Wednesday 10 February 2010

ஊஞ்சலாடும் வயசு..


அறியாத வயசு.. புரியாத மனசுன்னுதான் எல்லோரோட டீனேஜும் இருக்கும்.பயம்ங்கிறதே இருக்காது. தீக்குள் விரலை வெச்சா சுடும்ன்னு தெரிஞ்சாலும், எவ்வளவு சுடும்ன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ணி பாக்கத்தோணும்.யாராவது எதையாவது தடுத்தா, அட.. இது நல்லாருக்கே!! செஞ்சு பாத்தா என்னன்னு தோணும்.

எனக்கு தெரிஞ்சதெல்லாம் 'ஒரு கைதியின் டைரி'யும், 'சி.பி.ஐ. டைரிக்குறிப்பு'ம்தான். மேலும், டைரில எழுதி வெச்சா,வெந்தணலில் வெந்து,வெள்ளம் கொண்டு போகும் அபாயம் இருப்பதால் பின்னாடி, பொன்னேடுகளில் பொறிச்சு வைரத்தால பதிச்சிக்கலாம்ன்னு விட்டுட்டேன்.(ஒருத்தரு கூட ஒரு டைரி வாங்கிக்கொடுத்து, எழுதிப்பொழைச்சிக்க...ன்னு சொல்லலை. அம்பிடுதேன்).

முகப்பரு வந்தா கவலைப்படாத டீனேஜர் உண்டா!!!!!.அப்போ கிளியர்சில் வந்த புதுசு..அஞ்சே ரூபாய்தான். வாரத்துக்கொரு டியூப் காலியாகியும், பருக்கள் ஜோக்குகளில் வரும் தலைதீபாவளி மருமகன் மாதிரி அசையாம இருந்தா,பச்சப்புள்ள மனசு என்ன பாடுபடும்.அதுக்கு செஞ்ச வைத்தியம் ஒன்னா ரெண்டா...முகத்துல அப்புன,கடலமாவ மிச்சம் பிடிச்சிருந்தா, நாலு ப்ளேட் பஜ்ஜியாவது செஞ்சு சாப்ட்ருக்கலாம்.

டைரியே கிடைக்கலைன்னு சொன்னேனில்லையா...எம்மேல பரிதாபப்பட்டு சித்தப்பா ஒரு டைரி கொடுத்தார். அவ்வளவுதான்... ரொம்ப நாளைக்கு அதை பொன்னே.. பூவேன்னு வெச்சிருந்தேன். எதுவும் எழுதுறதில்லை. எப்பவாச்சும் தோணினா, நாலு வரி கிறுக்குவேன். அதனால, அதை மறைச்சு வெக்கணும்ன்னு தோணல்லை.ஆனா,கொஞ்ச நாளா அதை யாரோ படிக்கிறாங்கன்னு கண்டுபிடிச்சேன்.வெச்ச இடம் மாறுதே!!!! அப்புறம்தான் அது ஒரு ஆர்வக்கோளாறு பரிவாரதேவதைன்னு கண்டுபிடிச்சேன். அட.. சொந்தக்காரங்க....'இந்த டைரியை படிப்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள்'...ன்னு கூட முதல் பக்கத்தில் எழுதி வெச்சேன். பிரயோசனமில்லை.

நமக்கு அப்ப இருந்ததெல்லாம் ஒரே ஒரு கனவுதான்... டைப்ரைட்டிங்,ஷார்ட்ஹேண்ட் படிச்சு கேரளா யூனிவர்சிட்டில வேலைக்கு சேரணும்..மடக்கு குடையும், க்ளிப் போட்ட டிபன் பாக்சும் எடுத்துகிட்டு வேலைக்கு போகணும். சிரிக்காதீங்க.. அப்ப இருந்த புத்திக்கு, ப்ரொஃபஸர் வேலைன்னு ஒன்னு இருக்குங்கிறது கூட தெரியாது.சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கலைங்கிற மாதிரி, அம்மா சரின்னு சொன்னாலும், பரி'வார' தேவதைங்க அருள் கிடைக்கலை. ஒருவழியா எல்லாம் சரின்னு சொன்னாலும்,.. 'விதி'..சதிபண்ணிடுச்சி..சினிமா ரூபத்துல. அந்த படத்துல முக்கிய கதைக்களமா வருவது ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்... போதாதா!!!! சேப்டர் க்ளோஸ்....
(பையர் பிறந்தப்புறம் முழுசா கத்துகிட்டு,பரீட்சை வரைக்கும் வந்தேன், எக்சாமை தள்ளிப்போட்டுப்போட்டு, நான் ரயிலேறின அடுத்த நாள் பரீட்சை வந்தது.)

குடும்பத்துல மூத்த பொண்ணா பிறந்திட்டதால, வாலை எல்லாம் ஹேண்ட்பேகில் சுருட்டி வெச்சுக்க வேண்டியதா போச்சு. தம்பிங்களுக்கு நாமதானே ரோல் மாடலா இருக்கணும்.அதுவுமில்லாம, எதாவது காதுல விழுந்தா அப்புறம் படிப்பு போச்... நிறுத்திடற அபாயம்... நம்ம கேரளா யூனிவர்சிட்டி லட்சியம் என்னாவது?...மத்தபடி,எந்த விஷயத்திலும் ,கட்டுப்பாடெல்லாம் ஒன்னும் கிடையாது.அம்மா கிட்ட எல்லாம் பேசலாம்.ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போக,கூட்டிட்டு வர எந்த தடையும் கிடையாது.

அப்படியும் ஒரு நாள், லேசா டீனேஜுக்கே உரிய ஆர்வக்கோளாறில் ஒரு வேலை செஞ்சேன். எங்க பக்கத்து வீட்டுல, ஒரு நாள் ஒரே களேபரம். என்னன்னு பாத்தா... ஒரு பாம்புக்குட்டி.ஒரு அடி நீளம்தான் இருக்கும். ஒருவழியா அதைக்கொன்னுட்டாங்க. அதை எடுத்துகிட்டு வந்து,வீட்டுல காலியா இருந்த பட்டுப்புடவை டப்பா ஒன்னில் போட்டுவெச்சேன். எதுக்கா?... பஸ் ஸ்டாப்புல அதை போட்டு வெச்சிட்டு, அதை எடுக்கிறவங்க ரியாக்ஷன் என்னன்னு பாக்கத்தான். மறு நாள் காலேஜுக்கு புறப்படும்போது, அதையும் எடுத்துகிட்டேன். அம்மா பாத்துட்டு... இது என்னன்னு கேட்டாங்க... சொன்னதுதான் தாமதம். ஓடியே வந்து , பார்சலை பிடுங்கி எறிஞ்சிட்டாங்க. ஒரு நல்ல சினிமாப்படத்தை மிஸ் பண்ணிய ஃபீலிங்கோட காலேஜுக்கு போயிட்டேன். வேற வழி. தர்க்கம் பண்ணினா ஆக்ஷன் படமில்ல வீட்டுல ஓடும்.

எனக்கு தோட்டம்ன்னா ரொம்ப பிடிக்கும். வீட்டுல முன்னாடி இருந்த இடத்தை சிமிண்ட் தளம் போட்டுட்டாங்க. கொஞ்சூண்டு இடம் தோட்டத்துக்காக விடச்சொல்லி,நான் சொன்னதை காதுலயே போட்டுக்கலை. ஒரு நாள் அம்மா, ஆச்சியை பாக்க ஊருக்கு போயிருந்தாங்க. சாயங்காலம் வந்துடுவேன்னு சொல்லியிருந்தாங்க. இதுதான் சந்தர்ப்பம்ன்னு,கடப்பாறை இல்லாததால், தேங்கா உடைக்கிற அரிவாளை எடுத்து,கொஞ்சம் கொஞ்சமா சிமிண்டை உடைச்சு, சின்ன இடம் உண்டாக்கி, ரெண்டா உடைச்ச செங்கல்ல பதிச்சு கார்டன் ரெடி பண்ணிட்டேன்.அம்மா வந்து பாத்தா,..எங்கையி,கொப்புளிச்சு போயிருப்பதை பாத்துட்டு ஒன்னும் சொல்லல. அப்றம் அந்த கார்டனுக்கு செடியெல்லாம் வாங்கித்தந்தாங்க. அதுல ஜினியான்னு ஒன்னு பூ அழகா இருக்கும். செடியே தெரியாம பூக்கும். சும்மா பாத்தா நல்லா இருக்காதுன்னு, பைனாகுலர் வெச்சி பாத்துகிட்டு, 'நீயும் பாரு,ஊட்டி மாதிரி இருக்கு'...ன்னு கொடுமை பண்ணிகிட்டிருப்பேன்.

பள்ளிகூடத்துல மாசத்துல கடைசி வெள்ளிக்கிழமை சிவில் ட்ரெஸ் போடலாம். யூனிஃபார்ம் தேவையில்லை. அந்த ஒரு நாளுக்காக ஒரு வாரம் முழுசும் செட்டு சேர்ப்போம். ட்ரெஸ்ஸுக்கு மேட்சா வளையல், பொட்டு, கம்மல்ன்னு தேடித்தேடி வாங்குவோம்.அப்பிடி பாத்துப்பாத்து ட்ரெஸ் பண்ணிட்டு போனா, ஒரு தடியன்.. 'என்னடே.. புது ட்ரெஸ்ஸா... மேட்சாவே இல்லையே'ன்னான்.எனக்கு அழுகை...அழுகையா வந்துட்டுது.அப்போதான், எங்க ஹிஸ்டரி சார் வகுப்புக்குள் நுழைந்தார்.. நான் அசிஸ்டெண்ட் மானிட்டர்ங்கிறதால, திருத்தப்பட்ட பேப்பர்களை கொடுத்து வினியோகிக்கச்சொன்னார். இன்னும் பாடமே நடத்தலை.. அதுக்குள்ள எதுக்கு ஆனந்தக்கண்ணீர்ன்னு நெனச்சிட்டு கேக்கவும்,எப்பிடித்தான் தெகிரியம் வந்துதோ.... அவர்கிட்ட சொல்லிட்டேன். அவுருதான், அந்த தடியனோட க்ளாஸ் டீச்சர். நேராப்போய் அவனை பின்னு... பின்னுன்னு..பின்னீட்டார். அதுலேர்ந்து, என்னை ஒரு சொர்ணாக்கா ரேஞ்சுக்கு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.

காலேஜ்ல ஆரம்பத்துல சீனியர்களைக்கண்டா குனியுற தலை, க்ளாஸ் ரூம் வந்துதான் நிமிரும். அவ்வளவு பயம்.என் ஃப்ரெண்ட், 'டீ... கண்ணகி...(கண்ணகியக்கா..கோச்சுக்கப்படாது)நேராத்தான் வாயேன்'ன்னு சொல்லிச்சொல்லி எனக்கு கண்ணகின்னே எங்க வட்டத்துல , பட்டம் கொடுத்திட்டா.. அப்றமா நாங்க, பசங்களுக்கு பட்டப்பெயர் வைக்கிறதுவரை முன்னேறியதும், ட்ரெஸ் சென்சுக்கு மார்க் போட ஆரம்பிச்சதும் வேறு கதை. (எல்லாம் ரகசியமாத்தான். பசங்களுக்கு தெரிஞ்சா கதையே வேற)

அப்போ நதியா உச்சத்தில் இருந்த சமயம். நெறைய பேருக்கு ஃபேஷன் மாடல் அவங்கதான். அவுங்க மாதிரியே ஹேர்ஸ்டைல் செஞ்சுகிட்டு, நாமதான் நதியா.. ங்கிற நெனப்புல திரிவாளுங்க. அவங்களுக்கு என் கவுண்டர் கொடுக்கிற மாதிரி, அடுத்த நாளே இன்னொருத்தி, நதியா கம்மல் போட்டுகிட்டு வந்து, அட்ராக்ஷனை அவ பக்கம் திருப்பிடுவா.

என்னது...ஃபாலோயர்சா.. அதெல்லாம் மொக்கை ஃபிகருங்களுக்கு கெடையாது.சப்புன்னு போச்சா!!!!! என்னங்க பண்றது...

கொஞ்ச நேரம்,ஊஞ்சலாடிட்டு வர ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த கண்ணகிக்கு ஒரு பெரிய நன்றி.ஆரம்பிச்சு வெச்ச முல்லைக்கும் பாராட்டுக்கள். இதை தொடர நாலு பேரை அழைக்கணும். எண்ணிக்கையா முக்கியம்,..வாங்க புதுகைத்தென்றல்,துளசியக்கா,வல்லிம்மா,L.K, வசந்து,கோமா, நசரேயன்..இன்னும் யாருக்கெல்லாம் கொசுவத்தி சுத்துதோ... எழுதுங்கப்பா.. அடுத்தவங்க டைரிய படிக்கிறதுல, என்னா த்ரில் இருக்கு தெரியுமா!!!!

34 comments:

சாந்தி மாரியப்பன் said...

