Thursday 18 February 2010

முத்து நகர் எக்ஸ்பிரஸ்...

எதிர்பாராத விதமா பரிசொன்னு கிடைச்சா மனசு குதியாட்டம் போடுமா இல்லையா?... அப்படித்தான் இருந்தது இந்த தூத்துக்குடி பயணம்.

நெல்லையில் ஹோட்டல் ஜானகிராமின்,அயோத்யா கான்ஃப்ரன்ஸ் ஹாலில் வெச்சு, உடன்பிறப்பின் மனைவிக்கு வளைகாப்பு,சீமந்தம். விசேஷமெல்லாம் நல்லபடியா முடிஞ்சு,தூத்துக்குடியிலிருக்கும் ,அவுங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. மறு நாள் நாங்க குடும்பத்தோட,அவுங்க வீட்டுக்கு போறதா பிளான் செஞ்சதும் ,பீச்சுக்கு போகணும்ன்னு பசங்க தீர்மானம் நிறைவேத்திட்டாங்க.

நகர எல்லையிலேயே 'சிப்காட்' வரவேற்கிறாங்க.வலதுபுறம் திரும்பி ஸ்பிக் நகர் போனோம். கொஞ்ச தூரத்திலேயே உப்பளங்கள்.சிலவற்றில் விளைந்த உப்பை குவிச்சு வெச்சிருக்காங்க.தம்பி மனைவி வீட்டிலிருந்து, சுமார் எட்டு கிலோமீட்டரில் பீச் இருக்குது. மாமா வழிகாட்ட எங்கள் வண்டி அவரைத்தொடர்ந்தது. துறைமுகம் போயி ,குட்டிப்பசங்களுக்கு கப்பல்களை காட்டலாம்ன்னா... இப்போ அனுமதி இல்லையாம்.



உப்பளங்கள்.
மெயின் ரோட்டில் பயணிகள்மாதா ஆலயத்தின் எதிரே வலதுபுறம் திரும்பணும் .ரெண்டே எட்டில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்துட்டோம்.வண்டியை பார்க் செஞ்சுக்க இடம் இருக்கு.இந்தப்பகுதியில் 'மன்னார் வளைகுடா' என்று அழைக்கப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் 3600 வகை கடல்வாழ் உயிரினங்கள் இருக்காம்.

கடற்கரையில் அவ்வளவா கூட்டமில்லை. வித்தியாசமான சில வாகனங்கள், விதவிதமான மனிதர்கள். ஒரே ஒரு தெரிஞ்ச முகம்..சங்கிலி முருகன் அவர்கள்.'ஆனந்த் சினி ஆர்ட்ஸ்'ன்னு ஒரு வாகனத்தில் எழுதியிருக்கு.சினிமா ஷூட்டிங் நடக்குதா!!!கிரேன் ஒன்னை கஷ்டப்பட்டு ஒரு வாகனத்தில் ஏத்திக்கிட்டிருக்காங்க. இதென்ன கலாட்டா!!!!அதுக்குள்ளயா சுட்டுத்தள்ளிட்டாங்க!!!. ஹீரோ?,ஹீரோயின்?....யாரு!!.சுண்டலுக்கு தெரியாத கடற்கரை ரகசியமா?.. விசாரிச்சா போச்சு...

'சுறா'படத்தோட ஷூட்டிங்காம். அச்சச்சோ!!!! வட போச்சே.... 'விஜய்,தமன்னா' ஜோடியாமுல்ல....தேடுனா கிடைக்கல,கிளம்பிட்டாங்க போலிருக்கு.

நம்ம ஹீரோயின்...மன்னார்குடா கடலை நாலைஞ்சு போட்டோ எடுத்துட்டு,கிளம்பினோம். குட்டிப்பசங்களுக்கு கடலைவிட்டு வரவே மனசில்லை.கடலன்னையின் மடியில் வாழ்க்கை நடத்தும் எளிய மனிதர்கள் அன்னிக்குண்டான வாழ்க்கையைத்தேடி,புறப்பட்டுக்கிட்டிருக்காங்க. பரவாயில்லை... படகுகளை பார்க்கிங் செஞ்சுக்க கடலில் தாராளமா இடமிருக்கு.


தண்ணீரில் வாழ்க்கைப்படகு.
மஞ்சள் வெயில் மாலைப்பொழுது.
கடற்கரையிலிருந்து பாத்தா தெர்மல் பவர் ஸ்டேஷன் தெரியுது.. இப்பத்திக்கு நாலஞ்சு யூனிட் இருக்கு.. இரண்டாயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுது.

