என்னை,
என் எண்ணங்களை,
எனக்கு
அறிமுகப்படுத்திய,
என்
எழுத்துக்கு நன்றி.
விரல்களில் வழியும்
எறும்புகளைப்போல்,
விட்டு விடாமலும்
பற்றிக்கொள்ளாமலும்,
ஓர்
அவஸ்தை!!!...
கரையேறும் வழி
தெரிந்தபின்,
ஆழங்கள்
அமிழ்ந்து போகின்றன.
சாரலடிக்கும் பொழுதுகளில்
கைக்குட்டையாய்,
சூறாவளியில்
அனல் காற்றாய்,
உருமாற்றம் கொள்கிறது!.
அதுவோ!,
இதுவோ!, என்று
மயக்கம் கொள்ளும்போது,
எதற்கும் பிடிபடாமல்,
காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது
ஓர் புதிர்!!.
6 comments:
//என்னை,
என் எண்ணங்களை,
எனக்கு
அறிமுகப்படுத்திய,
என்
எழுத்துக்கு நன்றி.//
ஆமா பிரச்சனை படிக்கிற எங்களுத்தான்
நான் வடையில்லைன்னு வாசிச்சுட்டேன்.
ஏங்க விடையில்லை? கோனார் நோட்ஸ்ல தேடிப்பாருங்களேன், கிடைக்கும்.
வாங்க நசரேயன்,
சூப்பரா இருக்குன்னு சொல்றீங்க.. நன்றி.
எப்படி பாராட்டுறதுங்கிற பிரச்சினையைத்தானே சொல்றீங்க:-))))).
வாங்க ஹுசைனம்மா,
சரியாத்தான் வாசிச்சிருக்கீங்க!!!.
வடையை நசரேயன் முதல்லே வந்து எடுத்துட்டு போயிட்டார் :-)))).
கரையேறும் வழி
தெரிந்தபின்,
ஆழங்கள்
அமிழ்ந்து போகின்றன.
இந்த வரி எனக்கு ரொம்ப பிடித்தது..
வாங்க ரிஷபன்,
முதல் வரவா!!!
ரசிப்புக்கு நன்றி, நீங்களாவது கவிதன்னு ஒத்துக்கிட்டீங்களே...(அப்ப தைரியமா இன்னும் எழுதலாம்). :-).
Post a Comment