அனுப்பு..அனுப்பு..ன்னு அனுப்பிட்டேன், தமிழ்மணம் முகப்பில் தெரியுதா.. இல்லையான்னு தெரியலையே!!!

Paleo God said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

வந்தாச்சு. வந்தாச்சு. தமிழ்மணம் முகப்பில் வந்தாச்சு.கமெண்ட் லிங்கும் வேலை செய்யுது.

டைரி, முகப்பரு, டைப்பிங், காலேஜ்.. கலக்கல் கொசுவர்த்தி. :))

எல் கே said...

//..'இந்த டைரியை படிப்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள்'...ன்னு கூட முதல் பக்கத்தில் எழுதி வெச்சேன். பிரயோசனமில்லை.//

என் டைரிகள் என் பொக்கிசங்கள் ... என்னுடைய கல்லூரி கால கவிதைகள் அதில்தான் இருக்கிறது..

சாந்தி மாரியப்பன் said...

பரிசோதனை

சாந்தி மாரியப்பன் said...

எப்படி சரி செய்யுறதுன்னு தெரியலியே...

உதவி.. ப்ளீஸ்...

எல் கே said...

nan podara comments moderation paguthila varala? otherwise leave it till mng and then chk

sathishsangkavi.blogspot.com said...

என்னங்க உதவி வேணும்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பட்டுப்புடைவை டப்பாகுள்ள பாம்பா செம டெரர் ஆளா இருந்திருப்பீங்க போலயே.. நல்ல வேளை அம்மா பிடிங்கிவச்சாங்க.. :)

சந்தனமுல்லை said...

ஒரே அமர்க்களம்தான் போங்க!!/இந்த டைரியை படிப்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள்'../

ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு! :-))) பாம்பு - நிஜமாவே பயமா இருக்குபா!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

கண்டிப்பா எழுதுங்க.

ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனியுங்கப்பா!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய் ராஜா,

வந்ததுக்கு நன்றிப்பா..

இந்த கமெண்ட் லிங்க் எனக்கு கண்ணாமூச்சி காட்டுதேப்பா.. ஒரு வேளை அதுக்கும் வயசுக்கோளாறோ!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

நீங்களாவது கவிதை எழுதி வெச்சீங்க.. நான் ஹோம்வொர்க் குறிப்புகள் இல்ல எழுதி வெச்சேன். அதுல என்ன சுவாரஸ்யத்தை தேடுனாங்களோ!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

l.k.சொல்லியிருப்பதை பாருங்க. நானும் முயற்சி செஞ்சு பாத்துட்டேன்.settings எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனாலும்,கமெண்ட் போட்டு பாத்தா, பொட்டி சரியா வேலை செய்ய மாட்டேங்குது. மாடரேஷன் ஆகாமலேயே , பப்ளிஷ் ஆகிடுது. எப்படி சரி செய்ய?

Paleo God said...

அனுப்பு..அனுப்பு..ன்னு அனுப்பிட்டேன், தமிழ்மணம் முகப்பில் தெரியுதா.. இல்லையான்னு தெரியலையே!!//

ஓ நல்லா தெரியிதுங்க.


அடுத்தது என் கொசுவத்திதான்..

காணத்தயாராகுங்கள்..:))

::))) சாரிங்க..:))

நசரேயன் said...

எல்லாம் நல்லத்தான் போய்கிட்டு இருக்கு

எல் கே said...

ippa ellam correcta work agutha???

வல்லிசிம்ஹன் said...

என்னப்பா இப்படி மாட்டி விட்டீங்க.:)
பாம்புன்னு சொன்னாலெ அலறுவேனே. நீங்க எப்படி இந்தச் சேட்டை பண்ணீங்க:))
உங்க அளவுக்கு எழுத முடியுமான்னு தெரியலயே!!
நம்ம ரகசியமெல்லாம் வெளில சொல்ல முடியுமா என்ன:)
முயற்சி செய்யறேன்பா!ரொம்ப நன்றி அழைத்ததற்கு. ஆமாம்...உங்க பேருதான் என்னா.:)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,
இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு.. அன்னிக்கு தோணினது..

வட போச்சே!!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

கிளுகிளுப்பும் அப்பப்ப வேண்டித்தான் இருக்கு...இல்லையா!!

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்க்ர்,

நோ ஃபீலிங்க்ஸ்...

பதிவர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

நீங்க சொன்னா சரி!!!

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே.

