எங்க வீட்டுக்கு பொங்கல் வந்தாச்சே..!!!!.
ஏற்கனவே அனுப்பிய பொங்கல் வாழ்த்து கிடைச்சுதா?..கண்டிப்பா கிடைச்சிருக்கும்..உங்களுக்காக பொங்கல் தயாராகுது.. வந்து சாப்புட்டு போங்க..
பொங்கல் பொங்கப்போவுது.....
பொங்கிருச்சேய்....!!!....
காக்கா புடிக்கதான் கஷ்டமா போச்சு..
நைவேத்தியம் காண்பிச்சாச்சு... எல்லோரும் சாப்பிடலாம்..
மஞ்சக்குலை எங்க வீட்டு வெள்ளாமை..அடுத்த வருஷம் இந்த உருளைக்கிழங்குலதான் சாம்பார் செய்யப்போறேன்.
6 comments:
மஞ்சள் நல்ல வெள்ளாமை போல :)
அடுத்த வருசம் உருளையா.. க்ரேட்
வாங்க முத்துலெட்சுமி,
பால் பொங்கிச்சா...
இஞ்சியும்,மஞ்சளும் நாலஞ்சு வருஷமா நம்ம வீட்டுதோட்டத்து சப்ளைதான்..
உருளையுடன் சேப்பங்கிழங்கும் வளருது!!:-)).
கரும்பும் போடலாமான்னு முயற்சி நடக்குது.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
நம்மூர்லே உருளைதான் அமோக விளைச்சல். சமைக்கும்போது கொஞ்சம் முளைவந்ததை தோட்டத்தில் வீசி எறிஞ்சாலும் போதும்!
35 வருசம் கழிச்சு இஞ்சி, கரும்பு, மஞ்சள் எல்லாம் வச்சு பூசை(???) செஞ்சோம்.
படங்கள் அருமையா இருக்கு.
பொங்கல் விழாவுக்கான நல் வாழ்த்து(க்)கள்.
வாங்க நசரேயன்,
வந்ததுக்கு நன்றி
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாங்க டீச்சரக்கா,
உங்களுக்கும் விழாக்கால நல்வாழ்த்துக்கள்.
இந்த வருஷம் பொங்கலை உங்களால் மறக்கமுடியாது இல்லையா!!!
நம்ம தோட்டத்துல காய்ச்சதுன்னா ருசி கூடுதலாத்தான் இருக்கு. :-))
Post a Comment