Tuesday 19 January 2010

நெசமாவா....

காரண காரியங்கள்
எதுவும்,
தேவைப்படவில்லை!..

அழவைப்பதென்று
முடிவானபின்,
காரணங்கள் தேடுவது
கஷ்டமாகவும் இல்லை!!.

கண்ணீர் மல்கி,வெதும்பி,
குரல் குழற
கேட்டான் அவன்;
"நெசமாத்தான் சொல்றியா"

பட்டுப்பூச்சி சிறகடிப்பை
கண்களில் காட்டி
சொன்னாள் அவள்,

"நெசமாத்தான்!!
எங்கப்பா,
ரெண்டு பொம்மை
வாங்கியாந்தாரே!!!"

ஆற்றாமையுடன்
எறிந்த கல்பட்டு,
சுக்குநூறாய் உடைந்தது,
குட்டையில் மிதந்த
அழுக்கு நிலா!!..


10 comments:

எல் கே said...

well said.. we shuld never force them in studies..otherwise they will begin to hate that..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

என்ன ஆளையே காணோம். பொங்கலுக்கு ஊருக்கு போயிட்டீங்களா?

கருத்துக்கு நன்றி.

எல் கே said...

comment matthi post panniten.. neenga vera. pongaluku leave illayneu ukkanthiruken

ப்ரியமுடன் வசந்த் said...

தானை தலைவியே

இங்கே பொம்மைகள் ஆண்களா?

ரிஷபன் said...

அழகாய் பதிவாய் இருக்கிறது வலி

Paleo God said...

comment matthi post panniten.. neenga vera. pongaluku leave illayneu ukkanthiruken//

நானே படிச்சிட்டு பயந்துட்டேன்..:))

கவிதை நல்லா இருக்குங்க..:) வித்தியாசமான கோணம்.

சாந்தி மாரியப்பன் said...

பயணத்தில் இருந்தேன். லேட்டா பதில் சொல்றதுக்கு முதல்ல மாப்பு கேட்டுக்கறேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

கண்டுபிடியுங்க பாக்கலாம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பலா பட்டறை,

முதல் வரவா, நன்றி.

பாராட்டுக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails