Sunday, 10 January 2010

எனக்கு எதிரா நடந்த சதிசாயங்காலம் 5,6 மணி இருக்கும். தமிழ்மணத்தில் மூழ்கியிருந்.....என்னாச்சு...புது ஜன்னல் தெறக்க மாட்டேங்குது... ரீலோட் பண்ணு.... திருப்பி திருப்பி முயற்சி செய்யறேன். oops....லிங்க் கட்டாயிட்டுதுன்னு செய்தி சொல்லுது.சில சனி, ஞாயிறுகளில் இதுவேற சீண்ட்ரம்.(மெயிண்டெயின் செய்வாங்களாம்).சரி... நாளைக்கு பாக்கலாம்.

காலை 11மணி ஆகுது.. இன்னும் இணையம் சரியாகல்லை. கூப்பிடு.. பரம்ஜீத்தை..

"மேடம்.. போட்டிக்காரன்(மரியாதை என்ன வேண்டியிருக்கு), செஞ்ச வேலை... வயரை அத்து உட்டுட்டான்!!!. சாயங்காலத்துக்குள்ள வேற ஒயர் போட்டுடறேன்,சே... கஷ்டகாலம்ப்பா.."...

'இவர் யாரைச்சொல்றார்'... எனக்கு புரியலை..

"சரி..நீ அழுவாத... நான் அவர்கிட்டே பேசறேன்".

விஷயத்தை ரங்க்ஸ் கிட்ட சொல்லி, போட்டிக்காரன்(ர்)நம்பருக்கு போன் செஞ்சோம். மணி அடிக்குது..எடுக்க மாட்டேங்கிறார். 'அடப்போய்யா!!!... நான் கஸ்டமர் கேர் செண்டருக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லிக்கிறேன்'. அவங்க 'ஆகட்டும்.. பாக்கலாம்'ன்னு வழக்கமான பதிலை சொன்னாங்க.

எதுக்கும் லோக்கல் ஆளுக்கு இன்னோருக்கா போன் செஞ்சா என்ன?.. ஆ.....ப்டுட்டார்.!!!. அவர்கிட்டே விஷயத்த சொல்லி "இப்டில்லாம் அத்து... அத்து... வெளையாடாதேப்பா...அப்புறம் நாங்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்" ன்னு ஒரு சின்ன எச்சரிக்கை.... பையர் ஒத்துக்க மாட்டேங்கிறார். " நா செய்யவேல்லை....நா செய்யவேல்லை..இப்பவே உங்க வீட்டுக்கு வந்து பாக்றேன்"ன்னார். 'சரி... வாங்க..' ன்னு சொன்னோம்.

அவர் வர்றவரை ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்....

இணைப்பு எடுத்து ஒண்ணரை வருஷம் வரை ஒரு பிரச்சினையில்லை. ஒரு நாள் திடீர்ன்னு இணைப்பு கட்... விசாரிச்சா அப்போத்தான் போட்டிக்காரரோட கைவரிசை ஆரம்பம்னு தெரியவந்தது.. என்ன பண்ணுவார்னா... மெயிண்டெயின் செய்யப்போறதா செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு, ரெஜிஸ்டரில் தேதி.. பேரு... நேரம்... எல்லாம் எண்டர் பண்ணிட்டு(இல்லாட்டா பில்டிங் உள்ளேயே விட மாட்டார்) மொட்டைமாடிக்கு போய் நைசா கட் செஞ்சுட்டு வந்துடுவார்...

இது பெரிய பிரச்சினையாகி பஞ்சாயத்தெல்லாம் நடந்து முடிஞ்சுது.. ஆனா, நம்மாளு நெறைய நஷ்டப்பட்டுட்டதால கம்பெனிய தற்காலிகமா மூடிட்டார். போட்டிக்காரர் நெனைச்சது நடந்தது... நெறையப்பேர் அவங்க கிட்ட இணைப்பு எடுத்தாங்க. இப்படித்தான் புள்ளை பிடிக்கிறாங்களா..ஹூம்.. மேலிடத்தை திருப்திப்படுத்த இப்படி ஒரு வழி.10..15.நாள் பொறுத்து பாத்துட்டு நாங்களும் வேற வழியில்லாம அங்கயே போனோம்.டெபாசிட்டில் 1000ரூபாய் சலுகை..பழைய இடத்துலேர்ந்து போனவங்களுக்கு மட்டும்தான் இந்த சலுகையாம்..மத்தவங்களுக்கு...வழக்கமான தொகை.இது எப்படி இருக்கு.!!!.சர்வீசும் சரியில்லை....சரியான பாடாவதி சர்வீஸ். மாசத்துல 10நாள் இணைப்பு இருந்தாலே உலக அதிசயம்!!!. இலவசமாய் வைரஸ் சப்ளை வேற. பாதி நாள் எங்க சிஸ்டம் பிறந்தகம் போய் சீராடிட்டுதான் வரும்.

