ஒரு நாள் டீச்சர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.முன்னொரு காலத்தில் 'பூமி உருண்டையாக இருக்கிறது... இல்லையில்லை.. தட்டையாகத்தான் இருக்கிறது' , என்று மக்களும், தத்துவ ஞானிகளும்,விஞ்ஞானிகளும்,வேறு வேறு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டுக்கொண்டு, அரசுகளை பகைத்துக்கொண்டு,குழப்பிக்கொண்டிருந்ததைப்பற்றி விளக்க ஆரம்பித்தார். அதற்கு முன் அவருக்கு, 'மாணவர்களுக்கு எந்த அளவுக்கு, பூமியைப்பற்றி தெரியும்?..' என்று தெரிந்து கொள்ள ஆவல் வந்தது.
எனவே மாணவர்களைப்பார்த்து,"பசங்களா... உலகம் உருண்டையா?... தட்டையானதா?.." என்று கேட்டார்.
ஒரு மாணவர் எழுந்து," உலகம் உருண்டையானதுதான் டீச்சர்" என்று சொன்னார்.
டீச்சர் அகமகிழ்ந்து, "உன்னால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார், அவனுக்கு பாடம் ஏற்கனவே தெரிந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில்.
மாணவர் சொல்லத்தொடங்கினார்..
"டீச்சர்.. உங்களுக்கு கரப்பான் பூச்சியை தெரியுமா?.."
டீச்சர் ஒரு நிமிடம் குழம்பினாலும், "கரப்பான் பூச்சிக்கும், நீ சொல்லப்போவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?" என்று கேட்டார்.
மாணவர் தொடர்ந்தார்...
"கரப்பான் பூச்சி.. பொதுவா சாக்கடையில்தான் இருக்கும். எனவே, அது சாக்கடையில் வசிக்கும் இன்னொரு விலங்கான எலிக்கு பயப்படுகிறது.
எலி, பூனைக்கு பயப்படுகிறது.
பூனை,.. நாயைப்பார்த்து பயப்படுகிறது.
நாய்,..உள்ளூர மனிதனைப்பார்த்து பயப்படுகிறது.
மனிதன், தன்னுடைய மனைவி/காதலிக்கு பயப்படுகிறான்..
மனைவி/காதலி, கண்டிப்பா கரப்பான் பூச்சிக்கு பயப்படுவாங்க.
இப்ப சொல்லுங்க.. உலகம் உருண்டைதானே??..."
தடால்... என்று ஒரு சத்தம். 'டீச்சர்.. டீச்சர்... என்னாச்சு... அய்யய்யோ!!!.. டீச்சர் மயங்கி வுழுந்துட்டாங்க.. யாராச்சும் தண்ணி கொண்டு வாங்க..'

39 comments:
உலகம் உருண்டையேதாங்க:)!
:-) இதுதான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றதா?
haha super post .. kaliala engalai siripudan naalai tuvaka vaitha ungaluku oru nandri
//. 'டீச்சர்.. டீச்சர்... என்னாச்சு... அய்யய்யோ!!!.. டீச்சர் மயங்கி வுழுந்துட்டாங்க.. யாராச்சும் தண்ணி கொண்டு வாங்க..'//
ஹா ஹா ஹா
சத்தமா சிரிக்க வச்சுட்டீங்க காலையிலயே...
நெம்ப நாளா காணோம்? எங்க போயிட்டீங்க ?
//. டீச்சர் மயங்கி வுழுந்துட்டாங்க.. யாராச்சும் தண்ணி கொண்டு வாங்க..'
//
ஏன் டீச்சர் கரப்பான் பூச்சியைப் பாத்துட்டாங்களா?
சிரிச்சிக்கிட்டே இருக்கேங்க..:)
இந்த சுழற்சி முறையை முறையா ஃபில்லப் செய்யத்தான் பெண்கள் கரப்பான் பூச்சிக்கு பயப்படறாங்களா..சரிதான்.. :)
//சிரிச்சிக்கிட்டே இருக்கேங்க..:)//
ரிப்பீட்டே......
ரைட்டு.... :))
:))))))))))
ஆஹா...
சரி
ரைட்டு
அறிவுக்கொழுந்து
antha teacher neengathana???
நானும் கரப்பான் பூச்சிக்கு ரொம்ப பயப் படுவேங்க.
வாங்க ராமலஷ்மி மேடம்,
ஆமாங்க..
வருகைக்கு நன்றி.
வாங்க சந்தன முல்லை,
அதேதாங்க.. எப்பூடி..;-))
திருமண நாள் வாழ்த்துக்களை இங்கயும் சொல்லிக்கிறேன்.
வருகைக்கு நன்றி.
வாங்க L.K.
உங்கள் தினம் சந்தோஷமாக துவங்கியதில் மகிழ்ச்சி.
வருகைக்கு நன்றிப்பா.
வாங்க வசந்த்,
வாய்விட்டு சிரிச்சா உடலுக்கு நல்லதாம்.
போன பதிவுல லீவு லெட்டர் கொடுத்திருந்தேனே. படிக்கலையா?.. எங்கே போனேன்னு கண்டிப்பா உங்களோட பகிர்ந்து கொள்வேன்.
வந்ததுக்கு நன்றிப்பா.
வாங்க முகிலன்,
பசங்களை விட பூச்சி கொஞ்சம் கம்மியாதான் டெரர் காமிக்குது. :-))
வருகைக்கு நன்றி.
வாங்க ஷங்கர்,
நல்லதுங்க..சிரித்து வாழ வேண்டும்ன்னு பாட்டே இருக்குது.
வருகைக்கு நன்றி.
வாங்க முத்துலெட்சுமி,
இல்லாட்டி சைக்கிள் விழுந்துடுமாம் :-)))
வந்ததுக்கு நன்றி.
வாங்க ராமு,
ரசித்ததுக்கும், முதல்வரவுக்கும் நன்றி.
முடியலை டீச்சர்
//மனிதன், தன்னுடைய மனைவி/காதலிக்கு பயப்படுகிறான்..//
சிறந்த கருத்து நன்றி
//இப்ப சொல்லுங்க.. உலகம் உருண்டைதானே??...//
உலகம் உருண்டைனு கண்டுபிடிச்சவன் கைல நீங்க சிக்கினா confirm ஆ கைமா தான் (தொங்கிகிட்டே யோசிப்பாங்களோ)
வாங்க துபாய் ராஜா,
நல்லதுங்க.
வரவுக்கு நன்றி.
வாங்க கண்மணி மேடம்,
ஸ்மைலிக்கு நன்றி.
வாங்க தென்றல்,
நன்றிப்பா.
வாங்க ராதாகிருஷ்ணன்,
ஆமாங்க.. இப்பல்லாம் பசங்க ரொம்ப ஷார்ப். :-)
முதல்வரவுக்கு நன்றி.
L.K.,
ஜூவாலஜி மேஜர் படிச்சிட்டு கரப்பான் பூச்சியை பாத்து பயப்பட முடியுமா???.. எனவே,.. நான் அந்த டீச்சர் இல்லைப்பா.. :-))
வாங்க அம்பிகா,
கம்பெனி சீக்ரெட்டை இப்படி வெளீய சொல்லிட்டீங்களே.. இன்னிக்கு உங்களுக்கு, வீட்டுக்கு போகும்போது, அனேகமா கரப்பான்பூச்சி வரவேற்பு இருக்கலாம். :-))))
வாங்க நசரேயன்,
நன்றிங்க.
வாங்க அப்பாவி தங்கமணி,
புதுப்புது கண்டுபிடிப்புகளால்தான் உலகம் வளர்கிறதாம்.:-))))
முதல்வரவுக்கு நன்றிங்க.
/மனிதன், தன்னுடைய மனைவி/காதலிக்கு பயப்படுகிறான்..//
இது தப்பு...
மனிதன், தன்னுடைய மனைவி/காதலிக்கு பயப்படுகிற மாதிரி நடிக்கிறான்.. ===> இதான் சரி!!
வாங்க ஹுஸைனம்மா,
அதெல்லாம் மேலுக்கு நடிக்கிறமாதிரி காட்டிக்கிட்டாலும் உள்ளூர இருக்கத்தான் செய்யும்.
வரவுக்கு நன்றிங்க.
நல்லாவே சிரிக்க வெக்கிறீங்க.
வாங்க நானானிம்மா,
நன்றிம்மா.
நகைச்சுவையின் உச்சம் - கரப்பான் பூச்சிக்குப் பயப்படும் பெண்கள் இன்னும் இருக்கிறார்களா என்ன ?
வாங்க சீனா ஐயா,
பூச்சிக்கு மட்டுமல்ல அதோட நிழலுக்கும் பயப்படற ஆட்கள் இருக்காங்க :-))
இப்ப எனக்கு ரொம்ப பயம்மா இருக்குங்க.. ;-)))
Post a Comment