Friday, 1 January 2016

அடிச்சுவடுகள் - 2015

ராமேஸ்வரம்- சீதா தீர்த்தக் கட்டத்தின் முகப்பிலிருக்கும் சிவனார் சிற்பம்
சென்ற வருடம் முழுவதும் தென்றலும் சூறாவளியும் மாறி மாறி முறை போட்டு அடித்துத் துவைத்துக் காயப்போட்டு விட்டுச் சென்று விட்டன. உருப்படியாக ஏதாவது செய்தேனா என்று மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தால் எதுவுமே தேறவில்லை. இருப்பினும் இருத்தலை நிரூபிக்கும் விதமாக மாதத்திற்கு ஒரு இடுகையாவது எழுதி வந்திருப்பதும், ஃப்ளிக்கரில் முடிந்தபோதெல்லாம் படங்களைப் பகிர்ந்து வருவதும் எனக்குக்கொஞ்சம் ஆறுதலளிக்கிறது. தவிர, கவிதைகளில் "நல்லாச்சி"க்குக் கிடைத்து வரும் வரவேற்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டிற்குச் செய்யும் நன்றிக்கடனாக அதன் பாரம்பரிய உணவு வகைகளைப் பதிந்து வரும் பணியையும் ஆரம்பித்திருக்கிறேன். தொடர்வேனென்று நம்புகிறேன் :-)

சென்ற வருடத்தில் கடந்து போன கசப்பான அனுபவங்களை எண்ணிக்கொண்டே இருப்பதை விட வரவிருக்கும் இனிய அனுபவங்களை வரவேற்க மனதை உற்சாகமாய் வைத்திருப்பது மேலல்லவா. 

சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதுஞ் சென்றதையே சிந்தை செய்து 
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து 
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு 
தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!

என்று பாரதியும் பாடிச்சென்றிருக்கிறாரே. எத்தனையோ இயற்கைப்ப்பேரிடர்கள் வந்து குலைத்துப்போட்டு விட்டுச் சென்ற போதிலும் மனித குலம் மறுபடியும் கரம் கோர்த்து மீண்டெழுகிறது. சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது ஒருவருக்கொருவர் உதவியதே இதற்குச் சான்று. மனிதம் இன்னும் செத்து விடவில்லை. நீறு பூத்த நெருப்பாய் அது ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. 

சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம். நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே. மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.
சுசீந்திரம் கோயிலின் விடையேறிய பெருமான்
கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல், புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இந்த வருடம் மிக இனிய வருடமாக அமையட்டும்.

11 comments:

இராஜராஜேஸ்வரி said...

புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பரிவை சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பரிவை சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்:)!

நல்லாச்சி கவிதைகளை விரும்பித் தொடருகிறேன். படங்கள் அருமை. முதல் படத்திலிருக்கும் சிற்பம் எங்கே உள்ளது?

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜேஸ்வரி,

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ராமேஸ்வரத்தின் சீதா கட்டத்தின் முகப்பில் மேருமலையை மத்தாய்க்கொண்டு அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடையும் நிகழ்வை சிற்பமாய் அமைத்திருக்கிறார்கள். அதிலிருக்கும் சிவனார்தான் இவர். பதிவிலும் தகவலைச் சேர்த்து விட்டேன். வரலாறு முக்கியமல்லவா :-)))

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயக்குமார்,

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

தகவலுக்கு நன்றி:)! அழகான கோணத்தில் படமாக்கியுள்ளீர்கள்.

கோமதி அரசு said...

பாரதி கவிதையும், புத்தாண்டு செய்திகளும் அருமை.
புத்தாண்டு வாழ்த்துக்கள் சாந்தி.

LinkWithin

Related Posts with Thumbnails