குட்டிப்பசங்களை கூட்டி வர்றவங்க கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்க பக்கத்திலேயே துறைமுகசபையின் 'குழந்தைகள் பூங்கா' இருக்கு. தண்ணியில விளையாட பயப்படும் குழந்தைகளை இங்கே விடலாம்.ஆனா.. இங்க தரையிலயுமில்ல கண்டம் இருக்கு. விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்குமரம்,இன்னபிற எல்லாம் உடைஞ்சும்,நெளிஞ்சும் துருப்பிடிச்சும் போய் கிடக்கு. பசங்களை விளையாட விட்டா,போர்க்களத்திலிருந்து வர்ற வீரனைப்போல ரத்தம் பாக்காம வரமுடியாது.பராமரிப்பு சரியில்லை போலிருக்கு.புதுப்பிக்கும் வேலை ரொம்ப மெதுவா நடக்குதுன்னு மாமா சொன்னாங்க.செடிகள் கூட இப்பத்தான் வளர ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.
ஒன்னும் கண்டிக்க முடியாம, டாக்டர் அம்பேத்கர், சிலையா நின்னுவேடிக்கை பாத்துக்கிட்டிருக்கார்..பாவம்.

ரெண்டு இரும்புக்கம்பிகளை, பெருக்கல்குறி மாதிரி ,இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நட்டு வெச்சி, அதுகளை இணைச்சு செஞ்சிருக்கிற ஒரு 'வலை' ப்பாடு நல்லா இருக்கு. தூத்துக்குடியின் மீன்பிடித்தொழிலின் சிறப்பை சிம்பாலிக்கா சொல்றமாதிரி வெச்சிருக்காங்க.
வலை போட்டு பிடிக்கிறாங்க.
கிளம்ப மனசில்லாம மறுத்த குட்டிப்பசங்களை, பிடிச்சுப்போட்டுக்கிட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.மறு நாள் ரங்க்ஸும், பெண்ணும் மும்பை திரும்பணும். மூட்டை முடிச்செல்லாம் கட்டணும்.வீட்டுக்கு போனதும், பெண்ணும் ரங்க்ஸுமா மடமடன்னு பெட்டி கட்டி வெச்சிட்டு, தூங்கப்போயாச்சு.

மறுநாள் காலை பதினொன்னரைக்கு வீட்டிலிருந்து கிளம்பியவர்கள், இரவு ஒன்பதரை வாக்கில் தான் மும்பை வந்து சேர்ந்தார்களாம். கொச்சியில் ஒரு ஸ்டாப் இருந்ததால் அங்கியே ஒரு மணி நேரம் இருக்கவேண்டியதாப்போச்சாம்.

எனக்கும் பையருக்கும், ரெண்டாம் தேதி நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் ரிசர்வேஷன். இடையில் ஒரு நாள்தான் இருக்கு. எங்கயும் போகாம ரெஸ்ட் எடுக்கணும்ன்னு பையரோட விருப்பம்.எனக்கும் இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் பாக்கி இருக்கு. வந்ததிலிருந்து இணையம் பக்கம் வர முடியல்லை. ஒரே ஒரு நாள் டாட்டாவின் வயர்லெஸ் இணைப்பு கிடைச்சுது. அவ்வளவுதான்.... அப்புறம் நவராத்திரி கொலு பொம்மைகள் நெல்லையப்பர் கோவிலின் வெளியே கிடைக்கும். நல்லதா ஏதாவது வாங்கணும்.

திரும்பி வரும்போது வ.உ. சி. மைதானத்துக்கு எதிரே.. நெல்லை ஆன்லைன்சின் 'ciber cafe'. இணையத்தை கொஞ்ச நேரம் கண்டுகிடலாம்ன்னா இணைப்பு ரொம்ப மெதுவா வருது. பதில் போடலாம்ன்னா தமிழ் fonts இல்லை. சுரதாவை download செய்யலாம்ன்னா லேசில் ஆகிற வேலையா தெரியல்லை. எ.கொ.ச.இ. ன்னு வெறுத்துப்போய் தரைத்தளத்தில் இருக்கிற "ஈகிள் புக் செண்டர்'க்கு வந்தோம்.

எல்லாத்துறை ஆட்களுக்கும் தேவையான எல்லா புத்தகங்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்குது. குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டி புத்தகங்களும்,சிடிக்களும் கொட்டிக்கிடக்குது.' நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' இணையத்தில் தேடிப்பாத்து கிடைக்காம இருந்தது, இங்கே கிடைச்சது. இதைத்தான் கிடைக்கணுங்கிறது கிடைக்காம போகாதுன்னு சொல்றாங்களோ?...