பழைய ஆள்கிட்டயே கேட்டுப்பாக்கலாம்ன்னு விசாரிச்சா.....
அப்பா!!!.... வயித்துல பால் வார்த்தமாதிரி பதில்.....

"சரி பண்ணிட்டோம் மேடம்.. நாளைக்கு இணையம் வந்துடும்"..

அப்புறம் போட்டிக்காரர்கிட்டே விஷயத்தை சொல்லி இணைப்பை கட் செஞ்சாச்சு.. பழைய கம்பெனியிலேயே இணைப்பி தேர் ஒழுங்கா ஓட ஆரம்பிச்சிருக்கு... இப்போ மறுபடியும் முட்டுக்கட்டை.ஆமா!!!... போட்டிக்காரர்தான் செஞ்சதுன்னு எப்டி தெரியும்.. அனுப்பு உளவுப்படையை...தகவல் ஏற்கனவே சேகரிக்கப்பட்டாச்சாம்.."மேடம்,.. நான் விசாரிச்சிட்டேன். நேத்து,சாயந்திரம் அவங்க ஆள் பக்கத்து பில்டிங் போயிருக்கார்.. ரிஜிஸ்டரில் எண்ட்ட்ரி ஆகியிருக்கு.கரெக்டா அப்போதான் எல்லா வீடுங்களுக்கும் கனெக்ஷன் கட் ஆகியிருக்கு."

கொஞ்ச நேரத்துல போட்டிக்காரர் வந்தார்.. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். ரெண்டு பில்டிங்க்கோட மொட்டை மாடியையும் இணைச்சு வெச்சிருந்த ஒயர், இப்போ திறப்பு விழாவில் வெட்டப்பட்ட ரிப்பன்போல் தொங்குது. அப்பவும் ஒத்துக்க தயாரில்லை.."ஏம்ப்பா... உங்க கம்பெனி சர்வீஸ் சரியில்லைன்னுதான் வேற கம்பெனிக்கு போறோம், அதையும் கெடுத்தா எப்படி?..பிரச்சினைன்னு போன் பண்ணினா ஆள் வர்றதில்லை... வந்தாலும் என்ன பிரச்சினைன்னு கண்டுபிடிக்க தெரியாம ரெண்டு மூணு ஸ்க்ரூவை கழட்டி மாட்டிட்டு போயிடுறாங்க. இதுக்கு ஒரு நியாயம் சொல்லு"ன்னு கேட்டோம்.

பையர் இங்கே பார்ட்டைம் வேலை பாத்துக்கிட்டே படிக்கிறாராம். சரி.. நல்லா இருக்கட்டும்...ஆனா மத்தவங்களைப்பத்தியும் கொஞ்சம் நினைக்கணுமில்லே.இணையத்தையே சார்ந்திருப்பவர்களுக்கு எவ்வளவு இழப்பு ஆகியிருக்கும்.நான் ஒரு இடுகையாவது போட்டிருப்பேனே:).

இன்னும் தப்பை ஒத்துக்கிடலை.. மெதுவா கேட்டார்...'நாங்கதான் கட் செஞ்சோம்னு யார் சொன்னா'..விவரத்தை சொன்னதும் பேச்சுமூச்சில்லை.
நைசா கிளம்பிட்டார். நம்ம தலைவலி நமக்கு.. கீபோர்டுக்கு மேலே நெறைய வேலையிருக்கு!!.நம்ம கம்பெனிக்கு போன் செஞ்சு கேட்டா, இன்னும் நாலு நாளாவது ஆகும்.. எல்லா ஒயரையும் கட் அண்ட் பேஸ்ட் பண்ணணுமே அப்டிங்கிறார். நா....லு....நாளா!!.பதிவு எதையும் படிக்கமுடியாதே...அய்யோ.!!!!.

ஆலோசனை நடக்குது... கார்ட்லெஸ் வாங்கிரலாமான்னு ஒரு யோசனை... ஆனா மழைசமயம் இடிமின்னலால் பாதிப்பு வருமோன்னு பயம், "உள்ளதும் போச்சுன்னா?... நாலு நாள் நெட் இல்லைன்னா பரவாயில்லை..நெட்டே இல்லைன்னாலும் பரவாயில்லை." இது சதியாலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு. அப்போ என் பிளாக்கோட கதி..ஆரம்பத்திலேயே சங்கா.!!!...எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான் சதிவேலையில் இறங்கியிருக்காங்களா.!!!

போனுக்கு மேல போனப்போட்டு டார்ச்சர் கொடுத்ததில் ரெண்டே நாளில் இணைப்பு வந்துவிட்டது... இப்ப என்ன செய்வீங்க.!!!... இப்ப என்ன செய்வீங்க.!!!..

டிஸ்கி: பையர் வார்த்தை உபயம், துளசிடீச்சர்.

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) என்ன செய்யறது படிச்சுப் பின்னூட்டமும் போடவேண்டியதுதான் ..

LK said...

ஒரு 6 மாசம் முன்னாடி நானும் இப்படித்தான் கஷ்டப்பட்டேன் ... இப்ப வேற ஒரு இணைப்பு உபயோக படுத்துகிறேன் .... உங்களை மாதிரியே customer careku போன் பண்ணியே எனக்கு மாசம் போன் பில் ஜாஸ்தி ஆச்சு


LK

நட்புடன் ஜமால் said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) என்ன செய்யறது படிச்சுப் பின்னூட்டமும் போடவேண்டியதுதான் ..]]

இதையே சொல்லத்தான் வந்தேன்

எப்படீங்க இது சேம் வேட்டிங்ஸ்

மாயவரத்து வாசமோ ...

amaithicchaaral said...

வாங்க முத்துலெட்சுமி,

போணி பண்ணியதுக்கு நன்றி.

kannaki said...

அமைதிச்சாரல்ன்னு பேர் வச்சுக்கிட்டு என்னென்ன பண்றிங்க.....உளவு நல்லா பார்க்கிறிங்க...அம்மிணி....உங்ககிட்டே சாக்கிரதையாத்தான் இருக்க்ணும்போல.....கலக்கறீங்க போங்க...

amaithicchaaral said...

வாங்க L.K.

கஷ்டமர் கேர்ன்னு சொன்னா சரியா இருக்கும் இல்லையா.!!

amaithicchaaral said...

வாங்க நட்புடன் ஜமால்,

முதல் வரவுக்கு நன்றி.

அவோ வேட்டிங்ஸ் வெச்சா என்னா... நாம கொட்டிங்ஸ் வெச்சிருவோம்லா!!!...

நாஞ்சொல்றது கம்பெனிக்கு.

amaithicchaaral said...

வாங்க கண்ணகி மேடம்,

அந்த பயம் இருக்கட்டும்..

ஹி...ஹி... சும்மா..:-))))).

LK said...

//கஷ்டமர் கேர்ன்னு சொன்னா சரியா இருக்கும் இல்லையா.!!//

சொல்ல முடியாது ... என்ன இருந்தாலும் எனக்கு சோறு போன்ற வேலைய அப்படி சொல்ல மனசு வரல ஹி ஹி !!!
LK

ஹுஸைனம்மா said...

அப்படியே நேரில சொல்ற மாதிரியே இருக்கு!!

கட் பண்ணி விடச்சொல்லி போட்டிக் கம்பெனிக்கு ஆர்டர் போட்டது உங்களோட போட்டிப்பதிவராமே, தெரியுமா?

;-))

amaithicchaaral said...

வாங்க L.K.

உங்க தொழில் பக்தியை மெச்சினோம்.:-)).

amaithicchaaral said...

வாங்க ஹுஸைனம்மா,

முதல் வருகைக்கு நன்றி.

மகன் நலமா!!...

அப்டியே அந்த போட்டிப்பதிவர் யாருன்னும் சொல்லிடுங்களேன்:-))).

என் உளவுப்படையை லீவு கொடுத்து அனுப்பியிருக்கேன்.:-).

LinkWithin

Related Posts with Thumbnails