வொர்க் ஆகுதுன்னுதான் நினைக்கிறேன்.

டீன் ஏஜ் பற்றிய பதிவுன்னதும், ப்ளாக்கருக்கும் தடுமாற்றம் வந்திடுச்சோ என்னவோ :-))

pudugaithendral said...

இன்னைக்கு பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பதிவு போடப்போவதால் நாளைக்கு இந்தத் தொடர் பதிவை எழுதறேன்.

கண்ணகி said...

. தீக்குள் விரலை வெச்சா சுடும்ன்னு தெரிஞ்சாலும், எவ்வளவு சுடும்ன்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ணி பாக்கத்தோணும்.யாராவது எதையாவது தடுத்தா, அட.. இது நல்லாருக்கே!! செஞ்சு பாத்தா என்னன்னு தோணும்.


டைரில எழுதி வெச்சா,வெந்தணலில் வெந்து,வெள்ளம் கொண்டு போகும் அபாயம் இருப்பதால் பின்னாடி, பொன்னேடுகளில் பொறிச்சு வைரத்தால பதிச்சிக்கலாம்ன்னு விட்டுட்டேன்.

..எம்மேல பரிதாபப்பட்டு சித்தப்பா ஒரு டைரி கொடுத்தார். அவ்வளவுதான்... ரொம்ப நாளைக்கு அதை பொன்னே.. பூவேன்னு வெச்சிருந்தேன். எதுவும் எழுதுறதில்லை.
'இந்த டைரியை படிப்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள்'.

.(கண்ணகியக்கா..கோச்சுக்கப்படாது)

எதுக்கு கோவிச்சுக்கணும்...நாம யாரு...எரிச்சுருவமில்ல

அமைதிச்சாரல் நல்லா இண்ட்ரஸ்டிங்கா எழுதீருக்கீங்க...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உங்க எழுத்துக்காக காத்திட்டிருக்கிறோம்.

என் பெயரா!!!

வந்து,




வந்து,
;
;
;
;
;
;
;
;
அமைதிச்சாரல்தாம்மா.

புனை பெயரெல்லாம் கிடையாது.
காந்தி தாத்தாவுக்கும், எனக்கும் ரொம்ப பிடிச்ச பெயர்.
என்பெயரை தமிழ் படுத்தி இருக்கேன்.அவ்வளவுதான்.இதில் முதல்பாதி நான்.க்ளூ போதுமா!!!! 'சாரல்' ரங்க்ஸ் பெயரின் மறுவடிவம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புதுகைத்தென்றல்,

படிச்சிட்டேன்ப்பா.

அழைப்பை ஏத்துக்கிட்டதுக்கு இங்கேயும் ஒரு நன்றியை சொல்லிக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

பாராட்டுனதுக்கு நன்றிப்பா.

அடிக்கடி வரணும்.

மாதவராஜ் said...

:-)))))

நதியா எனக்கும் பிடித்தது. குறிப்பாக ‘பூவே பூச்சுடவா’ படத்தில்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதவராஜ் அண்ணா,

முதல் தடவையா வந்திருக்கீங்க நன்றி.

பத்மினி அம்மாவுக்கு இணையா,ஈடுகொடுத்து நடிச்சிருப்பாங்க இல்லையா.

பீடி கேட்கும் ஒருவனிடம், 'அதையெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு' என்று சொல்லுமிடம் ஒன்றே போதும்.

எல் கே said...

chain continues here

http://lksthoughts.blogspot.com/2010/02/blog-post_12.html

வல்லிசிம்ஹன் said...

ஒரு வகையாப் புரிஞ்சுகிட்டேன். ஆனா சொல்ல மாட்டேன்:)
பதிவு போட்டுட்டேன்பா. டயரியில் எழுதினதை விட்டுவிட்டேன்.
பின்ன பல் தேய்க்கிறதுல ஆரம்பித்து,சாமி கும்பிடுற வரைக்கும், அப்புறம் ஆந்தையைப் பார்த்து பயந்தவிஷயமெல்லாம் தேறுமான்னு புரியலை:)

http://naachiyaar.blogspot.com/2010/02/blog-post_11.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

படிச்சு பின்னூட்டமும் ஓட்டும் போட்டாச்சு.
அழைப்பை ஏத்துக்கிட்டதுக்கு நன்றிப்பா. :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

நன்றிம்மா :-)

படிச்சாச்சு.

LinkWithin

Related Posts with Thumbnails