதை வெச்சுகிட்டு நான் என்ன செய்வது???

சம்பளம் என்பது சேக்க விட்டு போச்சு

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்து,

எங்களுக்குன்னு இருக்கிறதே இந்த ஒரு தினம்தான். அதையும் ஆட்டைய போட பாக்குறது நியாயமா?..தர்மமா?..இது அடுக்குமா?.. :D :D

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா..

LK said...

//“என்னது மாப்பிள்ளைக்கு 1 1/2 லட்சம் தானா??!!! இதை வெச்சுகிட்டு நான் என்ன செய்வது???//


நீங்க வேற , சொந்த வீடு (பையன் பேர்ல இருக்கனும் ) , சொந்த தம்பி /தங்கை இருக்க கூடாது . அப்பா அம்மா கூட தங்ககூடாது . இதை பத்தி என்ன சொல்றீங்க. என்னோட மாமா பையனுக்கு பொண்ணு தேடினப்ப எங்களிடம் கேக்கப்பட்டகேள்விகள்

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி மேடம்,

ஒருபடி பாலில் ஒருபிடி தயிரை சேத்தாப்ல, சிலபேர் இப்படி இருக்கிறதுனாலதான் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தா என்ன ஆகும்ன்னு பாத்தீங்களான்னு பரிகசிக்கப்படுகிறோம்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மலிக்கா,

உங்களுக்கும் மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி.

சந்தனமுல்லை said...

:-)
மகளிர் தின வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்!

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

பெண்கள் இப்படி துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கத்தக்க ஒன்றுதான்.

ஆண்களும் சளைக்காம 'பொண்ணு வீட்டுல எவ்வளவு செய்வாங்க?'ன்னு கேட்டுகிட்டுதான் இருக்காங்க.கேட்டா..அம்மா விருப்பம்ன்னு சொல்லிடுவாங்க.குடி, சிகரெட்ன்னு கெட்டபழக்கங்களை அம்மா விடச்சொல்லியிருப்பாங்க அப்பல்லாம் என்விருப்பம்ன்னுவாங்க, இப்ப மட்டும்.. ஒன்னும் பண்ண முடியலை. :-(((

அமைதிச்சாரல் said...

வாங்க L.K.,

அடப்பாவமே.. இன்னொரு மணல் கயிறா??!!! :-))

நன்றிப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க சந்தனமுல்லை,,

உங்களுக்கும் மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.

நன்றி.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் எல்கே,

அப்படியும் சொல்றாங்க. மங்கையர் மலர் போன்ற இதழ்களில் மணமகன் தேவை குறைஞ்சு போய், மணமகள் தேவைன்னு முதிர் கண்ணன்கள் படம் பாக்கும்போது பாவமா இருக்கு.

அதனாலதான் விசு மணல்கயிறு படத்தை புதுசா எடுக்கணும்னு ஒரு பதிவு போட்டேன்.

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு!

நசரேயன் said...

//பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு நிறைய கெட்டபெயர் சம்பாதிச்சு வெச்சிருக்கோம். நாம நெனச்சா இதெயெல்லாம் ஒழிச்சுக்கட்டி எதிராளிங்களை டெபாஸிட் இழக்க வைக்க முடியாதா என்ன???.//

எந்த தொகுதின்னு சொல்லுங்க .. கள்ள ஓட்டு போடவாரேன்

அமைதிச்சாரல் said...

வாங்க அன்புடன் அருணா,

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க நசர்,

இப்போதைக்கு தொகுதி உடன்பாடுக்கான பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டிருக்கு.

வார்த்தை மாறாம எங்களுக்கு சாதகமா கள்ள ஓட்டு போடணும்.ஒரு ஓட்டுக்கு ஒரு துண்டு இலவசம். :-)))).

வருகைக்கு நன்றிப்பா..

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

மிகவும் அருமையான பதிவு !
மகளிர் தின வாழ்த்துக்கள்...

அமைதிச்சாரல் said...

வாங்க பனித்துளி சங்கர்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

நானானி said...

கடைசி நான்கு வரிகளில் சத்யம் ஜொலிக்கிறது.

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

ரொம்ப நன்றிங்க..

LinkWithin

Related Posts with Thumbnails