நாளைக்காலை ட்ரெயினில் கிளம்பணும்.. பெட்டி கட்டணும்..வ்வர்ட்டா....

இங்கே கொஞ்சம் படங்கள் இருக்கு.

17 comments:

எல் கே said...

unga toucha kanom . avasara avasarama eluthina mathiri iruku

ராமலக்ஷ்மி said...

தூத்துக்குடிக்கு பலமுறை போயிருக்கிறேன். நீங்கள் எல்லாவிவரங்களும் சேகரித்து அழகா எழுதியிருக்கீங்க. படங்கள் அருமை.
’வலை போட்டுப் பிடிக்கிறாங்க’ அருமையா எடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்!

நசரேயன் said...

எதிர் ஓட்டு எல்லாம் விழுது உண்மையிலே ரவுடி தான் நீங்க

குப்பன்.யாஹூ said...

nice post thanks for sharing

மாடல மறையோன் said...

பயணிகள் மாதா கோயில் என்று எழுதியிருக்கிறீர்கள்.

பனிமயமாதா கோயில் என்று இருக்க வேண்டும்.

Lady of Snows Church. They have their own website.

மாடல மறையோன் said...

கப்பல்களைப் பார்க்க எப்போதுமே அனுமதி கிடையாது. இங்கு மட்டுமல்ல எந்த துறைமுகத்திலும். காரணம் செக்யுரிட்டி fear.

ஆனாலும், தூத்துக்குடி கஸ்டம்ஸ் டெபார்ட்மெண்டில் யாராவது தெரிந்தால் துறைமுகம் உள் சென்று கப்பலகளை உள்ளே ஏறியும் பார்க்கலாம்.

மற்றபடி, எப்போதாவது விசேசமான ஒரு கப்பல் வந்தால் - அது சரக்குக்கப்பலாக இல்லாமல் - உல்லாசக்கப்பலாகயிருப்பினும் - ஊர்மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒருமுறை, ஊரிஸ் என்ற கப்பல வந்த்து. அதை எல்லோரும் சென்று பார்த்தார்கள்.

நீங்கள் பார்த்த் கடற்கரையின் பெயர் Green gard gate. முன்பெல்லாம் அஃது ஒரு காடு. இப்போது பீச்சாக்கிவிட்டார்கள்.

ஏன் கூட்டமில்லையென்றால், ஊரைவிட்டு வெகுதொலைவில் இருப்ப்தால்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ஆமாம்ப்பா...எக்ஸ்பிரஸ் இல்லியா... அதான் ஒரே வேகம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

தங்க மங்கைகிட்டேயிருந்து பாராட்டுக்கள்.

உண்மையிலேயே சந்தோஷமா இருக்குங்க. நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

என் கண்ணுக்கு எந்த ஓட்டுமே தெரியமாட்டேங்குதேப்பா :-((.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குப்பன் சார்,

முதல் முறையா வந்திருகீங்க...

வரவுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ,

முதல் வரவா... நன்றி.

அச்சச்சோ... அவ்வளவு அழகான பெயரையா அப்பிடி திரிச்சி வெச்சிருக்காங்க..

நிறைய புது விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அப்பப் புறப்பட்ட பயணத்தோட தொடர்ச்சியா இது அமைதி? படங்கள் நல்லா வந்திருக்கு. கட்ல்கரை சுத்தமா இருக்கே!! என்ன வாங்கினீங்கன்னு சொல்லலையே:)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ஆமாம்...காலு வலிக்குமேன்னு இடைக்கிடையே சின்ன ப்ரேக் விட்டுட்டேன் :-))))

உண்மையிலேயே கடற்கரை,கடைகள் எதுவுமில்லாம சுத்தமாத்தான் இருக்கு. ஆகவே.. எதுவும் வாங்கிக்கல்லை..

அன்புடன் அருணா said...

அடடே எங்கூருக்குப் போயிட்டு வந்துருக்கீங்களா!

ஹுஸைனம்மா said...

அந்த “வலைச்சர சிற்பம்” அழகு. ரொம்ப நல்லாருக்கு பார்க்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்புடன் அருணா,
முதல் வரவுக்கு நன்றி.

உங்களுக்கு தூத்துக்குடியா!!!! இன்னொருக்கா போகணும் உங்க ஊருக்கு.பீச் ரொம்ப அழகா இருக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails